26.10.09

லால்பேட்டை அப்துல்லாஹ் ஹஜ்ரத் மறைவுக்கு முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே இரங்கல்!

சென்னை,அக்,26
லால்பேட்டை நகர முஸ்லிம் லீகின் முதுபெரும் தலைவராகவும்,ஜெ.எம்.ஏ.அரபிக்கல்லூரியின் நீண்ட கால உருப்பினராகவும்,காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ள முபாரக் மஸ்ஜிதை நிர்மாணித்தவர்களில் ஒருவருமாக விளங்கிய மொளலவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் இரங்கல்.
.

முஸ்லிம் லீக் தலைவராக விளங்கிய ஜின்னா சாஹிப் பங்கேற்ற மாநாட்டில் கலந்துக் கொண்ட பெருமைக்குரிய ஆலிம் அவர்கள் தன் தள்ளாத வயதிலும் முஸ்லிம் லீக் பொன்விழா மாநாட்டிலும் பங்கேற்று ஊர்வலத்தில் கொடி பிடித்து வந்த நிகழ்ச்சி மறக்க முடியாதது,அதைப்போலவே அன்னாரின் மறைவுச் செய்தியும் அதிர்ச்சிக்குரியது.
.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொருத்து அவர்தம் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை வழங்க பிரார்த்திக்கிறேன்.

மேற்கண்டவாறு தலைவர் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

லால்பேட்டை அப்துல்லா ஹஜ்ரத் வஃபாத்

லால்பேட்டை பூங்கா வீதி சமனன் மெளலவி ஹாஜி அப்துல்லா ஹஜ்ரத் அவர்கள் இன்று 26.10.2009 காலை தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்,

24.10.09

லால்பேட்டை ஹயாத் பாஷா மக்காவில் வஃபாத்

லால்பேட்டை ஹைஸ்கூல் பின்புறம் உள்ள ஹாஜி ஹயாத் பாஷா அவர்கள் இன்று 24.10.2009 மக்காவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்

22.10.09

லால்பேட்டையில் அ.தி.மு.க., ஆண்டு விழா பொதுகூட்டம்

லால்பேட்டையில் அ.தி.மு.க., ஆண்டு விழா பொதுகூட்டம் நடந்தது.குமராட்சி ஒன்றியம் சார்பில் லால்பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு நகர தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

பேரவை இணை செயலாளர் இளஞ்செழியன், கீழக்கரை செல்வம், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வீரமணி, ஜெயமணி , பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மூசா வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், தலைமை கழக பேச்சாளர் கரியப்பட்டி ராமநாதன் பேசினர்.மாவட்ட அவை தலைவர் பெருமாள், பேரவை செயலாளர் மாரிமுத்து, காட்டுமன்னார்கோவில் ஒன்றிய பேரவை செயலாளர் முருகுமாறன், நகர செயலாளர் எம்.ஜி.ஆர் தாசன், சிவக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

ஒன்றிய செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

21.10.09

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா காட்சிகள்.


மாணவ மாணவிகள் பங்கு பெற்ற கலை நிகழ்ச்சி.

விழா மேடையில் அப்துல் ரஹ்மான் எம்.பி,கே.ஏ.எம்.அபூபக்கர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள்.


கலை நிகழ்ச்சியை ரசிக்கும் சிறப்பு விருந்தினர்கள்.



நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள்

சிறப்பு விருந்தினர்களுக்கு பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமது,தலைவர் எஸ்.ஜாஃபர் அலி,நிர்வாகக் குழு உறுப்பினர் இஸட்.முஹம்மது யஹ்யா ஆகியோர் நினைவு பரிசு வழங்கும் காட்சி.



சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்ட முஸ்லிம் லீக் பாராளுமன்ர உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி. முஸ்லிம் லீக் பொதுச் செயளாலர் கே.ஏ.எம்.அபூபக்கர் ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்படுகிறது.



மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.

20.10.09

லால்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமுக விழிப்உணர்வு பொதுக்கூட்டம்


கடலூர் மாவட்டம் லால்பேட்டை யில் 18.10.09 ஞாயிறு அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமுக விழிப்உணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்... மாவட்ட தலைவர் மூசா தலைமை தாங்கினார் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்



இதில் மாநில செயலாளர் அப்துல் ரஜாக் அவர்கள் (சமுக நலன்) என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் (சீரழிவிலிருந்து சமுதாயம் சீர்பெறவேண்டும்) என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள், இப்பொதுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பெறும் திரளாக கலந்துகொண்டனர்.


இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
தீர்மானங்கள் 1. லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டில் உள்ள திருபந்துருத்தியை சேர்ந்த அப்துல் பஷீர் என்பவரின் கபர்-ரை அகற்றும் வழக்கு-ணை துரிதபடுத்தவேண்டியும் கபர்-ரை வசிக்கும் இடத்திலிருந்து அகற்றவேண்டியும் இப்பொதுக்கூட்டம் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. லால்பேட்டை-யில் பெரும்பான்மையான பெண்கள் படித்து வருவதினால் உடனடியாக அரசு மகளிர் உயர் நிலை பள்ளி ஏற்படுத்த வேண்டும்.
3. லால்பேட்டை-யில் அரசு உயர் நிலை மருத்துவமனை அமைகவேண்டியும் கேட்டுகொள்ளபட்டது.

Thanks: Raisudeen

லால்பேட்டை முஹம்மது ஹஸன் வஃபாத்

லால்பேட்டை புதுப்பள்ளி தெரு {உரம் வியபாரி} சமனன் முஹ்ம்மது ஹஸன் அவர்கள் இன்று 19.10.2009 இரவு 11 மணியவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்

லால்பேட்டை அய்ஸா பீவி வஃபாத்

லால்பேட்டை ஸ்கூல் தெரு மர்ஹும் சைலப்பை முஹ்ம்மது அலி அவர்களின் மனைவியும் இலண்டனில் வசிக்கும் சாதுல்லா, ,இலியாஸ், ஆகியோரின் தாயாருமான அய்ஸா பீவி அவர்கள் இன்று 20.10.2009 காலை 7.30 மணியவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்

லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிகழ்வுகள்:

மாலை மூன்று மணி முதல் லால்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட நிர்வாகிகளும்,தொண்டர்களும் குவியத்தொடங்கினர். ஆய்வு மாளிகை வளாகத்திலேயே மாவட்ட முஸ்லிம் லீகின் கலந்தாய்வுக் கூட்டம்,பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் சாஹிப்,மாநில பொதுச் செயளாலர் ஹாஜி கே.ஏ.எம்.அபூபக்கர்,மார்க அணிச் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத் தலைவர் ஹாஜி.எஸ்.ஏ.அப்துல் கஃப்பார்,மாவட்டச் செயளாலர் ஏ.சுக்கூர்,ஆகியோரின் ஒருங்கிணைப்பில் கடலூர்,விருதாச்சலம்,சிதம்பரம், லால்பேட்டை,பரங்கிப்பேட்டை,மங்கலம்பேட்டை,நெல்லிக்குப்பம்,ஆயங்குடி,முட்லூர்.பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் நிர்வாகிகளும்,பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை பரிமாரிக் கொண்டனர்.மாலை ஐந்து மணிவரை இக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பிறைக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஊர்வலத்துடன் துவங்கியது இதில் இளைஞர்கள்,மாணவர்கள்,பெரியவர்கள் என்று பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். லால்பேட்டை நகரில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் நட்சத்திரம் பதித்த பச்சிளம் பிறைக் கொடியை,முஸ்லிம் லீகின் அரசியல் ஆலோசனைக்குழு உருப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்,பொதுச் செயளாலர் கே.ஏ.எம் அபூபக்கர் ஆகியோர் ஏற்றிவைத்தனர். நிறைவாக சிதம்பரம் மெயின் ரோட்டில் அமைந்திருந்த சிராஜுல் மில்லத் நினைவரங்கில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.நகரத் தலைவர் ஹாஜி.கே.ஏ.ஜி.முஹம்மது தலமை வகித்தார்.ஹாஃபிழ் முஜீபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்.மாவட்ட துணைச் செயளாலர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ் வரவேற்று பேசினார். கடலூர் மாவட்டத் தலைவர் அல்ஹாஜ்.எஸ்.ஏ.அப்துல் கஃப்பார் துவக்கவுரையாற்றினார்.கடலூர் மாவட்டச் செயளாலர் ஏ.சுக்கூர்,திருவாரூர் மாவட்டச்செயளாலர் ஹாஜி எம்.எம்.ஜலாலுத்தீன்,விழுப்புரம் மாவட்டச் செயளாலர் ஏ.அன்வர் பாஷா,மாவட்ட பட்டதாரிகள் அணி அமைப்பளர் ஏ.ஏ.ரஷீத் ஜான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில மார்க்க அணிச் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,மாநில பொதுச் செயளாலர் ஹாஜி கே.ஏ.எம் அபூபக்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக அனைத்துலக காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளரும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உருப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.நிறைவுப் பேருரையாற்றினார்.



கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி கமாலுத்தீன்,மாவட்ட பொருளாலர் ஹாஜி ஏ.கே.ஹபீபுர் ரஹ்மான்,மாவட்ட துணைச் செயளாலர் வி.எம்.ராஜா ரஹீமுல்லாஹ்,சிதம்பரம் எம்.ஏ.ஜெகரிய்யா,நெல்லிக்குப்பம் ஹஜி அப்துல் ஹாதி,கடலூர் அக்பர் அலி,முட்லூர் அப்துல் கஃப்பார்,பரங்கிபேட்டை முஹம்மது பஷீர்,அயங்குடி அப்துல் வதூத்,முஹம்மது இக்பால்,ஹாஜி முஹம்மது இப்ராஹிம்,விருதாச்சலம் ஹாஜி அப்துல் மஜீத்,லியாகத் அலி, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளானோர் பங்கேற்ற்னர்.இறுதியில் நகர துணைச் செயளாலர் யூ.சல்மான் ஃபாரிஸ் நன்றி கூறினார்.





நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டை எம்.ஓ.அப்துல் அலி,பி.எம்.தய்யிப்,எம்.ஜெ.மஸூத் அஹமத்,பி.எம்.அப்துல் காதர்,சாதுல்லாஹ்,மொளலவி நூருல் அமீன்,ஜாகிர் ஹுஸைன்,மற்றும் மெயின் ரோடு கவ்சரியா பைத்துசபா அங்கத்தினர்கள்,முஹப்பத் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.







லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா!

இருபதாம் ஆண்டைநோக்கிச் செல்லும் லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா திறந்த வழி மைதானமான குத்பா பள்ளி திடலில் அமைந்துள்ள ஹாஜி.ஃபஜ்லுத்தீன் நினைவரங்கில் காலை 10 மணிக்கு துவங்கியது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் தாளாலர் ஹாஜி ஜாஃபர் அலி தலமை வகித்தார். பள்ளியின் தாளாலர் இளவல் எஸ்.ஹாரிஸ் அஹமது வரவேற்று பேசினார். பொருளாலர் ஹாஜி ஜெகரிய்யா ஆண்டரிக்கை வாசித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயளாலர் ஹாஜி.கே.ஏ.எம்.அபூபக்கர்,மாநில மார்க்க அணிச் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,கவிஞர் பி.எம்.நஜீர் அஹமத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹஸன் அறிமுகவுரையாற்றினார். பள்ளியின் மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி இறுதியாக சிறப்பு விருந்தினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை எம்.இஸட். முஹம்மது யஹ்யா,ஹாஜி முஹம்மது இப்ராஹிம், அஹமதுல்லாஹ்,உள்ளிட்ட முஸ்லிம் பட்டதாரிகள் சங்கத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.முடிவில் பள்ளியின் முதல்வர் மாரியப்பன் நன்றி கூறினார்

16.10.09

லால்பேட்டை நகரில் முஸ்லீம் லீக் பொதுக்கூட்டம்


காலம் - 18-10-2009 ஞாயிறு மாலை 6 - மணியளவில் , இடம் - சிராஜுல் மில்லத் நினைவரங்கம் ( சிதம்பரம் மெயின் ரோடு)

தலைமை - அல்ஹாஜ் கே.ஏ.ஜி. முஹம்மது,
நகர தலைவர் , லால்பேட்டை.

