31.3.10

லால்பேட்டை தளபதி ஷஃபீகுர் ரஹ்மானுக்கு சேவை செம்மல் விருது...

28.3.10

ஆயங்குடியின் முதுபெரும் தலைவரும்,ஆசிரியருமான ஆ.லு.அப்துல் குத்தூஸ் ஆசிரியர் அவர்கள் வஃபாத்

ஓய்ந்தது ஆயங்குடியின் சங்கநாதம்




ஆயங்குடியின் முதுபெரும் தலைவரும்,ஆசிரியருமான ஆ.லு.அப்துல் குத்தூஸ் ஆசிரியர் அவர்கள் இன்று 28.03.2009 காலை 8.00மணி அளவில் தாருள் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள்.



ஆயங்குடியின் கல்வி,மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பல துறைகளில் ஊரின் முன்னேற்றத்திற்காக தன்னலம் பாராமல் அயராது பாடுபட்ட ஆசிரியர் அவர்கள்,காயிதேமில்லத்,அப்துல் சமத்,அப்துல் லதீப் ஆகிய சமுதாய தலைவர்களோடு இனைந்து சமுதாயபணியாற்றியிருக்கிறார்கள்.



ஊர் முத்தவல்லியாகவும்,இந்தியன் யூனியன் முஸ்லீம்லீக்,தேசியலீக் ஆகிய கட்சிகளில் மாவட்ட மற்றும் மாநில பொருப்புகளையும் பல முறை வகுத்துள்ளார்கள்.அவர்களின் மறுமை வெற்றிக்காக ஏக இறைவனை பிறார்திப்போம்.

19.3.10

லால்பேட்டை மேலத்தெரு ஹாஜி.எஸ்,எம்.ஜமால் முஹம்மது வஃபாத்

லால்பேட்டை மேலத்தெரு ஹாஜி.எஸ்,எம்.ஜமால் முஹம்மது அவர்கள் இன்று(19.03.2010) வெள்ளிக்கிழமை காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

17.3.10

லாபேட்டை வடக்கு தெரு சுஹைபு வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு பாத்துபில்லை மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மகன் மவுலவி ஆலிம் சுஹைபு ஹஜ்ரத் அவர்கள் இன்று 16-03-2010 மாலை 3.00 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




By

F. Alaudeen

Jeddah

13.3.10

லால்பேட்டை மெயின் ரோட்டில் வசித்த ஹலீலுற்றஹ்மான் வஃபாத்

லால்பேட்டை சிங்கார வீதி, வானக்கார் ஜியாவுத்தீன் அண்னனும் ஹாமிது அவர்களின் தந்தையுமான {மெயின் ரோட்டில் வசித்த} ஹலீலுற்றஹ்மான் அவர்கள் இன்று 14-03-2010 அதிகாலை 1.30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று (14-03-2010) மாலை 4:00 மணிக்கு நடைபெறும்

8.3.10

லால்பேட்டை ஹாஜி அப்துல் மஜீது வஃபாத்

லால்பேட்டை காயிதேமில்லத் தெரு, ஹாஜி அப்துல் மஜீது (ஜம்கூர்) அவர்கள் இன்று, 08-03-2010 , காலை 10 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




M.A. Ahamed



Amani Veedhi, Lalpettai

6.3.10

துணை முதல்வர் தளபதி ஸ்டாலினுக்கு லால்பேட்டையில் வரவேற்ப்பு

லால்பேட்டையில் தமிழக துணை முதல்வர் தளபதி


ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் எழுச்சிமிகு வரவேற்ப்பு



காட்டுமன்னார் கோயில் ,முட்டம் பாலம் அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் தளபதி

ஸ்டாலினுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் லால்பேட்டைநகரில் மகத்தான வரவேற்ப்பு வழங்கப்பட்டது



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் தளபதி ஷபிகுர் ரஹ்மான் ,கடலூர் மாவட்ட தலைவர் அப்துல் கப்பார் ,லால்பேட்டை நகர தலைவர் முகமத் ,பேரூராட்சி மன்றத்தலைவர் சபியுல்லா,நகர முஸ்லிம் லீக் செயலாளர் அப்துல் அலி ,துணைத்தலைவர்கள் அப்துல் ஜெமில் ,தஹா முகமத் , அப்துல் ரசித்,துணை செயலாளர்கள் முகமத் தைய்யுப் ,ரஊப்,ஹிதயதுல்ல இளைஞர் அணி நூருல் அமின் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் சால்வை அணிவித்தனர்

துணை முதல்வருக்கு ஏ.எஸ்.அஹமத் பேராசிரியர் கே.எம்.கே.சார்பில் வாழ்த்து

முஸ்லிம் லீக் மாணவர் அணியைச்சார்ந்த ஏ.எஸ்.அஹமத் தளபதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து பென்னகரம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சொன்னார்கள் என்ற செய்தியை தெரிவித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து நன்றி கூறினார்



இந்நிகழ்ச்சியில் லால்பேட்டை நகரெங்குமுல்ல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னோடிகள் ,உலமாக்கள் ,ஜமாத்தார்கள் திரளானோர் பங்கேற்றனர் .தி.மு.க.மற்றும் தோழமை கட்சியினரும் பொது மக்களும் பங்கேற்றனர் ஆயிரக்கணக்கான மக்களும் முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் ,தளபதி ஸ்டாலின் ஜிந்தாபாத்,பேராசிரியர் காதர் மொகிதீன் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டு வரவேற்ற போது துணை முதல்வர் தளபதி ஸ்டாலின் மகிழ்ச்சி அடைந்தார்

.