அபுதாபி அய்மான் சங்கம் ஏற்ப்பாடு செய்திருந்த புனித மிஃராஜ் சிறப்பு பயான் ஈ.டி.ஏ ஹாலில் இன்று 09.07.2010 வெள்ளி மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பின் துவங்கியது.நிகழ்ச்சிக்கு அய்மான் சங்க துணைத் தலைவர் ஹாஜி எஸ்.குத்புதீன் தலமை தாங்கினார்.
ஜனாப் காதர் அலி இறை வசனங்கள் ஓதினார்.
அய்மான் சங்க செயளாலர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.பெருமானார் ஸல்லல்லாஹு அல்லைஹி வஸல்லம் அவர்களின் மிஃராஜ் எனும் விண்வெளிப் பயணத்தின் சிறப்புக்கள் பற்றியும்,அதன் மூலமாக கிடைக்கப்பெற்ற ஐவேளை தொழுகையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் மெளலவி ஷரஃபுத்தீன் மன்பஈ, காயல் ஹாபிழ் ஹுஸைன் மக்கீ மல்ஹரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களின் ஜமாஅத் நிர்வாகிகள்,இளைஞர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
நன்றியுரைக்குப் பின்,துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
9.7.10
அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் புனித மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி!
Posted by
லால்பேட்டை . காம்
at
7/09/2010 09:46:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment