13.11.10

லால்பேட்டை P.K.B. பஷீர் அஹமது மறைவு

லால்பேட்டை சிங்கார வீதி P.K.B. பஷீர் அஹமது அவர்கள் இன்று  13.11.2010 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

9.11.10

இராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு

இந்திய ராணுவத்தின் தரை படை (Army), கப்பல் படை (Navy), விமான படையில் (Air Force ) சேருவதற்க்கான நுழைவு தேர்வு "NDA & NA Exams" அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது இன்ஷா அல்லாஹ். அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். இந்த தேர்வு எழுத +2 வரை படித்திருந்தால் போதும்.




தேர்வை பற்றிய விபரம்:



கல்வி தகுதி : +2 அல்லது அதற்க்கு இனையான படிப்பு (10th + Diploma)

வயது வரம்பு : ஜனவரி 1993-லிருந்து ஜூலை 1995-க்குள் பிறந்திருக்க வேண்டும். (17 முதல் 19-க்குள் இருக்க வேண்டும்)

விண்ணப்பம் கிடைக்கும் இடம் : அனைத்து தபால் நிலையங்கள், தபால் நிலையத்தில் விண்ணப்பம் கிடைக்க வில்லை என்றால் 011-23389366 இந்த எண்ணிற்க்கு புகார் தெரிவிக்கலாம்.

விண்ணப்பத்தின் விலை: ரூ.20.

தேர்வு கட்டணம்: ரூ.50. தேர்வு கட்டணத்தை "Central Recruitment Stamp" ஸ்டாம்பாக செலுத்த வேண்டும். இது போஸ்ட் ஆபிஸில் கிடைக்கும். போஸ்டல் ஸ்டாம்ப் ஒட்ட கூடாது "Central Recruitment Stamp" தான் ஒட்ட வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : Controller of Examinations, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi - 110069

விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் : நவம்பர் 15 (15-ஆம் தேதி டெல்லி சென்றடைய, இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே விண்ணப்பத்தை அனுப்பவும்).



மேலும் விபரங்கள் http://www.upsc.gov.in/exams/notifications/nda1-2011/indx.htm இந்த இணையதளத்தில் உள்ளது.



இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?



இது வருட வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்டுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். மேலும் CBSC-யின் 10-ஆம் மற்றும் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற தேசிய தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். குறிப்பாக சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கும். மேலும் பொதுவாக தேர்வுகளுக்கு எவ்வாறு படிக்க வேண்டும் என்ற கட்டுரை tntj.net (http://www.tntj.net/மாணவர்-பகுதி/கல்வி-வழிகாட்டி/தேர்வில்-அதிக-மதிப்பெண்/) இணையதளத்தில் உள்ளது. இதில் எவ்வாறு படிப்பது என குறிப்பிடபட்டு இருக்கும்.



மேலும் இது சம்மந்தமாக மேலதிக விளக்கம் தேவைபடும் மாணவர்கள் இந்த மெயில் ஐடியில் sithiqu.mtech@gmail.com தொடர்புகொள்ளவும்



தகவல்

S.சித்தீக்.M.Tech

6.11.10

அஸ்கர் அலி - நூருல் ஆபியா திருமணம்


பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்

{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}

அன்புடன்...M.J.பதஹுத்தீன்,M.J.முஹத்தஸீம், லால்பேட்டை,
T. சுஹைல் அஹமது.லண்டன்.
&

லால்பேட்டை இணைய தளம்


=====================================

5.11.10

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டம்(தெற்கு)பொதுகுழு கூட்டம்

24.10.10 அன்று மாலை 4.00 மணியளவில் A.R.S.திருமணம் மன்டபத்தில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனித நேய மக்கள் கட்சியின்கடலூர் மாவட்டம் (தெற்கு)பொதுகுழு கூட்டம் மற்றும் நிர்வாகி தேர்தல் நடைபெற்றது


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமையில்.

மாநில துணை செயலாளர் எஸ் .எம் .ஜின்னா அவர்கள் முன்னிலைளும் நடைபெற்றது.

இப்பொதுகுழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் &துணை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இப்பொதுகுழு கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டம் (தெற்கு) செயலாளராக லால்பேட்டையை சார்ந்த

எ .யாசர் அரபாத், லால்பேட்டை கவன்சிலர் அவர்களையும்

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனித நேய மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டம் (தெற்கு)பொருளாளராக லால்பேட்டையை சார்ந்த

எம் .முஹம்மத் அய்யுப்,லால்பேட்டை கவன்சிலர் அவர்களையும் . தேர்வு செய்யப்பட்டார்கள்



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடலூர் மாவட்டம் (தெற்கு) நிர்வாகிகள்.



மாவட்டம் தலைவர் : எம் .எச் .மெஹராஜுதின்

மாவட்டம் செயலாளர் : என் .அமானுல்லாஹ்

மாவட்டம் பொருளாளர் : எம் .முஹம்மத் அய்யுப்

மாவட்டம் து.தலைவர் :எ.அன்வர் சதாத்

மாவட்டம் து.செயலாளர் : ஜுனைத்

மாவட்டம் து.செயலாளர் :முஹம்மத் ஆசிக்

மாவட்டம் து.செயலாளர் : நவ்மான்

மாவட்டம் து.செயலாளர் :ஜபார்



மனித நேய மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டம் (தெற்கு) நிர்வாகிகள்.



மாவட்டம் தலைவர் : எம் .எச் .மெஹராஜுதின்



மாவட்டம் செயலாளர் : எ .யாசர் அரபாத்

மாவட்டம் பொருளாளர் : எம் .முஹம்மத் அய்யுப்

மாவட்டம் து.தலைவர் :எ.அன்வர் சதாத்

மாவட்டம் து.செயலாளர் :அஸ்லம்

மாவட்டம் து.செயலாளர் :ராமகிருஸ்ணன்

மாவட்டம் து.செயலாளர் : அப்துல் சமது

இவர்களை தேர்வு செய்தனர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு சைய்யபட்டர்கள்

இப்போதுகுழு கூட்டத்தில் கடலூர் மாவட்டம் (தெற்கு) த .மு .மு .க &ம .ம .க பொதுகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

3.11.10

மேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா? - கடைசி தேதி நவம்பர் 9

தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இது இரண்டு பிரிவில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள். இதில் பட்டதாரிகள் தங்களை வாக்காளராக பதிவு செய்ய கடைசி தேதி நவம்பர் 9 ஆகும். முஸ்லீம் பட்டதாரிகளே! ஓட்டுக்காக அரசியல் நடத்தும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் உரிமைகளை பெற இந்த வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் கணிசமான அளவு முஸ்லீம்கள் இருந்தால்தான் ஆட்சியாளர்கள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்கள். குறைந்த சதவீத்தில் இருந்தால் முஸ்லீம்கள் மீது ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரித்துவிடும். வாக்காளர் பட்டியலில் சேர்பதை ஒரு வேலையாக நினைத்து விட்டுவிடவேண்டாம். நம் சமுதாயாத்தில் பட்டதாரிகளே குறைவு, அதிலும் சமூக அக்கரை உள்ள பட்டதாரிகள் மிக குறைவு, எனவே இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சமுதாய நலன் கருதியாவது பட்டதாரி வாக்காளர் பட்டியலில் சேருங்கள். அன்பிற்கினிய சகோதர்களே! உங்களுக்கு தெரிந்த முஸ்லீம் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இதன் அவசியத்தை விளக்கி இந்த மேல்சபை வாக்காளர்பட்டியலில் சேர சொல்லுங்கள்.






யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்



எங்கு விண்ணப்பிப்பது?

மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்

பிற ப்குதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்



எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்யலாம் http://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.



உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்

கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.

1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )

2. மதிப்பெண் சான்றிதழ்,

3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்

3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.



மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம். சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.



மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.html தெரிந்துகொள்ளலாம்.



தகவல்::

S.சித்தீக்.M.Tech

TNTJ மாணவர் அணி

31.10.10

மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...






எதிர்வரும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் அதன் முக்கியத்துவ நாட்களின் வரவாக குவைத் இந்திய தூதரகம், குவைத் மஸ்ஜித் கபீர் நிர்வாகம் மற்றும் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆகியவற்றில் பதிவு பெற்ற 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)' ஏற்பாடு செய்யும் 'மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி' வருகின்ற 04.11.2010 வியாழக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல், கத்ஆ 7, பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்.





சங்கத்தின் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத்தலைவர்கள் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைஃக் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ, மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ ஆகியோர் புனித ஹஜ்ஜின் சிறப்பு, அம்மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள், தியாகத்தின் சிறப்புகள், இப்ராஹீம் (அலை) அவர்கள் மற்றம் அவர்களின் குடும்பத்தினரின் வரலாறு போன்ற தலைப்புகளில் சிறப்புரையாற்ற இருக்கின்றனர். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெறும் இன்ஷா அல்லாஹ்.





இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறும், பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.





மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.





நன்றி. வஸ்ஸலாம்.





செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்





இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

24.10.10

லால்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சியின் பொதுகுழு...! புதிய நிர்வாகிகள் தேர்வு!

லால்பேட்டை நகர தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் , மனித நேய மக்கள் கட்சியின் பொதுகுழு கூட்டம் மற்றும் நிர்வாகி தேர்தல்
22.10.10 வெள்ளி இரவு  8.00 மணியளவில் வடக்குதெரு மர்ஹும் S.A.முனவ்வர் ஹுசைன் அவர்கள் இல்லத்தில்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமையில்  நகர நிர்வாகிகள் & வார்டு  நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள்.

தலைவர்          :  S.A. முஹம்மது ஹாரிஸ்
செயலாளர்      :   H.நூருல் அமீன்
பொருளாளர்   :   A.I.இர்பானுல்லாஹ்BE     
து.தலைவர்      :   அபுல்ஹசன்
து.செயலாளர்  :   F.ஹபிபுர்ரஹ்மான்
து.செயலாளர்   :   M.Y.இர்பானுல்லாஹ்
மருத்துவ அணி செயலாளர் :ஹாலில் அஹ்மத்
மாணவர் அணி செயலாளர்  :மின்னதுல்லாஹ்
மாணவர் அணி து.செயலாளர்  :முஹம்மது நாசர்
மாணவர் அணி பொருளாளர்  : முஹம்மது ஷபி

மனித நேய மக்கள் கட்சியின்  நிர்வாகிகள்.

தலைவர்      :  S.A. முஹம்மது ஹாரிஸ்
செயலாளர்  :  V.M.முஹம்மது ஆசிக் நூர்
பொருளாளர் :  A.I.இர்பானுல்லாஹ் BE
து.தலைவர்    :  அபுல்ஹசன்
து.செயலாளர் :  S.சித்திக்பாஷா
இவர்களை தேர்வு செய்தனர்.

 இப்போதுகுழு கூட்டத்தில் 200 க்கு மேற்ப்பட்ட த.மு.மு.க &ம.ம.க. உறுப்பினர்கள், ஜமாத்தார்கள்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

லால்பேட்டையில் இமாம் புஹாரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொடக்க ஆலோசனைக் கூட்டம்

என் அன்பின் சொந்தங்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரமதுல்லாஹி வபரகாதுஹு).


இறைவனின் அருளால் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் லால்பேட்டையில் இமாம் புஹாரி கல்விக் குழுமத்தின் முயற்சியால் வக்ப் வாரியத்திற்கு சொந்தமான முப்பத்தி இரண்டு ஏக்கர் நிலத்தில்
 
லால்பேட்டைக்கு அருகில் உள்ள எள்ளேரியில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உலகத்தரம் வாய்ந்த ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கூடம்,
 
மிக நவீன வசதிகளுடன் கூடிய இஸ்லாமியக் கல்லூரி ஆகியவைகள் இன்ஷா அல்லாஹ் உங்கள் எல்லோரின் உதவியுடனும் துஆ பாரக்கத்துடனும் கட்டிடவும் சிறப்பாக செயல்படுத்திடவும் , எதிர் வரும் 28 -10 -2010 அன்றுலால்பேட்டையில் தொடக்க ஆலோசனைக் கூட்டம் நடக்க இருக்கிறது.
 
அதற்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க அன்புடன் அழைக்கின்றோம்.
 

23.10.10

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் பொதுக்குழு..! புதிய நிர்வாகிகள் தேர்வு!

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் பதினெட்டாவது பொதுக்குழுக் கூட்டம் காலிதியா கார்டன் பின்புரம் உள்ள மலையாளி சமாஜத்தில் 22.10.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் நடைபெற்றது.




நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ் தலமை வகித்தார்.

ஹாபிழ்.ஆர்.இசட்.எம்.இர்ஷாத் அஹமத் கிராஅத் ஓதினார்.

கவுரவத் தலைவர் ஹாஜி.டி.ஏ.முஹம்மது ஹஸன் முன்னிலை வகித்தார்.

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தி,ஆண்டரிக்கை தாக்கல் செய்தார்.

பொருளாளர் ஹெச்.எம்.ஃபலுலூர் ரஹ்மான் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

தணிக்கையாளர் என்.ஆஷிகுல் அமீன் தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார்.

ஜமாஅத் உறுப்பினர் எம்.ஐ. நஜிபுல்லாஹ் கருத்துரை வழங்கினார்.



தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.இதில் அடுத்த இரண்டு வருடங்களுக்குரிய புதிய நிர்வாகிகள் அனைவரின் ஏகோபித்த ஆதரவின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் விபரம்...

தலைவர்.மெளலவி எம்.ஏ.அமீனுல் ஹுஸைன்

துணைத் தலைவர்:பி.ஒய்.ஜாஃபர் அலி

பொதுச் செயலாளர்:ஜெ.யாசிர் அரஃபாத் அலி

பொருளாளர்:எஸ்.கே.முஹம்மது இலியாஸ்

துணைப் பொருளாளர்:எஸ்.ஹெச்.ஜாக்கிர் ஹுஸைன்



செயலாளர்கள்:மெளலவி எம்.ஐ.முஹம்மது அய்யூப்(ஐகாடு)

எம்.ஹெச்.சல்மான் ஃபாரிஸ் (முஸஃப்பாஹ்)

என்.ஹெச்.முஹம்மது ரியாத் (ஹலீஃபா சிட்டி)

பி.ஹெச்.முஹம்மது ஆதம்

ஏ.கமாலுத்தீன்

கே.எஸ்.ஆஷிக் அஹமத்



அல் அய்ன் மண்டல செயலாளர்கள்: ஜெ. நூருல் அமீன்

ஏ.ஜெ.ஃபய்யாஜ் அஹமத்

தணிக்கையாளர்:சி.எம்.அப்துல் மாலிக்.





பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1, ஜமாஅத் மூலம் வழங்கப்பட்டு வரும் உதவிகளை தொடர்ந்து வழங்குவது,அதில் கல்வி உதவிகள்,மருத்துவ உதவிகள் விண்ணப்பங்களை கூடுதல் கவனம் செலுத்தி பரிசீலிப்பது.

2.ஏனைய பகுதிகளுக்குரிய செயலாளர்களை புதிய நிர்வாகிகள் கூடி தெர்ந்தெடுப்பது.

3,லால்பேட்டை நகரில் அப்புறப்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை உடனடியாக மீண்டும் ஏற்பபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி,ஏற்க்கனவே ஜமாஅத் சார்பில் பேரூராட்சி மன்றத்திற்க்கு அனுப்பட்ட மனுவையும் நி்னைவூட்டி,அனைத்து சமுதாய அமைப்புகள்,பேருராட்சி மன்ற தலைவர் உறுப்பினர்கள் ஆகியோருக்கு வேண்டுகோளாக இத்தீர்மானத்தை முன் வைப்பது.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



புதிய நிர்வாகிகளின் சார்பில் தலைவர் ஏ.எம்.அமீனுல் ஹுஸைன்,பொதுச் செயலாளர் ஜெ.யாசிர் அரஃபாத் அலி ஆகியோர் ஏற்ப்புரை நிகழ்த்தினர்.செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் நன்றி கூற ஹாபிழ்.இர்ஷாத் அஹமத் துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.

18.10.10

அபுதாபி-லால்பேட்டை ஜமாஅத் பொதுக்குழுக் கூட்டம்

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...


இன்ஷா அல்லாஹ் 22/10/2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் காலிதியா கார்டன் பின்புரம் உள்ள மலயாளி சமாஜத்தில்

நமது ஜமாஅத்தின்  பதினெட்டாவது வருடத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்.அவ்வமயம் மார்க்க அறிஞர்களின் சிறப்புரையும்,புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெறும்.



இந்த முக்கிய நிகழ்வில் அனைவரும் பங்கேற்று நமது ஜமாஅத் மென்மேலும் வளர்ந்து நன்மைகள் தொடர்ந்து செய்திட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.



அபுதாபி-லால்பேட்டை ஜமாஅத்



குறிப்பு: கூட்டத்திற்க்கு முன் மதிய உணவு வழங்கப்படும்.

ஆயங்குடியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம்

கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் 17 தேதியன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம் நகர தலைவர் ஏ.ஹச் .முஹமத் ஹனிப் தலைமையில் நடைப்பெற்றது.

 நகர ஜமாதுல் உலமா சபை தலைவர் மௌலானா முஹமத் மன்சூர் கிராஅத் ஓதினார், ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி ஏ.எம்.இத்ரிஸ்.மற்றும் அனைத்து மஸ்ஜிதுகளின் முத்தவல்லிகள் முன்னிலை வகித்தனர் நகர முஸ்லிம் லீக் பொருளாளர் ஹெச்.முஹமத் இக்பால் வரவேற்றுப்பேசினார்.


 இக்கூட்டதில் காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.சிறப்புரையாற்றினர் மௌலானா பி.ஏ.ஜபார் அலி.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் இஸ்மாயில் ,பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷித் ஜான் ஆயங்குடி ஊராட்சி தலைவர் நாகராஜன் மாவட்ட தலைவர் தலைவர் கே.ஏ.அமனுல்லா , துணைத்தலைவர் எம்.ஐ.அப்துல் வதுத், செயலாளர் ஏ.சுக்கூர் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நகர செயலாளர் சுல்தான் மொய்தின் நன்றி கூறினார்.

ஆயங்குடியில்  எம் .அப்துல் ரஹ்மான் எம் பி.  தமிழக அரசின் நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.

ஆயங்குடியில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்துக்கொண்ட வேலூர் நாடாளுமன்ற  எம் .அப்துல் ரஹ்மான் அயங்குடி ஊராட்சி மன்றத்தின் வளாகத்தில் வீடு தோறும் மரம் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

 அதைத்தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் இந்திரா நினைவு தொகுப்பு வீட்டின் கட்டிடப்பணிக்கு அடிக்கல் நாட்டினர் அத்தோடு ஆயங்குடியில் கட்டப்பட்டு வரும் தமிழக அரசின் நலத்திட்டங்களான தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தண்ணீர் டேங்குகளையும் கலைஞர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய வீடுகளையும் பார்வையிட்டு நலத்திட்ட பணிகளை கேட்டறிந்தார்.

 ஆயங்குடி ஊராட்சி மன்றத்தலைவர்  டி.நாகராஜன் துணைத்தலைவர் ஏ.ஆர்.நிஜார் அஹமத் ஆகியோர் வரவேற்றனர் இந் நிகழ்வுகளில் முத்தவல்லி ஏ.எம்.இத்ரிஸ் ,ஏ.முஹமத் ஆசிப் ,மௌலானா பி.ஏ.ஜபார் அலி.மௌலானா தளபதி.ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் இஸ்மாயில் மாவட்ட தலைவர் அமனுல்லா ,செயலாளர் சுக்கூர்,துணைத்தலைவர் எம்.ஐ. அப்துல் வதுத் ,ஆயங்குடி முஸ்லிம் லீக் தலைவர் முஹமத் ஹனீப் ,செயலாளர் சுல்தான் மொய்தின் ,பொருளாளர் முஹமத் இக்பால்,எஸ்.ஜாலலூத்தின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

16.10.10

தமிழறிந்த ஆலிம்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ………!

இஸ்லாமிய நூல்கள் படிக்க ஆர்வம் இருந்தும் அவற்றைப் பெறுவது கடினமாக உள்ள சூழ்நிலையில், ஊரில் நூலகமும் இல்லையே என்று ஏங்கும் ஆலிம் பெருமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு ……!




ஆலிம் பெருமக்களின் இல்லம் தேடி அஞ்சல் வழியில் இஸ்லாமிய நூல்களை இலவசமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமிக் அகாடமி செய்துள்ளது.

ரமளான் மாதம் முதல் இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது. அஞ்சல் வழி நூலகத்தில் உறுப்பினராகச் சேர ஆர்வமுள்ள ஆலிம்கள் உடனே தங்களின் பெயர்களைப் பதிவு கொள்ளவும்.

உறுப்பினர் கட்டணம் எதுவும் இல்லை. அஞ்சல் செலவும் இல்லை.

அனைத்தையும் அகாடமியே ஏற்றுக் கொள்ளும். இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ள ஆலிம் பெருமக்களை அன்புடன் அழைக்கிறோம்.

முகவரி :

உலமா அஞ்சல் வழி நூலகம்

இஸ்லாமிக் அகாடமி

ஐ.எஃப்.டி. காம்ப்ளக்ஸ்

எண் 138, பெரம்பூர் நெடுஞ்சாலை

சென்னை – 600 012

தொலைபேசி : 2662 1101

மின்னஞ்சல் : postallibrary@gmail.com
 
நன்றி
முதுவை ஹிதாயத்

இமாம் புஹாரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க ஆலோசனைக் கூட்டம்...!

14.10.10

இந்தியாவின் உயர்ந்த கல்வி நிறுவங்களில் இலவசமாக M.E/M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு

 GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Tech  படிக்க மத்திய அரசால்  நடத்தப்படும் தேர்வாகும்.  இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது.

இந்த தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம்.

 இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய http://www.gate.iitb.ac.in/gate2011/

  இந்தியாவில் 8 இடங்களில் உள்ள  IIT, 20 இடங்களில் உள்ள  NIT,  டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில்  M.E/M.Tech, Phd  படிக்க GATE  என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, 

இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது).

இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview)  மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது.

இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன 
இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு,

காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை.  தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது tntj.net (www.tntj.net/?p=8622) இணையதளத்தில் உள்ளது.


பெற்றோர்களே!

நுழைவு தேர்வு இல்லாமல் நேரடியாக படிக்க சில லட்சம் ரூபாய் செலவாகும், ஆனால் இந்த தேர்வு மூலம் பணம் வாங்கி கொண்டு படிக்க முடியும். எனவே கல்வி கொள்ளை அடிக்கும் கல்வி நிறுவங்களுக்கு நாம் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொடுக்காமல் நீங்கள் மேற்படிப்பு படிக்க இது போன்ற தேர்வை எழுத சொல்லுங்கள்.

 மாணவர்களும் மேற்படிப்பு என்றாலே லட்சங்களை பெற்றோர்காளிடம் இருந்து பெறவேண்டும் எண்ணத்தை மாற்றி இது போன்ற நுழைவு தேர்வை எழுதி குடும்பத்தின் சுமையை குறைத்து நீங்களும் நல்ல கல்வியை பெற்று அதிக சம்பளத்தில் வேலையில் சேருங்கள் இன்ஷா அல்லாஹ்

பெரும்பாலும் நாம் படிப்பது நமது கல்வி தரத்தை உயர்த்திகொள்வதற்க்கும், நல்ல வேலையில் சேர்ந்து நல்ல சம்பளம் பெறுவதற்க்கும், வெளி நாடுகளில் சென்று படித்து சிறந்த கல்வியை பெற்று நல்ல சம்பளத்துடன் நல்லவேலையில் சேர்வதற்க்கும்தான்.

கல்வி துறையில் முன்னேற வேண்டும் என்றால் இது போன்ற நுழைவு தேர்வு தேர்வுகளை எழுதி அதில் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும். ஏதோ எல்லாரும் படிக்கின்றனர் நானும் படிக்கின்றேன் என்று இருந்துவிடக்கூடாது,

பணத்தை வைத்து  கல்லூரியில் இடம்தான் வாங்கமுடியும், படிப்பை வாங்கமுடியாது, வேலையையும் வாங்க முடியாது, நன்றாக படித்தால் தான் நல்ல வேலைகிடைக்கும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள்,  எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி

GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்
விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 27,
ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். http://onlinegate.iitm.ac.in/iitweb


விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : சென்னையில் உள்ள IIT மற்றும் குறிபிட்ட  State Bank of India  கிளைகள்  (தபால் மூலமும் விண்ணப்பம் பெறலாம்.)
விண்ணப்பத்தின் விலை : ரூ.1,000 (ஆன்லைனில் ரூ.8,00)
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

Chairman, GATE Office, Indian Institute of Technology Madras, Chennai 600 036,

மேலதிக விளக்கம் பெற தொடர்புகொள்ள வேடிய தொலைபேசி எண் : 044-2257 8200 (சென்னை IIT)

தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :   1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
  2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்
  3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்

தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி 13,
தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : மார்ச் 15
GATE தேர்வு பற்றி மேலும் விபரங்கள் அறிய தொடர்பு கொள்க அஹமது இப்ராஹிம் -  9841464521
அல்லது E-mail to  sithiqu.mtech@gmail.com

9.10.10

அஸ்பர் அலி - பரீரா, திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்

{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}

லால்பேட்டை இணைய தளம்

திருமண வாழ்த்து

திருமண வாழ்த்து



இடம்:

கொள்ளுமேடு அல் மதீனா ஜும்ஆ

பள்ளிவாசல்-கொள்ளுமேடு,

நாள்:.10.10.2010


 

மணமகன்


 
மவ்லவி .M.F. பைஜூர் ரஹ்மான் மன்பஈ

S/o A.M.முஹம்மது பாரூக்-கொள்ளுமேடு



மணமகள்


 
A.நபிலா பானு

D/o R. அமானுல்லாஹ்-லால்பேட்டை





=======================================





மணமகன்

 

M.F. மஜ்ஹர் அலி

S/o A.M.முஹம்மது பாரூக்-கொள்ளுமேடு



மணமகள்


 
A.நபிலா பேகம்

D/o A. பக்கீர் முஹம்மது -லால்பேட்டை

 
=======================================


 
பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்

 
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}



அன்புடன்...

H.முஹம்மது தாஹா -அபுதாபி,

&


லால்பேட்டை இணைய தளம்
=================================================

8.10.10

மௌலானா ஷம்சுதீன் காசிமி அவர்களின் ஹஜ் விளக்க உரை

7.10.10

முஸ்லிம் லீக் மாநில மாநாடு மாபெரும் விளக்க கருத்தரங்கம்

இடம்: கேரளா சோஷியல் சென்டர்,அபுதாபி.
நாள்: 09/10/2010 சனி மாலை 6.45 .மணி (மதினத் ஜாயித் எதிரில்)

தலைமை:அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி

(தலைவர், அமீரக காயிதெமில்லத் பேரவை)


கிராஅத்: ஹாபிழ்.ஏ.முஹம்மத் இத்ரீஸ் மரைக்காயர்



முன்னிலை: அல்ஹாஜ்.அப்துல் ஹமீது மரைக்காயர்

( நிர்வாகஇயக்குனர் பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ்)

அல்ஹாஜ். ஷாஹுல் ஹமீது

 ( நிர்வாக இயக்குனர் நோபிள் மரைன் குரூப்ஸ்)

அல்ஹாஜ்.ஏ.ஷம்சுத்தீன் (துணைத்தலைவர்,அமீரக காயிதெமில்லத் பேரவை)

அல்ஹாஜ்.ஏ.ஷாஹுல் ஹமீது

(தலைவர்,அய்மான் சங்கம் அபுதாபி)


வரவேற்புரை:அல்ஹாஜ். ஏ.முஹம்மது தாஹா

 (பொதுச் செயலாளர்,அமீரக காயிதெமில்லத் பேரவை)



கருத்துரை:

 
எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்

 (பொருளாளர் அமீரக காயிதெமில்லத் பேரவை)



எஸ்.ஏ.சி.ஹமீது செயலாளர்,அய்மான் சங்கம்)


முதுவை ஹிதாயத்

 (ஊடகத்துறை செயலாளர்,அமீரக காயிதெமில்லத் பேரவை)



சிறப்புரை:

அல்ஹாஜ்.குர்ரம் அனீஸ் உமர்

(தேசிய செயளாலர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,டெல்லி)


விழாப் பேருரை:

தாஜுல்மில்லத் அல்ஹாஜ்.M.அப்துல்ரஹ்மான் M.A.,M.P.

 (சர்வதேச ஒருங்கிணைப்பாளர்,காயிதெமில்லத் பேரவை)


(தலைப்பு: தமிழக முஸ்லிம்களின் அரசியல் நிலை ஓர் ஆய்வு)


 
நன்றியுரை: ஜே.முஹையத்தீன் பாட்ஷா

(கொள்கைபரப்பு செயலாளர்,அமீரக காயிதெமில்லத் பேரவை)


தொகுப்புரை: ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்

(மண்டலச் செயலாளர்,அமீரக காயிதெமில்லத் பேரவை அபுதாபி)



துஆ:ஹாபிழ்.ஹுஸைன் மக்கீ மஹ்ளரி

அனைவரும் வருக! அரசியல் தெளிவு பெருக!!



அழைப்பில் மகிழும்...

அமீரக காயிதேமில்லத் பேரவை அபுதாபி.

(குறிப்பு:அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)

உயிர் காக்க உதவுங்கள்.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...




