லால்பேட்டை ,ஜூன் 25,
கோவையில் நடைப்பெரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடிற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களைஅழைக்காததர்க்கு இந்திய தேசிய லீக் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்ள்ளது.
மரியாதக்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தன் வாழ்நாளை இந்திய நாட்டின் பெருமைக்கும் உயர்வுக்கும் அர்பணித்து மகச் சிறந்த விஞ்ஞானி என்பதும் அவர் தமிழர் என்பதும் சிறுபான்மைச் சமுதாயத்திற்க்கே பெருமை சேர்க்கும் வகையில் பாரதிய ஜனதாவே அவர்கள் ஆட்சி கால்த்தில் இந்திய நாட்டின் தலைமகனாக அவரை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் அதற்கேற்ப அவர் மனித நேயத்திற்கும் மத நல்லிணக்கத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தார் என்பதும்
அகில உலகமும் அறிந்த உண்மையாகும்,
இன்றைக்கும் மாணவ சமுதாயத்தின் வழிகாட்ட்ம் கலங்கரை விளக்காக விளங்கி வரும் மாசற்ற மாணிக்கத்தை எளிமையின் வடிவத்தை நடமாடும் அந்தப் பேரறிவாளனை ஏன் தான் கருணாநிதிக்கு ஆரம்ப காலம் முதற்கொண்டே கசக்கிறதோ?
நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை கோடிக்கணக்கான மக்கள் இதயாசனத்தில் கண்ணியமாய் வீற்றிருக்கும் தகுதி படைத்த தமிழ் மகனை தமிழ் மொழியின் பேரால் நடத்தப்படும் மாநாட்டிற்கு அழைக்கவில்லை என்றால் என்ன பொருள்?
இந்திய நாட்டின் தலைமகன், தமிழ் குடி மகன் அப்துல்கலாம் அவர்களை மாநாட்டிற்கு அழைக்காததற்கு இந்திய தேசிய லீக் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. இந்திய தேசிய லீக் மாநில பொதுச் செயலாளர் ஜஹிருத்தீன் அஹமது தனது கண்டனத்தை தெரிவித்தார்.
25.6.10
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடிற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு இல்லை ``இந்திய தேசிய லீக் கண்டனம்...!
Posted by
லால்பேட்டை . காம்
at
6/25/2010 10:26:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
கண்டிக்க தக்க வேண்டிய நிகழ்வு,
Post a Comment