28.7.10

சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு

மதுரை : ""சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவளிக்கும்,'' என, அதன் தமிழக தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.



மதுரையில் நடந்த பொதுக்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது :
 
கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஆக., 1ல் சென்னையில் நடக்கும். தி.மு.க., கூட்டணிக்கு எங்கள் ஆதரவு உண்டு. கட்சி சார்பில் மதநல்லிணக்க அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
 
இந்த ஆண்டு இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மூன்று மதங்களின் ஒரே நல்லிணக்க விருது தமிழக முதல்வருக்கு வழங்கப்படும்.
 
கட்சியின் கேரள முன்னாள் தலைவர் சையது முகமது அலியின் நினைவு தபால் தலை, சென்னையில் வெளியிடப்படும். இவ்வாறு காதர் மொய்தீன் தெரிவித்தார்.

இந்திய தேசிய கட்சியில் இணைப்பு விழா

திருவள்ளூர் மாவட்ட இஸ்லாமிய ஜனநாயக கட்சியை இந்திய தேசிய கட்சியில் இணைப்பு விழா  25.07.2010ல் நாடார் சங்கம் திருமணமண்டபத்தில் நடைப்பெற்றது


23.7.10

லால்பேட்டை தொடர் பயான் ஆடியோ

லால்பேட்டை. நவ 07,



லால்பேட்டை நகர ஜமாத்துல் உலமா, புதுபள்ளி ஜமாத்,மற்றும் தீனுல் இர்சாத் நற்பனி மன்றம் சார்பாக 19.10.2008 ல், நடைப்பெற்ற தொடர் பயான்.


 

மவ்லவி ஹாஃபிழ் அல்ஹாஜ் A. நூருல் அமீன் மன்பஈ

துணை முதல்வர். J.M.A. அரபுக் கல்லூரி லால்பேட்டை




மவ்லானா மவ்லவி அபுதாஹிர் பாகவி

பேராசிரியர் நூருல் இஸ்லாம் அரபி கல்லூரி சேலம்.










திண்டுக்க‌ல்லில் க‌ல்வி உத‌வித்தொகை வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி


திண்டுக்க‌ல் : திண்டுக்க‌ல்லில் க‌ல்வி உத‌வித்தொகை வ‌ழ‌ங்கும் நிக‌ழ்ச்சி 23.07.2010 வெள்ளிக்கிழ‌மை மாலை 3 ம‌ணிக்கு திண்டுக்க‌ல் ம‌துரை சாலையில் உள்ள‌ சாத்த‌ங்குடி நாடார் திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.



இந்நிக‌ழ்வில் சீட் டிர‌ஸ்டின் நிர்வாகிக‌ள் அல்ஹாஜ் சைய‌து அப்துல் காத‌ர், அல்ஹாஜ் எஸ்.எம். இதாய‌த்துல்லா, ஐக்கிய‌ ந‌லக்கூட்ட‌மைப்பு நிறுவ‌ன‌ர் ஏ. முஹ‌ம்ம‌து அன்வ‌ர்தீன், அல்ஹ‌ர‌மைன் டிர‌ஸ்டின் எஸ். முஹ‌ம்ம‌து ர‌ஃபி உள்ளிட்டோர் சிற‌ப்பு அழைப்பாள‌ர்க‌ளாக‌ ப‌ங்கு பெறுகின்ற‌ன‌ர்.

திண்டுக்க‌ல் ப‌குதியில் மேற்ப‌டிப்பினை தொட‌ர‌ இய‌லாத‌வ‌ர்க‌ள் மானா மூனா ப‌ள்ளிவாச‌லை தொட‌ர்பு கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.



தொட‌ர்பு எண்க‌ள் : 0451 24 000 17 / 99447 81778



மின்ன‌ஞ்ச‌ல் : dgleducation@gmail.com





த‌க‌வ‌ல் உத‌வி :
http://www.mudukulathur.com/

22.7.10

லால்பேட்டை ஜாமி ஆ மன்பவுல் அன்வார் முன்னால் செயளாலர் ஹாஜி அப்துல் லத்தீப் மறைவு

லால்பேட்டை மெயின்ரோட்டில் வசிக்கும் அல் நூர் டிராவல்ஸ் உரிமையார் முஹம்மது அவர்களின் தந்தையும் ஜாமி ஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் முன்னால் செயளாலரும் மெயின்ரோடு பள்ளிவாசல் முன்னால் முத்தவல்லியும் அல் பரகத் டிராவல்ஸ் உரிமையாளருமான கருத்தார் லப்பை ஹாஜி அப்துல் லத்தீப் அவர்கள் இன்று 22.07.2010 மாலை 6.30  மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

இந்திய தேசிய லீக் பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்று விழா

வானியம்பாடி,ஜூலை 17 ,

வானியம்பாடியில் ஜூலை 17 ,அன்று   இந்திய தேசிய லீக் பொதுக்கூட்டம் மற்றும் கொடியேற்று விழா நடைப்பெற்றது.




அகில இந்திய தலைவர் முஹம்மது சுலைமான் மாநில தலைவர் இனாயத்துல்லாஹ் .


மாநில செயலாளர் ஜஹீருத்தீன் அஹமது மற்றும் தடா அப்துல் ரஹீம். நாகூர் ராஜா.

டாக்டர் சக்கீல்,டாக்டர் முஹம்மது இலியாஸ், முஹம்மது பஷீர் ஆகியோர் சிரப்புரையாற்றினார்கள்.
 
கொடியேற்றும் நிகழ்ச்சி 
 
பத்திரிக்கையாளர் சந்திப்பு

21.7.10

லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்

19 -07 -10 அன்று மாலையில் இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது


கூட்டத்திற்கு பள்ளியின் தலைவர் எஸ்.எஸ்.ஜபார் அலி தலைமை வகித்தார் இசட். முஹமத் யஹ்யா வரவேற்றார்


இந்நிகழ்ச்சியில் மணிச்சுடர் நாளிதழ் செய்தி ஆசிரியர் காயல் மஹபூப்

இளைய சமுதாயம் ஆசிரியர் ஜெ.ஏ. ஜப்பார் ஆகியோர் உரையாற்றினர்.



மௌலானா தளபதி சபிகுர் ரஹ்மான் ,கவிஞர் ஏ.எம்.முஹிபுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தாளாளர் எஸ். ஹாரிஸ் அஹமத் நன்றி கூறினார்

19.7.10

சென்னையில் உள்ள BPO நிறுவனத்தில் வேலை செய்ய படித்த ஆட்கள் தேவை.