விழுப்புரம் மாவட்டம், கண்டமங்களம், பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜனாப் R.


உசேன் கான், இவர் குவைத்தில் குறைந்த சம்பளத்தில் ஓர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றுகிறார்.



தன்னுடைய மூத்த மகன் H. யாசீன் கான் (வயது 17). இவருக்கு வயிற்றுப்

பகுதியில் Crohn's

Disease என்ற வைரஸ் புண் நோய் பரவியுள்ளதால் கடந்த 2006ம் ஆண்டிலிருந்து 1

வருடம் வரை இன்ன வியாதி என்று கடலூர், பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில்

கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் உயிருக்கு போராடிய நிலையில் சென்னை அப்பல்லோ

மருத்துவமனையில் சேர்த்த பிறகு எல்லா விதமான சோதனைகள் செய்து Crohn's Disease என்று கண்டுபிடித்து சொல்லி விட்டனர்.



உடனடியாக 70 ஆயிரத்துக்குண்டான ஊசியை 3 முறை போட வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறிவிட்டனர். கடன் வாங்கி இந்த ஊசிகளையும் போட்டு சிகிச்சை அளிக்கபட்டது.

இதுவல்லாமல் மாதந்தோறும் மாத்திரைகளுக்கு மட்டும் 6 ஆயிரம் ரூபாய் வரை

செலவாகிறது. இந்த மாத்திரைகளை இந்த பிள்ளை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.



இவ்வாறு சிகிச்கை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு வருடம் நன்றாக இருந்த இந்த பிள்ளைக்கு Infection ஆகிவயிற்றில் இருந்த புண் ஆசன வாய் பக்கத்தில் துவாரம் ஏற்படுத்தி விட்டதால் மறுபடியும் 70 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள ஊசியை10

முறை (2 மாதத்திற்கு 1 என்ற அளவில்) போட வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறி விட்டனர்.



இதுவரை 6 ஊசிகள் போடப்பட்டுள்ளன. அதற்கான பில்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.


சுமார் 10 இலட்ச ரூபாய் மருத்துவ செலவு ஆகியும் மேலும் அவருடைய உடல்நிலையை குணப்படுத்த பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.



மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி பணம் தேவைப்படுகிறது. ஆனால், பணம் பற்றாக்குறையினால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 4 ஊசிகளையும் போட வேண்டும்.



இந்த பிள்ளையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சகோதர சகோதரிகள் உடனடியாக

மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு தங்கள் இயன்ற உதவிகளை வழங்கிடுமாறு சகோதரர் R. உசேன் கான் வேண்டுகோள் விடுக்கின்றார்.



மருத்துவ விபரங்களும், ஜமாஅத்தின் கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.



அதற்காக 10௦ ஊசிகள் போட வேண்டும் என்றும், ஒரு ஊசியின் விலை IRS 65 000,௦௦௦/-

என்றும் கூறி உதவி கேட்டு இருந்தார்கள். பல சஹோதரர்கள் உதவிகளை செய்து

இருந்தார்கள். அல்லாஹ்வின் உதவியால் இதுவரை 7 ஊசிகள் செலுத்தி விட்டனர்.

வரும் மாதம் 29 அன்று எட்டாவது ஊசி செலுத்த வேண்டும் என்பதால் உங்களின் உதவியை எதிர்பார்க்கிறார்.



ஊசிகள் அல்லாமல் மாதம்தோறும் IRS 7000,௦௦௦/- மும் மற்ற மருந்துகளுக்காக செலவழித்து வருகிறார் என்பதும், இதுவரை ஆறு லட்சங்கள் செலவழித்து விட்டார் என்பதும், சஹோதரர் ஹுசைன் குவைத்தில் ஒரு கம்பெனியில் ஆபீஸ் boyaga வேலை செய்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது. இன்னும் மீதமுள்ள ஊசிகளை செலுத்திம்விட்டால் நோய் குணமாகும் வாய்ப்பு இருப்பதால் சஹோதரர்கள் உதவுமாறு அன்புடன்
கேட்கிறோம்.


இது நாள் வரை ஊசி வாங்கிய செலவிற்கான பில் இத்துடன் இணைக்கபட்டுள்ளது.


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

ஜனாப் R. உசேன் கான் - (+965) 99 53 44 84

ஜனாபா H. குர்ஷித் பேகம் - (+91) 944 299 3 227 / 97 87 062 891

வங்கி கணக்கு விபரங்கள்:


H. KHURSITH BEGAM, A/c # 833637623, Indian Bank, Ariyoor Branch, Pondicherry

- 605102.
 
 
தகவல்:
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

6.10.10

பால்தாக்ரே எனக்கு கடவுள் மாதிரி: வெளுத்தது ரஜினியின் காவி முகம்

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்ரேயிடம் ஆசிபெறுவதற்காக இன்று (5-10-2010) மட்டோஷ்ரியில் உள்ள அவரது இல்லத்திற்கு நடிகர் ரஜனிகாந்த் சென்றிருந்தார்.


பால்தாக்ரேயின் சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினகாந்த்

‘பால்தாக்ரே கடவுளுக்கு நிகரானவர் அவர் எனக்கு கடவுள் மாதிரி எனக் தெரிவித்துள்ளார். பி.டி ஐ நியுஸ்



ரஜினிகாந்த மஹாராஷ்ட்டிரிய தம்பதிகளுக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடதக்கது.


இப்ப மேட்டருக்கு வருவோம்…


மேற்கண்ட செய்திக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை எனினும் நம் இஸ்லாமிய சமூக இளைஞர்களுக்காக ஒரு சில வரிகள்..


இன்றைக்கு எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள் உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு எனக் கூறி தனது இளைய பருவத்தை வீணடித்துக் கொண்டிருகின்றனர். யார் இந்த ரஜினிகாந்த என்ற உண்மையை இந்த முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் உணர வேண்டும். முஸ்லிம் இனமே இந்தியாவில் இருக்கக்கூடாது என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டுள்ள பாசிச இயக்கத் தலைவன் தான் பால் தாக்ரே. இந்த பால்தாக்ரே தான் ரஜினிக்கு கடவுளாம்.


அப்படி எனில் கடவுளின் கொள்கையை (பாசிசம்) தான் பக்கதனும் (ரஜினி) பின் பற்றுவார் என்பது இதிலிருந்து தௌ்ளத் தெளிவாகத் தெரிகின்றது


பால் தாக்ரே கடவுள் மாதிரி என பகிரங்கமாகக் பேட்டியளித்து தனது பாசிச சிந்தனைக் கொண்ட காவி உருவத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ரஜினகாந்த்.


நீ ரஜினி கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்வது உனக்கு நீயே சாவுமணி அடித்துக் கொள்வதற்கு சமம்..


நீ தியேட்டர் சென்று படம் பார்கும் பணமமெல்லாம் உன்னை அழிக்க நினைக்கும் சக்திகளுக்கு நன்கொடையாக போகின்றது..


இனிமேலாவது திருந்துவார்களா நமது இஸ்லாமிய சமூக இளைஞர்கள்?


Thanks; TNTJ:http://www.tntj.net/?p=19595

5.10.10

இலவசமாக சவுதியில் மேற்படிப்பு படிக்க - சென்னையில் நேரடி தேர்வு அக்டோபர் 8

சவுதி King Fahd University மற்றும் அமெரிக்காவின் MIT இணைந்து இலவசமாக மேற்படிப்பு படிக்க நேரடி தேர்வு சென்னை வண்டலூரில் உள்ள கிரசன்ட் பொறியியல் கல்லூரில் (தற்போது நிகர் நிலை பல்கலை கழகம்) வரும் அக்டோபர் 8 ஆம் தேதி அன்று நடத்த உள்ளது இன்ஷா அல்லாஹ். பாட பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபரம் அட்டாச்மென்டில் உள்ளது. தகுதியான மாணவர்கள் நேரடி தேர்வில் (எழுத்து தேர்வு அல்ல) தகுந்த ஆவணங்களுடன் கலந்துகொள்ளுங்கள். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.




தகவல் :

- S.சித்தீக்.M.Tech



நேரடி தேர்வு விபரம் :



Location: B.S.Abdur Rahman University (Formerly Crescent Engineering College)

Venue: Convention Hall

Day and Date: Friday, October 8, 2010

Time: 10:00 A.M





பயிற்றுவிக்கபடும் படிப்புகள் - Graduate programs offered at KFUPM



DISCIPLINEDEGREES

Aerospace EngineeringM.Sc

Architectural EngineeringM.Sc., M. Engg.

Business AdministrationM.B.A., E.M.B.A

Chemical EngineeringPh.D., M.Sc.

ChemistryPh.D., M.Sc.

City & Regional PlanningM.C.R.P.

Civil EngineeringPh.D., M.Sc.

Computer EngineeringM.Sc.

Computer NetworksM.Sc.

Computer ScienceM.Sc.

Computer Science and EngineeringPh.D.

Construction Engineering & ManagementM.Sc.

Electrical EngineeringPh.D., M.Sc.

Environmental ScienceM.Sc.

GeologyPh.D., M.Sc.

GeophysicsM.Sc.

Mathematical SciencesPh.D., M.Sc.

Mechanical EngineeringPh.D., M.Sc.

Medical PhysicsM. Med. Phys.





Mandatory documents for application (without which application will not be processed)

Copy of identification (National ID for Saudi nationals / Passport for international applicants / Iqama for residents of Saudi Arabia).

Complete official transcripts for BS degree (and MS degree if applying to PhD).

Statement-of-Purpose (a one-page essay focusing on career and research goals).

Recommendation Letters from referees through the online recommendation system after submitting the online application.

Other supporting documents (needed for final decision)

Certificates for BS degree (and MS degree if applying to PhD).

TOEFL score (min. is 68 IBT for MS and 79 IBT for PhD).

Acceptable GRE General score (min. Quant. is 700, min. Analytical is 3.0).

Upon approval, original/certified copies of degree certificate(s) and transcript(s) are to be sent through postal mail.

DOC 1:

DOC 2:

4.10.10

அலகாபாத் தீர்ப்பு- நல்லிணக்கம் போற்றும் சமுதாயத்திற்கு ஏமாற்றம்..! -M.அப்துல் ரஹ்மான் எம்.பி.

"அயோத்தியில் பாபரி மஸ்ஜிது இடிக்கப்பட்டது ஓர் அநியாயச் செயல்;அக்கிரமச் சம்பவம்;இந் நிகழ்வுக்குக் காரணமாகவும்,பின்புலமாகவும் இருந்தவர்கள் மிகப்பெரும் அளவில் தண்டிக்கப்படவேண்டியவர்கள்."என்று லிபரான் கமிஷன் அறிக்கை மிகத் தெளிவாகக் கண்டித்திருக்கிறது.




சமய சார்பற்ற நிலையில் நல்லுள்ளம் கொண்டோர் அனைவரும் வரவேற்றனர் இந்தத் தீர்ப்பை.



பாரத நாட்டின் பாரம்பரியமிக்க பாராளுமன்றம் லிபரான் கமிஷனின் இந்த பார்போற்றும் தீர்ப்பைப் பாராட்டியதோடு,அறிக்கையில் பட்டியலிடப்பட்ட குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும் என்ற பலதரப்பட்ட குரல்களையும் இந்திய அரசின் கவனத்திற்குப் பதிவு செய்தது.

மஸ்ஜிது இருந்த அந்த இடத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக நிலை நிறுத்தும் வழக்கின் தீர்ப்பு இப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.

" நீதி மன்றத்தின் தீர்ப்பு எதுவானாலும் அது மதிக்கப்பட வேண்டியது"என்பதில் நமக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

ஆனால் அநியாயமாகவும்,அக்கிரமமாகவும் வெறிச்செயலில் ஈடுபட்டுத் தகர்க்கப்பட்ட மஸ்ஜிது இருந்த இடத்தில் "ராமர் பிறந்த இடம்"என்று வம்பு செய்து அத்துமீறி சிலைகள் வைக்கப்பட்ட காரணத்தால் சட்டப்பூர்வமான எந்த பின்னணியும் இல்லாமல் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே அந்த இடம் ராமர் பிறந்ததாகச் சொல்லுகிறது இந்த தீர்ப்பு.மேலும் அந்தக் குறிப்பிட்ட இடமே ராமர் கோயில் கட்டத்தகுந்த இடம் என்றும் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுத் தீர்ப்பு வெளியாகியிருப்பது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விட்டதோ?என்கிற ஐயப்பாடு நாட்டில் நிலவுவதை மறுக்கவியலாது.



நீதிமன்றத் தீர்ப்பு என்பது ஆவணங்களின் அடிப்படையில் சட்டப்படியானத் தீர்வாகத்தான் இருக்க முடியும்.ஆவணங்கள் இல்லாத நிலையில் நிலத்தின் பயன்பாட்டுக் காலத்தையே பெரிதும் கவனத்திற்குரியதாக எடுத்துக் கொள்ளப்பட்டுத் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதைப் பரவலாகக் காண்கிறோம்.

ஆனால் இந்த அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு,பாதிக்கப்பட்ட உள்ளங்களின் நியாயமான எதிர்பார்ப்பை முழுமைப் படுத்துவதாக இல்லை என்பது பெருத்த ஏமாற்றம்தான்.



இது இப்போது மேல் முறையீடு என்ற உரிமையில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்லுகிறது."காலம் நீட்டிக்கப்பட்டாலும் எதிர்பார்க்கப்படும் நியாயமான தீர்ப்பு இறுதியில் வெளிச்சத்துடன் வெளிவரும்"என்பது மனசாட்சியுள்ளோர் அனைவரும்,இந்தியாவின் இறையாண்மையில் நம்பிக்கை கொண்டோர் அனைவரும், நீதிமன்றங்களில் சத்தியம் நிலை நிறுத்தப்படும் என்று நம்புவோர்கள் அனைவரும் மதம் கடந்து மனித நேயம் போற்றும் சான்றோர் யாவரும் எதிர்பார்க்கும் யதார்த்த நிலை.



தர்மத்தினை சூது கவ்வலாம்,ஆனால் இறுதியில் தர்மம் வெல்லுவதுதானே நியாயம்?அதுவே ஒரு நல்ல நிறைவான தீர்வாக அமையும்!.இந்த நல்ல நம்பிக்கையுடன் காத்திருப்போம்.!

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய காவல்துரை சமரசம் தேவையா...! முஸ்லீம்களின் அவளநிலை

சிதம்பரம் : சிதம்பரத்தில் மதம் மாறிய பெண் உடலை பள்ளி வாசலில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் மேலவீதியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி ஆஷியா மரியம் (45).

 (கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் முஸ்லிமாக மதம் மாறியவர்). உடல் நலம் சரியில் லாமல் இருந்த ஆஷியா மரியம் இறந்தார். அவரின் உடலை லப்பை தெரு பள்ளி வாசலில் அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.

இதையறிந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.



ஆஷியா மரியம் முஸ்லிமாக மாறியவர், அவர் பிறப்பால் முஸ்லிம் இல்லை எனக்கூறி லப்பை தெரு பள்ளிவாசலில் அடக்கம் செய்யக் கூடாது என தடுத்தனர்.

மேலும், அடக்கம் செய்ய வேண் டும் என்றால் லால்கான் தெரு பள்ளி வாசலில் தான் அடக்கம் செய்ய வேண் டும் என்றும் கூறினார்.இதனால் ஆஷியா மரியத்தின் உறவினர்களுக் கும், பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உடலை அடக் கம் செய்யாமல் அங்கேயே வைத்து விட்டனர்.

 இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் நகர இன்ஸ் பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின் ஆஷியா மரியத்தின் உடலை அடக்கம் செய்ய ஒப்புக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆஷியா மரியம் உடல் லப்பை தெரு பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=98184

2.10.10

பாபர் மசூதியும் பஞ்சாயத்துத் தீர்ப்பும்!

பேராசிரியர் டாக்டர் சேமுமு.முகமதலி,
பொதுச் செயலாளர், தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

பாபர் மசூதி இடப் பிரச்சனை குறித்து அலகாபாத் உயர்நீதி மன்ற லக்னெள கிளை 30-09-2010 அன்று வழங்கிய தீர்ப்பு பல்வேறு கருத்துகளை உருவாக்கியிருக்கிறது.நீதிபதிகள் சிபகதுல்லாஹ் கான், சுதிர் குமார் அகர்வால், தர்ம் வீர் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு இந்து மகா சபை, நிர்மோஹி அகாரா மற்றும் முஸ்லிம்களுக்கும் ஆக மூன்று கூறுகளாக நிலத்தைப் பங்கு போட்டிருக்கிறது. நீதிமன்றம் என்பது ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சியங்கள், நிரூபிக்கப் பெற்ற நடப்புகள் இவற்றைக் கொண்டு தெள்ளத் தெளிவான தீர்ப்பினை அளிக்கவேண்டுமென்பதே நடைமுறைச் செயல்பாடாகும்.

உதாரணமாக ஒரு குழந்தைக்கு உரிமையும் சொந்தமும் கொண்டாடித் தான்தான் தாய் என இருவர் நீதிமன்றத்தை அணுகுவார்களேயானால் உரிய வகையில் விசாரித்துப் பெற்றது, வளர்த்தது, பேணிப்பாதுகாப்பது, போஷிப்பது, இருப்பது எனப் பல்வேறு கூறுகளைத் தகுந்த ஆவணம், சாட்சியம், பரிசோதனை முதலிய தன்மைகளைக் கொண்டு ஆய்ந்து இன்னாருக்குரியது இக் குழந்தை என நீதிமன்றம் தீர்ப்பளிப்பதே முறைமையுடையதாகக் கருதப்படக்கூடும். அதை விடுத்து இருவருக்குமே இக் குழந்தை உரியதெனத் தீர்ப்பு அமைந்தால் குழப்பமே மிஞ்சும்.

அதேபோன்று ஒரு நிலம் யாருக்குச் சொந்தம் எனஇருவருக்கிடையே வழக்கு வரும்போது தீர விசாரித்து இன்னாருக்குத்தான் இது உரியது எனத் தீர்ப்பளிப்பதே நீதிமன்றச் செயல்பாடாகக் கருதப்படுகிறது. அவ்வாறின்றி இருவருக்கும் பங்கு போட்டுத் தருவது எங்களுக்குப் பங்கு போட்டுத் தாருங்களெனெ வாதியும் பிரதிவாதியும் கேட்டுக் கொள்ளாத நிலையில் நீதி மன்ற நடவடிக்கையாக அமையவியலாதெனச் சட்டவியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். பிரச்சனைக்குரிய மொத்த வளாகமும் யாருக்குரியதென்பதே வழக்கின் அடிப்படையான அம்சமாகும்.

மூன்று தரப்பினர் தங்களுக்கே முழுமையாகச் சொந்தமென வழக்கு தொடுத்தனர். இன்று நேற்றல்ல 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் வழக்கு இது. மேலும் இது சம்பந்தமாக ஒரு வழக்கல்ல இரு வழக்கல்ல ஏறக்குறைய 88 வழக்குகள் போடப்பட்டன.

இது உணர்வுப்பூர்வமானதும் மத சம்பந்தப்பட்டதுமானதெனக் கூறித் தங்கள் அரசியல் வாழ்வுக்கும் மேன்மைக்கும் உரிய தீனியாக அரசியல்வாதிகள் இப் பிரச்சனையை உலகளவில் பெரிதுபடுத்தி இந்திய அளவில் ஒன்றுபட்டிருந்த மக்கள் மனதில் விஷத்தை விதைத்தார்கள். பிரச்சனைக்குரிய இடத்தில்கூட ஒருவருக்கொருவர் நேசத்துடனும் பாசத்துடனும் அதுவரை வாழ்ந்துவந்த இரு சமுதாயத்தினரின் நிலையை மோசப்படுத்தினார்கள்.