முனினிலையாளர்கள்
அல்ஹாஜ் , மவ்லவி, ஹாபிஸ், ஏ. பைஜுர் ரஹ்மான் (மதனி)
அல்ஹாஜ் எஸ்.ஏ. அப்துல் ஜமீல் ( உறுப்பினர் ஜே.எம்.ஏ. அரபிக்கல்லூரி)
ஹாஜி. கே.எஸ். அப்துஸ் ஷ_க்கூர் ( முன்னாள் நகர தலைவர்)
அல்ஹாஜ் ஏ.எம். பாரூக்
அல்ஹாஜ் பி.ஏ. முஹம்மது எஹையா ( முத்தவல்லி , ஜாமிஆ மஸ்ஜித்)
அல்ஹாஜ் எம்.ஏ. ஹஸன்,
அல்ஹாஜ். ஏ. ஆர். அப்துர் ரஷீது ( உறுப்பினர் ஜே.எம்.ஏ. அரபிக்கல்லூரி)
ஜனாப் எம். எச். ஆஸிஙப ( நகர செயலாளர்)
அல்ஹாஜ். பி.எம். முஹம்மது ஆதம் ( தலைவர், ஜே.எம்.ஏ. அரபிக் கல்லூரி)
அல்ஹாஜ் ஏ.எம். ஜாபர் ( செயலாளர் ஜே.எம்.ஏ.அரபிக்கல்லூரி)
அல்ஹாஜ் ஏ.ஜே. அஹமதுல்லா ( பொருளாளர் ஜே.எம்.ஏ. அரபிக்கல்லூரி)
ஹாஜி எஸ்.ஏ. அப்துல் அஹது
ஹாஜி. எஸ்.எம். எஹையா நானா
அல்ஹால் ஏ.ஆர். சபியுல்லா ( தலைவர், பேரூராட்சி)
அல்ஹாஜ் எஸ்.ஏ. ஹிதாயத்துல்லா ( உறுப்பினர் பேரூராட்சி)
ஜனாப் எம்.ஓ. அப்துல் அலி (நகர துணை தலைவர்)

கிரஅத் - மவ்லவி ஹாபிஸ், இசட். முஜிபுர் ரஹ்மான்,

வரவேற்புரை -அல்ஹாஜ. கே.ஏ. அமானுல்லா ( துணை செயலாளர், கடலூர் மாவட்டம்.)



துவக்க உரை - அல்ஹாஜ் எஸ்.ஏ. அப்துர் கப்பார் தலைவர், கடலூர் மாவட்டம்
.
சிறப்புரை

.அறிவுச்சுடர் அல்ஹாஜ்

எம். அப்துர் ரஹ்மான் எம்.ஏ. எம்.பி. அவர்கள்

( அனைத்துலக காயிதெ மில்லத் பேரவை, அமைப்பாளர்)


இளைஞர் திலகம்

அல்ஹாஜ் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பி.எஸ்.சி.

( மாநில பொதுச் செயலாளர் இ.யூ.முஸ்லிம் லீக்)

.

சொற்போர் இளவரசர்

ஆம்பூர். எச். அப்துல் பாசித் எம்.எல்.ஏ.

.மவ்லவி ,தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் அவர்கள்,

மாநில மாக்க அணி செயலாளர் இ.யூ. முஸ்லிம் லீக்
.ஜனாப் ஏ. சுக்கூர் அவர்கள் ( கடலூர் மாட்ட செயலாளர் இ.யூ..மு.லீக்)
ஜனாப் ரஷீது ஜான் அவர்கள் ( மாநில பட்டதாரிகள் அணி அமைப்பாளர்)