சென்னையில் உள்ள BPO நிறுவனத்தில் வேலை செய்ய படித்த ஆட்கள் தேவை.
தகுதி : ஏதாவது ஒரு பட்ட படிப்பு, டிப்ளோமா அல்லது + 2. ஆங்கிலம் சரளமாக பேச தெரிய வேண்டும்.
முஸ்லீம் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விபரங்கள் கீழே குறிபிட்டுளது.
Walkin Date: July 19 - July 21 
Venue Details: Softlogic Systems, # 10,PT Rajan Salai, KK nagar, Chennai 78. Landmark above Karnataka Bank.
Contact Person: Muhammad Imran
SOFTLOGIC SYSTEMS
Desk: 044-42005051   
 
 
Requirements: 
  • 12th, Any Diploma, Under Graduation, post Graduation- Fresher’s(2009/2010) with Good English Communication.
  • Willing to work in Night Shift.
  • Work proactively under stressed time.
Number of openings: 40
 
Salary as per company norms/we have very good incentive package(weekly/monthly)

18.7.10

லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபிக்கல்லூரியின் 7 ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா

லால்பேட்டை முபாரக் பெண்கள் அரபிக்கல்லூரியின் 7 ஆம் ஆண்டு முபல்லிகா பட்டமளிப்பு விழா இன்று 17.07.2010 மாலை 4.00 மணியளவில் நடைப்பெற்றது.  அல்ஹாஜ் A.R.சஃபியுல்லா. ஷைகுல் ஜாமியா முஃப்தி அல்லாமா A.நூருல் அமீன் ஹள்ரத்.ஆகியோர் தலைமை வகித்தனர் மவ்லானா மவலவி M.G. முஹ்ஸின், கிராஅத் ஓதினார்.

அல்ஹாஜ் M.H.அப்துல் சலாம், டாக்டர் அல்ஹாஜ் A.R.அப்துஸ்ஸமது
ஹாஜி A.R.அப்துர் ரஷீத்,

அல்ஹாஜ்.M. முஹம்மது எஹ்யா,

அல்ஹாஜ் M.A.பத்ஹுத்தீன்,

மெளலவி அல்ஹாஜ் T.S. நிஜாம் முஹம்மது,

P.A.அப்துர் ரஷீத்,

M.S.அப்துர் ஹமீத்,

M.A.முஹம்மது யூசுப்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்

வரவேற்புரை,S.A. தாஹா முஹம்மத்,

பட்டம் ஸனது வழங்கியவர், மவ்லானா மவலவி அல்ஹாஜ் A. ஃபைஜுர் ரஹ்மான் மதனி ஹஜ்ரத்,


சிறப்புரையாற்றிவர்கள்,
மவ்லானா மவலவி அல்ஹாஜ் S.A.அப்துர் ரப்பு ஹஜ்ரத்,

மவ்லானா மவலவி அல்ஹாஜ் தளபதி A.ஷபீகுர் ரஹ்மான்,

மவ்லானா மவலவி அல்ஹாஜ் V.R. அப்துஸ் ஸமது,ஹள்ரத்

மவ்லானா மவலவி ஹாஃபிழ் காரி அல்ஹாஜ் R.Z. முஹம்மது அஹ்மது,ஹள்ரத்

மவ்லானா அல்ஹாஜ் M.Y.அப்துல் மாலிக்,நன்றியுரை, M.O.அப்துல் அலி,

பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியில் முபாரக் பெண்கள் அரபிக்கல்லூரி முதல்வர் உம்மு ஜீனத் ஃபாத்திமா,

கோட்டகுப்பம் ரப்பானுயா பெண்கள் அரபிக்கல்லூரி பேராசிரியை முபல்லிகா,S.மலிக்குன்னிசா BIS சிறப்புரையாற்றினார்கள்,

16.7.10

ஒடுக்கப்பட்டோர்களை சக்திப்படுத்தும் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெரும் –பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர்


பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் இ.எம்.அப்துல் ரஹ்மான் கேரள போலீசார் மேற்கொண்டுவரும் ஜனநாயக விரோதபோக்கையும், பாரபட்சத்தையும் வன்மையாக கண்டித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒரு அமைப்பின் தலைமை அலுவலகத்தை ஒரு சிறிய உள்ளூர் சம்பவத்திற்காக சோதனையிடுவது, மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிப்பது மட்டுமல்லாது, அவ்வமைப்பின் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும் என்றார். இத்தகைய கொள்கையைத்தான் கொண்டுள்ளதா என்பதை அரசு விளக்க வேண்டும் என்று கூறினார். ஒரு உள்ளூர் சம்பவத்தினை நேர்த்தியாக விசாரிப்பதை விட்டுவிட்டு பெரும் பீதியை ஏற்படுத்தி பாப்புலர் ஃப்ரண்ட்டின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவும், மேலும் முஸ்லீம் இளைஞர்கள் மீது மீடியாக்களின் மூலம் அவதூறுகளை பரப்பி வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்க்காகவும் முயற்சி செயல் என்றும் தெரிவித்தார்.

14.7.10

லால்பேட்டை கமாலியா வீதி மும்தாஜ் பேகம் மறைவு

லால்பேட்டை  கமாலியா வீதி ஆப்படையார் மர்ஹும் ஷேக் தாவூத் அவர்களின் மனைவியும்,சைஃபுல்லாஹ்,ஜின்னா ஆகியோரின் தாயாருமான மும்தாஜ் பேகம்  அவர்கள் இன்று 14.07.2010  மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

 எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

13.7.10

லால்பேட்டை ஹாஜி ஹத்தீப் இல்லத் திருமணம்

.
திருமண வாழ்த்து

இடம், மெயின்ரோடு பள்ளிவாசல் லால்பேட்டை,

நாள்:. 15.07.2010

மணமகன்
லால்பேடை மெயின் ரோடு மர்ஹூம் ஹாஜி ஹத்தீப் K.G அப்துல் ஜப்பர்
அவர்களின் பேரனும்,மர்ஹூம் ஹாஜி ஹத்தீப் மெளலவி
K.A.அப்துல் அலீம் சித்தீக் அவர்களின் செல்வப்புதல்வர்.

ஹாஜி K.A.அபு பக்கர் சித்தீக்,
================
மணமகள்
மினாத்தெரு மர்ஹூம் ஹாஜி S.Y.ஷர்புதீன்,
 A.S.முஹம்மது அலி இவர்களின் பேத்தியும்
 ஹாஜி S.S.அப்துல் ரஹீம் அவர்களின்செல்வப்புதல்வி,
 A.R.புரைரா பேகம்,

=======================================

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்

{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}
அன்புடன்...M.J.பதஹுத்தீன்,M.J.முஹத்தஸீம், லால்பேட்டை
&
லால்பேட்டை இணைய தளம்

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை விண்ணப்ப தேதியை நீட்டிக்க வேண்டும்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மத்திய அரசு சிறுபான்மை நலத்துறை இணையமைச்சர் சல்மான் குர்ஷிதிற்கு தந்தி அனுப்பியுள்ளார்.தந்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:


சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித் தொகை கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப் படிவங்கள் இரண்டு நாட்களுக்கு முன்புதான் வந்து சேர்ந்துள்ளன.

எனவே, விண்ணப்ப படிவங்களை அனுப்பும் தேதியை 2010 ஜூலை 31ம் தேதிவரை நீட்டிக்க வேண்டுகிறேன். இவ்வாறு தந்தியில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் குறிப்பிட்டுள்ளார்.

வேலூர் கோட்டை மசூதி எங்களுக்கு தெவையில்லை அப்துல் ஸமது எம்.பி. கைப்பட எழுதிக்கொடுத்தார்..! பி.ஜே.பி.நகர செயலாளர் அரிக்கை

மீண்டும் மதப் பிரச்னையால் குலுங்குகிறது வேலூர் கோட்டை!


வேலூரின் மையப் பகுதியில் 138 ஏக்கர் பரப்பளவில் சமார் 3 கிலோமீட்டர் சுற்றுச் சுவர்இ அகழியுடன் அமைந்துள்ள வேலூர் கோட்டைக்குள்இ இந்துஇ முஸ்லிம்இ கிறித்துவ வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. ‘‘தொல்லியல் துறையின் கட்டு-பாட்டிலிருக்கும் கோட்டைக்குள் கோயிலிலும்இ தேவாலயத்திலும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால்இ மசூதியில் மட்டும் தொழுகைக்கு அனுமதி இன்றி காவல் துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என மீண்டும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.



ஜூலை 3-ம் தேதி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோட்டைக்குள் திரண்டிருக்கஇ த.மு.மு.க.வின் வேலூர் மாவட்ட செயலாளர் இஜாஸ் அகமது காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். நாம் அவரிடம் பேசியபோதுஇ ‘‘ஔரங்கசீப் ஆட்சியின்போது அவரது உத்தரவின் பேரில் தளபதி சந்தா சாஹிப் வேலூர் கோட்டையினுள் இந்த மசூதியை 1750ரூல் கட்டி முடித்தார். பின்னர் வெள்ளையர் காலத்தில் சிறை பிடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் திப்புவின் மகன்களை இந்த கோட்டையினுள் சிறை வைத்தனர். அப்போதெல்லாம் இந்த மசூதி வழிபாட்டில் இருந்தது. பின்னர் 1921ரூம் ஆண்டில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. அப்போதும் கூட இந்த மசூதியில் இமாம் இல்லாமல் வழிபாடு நடந்தது.



ஆனால்இ பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது துணை பிரதமர் ஆக இருந்த அத்வானியின் உத்தரவால் வேலூர் கோட்டை மசூதியை தபால் ஆபீஸாக சித்தரித்துவிட்டனர். அதன் பின்னர் எங்கள் போராட்டத்தின் வீரியத்தை பார்த்து அந்த மசூதி இஸ்லாமியர்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என ஒப்பந்தம் போட்டனர். ஆனால்இ இரண்டு வருடங்களாகியும் இன்றுவரை அதைத் திறந்து வைக்கவில்லை. இந்த நிலையில் மசூதியைச் சுற்றி சுவர் எழுப்பவும்இ மின்வேலி அமைக்கவும் பள்ளம் தோண்டிவருகிறார்கள். அதைத் தடுக்கத்தான் இப்போது போராடிவருகிறோம். மசூதி திறப்பது குறித்து அனைத்து மத மக்களிடமும் கையெழுத்து வேட்டை நடத்தி ஆதரவு திரட்டப் போகிறோம்’’ என்றார் உறுதியாக.



இதுபற்றி பி.ஜே.பி.யின் வேலூர் மாநகர செயலாளர் சி.ஆர்.பாலாஜியிடம் பேசியபோதுஇ



‘‘கோட்டைக்குள்ளிருந்த குதிரை லாயத்தை வெள்ளையர்கள் தபால் ஆபீஸாக உபயோகப்படுத்தினர். அதற்கு சான்றுள்ளது. அந்த கட்டடத்தைத்தான் முஸ்லிம்கள் தொழுகை நடத்தப்பட்ட மசூதி என்கின்றனர். கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை அவர்கள் அந்த மசூதியில் தொழுகை நடத்தும்போதெல்லாம்இ இந்துக்கள் தேங்காய் உடைப்பதையும் மேளம் அடிப்பதையும் எதிர்த்தனர். இது தேவையற்ற மதப் பிரச்னைக்கு வழி வகுப்பதால் இங்கு எங்களுக்கு வழிபாட்டு தலம் வேண்டாமென அப்போதைய வேலூர் எம்.பி.யான அப்துல் சமது தனது கைப்பட எழுதிக்கொடுத்துச் சென்றுள்ளார். ஆனால் இப்போது சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் மீண்டும் பிரச்னை செய்கிறார்கள்’’ என்றார்.



மசூதி சர்ச்சை குறித்து தொல்லியல் துறையின் அதிகாரியான பலராமனிடம் பேசினோம். ‘‘அரசு உத்தரவுப்படி சுற்றுவேலி அமைக்க பள்ளம் வெட்டியது உண்மை. முஸ்லிம்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் தற்சமயம் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். சர்ச்சைக்குரிய அந்த இடம் மசூதி என்றுதான் எங்களது ரெக்கார்டுகளில் உள்ளது’’ என்கிறார்.


நன்றி:
தமிழக அரசியல்

9.7.10

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் புனித மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி!

