Showing posts with label உரூஸ்பைஜி ஷா நூரி. Show all posts
Showing posts with label உரூஸ்பைஜி ஷா நூரி. Show all posts

3.7.10

போலீஸ் பாதுகாப்புடன் உரூஸ் விழா: லால்பேட்டையில் கடையடைப்பு

சிதம்பரம்:காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உரூஸ் விழா நடந்து வருகிறது. விழாவை கண்டித்து லால்பேட்டையில் நேற்று ஜமாத் சார்பில் கடையடைப்பு நடத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையைச் சேர்ந்தவர் பைஜிஷா நூரி. இவரது நினைவு நாளை அவரது குடும்பத்தார் உரூஸ் விழாவாக கடந்த 3 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 2008ம் ஆண்டு விழாவில் பெரும் கலவரம் வெடித்தது. போலீசார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.



10க்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப் பட்டது.இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி கோர்ட் உத்தரவுபடி கொடி ஏற்றுதல், கவாலி பாடுதல், சந்தனம் பூசுதல் ஆகிய நிகழ்ச்சிகள் இல்லாமல் உரூஸ் விழா கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டைப்போல் கோர்ட் அனுமதி பெற்று இந்த ஆண்டு உரூஸ் விழா நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது. இந்த விழாவை கண்டித்து ஜமாத் சார்பில் லால்பேட்டையில் நேற்று கடையடைப்பு நடத்தப்பட்டது.

பிரச்னை ஏற்படாமல் இருக்க டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


http://www.dinamalar.com/district_main.asp?id=273#31951

12.7.09

லால்பேட்டையில் நினைவு நாள் கொண்டாடுவது குறித்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்

லால்பேட்டை ஜுலை.12- கடலூர்மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் மறைந்த பைஜி ஷா நூரி என்பவரின் நினைவு நாளையொட்டி உரூஸ் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக கடந்த ஆண்டு இருதரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

அதைதொடர்ந்து இந்த ஆண்டு விழாவை அமைதி யான முறையில் நடத்துவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஜமாத் சார்பில் பத்தாவுதீன், அகமதுல்லா, அப்துல் ஹமீது,அகது, ஜியாவுதீன் மற்றும் பலரும், விழா குழு சார்பில் அப்துல்லா பைஜி, ரகமத்துல்லா பைஜி, நூருல்லா பைஜி,கைïப், முஸ்தபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சிதம்பரம் ஆர்.டி.ஓ.ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் படி விழாவை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் விழாவிக்குழுவினர் வீட்டுக்கு வெளியேபோட்டுள்ள கொட்டகையை பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.அதனை ஏற்ற விழாக்குழுவினர் கொட்டகையை பிரித்து கொள்ள சம்மதம் தெரிவித்து சென்றனர்.
Thanks

.