வாழ்த்துரை

ஜனாப் . ஏ. அன்வர் பாஷா அவர்கள் ( விழுப்புரம் மாவட்ட செயலாளர் இ.யூ.முஸ்லிம் லீக்)
முத்துபேட்டை ஹாஜி. கே. முஹையதீன் அடுமை ( திருவாரூர் மாவட்ட தலைவர்)
ஜனாப் வி.எம். ராஜா ரஹிமுல்லாஹ் ( கடலூர் மாவட்ட துணை செயலாளர் இ.யூ. முஸ்லிம் லீக்)
அல்ஹாஜ் எஸ்.ஏ. தாஹா முஹம்மது
அல்ஹாஜ் ஏ.எஸ். அஹமது பி.பி.ஏ
ஜனாப் பி.எம். அப்துல் காதர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர்.
அல்ஹாஜ் ஏ. முஹம்மது ஜக்கரியா ( கடலூர் மாவட்ட துணை செயலாளர் இ.யூ. மு. லீக்)
ஹாஜி. எம்.எம். ஜலாலுதீன் கடலூர் மாவட்ட முணை தலைவர் இ.ய+. முஸ்லிம் லீக்
அல்ஹாஜ ஐ. கமாலுதீன் கடலூர் மாவட்ட துணை தலைவர் மு.லீக்
ஜனாப் டி.ஏ. கப்பார் கான் கடலூர் மாவட்ட துணை தலைவர் மு.லீக்
அல்ஹாஜ் எம். அனீஸ{ர் ரஹ்மான்
ஜனாப் எம். அப்துல் மாலிக் மாவட்ட அமைப்பு செயலாளர்
ஜனாப் டி.ஏ. சிராஜுதீன்
பங்கேற்று சிறப்பிப்போர்
அல்ஹாஜ் எம் .ஐ. அப்துல் வதூத் ( நகர தலைவர், ஆயங்குடி)
அல்ஹாஜ் ஏ.கே. ஹபிபுர் ரஹ்மான் ( மாவட்ட பொருளாளர்)
ஜனாப் பாவா மொய்தீன்
ஜனாப் அக்பர் அலி ( நகர தலைவர், கடலூர்)
ஜனாப் அப்துல் ஹாதி ( நகர தலைவர், நெல்லிக்குப்பம்)
ஜனாப் எச். ரியாஜுல்லா ( நகர தலைவர், மானியம் ஆடூர்)
ஜனாப் பி.எம். தைய்யூப்
ஜனாப் முஹம்மது கவுஸ் கா.ம.குடி.
அல்ஹாஜ். ஜலாலுதீன் ( மாநில பொதுக்குழு உறுப்பினர்)
ஜனாப் சர்தார் ( நகர செயலாளர் மங்கலம்பேட்டை)
அல்ஹாஜ் இ. அப்துல் மஜீது ( நகர தலைவர், விருத்தாசலம்)
ஜனாப் இஸ்மாயில் ( நகர செயலாளர், கடலூர்)
ஜனாப் அப+பக்கர் ( மாவட்ட துணை தலைவர்)
ஜனாப் எம்.ஐ. நஜீர் அஹமது ( நகர தலைவர், கொள்ளுமேடு)
ஜனாப் கே.எம். ஜாக்கீர் ஹ{சைன்
அல்ஹாஜ் பஜ்லுதீன் ( மாநில பொதுக்குழு உறுப்பினர்)
ஜனாப் தாஜுத்தீன் ( மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர்)
ஜனாப் கே. லியாகத் அலி ( மாவட்ட துணை செயலாளர்)
ஜனாப் ஏ. பஷீர் அஹமது ( நகர தலைவர், பரங்கிப்பேட்டை)
அல்ஹாஜ் ஜே.அலாவுதீன் ( நகர தலைவர் எள்ளேரி)
ஜனாப் ஏ. புகாரி ( நகர தலைவர் , கனகரப்பட்டு)
மவ்ளவி ஏ.எச். நூருல் அமீன்
அல்ஹாஜ் ஏ.எம். ஹனிபா ( நகர தலைவர், மங்கலம்பேட்டை)
மவ்லவி வி.எம். அப்துல் மாலிக் ( நகர செயலாளர் சிதம்பரம்)
மவ்லவி சபியுல்லா ஹஜ்ரத்
மவ்லவி எஸ். அப்துல் ரஜாப் ( மாவட்ட மார்க்க அணி செயலாளர்)
ஜனாப் எஸ். முஹம்மது அலி ( நகர தலைவர், டி. நெடுஞ்சேரி)
ஜனாப் எம்.ஜே. மஸ்ஹ{த் அஹமது
மவ்லவி ஏ.ஏ. சாதுல்லா
நன்றியுரை ஜனாப் யு. சல்மான் பாரிஸ் ( செயலாளர் , நகர இளைஞர் அணி

14.10.09

லால்பேட்டை நன்நகருக்கு தாய்ச் சபை தலைவர்கள் வருகை!!


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் தனி இடம் பெற்றிருக்கும் லால்பேட்டைக்கு தாய்ச்சபை முஸ்லிம் லீக் தலைவர்கள் வருகைதரும் பொழுதெல்லாம் அவர்களின் வருகையில் கல்வித்துறை கட்டாயம் இடம் பெற்றிருந்தது என்பது உலகறிந்த உண்மை!

ஆம்! தமிழகத்தின் தலை சிறந்த கல்லுரியாக விளங்கும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி விழாவில் துவங்கும் முஸ்லிம் லீக் தலைவர்களின் பங்கேற்ப்பு மாலையில் கொடியேற்றத்தைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் நிறைவடையும்.இந்த இனிய வறலாறு இன்றும் நிகழப் போகிறது.

ஆம்! இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 18- ம் தேதி காலை லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம் தோற்றுவித்த வறலாற்றுச் சிறப்பு மிக்க,(இன்ஷா அல்லாஹ் விரைவில் கல்லூரியாக மிளிரப் போகின்ற) இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழாவிலும்,மாலையில் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் மாபெரும் பொதுக் கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க்க இருக்கிறார்கள்.

பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க்கும் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் பாராளுமன்ற உருப்பினரும், அனைத்துலக காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளர்,
அல்லாஹ்விற்க்கு பிடித்தமான பெயரை வைத்துக் கொண்டதாலோ என்னவோ,எல்லோருக்கும் பிடித்துப் போனவர்.

வேட்பாளர் விமர்ச்சனத்தின் போது முஸ்லிம் லீக் தலைவர்கள் காட்டிச் சென்ற லட்சியப் பாதையில்தான் பயணிப்பேன் என்று சொல்லி விமர்ச்சனத்திற்க்கு வேட்டு வைத்தவர்.
தமிழக முஸ்லிம்களின் தேசிய பிரதிநிதி,இவர் பங்கெடுக்கும் எந்த நிகழ்விலும் முஸ்லிம் லீகை பதிய வைக்காமல் இருந்ததில்லை.மொத்தத்தில் முஸ்லிம் லீகின் சொத்தாகத் திகழக் கூடியவர் அத்தகைய பெருமைக் குரியவர் கண்ணியத்தின் வழி வந்த நம்மவர் தாஜுல் மில்லத் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்.M.A.M.P.

மாணவர் அணிக்கு மகுடமாய் மிளிர்ந்த மாண்பாளர்,தான் கால் பதித்த அயல் தேசங்களிலெல்லாம் தாய்ச் சபையை தடம் பதிக்கச் செய்தவர்,சிராஜுல் மில்லத்தோடு வலம் வந்தவர் முனீருல் மில்லத்தோடு களம் காணுபவர்.தமிழக முஸ்லிம் லீக் வரலாற்றில் தனி முத்திரையாக மாநில பொதுச் செயளாலர் பொறுப்பை தன் தூய தொண்டால் தொட்டவர்.இவரே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் நாடு மாநில பொதுச் செயளாலர் ஹாஜி K.A.M. முஹம்மது அபூபக்கர் B.Sc., .

சமுதாயம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் ,அவைகளை சில வார்த்தைகளில் சிறப்பாக முடிக்கும் ஆற்றல் பெற்றவர்,காரியம் பெரிதா?வீரியம் பெரிதா? என்ற கேள்வியை முன் வைத்து,இன்றைய இளைஞர்கள் வீரியத்தின் நிலையை வெகுவாக விரும்பினாலும் பல அமைப்புக்களுக்குச் சென்றாலும்முஸ்லிம் லீக்கிற்க்கு காரியம் தான் பெரிது என்று கம்பீரமாக சொல்லக்கூடிய முஸ்லிம் லீகின் துடிப்பு மிக்க சட்ட மன்ற உறுப்பினர்,மாநில அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆம்பூர் H. அப்துல் பாஸித் M.L.A.

அரசியலில் நீ தனித்தவன் அல்ல ,தனித்தன்மை வாய்ந்தவன் என்று முழங்கிய சிராஜுல் மில்லத்தின் சொந்தங்கள், திருப்பு முனைக்கு புதிய வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்று முழங்கி வரும் முனீருல் மில்லத்தின் தொண்டர்கள்.

ஆக இம்மூவரும் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் தலமை நிர்வாகிகள் இவர்கள் கண்ணியத்தின் பிறப்பிடத்திலிருந்து வந்தவர்கள்.இவர்களின் உரையை லால்பேட்டை மட்டும் தான் கேட்க போகிறது என்ற எண்ணத்தில் இருந்த எங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.

ஆம்! மாவட்டம் முழுவதிலுமிருந்தும் மட்டுமின்றி அருகில் உள்ள விழுப்புரம்,நாகை,திருவாரூர்,பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் திரளானவர்கள் பங்கேற்க்கத் தயாராகிக் கொண்டிருக்கிரார்கள் என்ற இனிய செய்தி கடல் கடந்து வாழும் எங்களின் கல்புக்கு மகிழ்ச்சியளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்!

இனிய இதயங்களே! முஸ்லிம் லீகைச் சார்ந்த பெருமக்கள் எதைத்தான் சொல்லுகிறார்கள்?எந்தப் பாதையில் செல்லுகிறார்கள்,அந்தப் பாதை வெல்லும் பாதைதானா? என்பதை முடிவெடுக்க தாங்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமென உரிமையோடும்,உள்ளன்போடும் கேட்டுக் கொள்கிறோம்.

மாறா அன்புடன்,

ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை லால்பேட்டை நண்பர்கள்.