அபுதாபி அய்மான் சங்கம் ஏற்ப்பாடு செய்திருந்த புனித மிஃராஜ் சிறப்பு பயான் ஈ.டி.ஏ ஹாலில் இன்று 09.07.2010 வெள்ளி மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பின் துவங்கியது.நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க துணைத் தலைவர் ஹாஜி எஸ்.குத்புதீன் தலமை தாங்கினார்.


ஜனாப் காதர் அலி இறை வசனங்கள் ஓதினார்.

அய்மான் சங்க செயளாலர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.பெருமானார் ஸல்லல்லாஹு அல்லைஹி வஸல்லம் அவர்களின் மிஃராஜ் எனும் விண்வெளிப் பயணத்தின் சிறப்புக்கள் பற்றியும்,அதன் மூலமாக கிடைக்கப்பெற்ற ஐவேளை தொழுகையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மெளலவி ஷரஃபுத்தீன் மன்பஈ, காயல் ஹாபிழ் ஹுஸைன் மக்கீ மல்ஹரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 
நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களின் ஜமாஅத் நிர்வாகிகள்,இளைஞர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
 
நன்றியுரைக்குப் பின்,துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் 66 - ஆண்டு பட்டமளிப்பு விழா

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 66 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வரும் 18.07.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் ஜாமியா தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் நடைபெறும்.

தலைமை அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம்,அவர்கள்,

வரவேற்புரை ஹாஜி A.M.ஜாஃபர். அவர்கள்,

 சனது {பட்டம்}வழங்குபவர்,
 ஷைகுல் ஜாமியா முஃப்தி அல்லாமா அல்ஹாஜ் A.நூருல் அமீன் ஹள்ரத்.அவர்கள்,

வாழ்த்துரை தாருல் யூசுபிய்யா அரபுக்கல்லூரி முதல்வர்

மவ்லானா மவலவி அல்ஹாஜ் கலீல் அஹ்மது ஹள்ரத்,மன்பஈ

சென்னை அடையார் பெரியபள்ளிவாசல் தலைமை இமாம்
 அல்ஹாஜ் M. சதீதுத்தீன் ஹள்ரத்.

மாநில ஜமாஅத்துல் உலமா தலைவர் ஜாமிஆ பேராசிரியர்
மவ்லானா மவலவி ஷைகுல் ஹதீஸ்

அல்ஹாஜ் A.E. முஹம்மது அப்துல் ரஹ்மான் ஹள்ரத்,

மவ்லானா மவலவி ஷைகுல் ஃபிக்ஹ் அல்ஹாஜ் S.A. அப்துர் ரப்,ஹள்ரத்

மவ்லானா மவலவி அல்ஹாஜ் P.S. அப்துல் அலி, ஹள்ரத்

மவ்லானா மவலவி ஹாஃபிழ் காரி அல்ஹாஜ் R.Z. முஹம்மது அஹ்மது,ஹள்ரத்

மவ்லானா மவலவி S.A. சைபுல்லாஹ்,ஹள்ரத்

மவ்லானா மவலவி ஹாஃபிழ் அல்ஹாஜ் M. முஹம்மது காஸிம்,ஹள்ரத்

மவ்லானா மவலவி ஹாஃபிழ் அல்ஹாஜ் J ஜாகிர் ஹுஸைன்,ஹள்ரத்

மவ்லானா மவலவி அல்ஹாஜ் V.R. அப்துஸ் ஸமது,ஹள்ரத்

மவ்லானா மவலவி அல்ஹாஃபிழ் A.N. காமில் ஷஃபீ,ஹள்ரத்,

மற்றும் உலாமாகள்  மார்க்க அரிங்கர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள்.

நன்றியுரை ஜாமிஆ பொருளாளர் அல்ஹாஜ் A.J.அஹமதுல்லாஹ்,BE.



மல்லவி ஃபாஜில் ஸனது {பட்டம்} பெறுபவர்கள்,



மவ்லவி ஃபாஜில் ஹாஃபிள் M. சையிது முஹம்மது மன்பஈ, புதுவிடுதி,ரெகுநாதப்ரம் புதுகை மாவட்டம்

மவ்லவி ஃபாஜில் ஹாஃபிள் N. நஸ்ருத்தீன் மன்பஈ,
லப்பைக்குடிக்காடு பெரம்பலூர் மாவட்டம்

மவ்லவி ஃபாஜில் M. இர்பானுல்லாஹ் மன்பஈ,
 ரம்ஜான்தைக்கால் கா.ம.குடி.கடலூர் மாவட்டம்

மவ்லவி ஃபாஜில் A. ஹஜ்ஜி முஹம்மது, மன்பஈ,
ரம்ஜான்தைக்கால் கா.ம.குடி.கடலூர் மாவட்டம்

மவ்லவி ஃபாஜில் A.S.ஷாஹுல் ஹமீது,மன்பஈ,
 பிளியங்குளம்,மதுரை மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஸனது {பட்டம்}பெறுபவர்கள்,


மவ்லவி ஆலிம் A.முஹம்மது ஜீலானி, மன்பஈ,
கண்டாச்சிபுரம் விழுப்புரம் மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A.நஜ்முத்தீன் அஹ்மது, மன்பஈ,
 பாலக்கரை திருச்சி 8

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A.ஜுபைர் அஹ்மது,மன்பஈ,
 கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் R. முஹம்மது அலி ஜின்னா, மன்பஈ,
உலகாபுரம் விழுப்புரம் மாவட்டம்
மவ்லவி ஆலிம் M. முஹம்மது ஹுசைன்,மன்பஈ,
கல்மேடு,மதுரை மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் K.E. அப்துர் ரஹீம்,மன்பஈ, கல்மேல்குப்பம்,வேலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் M.I.ஷேக் முஹம்மது,மன்பஈ,
புரப்பணிப்ப்த்தூர், சென்னை மாவட்டம்

மவ்லவி ஆலிம் M.அப்துல் ஹகீம்,மன்பஈ,
கல்மேடு,மதுரை மாவட்டம்

மவ்லவி ஆலிம் S. அப்துல் மஜீது,மன்பஈ,
தென்காசி, நெல்லை மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A. சிராஜுத்தீன், மன்பஈ,
 மகாராஜபுரம், விருதுநகர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் N.A. முனவ்வர் ஹுசைன் மன்பஈ,
கொள்ளுமேடு கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் M. ஷேக் பரீத், மன்பஈ,
 சித்தயன்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்

மவ்லவி ஆலிம் S. முஹம்மது ரில்வானுல்லாஹ், மன்பஈ,
இராஜகாப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்

மவ்லவி ஆலிம் A.J.முஹம்மது மஅரூஃப், மன்பஈ,
ஆயங்குடி கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் A.K. அப்துல் ஃபத்தாஹ், மன்பஈ,
கொப்பனாபட்டி புதுகை மாவட்டம்

மவ்லவி ஆலிம் ஹாஃபிழ் M.A.முஹம்மது கஸ்ஸாலி, மன்பஈ, லால்பேட்டை கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் S. பைஜுர் ரஹ்மான், மன்பஈ,
கொள்ளுமேடு கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் A.M.ஷம்சுத்தீன்,மன்பஈ,
லால்பேட்டை கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் B.ஹலீல் அஹ்மது மன்பஈ,
 லால்பேட்டை கடலூர் மாவட்டம்

மவ்லவி ஆலிம் M. இம்தாதுல்லாஹ் பேக், மன்பஈ,
கீழ்புவனகிரி கடலூர் மாவட்டம்

8.7.10

வாக்காளர் பட்டியல் விவரம்: எஸ்.எம்.எஸ்., மூலம் அறியலாம்

சென்னை:வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா துவக்கி வைத்தார்.




தமிழகத்தில் முதல் முறையாக வாக்காளர் பட்டியல் விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் முறையை, சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த வசதியை சென்னையில் நேற்று நடந்த தேர்தல் கமிஷன் வைர விழாவின்போது,தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா துவக்கி வைத்தார்.



சென்னை மாவட்டத்தில், தற்போது, 27 லட்சத்து 20 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 97.83 சதவீத வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். சென்னை மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், எஸ்.எம்.எஸ்., வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



முதற்கட்டமாக, சென்னை மாவட்ட வாக்காளர்கள் மட்டுமே இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும்.



வாக்காளர்கள் தங்களை பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள மொபைல் போனில், ‘vote’ என டைப் செய்து ஒரு, ’space’ விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, ‘51913′ என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், வாக்காளரின் பெயர், அவர் வசிக்கும் தொகுதியின் பெயர், ஓட்டளிக்க வேண்டிய மையத்தின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் எஸ்.எம்.எஸ்., மூலம் பதிலாக கிடைக்கும்.



இந்திய சுதந்திர போராட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பங்கு – ஓர் ஆய்வு


இந்திய சுதந்திர போராட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களின் பங்கு – ஓர் ஆய்வு



( டாக்டர் ஏ. அக்பர் ஹுசைன், வரலாற்றுத்துறை விரிவுரையாளர் )



இந்தியாவின் விடுதலைப் போரில் இஸ்லாமியரின் பங்கு மகத்தானது. நாடெங்கிலும் நடந்த ஆங்கிலேயரின் அடக்குமுறையில் ஆயிரக் கணக்கான இஸ்லாமியர்கள் அல்லுற்றனர்.



காந்தி அடிகளின் அறைகூவலை ஏற்று சுதந்திர வேள்வியில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இஸ்லாமியர்கள் ஏராளம். 17.08.1920-ல் காந்தியடிகள் மெளலானா சவுகத் அலியுடன் கிலாபத் இயக்கப் பிரச்சாரத்திற்காக இந்நகருக்கு வருகை தந்தார். இம்மாவட்டத்தின் கிலாபத் இயக்கத்தின் செயலாளர் வி.எஸ். முகம்மது இப்ராஹீம் தமிழிலும், டாக்டர் அப்துல் கபான் இந்துஸ்தானியிலும் வரவேற்புப் பத்திரம் படித்து அளித்தனர்.

வாக்களர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா ?

7.7.10

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் புனித‌ மிஃராஜ் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் புனித‌ மிஃராஜ் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி




துபாய் : துபாய் ஈமான் அமைப்பு புனித‌ மிஃராஜ் இர‌வினையொட்டி சிற‌ப்பு நிக‌ழ்ச்சியினை ஹிஜ்ரி 1431 ர‌ஜ‌ப் பிறை 27, 08 ஜுலை 2010 வியாழ‌ன் மாலை இஷா தொழுகைக்குப் பின் இர‌வு 9.30 ம‌ணிய‌ள‌வில் துபாய் தேரா லூத்தா ஜாமி ஆ ம‌ஸ்ஜிதில் ( குவைத் ப‌ள்ளி ) ந‌டைபெற‌ இருக்கிற‌து.



லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் இமாம் மௌல‌வி எம்.ஏ. காஜா முஹ‌ம்ம‌து ஜ‌மாலி ம‌க்கி ம‌ன்ப‌ஈ, ம‌துரை மாவ‌ட்ட‌ இஷாஅத்துல் இஸ்லாம் நிறுவ‌ன‌ துணைத்த‌லைவ‌ர் மௌல‌வி பி.கே.என். அப்துல் காதிர் ஆலிம் ம‌ன்ப‌ஈ ஆகியோர் சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கின்ற‌ன‌ர்.



சிற‌ப்புச் சொற்பொழிவுக்குப் பின்ன‌ர் த‌ஸ்பீஹ் தொழுகை, திக்ரு, த‌வ்பா ஆகிய‌ நிக‌ழ்ச்சிக‌ள் ந‌டைபெற‌ இருக்கின்ற‌ன‌. பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்பட்டுள்ள‌து.
 
தகவல்:
முதுவை ஹிதாயத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் புரக்கனிப்பா...! எதிரிகளுக்கு பதில் சொல்ல தேவையில்லை

தலைமைகழக செய்தி


பிரதமரைச் சந்திக்கச் சென்ற குழுவில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஏன் செல்லவில்லை? அவரை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அல்தாபி தனது குடும்பத்தை திருச்சிக்கு மாற்றிய போதும் அவரைப் புறக்கணிப்பதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

மாபெரும் இஸ்ரா ஃ மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மாபெரும் விண்ணுலக யாத்திரையின் நினைவாக குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற ஒரே தமிழ் இஸ்லாமிய அமைப்பான 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'மாபெரும் இஸ்ரா ஃ மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்'...

'அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே! மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!!' என்ற கருப்பொருளில் கீழ்க்கண்ட முறையில் இரண்டு இடங்களில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.

முதல் நாள் நிகழ்ச்சி:

6.7.10

2010 ஹஜ் கமிட்டி மூலமாக புனித ஹஜ் பயணம் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்கள்

லால்பேட்டையில் இருந்து 2010 ஆண்டு ஹஜ் கமிட்டி மூலமாக புனித ஹஜ் பயணம் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்கள். மற்றும் ஆயங்குடி,எள்ளேரி.சிதம்பரம்,பின்னத்தூர்,நீடூர்,பெருந்தோட்டம்,மேலச்சாலை,ஜெயங்கொன் டம், ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் லால்பேட்டை ஹாஜி எம்.எ.பத்ஹுத்தீன் அவர்களின் மூளமாக ஏர்பாடு செய்து இந்த ஆண்டு புனித ஹஜ் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளது. வள்ள இறைவன் அனைவருடைய ஹஜ் கடமைகலையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்.

LALPET
RAZAK {49/33, SINGARA ST, LALPET.}


NOORUNNISA

UMMASALMA

ABDUL JABBAR {102/25,MAIN ROAD,LALPET }

FATHIMA BEEVI

MOHAMED 54,SOUTH ST ,LALPET

KUTHPUTHEEN {6/66,QUAIDE MILLATH STREET,LALPET}

DASSINNISA

SHAIK ALI

HAJIRA BEEVI

ABDUL JABBAR{ 84/94,KOTHAVAL STREET,LALPET}

RAHAMATHUNNISA

ARABIYA

SULAIMAN {1,MAIN ROAD LALPET}

ZAINAL ARABIA

ABDUL HALEEM{ 90, METTU STREET,LALPET}

AZEJUNNISA

SATHAKKATHULLAH {14 IQBAL STREET K,K LALPET}

NOORJAHAN

RASOOL BEEVI

RAMEEZA BEGUM

RASITHA BEGUM

ATHAVULLAH {65/40, SOUTH STREET LALPET}

MUMTAJ BEGAM

HALILUR RAHMAN {144/81,NORTH STREET,LALPET }

SHAMSUNNIHAR

NAZEEMUDEEN {7,AMANI STREET,LALPET}

THAJUNNISA

BARAKATHUNNISA

HABIBU RAHMAN {19,NOORI STREET, LALPET }

NIHARUNNISA

SAJIDHA BEGUM

MOHAMED HAJA {AMANI STREET LALPET]


SHOWTHA
MOHAMED ALI {4, JINNA STREET ,LALPET}

ELLERI

HUSSAIN SHARIFF 138/64, SOUTH ST, ELLERI.

MUQTARUNNISA

CHIDAMBARAM

MOHAMED SULTHAN 26/19 ,NORTH MAIN ROAD,CHIDAMBARAM

RASOOL BEEVI

BARAKATHUNNISA

MIJAJINNISA

SAMSUNNISA

AYANGUDI

ABDUL SALAM 420,WEST MAIN ROAD,AYANGUDI

SAIFUNNISA

PINNATHUR,

NOOR MOHAMED 219,PALLIVASAL STREET,PINNATHUR,CDM

HABIBUNNISHA

MOHAMED SALIH 61B,ALI RALI STREET,PINNATHUR CDM

MEHARUNNISA



NAGAI DIST

AYOOB ANSARI 14, NORTH STREET, NIDUR, NAGAI DIST

NOORUL HUDHA

HIDHAYATHU BEEVI

ABDUL GANI 5/4B,PALLIVASAL STREET,MELASALAI,NAGAI DT

NOORUL HUDHA BEEVI

ENATHULLAH 160/4,A.H. ST NIDUR POST,NAGAI DIST

UMML FAJIRIYA

HATHOON BEEVI

HABIBUNNISA

SABURNISHA

NOORUL AMEEN 1/117,AGRAHARA STREET,PERUNTHOTTAM,NAGAI

JALMA BEEVI

ARIYALUR DIST

MOHAMED HANIFA 12,ANDAL STREET,JAYANKONDAM,ARIYALORE,DT

MARIYAM BEEVI

MOHAMED MUSTHAFA

JAMEERNISHA

நன்றி:

ஹாஜி.M.A.பதஹுத்தீன்


இந்திய தேசிய லீக் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்...?


சென்னை,ஜூலை 6,

சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் உள்ள மெம்மோரியல் ஹால் வளாகத்தில் சமச்சீர் கல்வியை அமல் படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை தேசிய லீக் தலைவர் எஸ்.ஜெ.இனாயத்துல்லாஹ் தலைமையில் நடத்தியது.




தமிழகத்தில் உள்ள மொழி சிறுபாண்மையினரின் மொழிப்பாட திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.மலையாளம்,உருது,அராபிக்,கன்னடம்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்குரிய கண்ணியத்தை அரசு வழங்க வேண்டும் என்றார் தேசிய லீக் தலைவர் எஸ்.ஜெ.இனாயத்துல்லாஹ்.





மாநாட்டுக்கு கிடைத்த வெற்றியே..,! முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: சோனியா,மன்மோகன்சிங் உறுதி!

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள்.




பகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இட ஒதுக்கீட்டை வலியுதித்தினார்கள்.



இது குறித்த முழு விபரம் வருமாறு:



மாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம்.



மாநாடு நடத்துவது மட்டும் போதாது. இட ஒதுக்கீடு தரும் இடத்தில் இருப்பவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா? இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான மாநாடு மற்றும் பேரணி குறித்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பை விரும்பினோம்.



பிரதமரும் சோனியா காந்தி அவர்களும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நேரம் ஒதுக்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.



மாநாடு முடிந்த மறுநாளே ஆறாம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.



தமிழக வரலாறு காணாத அளவுக்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உணர்ச்சிப் பிளம்பாகக் கலந்து கொண்ட தகவல் உளவுத்துறை மூலமும் மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர் ஜெ. எம். ஹாருன் அவர்கள் மூலமும் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் செய்திகள் சென்றடைந்ததே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் காரணமாக இருந்தது. பிரதமரி சந்திப்பின் போது இதைக் கண்டு கொண்டோம்.



தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி. ஜைனுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அஹமது ஆகியோர் காலை 7.00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு குறித்த நேரத்தில் பிரதமரை சந்திக்கச் சென்றோம். வழக்கமான பாதுகாப்பு சோதனை முடிந்தபின் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டோம்.



அனைவரிடமும் பிரதமர் கைகுலுக்கி வரவேற்றார். திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பி. ஜே. வழங்கினார்கள். குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பிரித்துப் பார்த்து கண்களில் ஒற்றிக் கொண்ட பின் நன்றி நன்றி நன்றி எனக் கூறினார்.



இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் பிரதமருக்கு சால்வை வழங்கினார்கள். தேசிய லீக் தலைவார் பஷீர் அஹமது அவர்கள் ஏல்க்காய் மாலை வழங்கினார்கள்.



இதன் பின்னர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் லட்டர் பேடில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எழுதப்பட்ட கோரிக்கை மனுவை வழங்கினோம்.



பிரதமருக்கு அருகில் பிரதமர் இருக்கை போல் ஒரு இருக்கையும் வலது இடது புறங்களிலும் எதிரிலும் சோபாக்கள் போடப்பட்டு இருந்தன.



தனது அருகில் போடப்பட்ட இருக்கையில் பி. ஜே. அவர்களை பிரதமர் அமரச் செய்தார்கள். இந்த இருக்கையில் மத்திய கேபினட் அமைச்சர் தவிர யாரும் அமர வைக்கப்பட மாட்டார்கள். இந்தக் கண்ணியத்தை பிரதமர் தங்களுக்கு மட்டும் வழங்கினார் என்று பின்னர் ஹாரூன் அவர்கள் பீஜேயிடம் கூறினார்கள். ஆனால் இது பீஜேவுக்கு வழங்கப்பட்ட கண்ணியம் அல்ல. மாநாட்டுக்கு வந்த இதற்காக உழைத்த துஆ செய்த அனைவருக்குமான கண்ணியமே இது என்று பீஜே கூறினார்.



பதினைந்து நிமிட நேரம் முஸ்லிம்களின் அவல நிலையையும், காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியையும் பி. ஜே. தமிழில் கூற, ஹாரூன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார்கள்.



மாநாட்டைப் பற்றியும், கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைப் பற்றியும் பி. ஜே. தெரிவித்த போது தெரியும், ரிப்போர்ட் வந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்கள்.



ஷம்சுல்லுஹா, அப்துல் ஹமீது, ரஹ்மத்துல்லா ஆகியோரும், பஷீர் அஹமது, ஹரூன் பாய் ஆகியோரும் ஆங்கலத்தில் இட ஒதுக்கீடு குறித்து பல வகையிலும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தார்கள்.



அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர் நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.



தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பிரதமர் தந்த மரியாதையும் முக்கியத்துவமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தன. லட்சக்கணக்கான மக்கள் பட்ட கஷ்டமும் உழைப்பும் துஆக்களுமே இதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.



நின்று கொண்டே மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பக் கூட நேரமில்லாத பிரதமர் நாங்களாக எழும் வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள். காரணம் தீவுத் திடலை நிறைத்த மக்கள் சக்தி தான் என்பதை நாங்கள் எங்களுக்குள் நினைவுபடுத்திக் கொண்டோம்.



அடுத்ததாக காங்கிரஸ் தலைமை அதிகார மையத்தின் நம்பர் ஒன் ஆகக் கருதப்படும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களைச் சந்திக்கச் சென்றோம். ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டதால் குறித்த நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டது.



எத்தனையோ வேலைப் பளுவில் இருக்கும் பெரும் தலைவர்கள் மற்றவர்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள். ஒரு விநாடி காலதாமதமானாலும் யாரையும் சந்திக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் செக்யூட்டிகள் நமது சந்திப்பை கேன்சல் செய்து விட்டதாகக் கூறினார்கள். ஆனால் ஹாரூன் பாய் அவர்கள் தொடர்பு கொண்டு தாமதத்துக்கான காரணம் பற்றி தெரிவித்தவுடன் எங்கள் காலதாமதத்தைப் பொருட்படுத்தாமல் உடனே எங்களை வரச் சொன்னார்கள்.



சோனியா காந்தி அவர்களை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தோம். அவருக்கும் குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் அந்த மாமனிதா ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்தோம். கோரிக்கை மனுவையும் அளித்தோம். பிரதமரிடம் எடுத்துச் சொன்னது போல் முழுமையாக கோரிக்கைகளை அவர்களுக்கும் விளக்கினோம்.



அபுல்கலம் ஆஸாத் அறக்கட்டளை மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் மீது தமக்கு உள்ள அக்கரையை சோனியா விளக்கிக் கூறினார். இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.



இருபெரும் தலைவர்களின் சந்திப்பும் இட ஒதுக்கீடு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.



சந்திப்பு இனிப்பாக இருந்தாலும், வாக்குறுதி நம்பும்படி இருந்தாலும் இட ஒதுக்கீடு தான் அடுத்த தேர்தலில் மையக் கருத்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.



இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றினால் அதன் பலனக் காங்கிரஸ் அறுவடை செய்யும். இட ஒதுக்கீடு அளிக்கத் தவறினால் இந்தச் சந்திப்பு எந்த வகையிலும் முஸ்லிம்களைத் திருப்திப் படுத்தாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.



புது டில்லியில் இருந்து கோவை ரஹ்மதுல்லாஹ்



குறிப்பு ஜேஎம் ஹாரூன் அவார்களுக்கும் நமக்கும் கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் இந்த மாபெரும் மக்கள் திரளை சமுதாய நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வம் எங்கள் ஆர்வத்தை விட குறைந்ததாக இல்லை. மேலும் தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்கள் மாநாட்டூக் நீங்கள் அழைக்காவிட்டால் கூட நான் உரிமையுடன் வந்து கலந்து கொள்வேன் எனக் கூறி ஹாரூன் அவர்களுடன் சேர்ந்து இந்த சரித்திரம் காணாத மக்கள் சக்தியக் காட்டி மக்களுக்கு நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டியது குறிப்பிடத் தக்கது.

http://www.tntj.net/?p=17441

மேற்கல்விக்காக ஏங்கும் ஏழை சகோதரனுக்கு உதவிடுங்கள்.

மாணவன் பெயர்:அஹமது


தந்தை பெயர்: ஷேய்க் அப்துல்லா

தாய் பெயர்: சகர் பானு

படிப்பு: 12th standard

வயது 18

மதிப்பெண் 962

அந்த மாணவனின் தந்தை எங்கிருக்கிறார் என தெரியவில்லை.தாய் EPS பள்ளியில் உஸ்தாதாக பணி புரிந்து கொண்டுள்ளார்.



மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில்,எப்படியும் மேற் படிப்பு படித்து முன்னேற வேண்டும் என துடிக்கும் இவருக்கு உதவ யாரும் இல்லாத நிலை.