இந்தியத் திருநாட்டில் கோலோச்சி இருந்த சகோதரத்துவத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் சேதம் விளையச் செய்தார்கள். பிற நாடுகளில் குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்துவத் தேவாலயங்கள் சில இப்போது பள்ளிவாசல்களாக மாறியுள்ளன. உதாரணமாக, இலண்டனின் புறப்பகுதியில் க்ரே ஃபோர்ட் எனும் இடத்தில் இப்போது பள்ளிவாசல் அமைந்துள்ள கட்டடம் கிறிஸ்தவ சர்ச் ஆக இருந்த இடமாகும். இந்த இடத்தைக் கிறிஸ்தவர்களால் பராமரிக்கப்பட முடியாமல் போய்விட்டது.

அவர்களால் அந்த ஆலயத்தைத் தொடர்ந்து நடத்தமுடியவில்லை. அந்த கட்டடத்தை முஸ்லிம்கள் வாங்கிப் பள்ளிவாசலாக்கியுள்ளனர். ஈத் பெருநாள், ஜூம் ஆ தொழுகைகள் உள்பட அனைத்துத் தொழுகைகளும், மாலை மதரஸாவும் நடைபெற்று வருகின்றன. இதைப் போல பக்கிங் ஹாம் உள்ளிட்ட பல்வேறிடங்களிலும் சர்ச் இருந்த இடங்களில் பள்ளிவாசல்கள் அமைந்துள்ளன.

 இதனால் அங்கு எந்தவொரு பிரச்சனையும் எழவில்லை. அங்குள்ள அரசியல்வாதிகள் இதுவிஷயத்தில் தலையிடுவதுமில்லை. அதனால் அமைதி குறைவதுமில்லை. தொல்லியல் ஆய்வுத்துறையினரின் கூற்றுப்படி- அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி- பல ஆண்டுகளாகக் கேட்பாரற்றுக்கிடந்த இடிந்துபோன கட்டடம் சிதைந்திருந்த இடத்தில் பாபரி மசூதி கட்டப்பட்டதெனத் தெளிவாகிறது.கோயில் ஒன்று இடிக்கப்பட்டு அதன் மீது மசூதி கட்டப்படவில்லை,

மாறாக இடிபாடுகளாகக் கிடந்த ஓரிடத்தின்மீதுதான் மசூதி கட்டப்பட்டதென்பதை நீதிபதி சிபகதுல்லாஹ் கான் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். 450 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாபர் மசூதியாக விளங்கிய இடத்தில் 23-12-1949 அன்று வலுக்கட்டாயமாகச் சிலைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டுப் பிரச்சனைகள் உருவாக்கப்பட்டன. பி.ஜே.பி. தனது அரசியல் இலாப நோக்கில் இப் பிரச்சனையைக் கையில் எடுத்து அதன் விளைவாக 1992 டிசம்பர் 6 ல் மசூதி சூறையாடப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.

இது வரலாற்றுப்பூர்வமான ஆதாரமாகும்.இதனை அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. 450 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாபர் மசூதி இருந்துவந்ததும் பல நூறாண்டுகள் தொழுகை நடந்து வந்ததுமான வரலாற்றுப்பூர்வமான வலுமிக்க ஆதாரத்தைப் புறந்தள்ளிவிட்டுப் புராண நாயகரான இராமர் அங்குதான் பிறந்தாரென்ற வரலாற்றுப்பூர்வமில்லாத ஒரு சாராரின் நம்பிக்கையை மட்டும் ஏற்று வலுக்கட்டாயமாகச் சிலை வைக்கப்பட்ட இடத்தை இந்துத்துவ வாதிகளுக்கு ஒதுக்கியிருப்பது ஒரு நீதி மன்றத்தின் தீர்ப்பாக இருக்கலாகுமோ எனச் சட்டவியல் அறிஞர்கள் தங்கள் புருவத்தை உயர்த்துகின்றனர்.

கிராமங்களில் உள்ளூர்ப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பஞ்சாயத்துச் சபை வைத்திருப்பார்கள். இருவருக்கிடையே பிரச்சனை என்றால் இருவருக்குமிடையே மத்தியஸ்தம் பேசி சமரசம் செய்வார்கள். நகர்ப் புறங்களில் கட்டைப் பஞ்சாயத்து செய்வதுமுண்டு.நிலப்பிரச்சனையில் ஆளுக்குக் கொஞ்சம் என்று பங்கு போட்டுத் தருவது பஞ்சாயத்து வேலையே தவிர நீதி மன்றப் பணியாகாது. எனவேதான் ராஜீவ் தவான், பி.பி.ராவ் போன்ற சட்ட வல்லுநர்கள் அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பினை “ஒரு கட்டைப் பஞ்சாயத்தின் தீர்ப்பு இது” எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி நாளிதழும் இதுபோன்றே தலையங்கம் தீட்டியுள்ளது. இது போன்ற பஞ்சாயத்திற்காக முஸ்லிம் அமைப்பினர் நீதிமன்றத்தை அணுகவில்லை. வரலாற்றுப் பொக்கிஷமாகப் பாதுக்காக்கப்படவேண்டிய, தங்களுக்கு மட்டுமே உரித்தான இடம் பிறரால் பறிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டமைக்கு நீதி கேட்டும் மீண்டும் அந்த இடத்தை மீட்டுக் கேட்டும்தான் முஸ்லிம் அமைப்பினர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தை அணுகும் பணிகளைத் தொடங்க அவர்கள் ஆயத்தம் செய்துவருகின்றனர்.இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் 143(2) பிரிவின்படி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படவேண்டும். உச்சநீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட வேண்டிய ஒன்றை சாலையோரத்தில் முடிவெடுக்க எவரும் முயலுதல் ஆகாது. அரசியல்வாதிகளால் முடியுமென்றால் இப் பிரச்சனை எப்போதோ முடிந்து போயிருக்கும்.நிச்சயமாக அவர்களால் முடியாது; முடிக்கவும் விரும்பமாட்டார்கள்.

இந்தியத் திருநாட்டின் உச்சநீதி மன்றத் தீர்ப்புக்காகக் காத்திருப்பது ஒன்றே இப்போது செய்யப்படவேண்டியதாகும். ஆனால் எத்தனைக் காலம் காத்திருக்க வேண்டிவருமோ, அந்தத் தீர்ப்பும் எப்படி அமையுமோ என்பதெல்லாம் எல்லாம் வல்ல இறைவனுக்கு மட்டுமே தெரிந்தவிஷயமாகும். ஒன்று மட்டும் உறுதியாக்கப்பட்டுள்ளது- இந்தியத் திருநாட்டில் இதுவரை நிகழ்ந்துவந்துள்ள மதக் கலவரங்களுக்கும்- பல குண்டு வெடிப்புகளுக்கும்- முஸ்லிம்களுக்கும் எந்தவோர் அடிப்படை சம்பந்தமுமில்லை;

அவர்கள்மீது வேண்டுமென்றே சுமத்தப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட பழிச் செயல்கள் அவை என்பது நிரூபணமாகியுள்ளது. இவ்வளவு பாதகமான தீர்ப்பிற்குப் பிறகும் முஸ்லிம்கள் பேணிவரும் பென்னம்பெரிய அமைதியும் பொறுமையுமே அதற்கு மிகப் பெரிய சான்றுகளாகும்.

“மேலும் எத்தனையோ நபிமார்கள்- அவர்களுடன் அல்லாஹ்வின் நல்லடியார்கள் பெருமளவில் சேர்ந்து போர் செய்தனர். எனினும் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்) திற்காக அவர்கள் தைரியம் இழந்துவிடவில்லை;

பலவீனம் அடைந்துவிடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்துவிடவுமில்லை;அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கிறான்” (இறைமறை- 3:146) என்ற அல்லாஹ்வின் வார்த்தைகளில் ஆழமான அழுத்தமான நம்பிக்கை உடையவர்கள் அல்லவா நாம்!

1.10.10

அநியாய தீர்ப்பு நாள் : மக்கா மஸ்ஜித் இமாம் குத்பா பேருரை

அயோத்தி தீர்ப்பு: இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் அறிக்கை

அயோத்தி தீர்ப்பு சம்மந்தமாக இந்திய யூனியன்முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளராரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் விடுத்துள்ள அறிக்கை:

30-09-2010 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியள வில் பாபரி மஸ்ஜித் - ராமஜென்மபூமி சம்பந்தப்பட்ட ஒரு சில வழக்குகளின் தீர்ப்பை அலகாபாத்தில் உள்ள உயர்நீதிமன்ற லக்னோ சிறப்பு மன்றம் வழங்கியுள்ளது.



1992 டிசம்பர் 6-இல் பாபரி மஸ்ஜிது என்று கூறப்பட்டு வந்த கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது. அதனால் நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் மூண்டன; மக்கள் மாண்டனர்; அரசுகளின் போக்குகளும் - நோக்குகளும் நாட்டு மக்களுக்கு வெளிச்சமாயின. அன்றிலிருந்து நேற்றுவரை டிசம்பர் 6 ஒரு சரித்திர சம்பவ நாளாக அனுசரிக்கப்ட்டு வநதுள்ளது.

இனி, அந்த நாள் நினைவில் இருந்து மறைந்து 30-09-2010-ஆம் நாள் பற்றி பேசும்படியான ஒரு தீர்ப்பை நாடு பெற்றிருக்கிறது.

மூன்று நீதிபதிகளில் இருவர் கருத்தையும், மூன்றாவது நீதிபதியின் ஒரு சில கருத்தையும் இணைத்துப் பார்க்கும் போது, அயோத்தி பிரச்சினைக்கு அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது தீர்ப்பு என்று கூறுவதைவிட, சிலரின் நம்பிக்கையை நிலைநாட்டும் நீதிமன்ற அறிவிப்பு என்பதே பொருத்தமானதாக அமையும் எனலாம்.



இந்தத் தீர்ப்பை - அறிவிப்பை, வழக்குத் தொடுத்தவர் கள் முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள் எனில், அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் கருத்துக் கூறுவது தேவையற்றதாகி விடும்.


வழக்குத் தொடுத்தவர்கள், வந்த தீர்ப்பை முழுமையாக ஏற்க இயலாத நிலை ஏற்படும் போது, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வாய்ப்பும் அதில் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்யப்படும் போது, அதைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் எது கூறினாலும் அதனால் நீதிமன்றத் தீர்ப்பில் எவ்வித மாற்றத்தையும் செய்து விட முடியாது.


இந்த எதார்த்த நிலைமையைச் சரியாகப் புரிந்து 1989 முதலே இந்த அயோத்தி விவகாரம் பற்றிய ஒரு தெளிவான - தீர்க்கமான - தூரநோக்குடன் ஆன அணுகுமுறையை வகுத்தளித்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களுக்கே உண்டு.


பாபரி மஸ்ஜித் விவகாரம், ராமஜென்ம பூமி பிரச்சினை என்று மாற்றப்பட்டு மக்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு, ஒரு மதப் பிரச்சினை யாகவும், பின்னர் இந்து - முஸ்லிம் பிரச்சினையாகவும் படிப்படியாக வளர்க்கப்பட்டு, கலவரங்களுக்கு வழி காட்டப்பட்டு வந்த நேரத்தில் முஜாஹிதே மில்லத் ஜி.எம். பனாத்வாலா கூறினார்:


``பாபரி மஸ்ஜித் - ராமஜென்ம பூமி பிரச்சினையை கோர்ட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டும்; ரோட்டில் தீர்க்க முடியாது. ரோட்டுக்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்கிறவர்கள் நாட்டுக்கு நன்மை செய்ய வில்லை; முஸ்லிம் சமுதாயத்துக்கும் நலன் கருத வில்லை’’ என்பதை ஆணித்தரமாகத் தெரிவித்தார் பனாத்வாலா.


அன்றிலிருந்து இன்றுவரை அவர் வகுத்தளித்த வழியைப் பின்பற்றியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது கருத்தைத் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளது.


இன்னும் ஒருபடி மேலே சென்று, அவர் கூறினார்:


``பாபரி மஸ்ஜிது - ராமஜென்ம பூமி சம்பந்தப்பட்ட வழக்குகள் பல கோர்ட்டுகளில் 88 உள்ளன. எல்லா வழக்குகளையும் ஒருசேர, உச்சநீதிமன்றத்தில் கொண்டு செல்லப்பட்டு, அனைத்து வழக்குகளையும் ஒருசேர விசாரித்துத் தீர்ப்பு வழங்கட்டும். அந்தத் தீர்ப்பு எதுவா னாலும் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல. நாட்டில் உள்ள சமுதாயங்கள் அனைத்துமே அந்தத் தீர்ப்பை ஏற்றாக வேண்டும். இந்த நிலையை உருவாக்க வேண்டு மானால் இந்திய அரசு அரசியல் சட்டத்தில் உள்ள 143(2) பிரிவின்படி உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்’’ என்றெல்லாம் விளக்கம் அளித்தார்.




இன்றைக்கு தீர்ப்பு பற்றிப் பல்வேறு இயக்கங்களும், கட்சிகளும் கூறிவரும் கருத்தைப் படிக்கும் போது, பனாத்வாலா எத்தகைய தூர நோக்குடையவராகத் திகழ்ந்துள்ளார் என்பதை உணர முடிகிறது. நீதிமன்றத் தீர்ப்பை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று இப் பொழுது எல்லோருமே பேசுகின்றனர்.


அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிக் கூறிய தவான் என்னும் அறிஞர், இது நாட்டுப்புறப் பஞ்சாயத் தார் அளித்துள்ள தீர்ப்பு போன்று இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.


எது எப்படி கூறப்பட்டாலும் நீதிமன்றம் கூறுவது தான் ஏற்கப்பட வேண்டிய ஒன்றாகி விடுகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து எல்லாத் தரப்பினரும் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.


சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்தும் நீதிமன்ற முயற்சிதான் இந்தத் தீர்ப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



திருப்தி ஆகிறார்களா? இல்லையா? என்பது போகப் போகத் தெரியும்.


ஆனால், ஒரு பெரும் உண்மை எதுவெனில், இந்திய நாட்டு மக்கள் இந்தத் தீர்ப்பால் எவ்வித ஆர்ப்பாட்டம் - போர்ப்பாட்டமும் நிகழவில்லை என்பதை உணர்ந்து திருப்தி அடைந்துள்ளனர் என்பதே.


நாட்டு மக்கள் மத்தியில் அமைதியும், சுமூகமும், நட்பும், நேசமும், நல்லிணக்கமும் ஓங்குவதற்கு எல்லோரும் உறுதி ஏற்க வேண்டும் என்பதே இந்தத் தீர்ப்பின் தாக்கமாகி யிருக்கிறது.


இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

30.9.10

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நீதி செத்துப் போய்விட்டது!

இது இறுதித் தீர்ப்பு அல்ல... தமுமுக...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
1949 முதல் எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் தொடர்பான வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் முதல் நிலை தீர்ப்பை வழங்கியுள்ளது.


தீர்ப்பில் அந்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மீதி இரண்டு பகுதிகளில் ஒன்றை கோயிலுக்கும், இன்னொன்றை நிர்மோஹி அகாரா அறக்கட்டளைக்கும் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர், பள்ளிவாசலைக் கட்டினார் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாபர் மஸ்ஜித் நிலம் எங்களுக்கு சொந்தமானது என்ற சுன்னத் ஜமாத் வக்ஃபு வாரியத்தின் மனு, மூன்று நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததன் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் சில மூத்த வழக்குரைஞர்கள் இந்த தீர்ப்பு பற்றி கருத்து கூறியது போல் சட்டரீதியாக இப்பிரச்சினையை அணுகாமல் பஞ்சாயத்து செய்யும் முறையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகளும் தீர்ப்பில் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டிருக்கிறார்கள்.


1949க்குப் பிறகு முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்திற்கு அருகே நெருங்கவே முடியாது என்ற நிலை இருந்தது. இப்போது அதில் முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளதி-ருந்து அந்த இடம் முஸ்-ம்களுக்கும் சொந்தமானது என்று தெளிவாகிறது.

இதுவே நீதியின் முதல் படிதான். எனவே நாங்கள் ஏற்கனவே கூறியபடி இப்போதைக்கு இத்தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்ற உ.பி. வக்ஃபு வாரியத்தின் முடிவை வரவேற்கிறோம். சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய மக்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து நாட்டில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைபெற அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
 
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நீதி செத்துப் போய்விட்டது! – பி.ஜே யின் கண்டனம்.!
 
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு இன்று வெளியானது. நீதி செத்து போய் விட்டது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. என்று  பி.ஜே. தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.







 
அமைதிக் காக்கவேன்டும், இந்திய தேசிய லீக்.!
 
உத்திரபிரதேச சுன்னி மத்திய வக்ப் வாரியத்திற்கும் ,சங்க பரிவார்


அமைப்புகளுக்கும் இடையே 61 ஆண்டுகளாக தேவையற்று நீடித்த பாபரி

மசூதியின் வளாக நிலா உரிமை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது .எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் நன்றி கடன் பட்டவர்களாக இருக்கின்றோம்

இந்த தீர்ப்பு உத்திரபிரதேச சுன்னி மத்திய வகப் வாரியம் சாதகமாக இல்லாமல்

அமைந்ததால் இவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில்

மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது எனவே இந்திய தேசிய லீக் (indian nationl league ) தமிழ் நாடு கிளை இஸ்லாமிய சகோதர்களுக்கும் மற்றும் இந்து சமுதாயத்தை சார்ந்த அன்பு சகோதர்களுக்கும் அன்புடனும் பண்புடனும் அரவணைத்து வேண்டுவது யாதெனில் நமது இந்தியாவின் மேம்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை எதிர்கொண்டு எவ்வித கசப்பு மனப்பான்மையும் கொள்ளாமல் , ஒருவருக்கொருவர் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடாமல்

சமுகத்திற்கு எவ்வித இடையூறும் விளைவிக்காமல் அமைதி காத்து சந்தியும் சமாதானமும் என்னென்றும் நிலைத்திட அன்புடனும் சகோதர பாசத்துடனும்

செயல்படவேண்டும்

எல்லாம் வல்ல இறைவன் நம் இரு சமுகதினர்க்கும் பொறுமை எனும்

சக்தியை மென்மேலும் வளம் பெற செய்வானாக.

நீதி செத்துப் போனது- பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை!

பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.



எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.

ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.

நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.

இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.



இப்படிக்கு
ரஹ்மதுல்லாஹ்
மாநிலத் துணைத் தலைவர்


நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை : சுன்னி வக்ப் போர்டு...!

லக்னோ,செப்.30: அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக சுன்னி வக்ப் போர்டு வழக்கறிஞர் சபார்யாப் ஜிலானி தெரிவித்துள்ளார்



பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்று பிரிவினர்களுக்கு பிரித்து அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.


இன்று மதியம் 4.30 மணியளவில் நீதிபதிகளான எஸ்.யு.கான், சுதீர் அகர்வால், தரம்வீர் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தேசமே உற்றுநோக்கியிருந்த பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.


மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் ஹிந்து மகாசபைக்கும், அருகிலிலுள்ள இடம் முஸ்லிம்களுக்கும், மீதமுள்ள நிலத்தை நிம்ரோஹி அகாராவுக்கும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான சுன்னி வக்ப் போர்டு தீர்ப்பில் திருப்தியடையவில்லை என்றும் உச்சநீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளது .



தீர்ப்பில் சர்ச்சைக்குரிய பகுதி ராமர் பிறந்த இடம் என்றும் மஸ்ஜிதின் மையப்பகுதியில் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை இந்து அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .


மொகாலாய மன்னர் பாபரின் கவர்னர் ஜெனரலான மீர்பாஹிதான் 1528 இல் பாப்ரி மஸ்ஜிதை கட்டினார். ஆனால், 325 வருடங்களுக்கு பிறகு 1853 ஆம் ஆண்டில் ராமர்கோயிலை இடித்துவிட்டு பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதாக நிம்ரோஹி என்ற ஹிந்துப் பிரிவு பாப்ரி மஸ்ஜித் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி முதன் முதலாக களமிறங்கியது.
 
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை..!
 
புது டெல்லி செப்டம்பர் 30:பாபர் மஸ்ஜித் நில உரிமை கோரும் வழக்கு தொடர்பான அலகாபாத் உயர்நீதி மன்ற லக்னோ பெஞ்ச் கிளை அளித்த தீர்ப்பின் முழு விவரங்கள் இன்னும் கிடைக்க பெறவில்லை. எனினும் மூன்று நீதியரசர்களிடையே வழக்கு தொடர்பாக வெவ்வேறு விதமான பார்வைகள் உள்ளது என்பது மட்டும் தெரியவருகிறது.



நீதிமன்ற உத்தரவின் முக்கிய நோக்கம் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பகுதியாக பிரித்து இரண்டு பகுதியை இந்துக்களுக்கும் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும் பங்கிட்டுக்கொடுப்பது .


மேலும் சிலை வைக்கப்பட்ட பகுதியான மஸ்ஜிதின் மையப்பகுதி இந்துக்களுக்கு கொடுக்கவேண்டும் என்றும் தெரியவருகிறது .



இது ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாததால் இத்தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.


இந்த தீர்ப்பு முழுக்க முழுக்க மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பே யொழிய சாட்சியங்கள் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தெரியவில்லை .


எந்த ஒரு மனுதாரரும் நிலத்தை தங்களுக்கிடையே பங்கிட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கவில்லை.


மேலும் அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதனை முன்னுதாரணமாக ஏற்றுக்கொண்டால் பல வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் மத சின்னங்கள் கட்டிடங்கள் ஆகியவற்றின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுவிடும் .


வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் கூறியது போல உயர்நீதி மன்ற தீர்ப்பு இறுதி தீர்வல்ல எனவே உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். உ பி சுன்னி வக்ப் போர்டு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.


பாபர் மஸ்ஜித் நிலத்தை மீட்க இந்திய முஸ்லிம்கள் சட்டரீதியாகவும் ஜன நாயக வழிமுறைகளில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வார்கள் .


அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவும் பல்வேறு சமூகத்திற்கிடையேயான நல்லுறவுகளை மேம்படுத்தவும் வேண்டும் என அனைத்து தரப்பு மக்களையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

29.9.10

மாணவர்களின் கவனத்திற்கு! இவ்வாண்டு கல்விக் கட்டணம் இலவசம்!

அரிய வாய்ப்பு நோக்கி அழைக்கிறது நீடூர் தீன் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி





Thanks; niduronline

24.9.10

’விடியலை நோக்கி’ சிந்தனையாளர் பேரவையின் சார்பில் சென்னையில் கருத்தரங்கம்

சென்னை : சென்னையில் தேசிய சிந்தனையாளர் பேரவையின் சார்பில் 21.09.2010 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தேவ நேயப்பாவணர் நூலக அரங்கில் ’விடியலை நோக்கி’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.


கார்த்தி சிதம்பரம்,கே.எஸ். அழகிரி, டாக்டர்.அமீர் ஜஹான்,

கருத்தரங்கிற்கு தேசிய சிந்தனையாளர் பேரவை தலைவர் உ. நீலன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ. காந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

டாக்டர்.அமீர் ஜஹான்,கார்த்தி சிதம்பரம்,பேரவை தலைவர் உ. நீலன்

இக்கருத்தரங்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம்,

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான {லால்பேட்டை வம்சாவலியான} முதுகுளத்தூர் டாக்டர் அ. அமீர் ஜஹான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

21.9.10

லால்பேட்டையில் தமுமுக சார்பில் ஜகாத் பிஃத்ரா

லால்பேட்டையில் தமுமுக சார்பில் ஜகாத் பிஃத்ரா  வினியோகம்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக லால்பேட்டையில் பிஃத்ரா வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட்டு நமது ஊரில் உள்ள ஏழைகளை தேர்ந்தெடுத்து நபிவழியின்படி கொடுக்கப்பட்டது.

இந்த வருடம் 322 பேருக்கு உணவு பொருட்கள் மற்றும் தலா ரு.50 விகிதம் கொடுக்கப்பட்டது.

2010ம் ஆண்டு பித்ரா வரவு செலவு கணக்கு தொகை பித்ரா வரவு:

உள்ளுர் மூலம் வரவு 49370.00




UAE.மூலம் வரவு:  9700.00



மொத்தம் 59007.00



பித்ரா செலவு: மளிகை பொருட்கள்



ஒரு நபருக்கு ரூ.50 விதம் 322 பேருக்கு



மீதமுள்ள தொகையில் 7 பேருக்கு



பணமாக கொடுத்த வகையில் – 42157



16100







750



மொத்தம்



கடந்த 2 வருடங்களாக ஜகாத் தொகையை வசூல் செய்து ஏழை



எளிய மக்களுக்கு கொடுத்து வருகிறது லால்பேட்டை தமுமுக.



இந்த வருடமும் உள்ளுர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நமது



சகோதரர்களிடம்



ஜகாத் வரவு:



உள்ளுர்வாசிகள்



க்அஉ சகோதரர்கள் மூலம் வரவு



59007



ஜகாத் தொகை வசூலிக்கப்பட்டது.



மூலம் வரவு



– 2,49,675







12,000



மொத்தம் – 2,61,675



இந்த ஜகாத் தொகையை பெறும் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து



கொடுத்து வருகிறது லால்பேட்டை தமுமுக. மேலும், ஜகாத்



தொகையை பெற தகுதியானவர்கள் லால்பேட்டை நகர தமுமுக



அலுவலகத்தை அணுகுமாறு கேட்டு கொள்கிறோம்.



நாம் செய்யும் இந்த சேவையை அல்லாஹ் பொருந்திக்



கொள்வானாக.எங்களுக்கு தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தரும்படி



அன்போடு கேட்டுகொள்கிறது தமுமுக.



அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறது. எல்லா புகழும்



இறைவனுக்கே.



“என்றென்றும் சமுதாய பணியில்”
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் லால்பேட்டை

20.9.10

லால்பேட்டையில் இருந்து 2010 ஆண்டு டிராவல்ஸ் மூலமாக புனித ஹஜ் பயணம் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்கள்.

லால்பேட்டையில் இருந்து 2010 ஆண்டு டிராவல்ஸ் மூலமாக புனித ஹஜ் பயணம் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்கள். மற்றும் ஆயங்குடி,பின்னத்தூர்,நீடூர்,புங்கனூர்,ஜெயங்கொன்டம், ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் லால்பேட்டை ஹாஜி எம்.எ.பத்ஹுத்தீன் அவர்களின் மூளமாக ஏர்பாடு செய்து இந்த ஆண்டு புனித ஹஜ் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளது. வள்ள இறைவன் அனைவருடைய ஹஜ் கடமைகலையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்.



1 FATHHUDDEEN ABDUL AJEES 3/45,MOULANA STREET, LALPET.

2 JAHIR HUSSAIN PACKIR MOHAMED 4-A, KAMALIYA STREET LALPET.

3 RASIYA BEGUM JAHIR HUSSAIN ''
4 BASHEER AHMED PEER KUTUF TARA 16/17 ,SINGARA VEETHI

KOLLIMALAI KEELPATHI LALPET.

5 NASIMA BEGUM BASHEER AHAMED ''
6 RAVUTHUNNISA MOHAMED HALEEM SIDDIQ 1-C,THERKU THOPPU LALPET.

7 ASIA BEGUM FAZULUDEEN 21/156,JAFAR STREET LALPET

8 FATHIMA BEGAM MOHAMED ARIF 94,SULAIMAN SETTU ST LALPET

9 MOHAMED ANSARI PAKEER MOHAMED 404,NEW STREET,AYANGUDI

10 MINHAJI UBAITHULLA 18,SULAIMAN,STREET LALPET,

11 ABDUL AZEEZ ABDUL KARIM 265,MASAYEE ST,NIDUR

12 NARKIS BEGAM MOHAMED IBRAHIM 2/29A, MELAVEEDHI NIDUR,

13 JUNAITHA BEGUM HABIB RAHMAN 3/48,PALLIVASAL ST,PUNGANUR,

14 RABIYATHUL BAZIRIYA ABDUL KAREEM 3/158,MAINROAD PUNGANUR,

15 JUNAITHA BEGAM ABDUL KAREEM 31,PALLIVASAL STREET PINNATHUR,

16 SIRAJUL MUNIRA HABIBUR RAHMAN 223,UMARFAROOKRALI STREET PINNATHUR,

17 ABDULLA ABDUL KAREEM 54,JANNATH NAGAR LALPET,

18 NAZEERA BEGUM JAINULABUDEEN "

19 MOHAMED JUBAIR IBRAHIM 49A,THOPPU STREET LALPET,

20 MUMTHAJ BEGUM MOHAMED ANSARI 447/111,ARAFATH STREET AYANGUDI.

21 JUNATHA ABDUL AZEES 11/3,THOPPU STREET LALPET,

22 NANNA SAHIB AMIR JOHN NANNA SAHIB 63/1.METTU STREET

JEYANKONDAM

16.9.10

லால்பேட்டை TNTJ சதகத்துல் ஃபித்ர் விநியோகம்

பெருநாள் தொழுகை புகைப்படங்ள் 2010 



10.9.10

லால்பேட்டை ஈத்கா பள்ளியில் நடைபெற்ற சிறப்பு பயான்,குத்பா,துஆ, ஆடியோ...

சிறப்பு பயான் அப்துர் ரஹ்மான் ஹளரத்


குத்பா,சிறப்பு துஆ.
நூருல் அமீன் ஹளரத்

.