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

லால்பேட்டை: அக்,14

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 19வது ஆண்டு விழா

வரும் 18-10-2009 ஞாயிற்றுக்கிழமைகாலை 8-00 மணியளவில் பள்ளியில் 19வது ஆண்டு விழா லால்கான் தோப்பு
(மர்ஹூம்) ஏ.ஆர். ஃபஜ்லுத்தீன் நினைவு அரங்கில் , ஹாஜி எஸ். ஜாபர் அலி பி.எஸ்.சி, ( தலைவர், முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம், லால்பேட்டை) அவர்கள் தலைமையில் விழா நடைபெற உள்ளது.

வரவேற்புரை ஹாஜி ஏ. முஹம்மது ஜெக்கரியா பி,இ. அவர்கள்.
(பொருளாளர் , முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம்.)

ஆண்டறிக்கை ஜனாப் எஸ். ஹாரிஸ் அஹமது பி.காம் (தாளாளர், இமாம் கஸ்ஸாலி , மெ.மே.பள்ளி, லால்பேட்டை)


சிறப்புரை அல்ஹாஜ் எம். அப்துர் ரஹ்மான்,
எம்.ஏ. எம்.பி

( இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாராளுமன்ற உறப்பினர், வேலூர்)



முணைவர் மாணவியர் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பரிசு வழங்குதல்.


நன்றியுரை
திரு . ஜே. மாரியப்பம் எம்.எஸ்.சி., பி.எட்.,
( முதல்வர், இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ,லால்பேட்டை)
.

10.10.09

லால்பேட்டை ஹாஜியா ரஹீமா பீவி வஃபாத்

லால்பேட்டை மதீனா தெருவில் இருக்கும் ஹாஜி கோஸி அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும் எஸ்.ஏ.அப்துல் அஹது மாமியாருமான ஹாஜியா ரஹீமா பீவி அவர்கள் 10.10.2009 இன்று மாலை 6.00 மணி அளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பம் - புதிய வசதி

ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்ப பதிவில் புதிய வசதி சென்னை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி கே.எஸ்.தவ்லத் தமீம் வெளியிட்டுள்ள குறிப்பு:

தட்கல் முறையிலும், சாதாரண முறையிலும் பாஸ்போர்ட் பெறுவதற்கான ஏராளமான விண்ணப்பங்கள் வந்த வண்ணம் இருப்பதால், சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில், பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான வசதிகளை சீரமைத்துள்ளது.

இதற்கான இணைய தள முகவரி: http://passport.tn.nic.in/

ஆன்லைனில் பதிவு செய்யும் போது கம்ப்யூட்டர் ஒதுக்கும் தேதியில் மட்டுமே விண்ணப்பங்களை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இத்தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், திரும்பவும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் புதிதாக ஒதுக்கும் தேதியில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்யும் முறையில் விண்ணப்பதாரர்களுக்கு புதுமையான வசதி ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர் கம்ப்யூட்டர் ஒதுக்கும் தேதி தனக்கு சரிப்படவில்லை என்றால், தனக்கு வசதியான ஒரு தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளமுடியும்.

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க, முதலில் வருபவர்களுக்கு முதலில் என்ற முறையில் தட்கல் மற்றும் சாதாரண விண்ணப்பங்களுக்கு டோக்கன்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த முறையில் கம்ப்யூட்டர் ஒதுக்கும் நேரம் பொருந்தாது.

பாஸ்போர்ட்டை விரைவாக பெற்றுத் தருவதாகச் சொல்லி தவறான வாக்குறுதிகளை அளிக்கும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

9.10.09

இடைத்தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வெற்றி!

லால்பேட்டை பேரூராட்சி மூன்றாவது வார்டுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலையில் துவங்கியது.

மொத்தம் பதிவான வாக்குகள் 187 இதில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் 102 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய லீக் வேட்பாளர் சிராஜுத்தீனை விட கூடுதலாக 17 வாக்குகள் பெற்றார்.

வெற்றிபெற்ற யாசிர் அரஃபாத்துக்கு மனித நேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். தனக்கு வாக்களித்த வாக்களர்களுக்கும்,வெற்றிக்காக உழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி தெரிவித்தார்.

8.10.09

லால்பேட்டை அமானுல்லா தாயார் வஃபாத்

லால்பேட்டை கொல்லிமலை மூக்பரி ஹாஜி அமானுல்லா அவர்களின் தாயார் ரஹிமா பீவி அவர்கள் இன்று 08.10.2009 இரவு 7.00 மணியவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்.


7.10.09

லால்பேட்டை முஹம்மது வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு தானாச்சி முஹம்மது அவர்கள் இன்று 07.10.2009 இரவு 8.30 மணியவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்.

6.10.09

லால்பேட்டை பேரூராட்சி 3 வது வார்டு இடைத்தேர்தல்

லால்பேட்டை பேரூராட்சி 3 வது வார்டு இடைத்தேர்தல் வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு



5.10.09

2009 ஹஜ் கமிட்டி மூலமாக புனித ஹஜ் பயணம் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்கள்.

லால்பேட்டை.

S.A.அப்துல் அஹது, மதினா தெரு
அனீஸா பேகம்
T.A.பத்தாஹுர்ரஹ்மான், குத்பா பள்ளி தெரு
ஹஜ்ஜம்மா பேகம்
S.H.ஹஜ்ஜி முஹம்மது, புது பள்ளி தெரு
ஜாபருன்னிசா
J.அப்துல் ஹமீது
சையதுன்னிஸா
H.ரஹமத்துன்னிசா, அமானி வீதி
A.இல்முன்னிசா
முஹம்மது அன்வார், மினா தெரு
பெளஜியா பேகம்
காமிலா பேகம், தெர்க்கு தெரு
மெஹராஜ் பேகம், தோப்பு தெரு
முஹம்மது இபுராஹிம், கீழத் தெரு
மிஜாஜுன்னிசா
ராபியத், நேரு வீதி
S.A.பக்கீர் முஹம்மது, சிங்கார வீதி
கமதியா பேகம்
ஹாஜிரம்மா
பாத்திமா பீவி, மெயின் ரோடு
மும்தாஜ் பேகம், தெர்க்கு தெரு
M.அப்துல் மாலிக், ஸ்கூல் தெரு
ஹம்துல் ஹாதி
M.பக்கீர் முஹம்மது
A.அனீஸா பேகம்
நசீமா பேகம், ஜாபர் தெரு
மெளலவி A.பைஜுர்ரஹ்மான், உஹது தெரு
உம்மஹானி
ஹம்மாது
அப்துல் அஜீஸ், தெர்கு தெரு
மஹ்மூதா
O.A.முஹம்மது, தெர்க்கு தெரு
சாபிரா பீவி
குர்ஷிதா பேகம், வடக்கு தெரு
பஹ்மீதா பானு, மெயின் ரோடு
M.முஹம்மது இஸ்மாயில்
ஆரிபா பேகம்
அப்துல் அலி
முன்தஹா
M.அப்துல் ஹக்கீம், தாயிப் நகர்
குர்ரதுல் அய்ன்
T.S.அப்துல் ஹலீம், புது பள்ளி தெரு
T.M.அப்துல் அலி
A.முன்தஹா

பின்னத்தூர்
அப்துல் கபூர் பின்ன்த்தூர்
கொள்ளுமேடு
M.நஜீர் அஹமது கொள்ளுமேடு
ஜெய்புண்னீஸா
A.அபுல் ஹஸன்
A.ஜெஹருன்னிசா
A.சம்சுன்னிசா

நெடுஞ்சேரி
A.அப்துல் பாசித் நெடுஞ்சேரி
A.தாஜ்மா பீவி
பார்சா பேகம்
ஷமீமா பேகம்

கந்தகுமாரன்
நபிஸா பேகம் கந்தகுமாரன்

மா,ஆடூர்
S.ஹபீபுர்ரஹமான் மா ஆடூர்
நூருல் மஹரிபா
பாத்திமுத்து

மங்கலம்பேட்டை
சம்சுன்னிஸா மங்கலம்பேட்டை

1.10.09

லால்பேட்டை மௌலவி ரஹ்மத்துல்லா மன்பயி சவுதியில் வஃபாத்

லால்பேட்டை மதினா தெரு தானாச்சி முஹம்மது ஹாமிது அவர்களின் மகன் மௌலவி ரஹ்மத்துல்லா மன்பயி வயது (25) அவர்கள் இன்று 01.10.2009 சவுதியில் உள்ள அல் குவைசில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்.




தகவல்:

UAE- நிருபர்

லால்பேட்டை TNTJ ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக ரூபாய் 1,52,700 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் மற்றும் ரொக்க பணம் 800 க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது ....
Thanks: Raisudeen

.