இவருடைய இச் சூழ்நிலையை எண்ணி,அல்லாஹ்வுக்காக,இவருடைய கல்விக்கு உங்களால் முடிந்த அளவு உதவி,அல்லாஹ்வின் நல் அருளை பெற்றுக் கொள்வோம்.



அந்த மாணவனின் தொடர்பு முகவரி

S.AHAMAD

29/12 GODOWN STREET,

ADIRAMPATTINAM

CONTACT # 9843535710



தகவல் உதவி :அப்துல் ரஜாக்

கலிபோர்னியா

5.7.10

காவல்துறை அதிகாரியை பணிமாற்றம் செய்ய வேண்டும் இந்திய தேசிய லீக் வேண்டுகோள்

காவல்துறை அதிகாரியை பணிமாற்றம் செய்ய வேண்டும் இந்திய தேசிய லீக் வேண்டுகோள்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநாடு திணறியது தீவுத்திடல்

திணறியது தீவுத்திடல்


அலைகடலென ஆர்ப்பரித்தது மக்கள் வெள்ளம் அல்லாஹ்விற்கேப் புகழனைத்தும்.இஸ்லாமிய சமுதாய மக்களின் நீண்ட உறக்கம் கலைந்தது,

இனி இல்லை பின்னடைவு,எழுச்சியை நோக்கி நகரும் காலத்தின் தொடக்கம் இது.

கெந்தக மண்ணை விட்டு வெளியேறி இந்திய மண்ணில் குடியேறும் காலத்தின் தொடக்கம் இது,

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளை ப்ளாட்பாரங்களை விட்டு நகர்த்தி குடிசைகளுக்கு மாற்றும் காலத்தின் தொடக்கம் இது,

தீவிரவாதிகள் எனும் பொய் முத்திரையை உடைத்தெறியும் காலத்தின் தொடக்கம் இது,


எதிர் பார்த்ததை விட மக்கள் கூட்டம் அதிகரித்தது,

எப்பொழுதும் போல எந்த அசம்பாவிதமும் இல்லை.


பேரணியிலும்

பொதுக்கூட்டத்திலும் வாழ்வாதார கோஷங்களே விண்ணைப் பிளந்தது.


அல்லாஹ்வின் கிருபையால் வெற்றிகரமாக நடந்த முடிந்த மாநாடுப் பற்றிய தகவல்கள், அதில் இயற்றப்பட்டத் தீர்மாணங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஆதாரப்பூர்வ இணையதளங்களில் விரைவில் வெளிவரும்.



4.7.10

துபாய் ஈமான் அமைப்பின் ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பாள‌ர் ஏ. ஹ‌மீது யாசின் அவ‌ர்க‌ளின் தந்தை மறைவு

துபாய் ஈமான் அமைப்பின் ஜ‌மாஅத் ஒருங்கிணைப்பாள‌ர் ஏ. ஹ‌மீது யாசின் அவ‌ர்க‌ள‌து த‌க‌ப்ப‌னாரும், கீழ‌க்க‌ரை தின‌க‌ர‌ன் செய்தியாள‌ருமான‌ அம்ஜ‌த் இப்ராஹிம் அவ‌ர்க‌ள் 04.07.2010 ஞாயிற்றுக்கிழ‌மை அதிகாலை வ‌ஃபாத்தானார்.

அவ‌ர்க‌ளைப் பார்க்க‌ச் சென்ற‌ உட‌ன் பிற‌ந்த‌ ச‌கோத‌ரி அவ‌ர்க‌ளும் அதிர்ச்சியில் வ‌ஃபாத்தானார்க‌ள். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்.


அன்னார‌து ஜ‌னாஸா 05.07.2010 திங்க‌ட்கிழ‌மை காலை ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டும்.

ஹ‌மீது யாசின் தொட‌ர்பு எண் : 050 475 3052 / 055 41 45 064

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின்  குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம்  பிரார்த்தனை செய்கிறது.




லால்பேட்டை மெளலவி முஹம்மது மன்சூர் அவர்களின் மனைவி மறைவு


லால்பேட்டை தெற்க்குத் தோப்பு முபாரக் வீதியில் இருக்கும்  மெளலவி {மதார்கனி} முஹம்மது மன்சூர் அவர்களின் மனைவி ஹாஜியா பாத்திமா பீவி அவர்கள் 04.07.2010 இன்று காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.அன்னாரின் ஜனாஸா நலடக்கம் இன்று அஸருக்குப் பின் நடைபெறும்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

லால்பேட்டையில் மின்நிறுத்தம் நேரம் மாற்றம்

சிதம்பரம்:சிதம்பரம் கோட்டத்திற்குட்பட்ட துணைமின் நிலையங்களில் இந்த மாதம் மின் நிறுத்தம் நேரம் மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து சிதம்பரம் செயற்பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:


சிதம்பரம் கோட்டத்திற்குட்பட்ட காட்டுமன்னார்கோவில் துணைமின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் காட்டுமன்னார்கோயில் நகரம், லால்பேட்டை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் காலை 8 மணியில் இருந்து 10 மணிவரையிலும் மின் நிறுத்த நேரம் மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

3.7.10

போலீஸ் பாதுகாப்புடன் உரூஸ் விழா: லால்பேட்டையில் கடையடைப்பு

சிதம்பரம்:காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உரூஸ் விழா நடந்து வருகிறது. விழாவை கண்டித்து லால்பேட்டையில் நேற்று ஜமாத் சார்பில் கடையடைப்பு நடத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையைச் சேர்ந்தவர் பைஜிஷா நூரி. இவரது நினைவு நாளை அவரது குடும்பத்தார் உரூஸ் விழாவாக கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு விழாவில் பெரும் கலவரம் வெடித்தது. போலீசார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.



10க்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப் பட்டது.இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி கோர்ட் உத்தரவுபடி கொடி ஏற்றுதல், கவாலி பாடுதல், சந்தனம் பூசுதல் ஆகிய நிகழ்ச்சிகள் இல்லாமல் உரூஸ் விழா கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டைப்போல் கோர்ட் அனுமதி பெற்று இந்த ஆண்டு உரூஸ் விழா நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. இந்த விழாவை கண்டித்து ஜமாத் சார்பில் லால்பேட்டையில் நேற்று கடையடைப்பு நடத்தப்பட்டது.

பிரச்னை ஏற்படாமல் இருக்க டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


http://www.dinamalar.com/district_main.asp?id=273#31951

.