Showing posts with label த.மு.மு.க. Show all posts
Showing posts with label த.மு.மு.க. Show all posts

21.9.10

லால்பேட்டையில் தமுமுக சார்பில் ஜகாத் பிஃத்ரா

லால்பேட்டையில் தமுமுக சார்பில் ஜகாத் பிஃத்ரா  வினியோகம்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக லால்பேட்டையில் பிஃத்ரா வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட்டு நமது ஊரில் உள்ள ஏழைகளை தேர்ந்தெடுத்து நபிவழியின்படி கொடுக்கப்பட்டது.

இந்த வருடம் 322 பேருக்கு உணவு பொருட்கள் மற்றும் தலா ரு.50 விகிதம் கொடுக்கப்பட்டது.

2010ம் ஆண்டு பித்ரா வரவு செலவு கணக்கு தொகை பித்ரா வரவு:

உள்ளுர் மூலம் வரவு 49370.00




UAE.மூலம் வரவு:  9700.00



மொத்தம் 59007.00



பித்ரா செலவு: மளிகை பொருட்கள்



ஒரு நபருக்கு ரூ.50 விதம் 322 பேருக்கு



மீதமுள்ள தொகையில் 7 பேருக்கு



பணமாக கொடுத்த வகையில் – 42157



16100







750



மொத்தம்



கடந்த 2 வருடங்களாக ஜகாத் தொகையை வசூல் செய்து ஏழை



எளிய மக்களுக்கு கொடுத்து வருகிறது லால்பேட்டை தமுமுக.



இந்த வருடமும் உள்ளுர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நமது



சகோதரர்களிடம்



ஜகாத் வரவு:



உள்ளுர்வாசிகள்



க்அஉ சகோதரர்கள் மூலம் வரவு



59007



ஜகாத் தொகை வசூலிக்கப்பட்டது.



மூலம் வரவு



– 2,49,675







12,000



மொத்தம் – 2,61,675



இந்த ஜகாத் தொகையை பெறும் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து



கொடுத்து வருகிறது லால்பேட்டை தமுமுக. மேலும், ஜகாத்



தொகையை பெற தகுதியானவர்கள் லால்பேட்டை நகர தமுமுக



அலுவலகத்தை அணுகுமாறு கேட்டு கொள்கிறோம்.



நாம் செய்யும் இந்த சேவையை அல்லாஹ் பொருந்திக்



கொள்வானாக.எங்களுக்கு தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தரும்படி



அன்போடு கேட்டுகொள்கிறது தமுமுக.



அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறது. எல்லா புகழும்



இறைவனுக்கே.



“என்றென்றும் சமுதாய பணியில்”
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் லால்பேட்டை

13.7.10

வேலூர் கோட்டை மசூதி எங்களுக்கு தெவையில்லை அப்துல் ஸமது எம்.பி. கைப்பட எழுதிக்கொடுத்தார்..! பி.ஜே.பி.நகர செயலாளர் அரிக்கை

மீண்டும் மதப் பிரச்னையால் குலுங்குகிறது வேலூர் கோட்டை!


வேலூரின் மையப் பகுதியில் 138 ஏக்கர் பரப்பளவில் சமார் 3 கிலோமீட்டர் சுற்றுச் சுவர்இ அகழியுடன் அமைந்துள்ள வேலூர் கோட்டைக்குள்இ இந்துஇ முஸ்லிம்இ கிறித்துவ வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. ‘‘தொல்லியல் துறையின் கட்டு-பாட்டிலிருக்கும் கோட்டைக்குள் கோயிலிலும்இ தேவாலயத்திலும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால்இ மசூதியில் மட்டும் தொழுகைக்கு அனுமதி இன்றி காவல் துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்’’ என மீண்டும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.



ஜூலை 3-ம் தேதி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோட்டைக்குள் திரண்டிருக்கஇ த.மு.மு.க.வின் வேலூர் மாவட்ட செயலாளர் இஜாஸ் அகமது காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். நாம் அவரிடம் பேசியபோதுஇ ‘‘ஔரங்கசீப் ஆட்சியின்போது அவரது உத்தரவின் பேரில் தளபதி சந்தா சாஹிப் வேலூர் கோட்டையினுள் இந்த மசூதியை 1750ரூல் கட்டி முடித்தார். பின்னர் வெள்ளையர் காலத்தில் சிறை பிடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் திப்புவின் மகன்களை இந்த கோட்டையினுள் சிறை வைத்தனர். அப்போதெல்லாம் இந்த மசூதி வழிபாட்டில் இருந்தது. பின்னர் 1921ரூம் ஆண்டில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. அப்போதும் கூட இந்த மசூதியில் இமாம் இல்லாமல் வழிபாடு நடந்தது.



ஆனால்இ பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது துணை பிரதமர் ஆக இருந்த அத்வானியின் உத்தரவால் வேலூர் கோட்டை மசூதியை தபால் ஆபீஸாக சித்தரித்துவிட்டனர். அதன் பின்னர் எங்கள் போராட்டத்தின் வீரியத்தை பார்த்து அந்த மசூதி இஸ்லாமியர்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என ஒப்பந்தம் போட்டனர். ஆனால்இ இரண்டு வருடங்களாகியும் இன்றுவரை அதைத் திறந்து வைக்கவில்லை. இந்த நிலையில் மசூதியைச் சுற்றி சுவர் எழுப்பவும்இ மின்வேலி அமைக்கவும் பள்ளம் தோண்டிவருகிறார்கள். அதைத் தடுக்கத்தான் இப்போது போராடிவருகிறோம். மசூதி திறப்பது குறித்து அனைத்து மத மக்களிடமும் கையெழுத்து வேட்டை நடத்தி ஆதரவு திரட்டப் போகிறோம்’’ என்றார் உறுதியாக.



இதுபற்றி பி.ஜே.பி.யின் வேலூர் மாநகர செயலாளர் சி.ஆர்.பாலாஜியிடம் பேசியபோதுஇ



‘‘கோட்டைக்குள்ளிருந்த குதிரை லாயத்தை வெள்ளையர்கள் தபால் ஆபீஸாக உபயோகப்படுத்தினர். அதற்கு சான்றுள்ளது. அந்த கட்டடத்தைத்தான் முஸ்லிம்கள் தொழுகை நடத்தப்பட்ட மசூதி என்கின்றனர். கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை அவர்கள் அந்த மசூதியில் தொழுகை நடத்தும்போதெல்லாம்இ இந்துக்கள் தேங்காய் உடைப்பதையும் மேளம் அடிப்பதையும் எதிர்த்தனர். இது தேவையற்ற மதப் பிரச்னைக்கு வழி வகுப்பதால் இங்கு எங்களுக்கு வழிபாட்டு தலம் வேண்டாமென அப்போதைய வேலூர் எம்.பி.யான அப்துல் சமது தனது கைப்பட எழுதிக்கொடுத்துச் சென்றுள்ளார். ஆனால் இப்போது சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் மீண்டும் பிரச்னை செய்கிறார்கள்’’ என்றார்.



மசூதி சர்ச்சை குறித்து தொல்லியல் துறையின் அதிகாரியான பலராமனிடம் பேசினோம். ‘‘அரசு உத்தரவுப்படி சுற்றுவேலி அமைக்க பள்ளம் வெட்டியது உண்மை. முஸ்லிம்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் தற்சமயம் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். சர்ச்சைக்குரிய அந்த இடம் மசூதி என்றுதான் எங்களது ரெக்கார்டுகளில் உள்ளது’’ என்கிறார்.


நன்றி:
தமிழக அரசியல்

.