10.6.10

ஏழை மாணவிகள் உயர் கல்வி கற்க உதவிடுவீர்!

அனுப்புநர்:


S. நூர் முஹம்மது (டைலர்),

197/4 மேலாண்ட வீதி, C.N. பாளையம் - 607102, கடலூர் மாவட்டம்.

அலைபேசி எண்: (+91) 9786453164



அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு...! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...



நம் அனைவரின் மீதும் அந்த ஓரிறைவனின் சாந்தியும், சமாதானமும் நிகழட்டுமாக! ஆமீன்!! நலம்! நலமறிய ஆவல்!! நிற்க...



S. நூர் முஹம்மது ஆகிய நான் கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு அருகிலுள்ள C.N. பாளையம் என்ற கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வருகின்றேன். அதே கிராமத்தில் பல்லாண்டுகளாக சொந்தமாக தையல் தொழிலையும் செய்து வருகின்றேன். நாளொன்றுக்கு வருமானம் ரூ. 75லிருந்து ரூ. 150 வரை மட்டுமே கிடைக்கும். விஷேச காலங்களில் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். அல்லாஹ்வின் அருளால் இந்த குறைந்த வருமானத்தில்தான் என் மனைவி மக்களை காப்பாற்றி வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்...



என் பிள்ளைகளில் மூத்த மகள் யாஸ்மின் தற்போது திருச்சியிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் BCA படிப்பில் மூன்றாம் வருடமும், இளைய மகள் சுமைய்யா அதே கல்லூரியில் B.Sc., (Nutrition & Dietetics) படிப்பில் இரண்டாம் வருடமும் சேருவதற்கு தயாராக இருக்கின்றனர்.



மகனார் முஹம்மது அனஸ் பத்தாவது முடித்து விட்டு மார்க்கக் கல்வியுடன் இணைந்த படிப்பை கீழக்கரையில் உள்ள புகழ்ப் பெற்ற கல்லூரியில் படித்து வருகின்றார்.



இது வரையும் என் பிள்ளைகளை அல்லாஹ்வின் பேரருளால் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தேன். ஆனால், தற்போது மேலும் படிக்க வேண்டும் என்று பிள்ளைகள் விரும்புகிறார்கள். என் சூழ்நிலையில் அவர்களின் கனவை நிறைவேத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.



காரணம், மூத்த மகள் யாஸ்மின் படிப்பு செலவுக்காக கடந்த இரண்டு வருடங்களாக கல்வி கட்டணம் சுமார் 22,000 - விடுதி கட்டணம் சுமார் 12,000 - உணவு கட்டணம் சுமார் 15,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 5,000 - பயணச் செலவு சுமார் 10,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 5,000 என ஏறக்குறைய 69,000 ரூபாய்களும்), என் இளைய மகள் சுமைய்யா படிப்பு செலவுக்காக கடந்த வருடம் கல்வி கட்டணம் சுமார் 11,000 - விடுதி கட்டணம் சுமார் 6,000 - உணவு கட்டணம் சுமார் 7,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 2,000 - பயணச் செலவு சுமார் 5,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 2,000 என ஏறக்குறைய 33,000 ரூபாய்களும் ஆக மொத்தம் 1,02,000 (ஒரு இலட்சத்து இரண்டாயிரம்) ரூபாய்கள் வரை செலவு செய்து படிக்க வைத்துள்ளேன்.



படிக்காத தலைமுறையில் பிறந்த என் பிள்ளைகள் படித்தவர்களாக, அடுத்தவருக்கு வழிகாட்டுபவராக திகழ வேண்டும் என்ற ஆசையிலும், என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், நாம் சிரமபட்டாலும் பரவாயில்லை, என் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் தெரிந்த நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கியும், என் வேண்டுகோளை ஏற்று அவ்வப்போது உதவிகளை அனுப்பி வைத்த சகோதரர்கள் வாயிலாகவும் இந்த செலவுகளை செய்தேன்.



நான் கேட்ட உறவு முறைகளில் எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்க வில்லை. என் குடும்ப உறவினர்களும் வசதியானவர்களாக இல்லை. கல்லூரி மூலமாக கல்வி உதவித்தொகையும் கிடைக்க வில்லை.



கடந்த வருடம் இதுபோன்று கோரிக்கை வைத்தவுடன் என் பிள்ளைகளின் படிப்புக்கு சிலர் உதவி செய்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த மடல் வாயிலாக நன்றிகளையும், துஆக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.



இந்த சூழ்நிலையில் மூத்த மகள் யாஸ்மின் மூன்றாம் ஆண்டு படிப்புக்கு செல்ல வேண்டும். இளைய மகள் சுமைய்யா இரண்டாம் ஆண்டு படிப்பிற்கு செல்ல வேண்டும். இதற்காக குறைந்த பட்சம் இவ் வருடத்திற்கு மட்டும் எல்லா செலவுகளையும் சேர்த்து சுமார் 70,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது.



கடந்த வருடங்களில் செய்த செலவின் கடனே இன்னும் முடிவடையாத சூழலில் இப்போது என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மேலும் கடன் வாங்க முடியாத நிலை.



அதனால்தான்... அல்லாஹ்விற்காக... என் பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை கவனத்தில் கொண்டு சகோதர சகோதரிகளான தாங்கள்...



1. தங்களால் முடிந்த உதவிகள் செய்திடுமாறு (அல்லது)

2. கல்வி உதவித் தொகை கிடைக்குமிடங்களில் என் பிள்ளைகளின் பெயர்களை சேர்த்து விடுமாறு (அல்லது)

3. தங்களுக்கு தெரிந்த அமைப்புகள், நண்பர்கள் ஆகியோரிடம் என் பிள்ளைகளின் நிலைகளை எடுத்துச் சொல்லி உதவி புரியுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.



என் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக வரக்கூடிய உதவிகள் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் அதற்காக மட்டும்தான் பயன்படுத்துவேன் என்றும், அதன் சார்பாக வாங்கப்பட்ட கடன்களை மட்டும்தான் அடைப்பேன் என்றும், மேலதிக உதவிகள் வந்து விட்டால் அவற்றை என் பிள்ளைகள் போன்று கல்வி கற்க வசதியில்லாத பிள்ளைகளுக்கு அளித்து உதவி செய்வேன் என்றும் இந்த மடல் மூலம் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதியளிக்கின்றேன்.



இந்த கோரிக்கை அல்லாஹ், ரசூலுக்காக தாங்கள் ஏற்று, என் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.



இத்துடன் ஊர் ஜமாஅத் கடிதத்தையும், கல்லூரியின் நற்சான்றிதழ்களையும் இணைத்துள்ளேன்.



எல்லா வல்ல அல்லாஹ் நற்காரியங்கள் பல செய்யும் தங்கள் அனைவருக்கும் இம்மை மறுமை இரண்டிலும் நற்பாக்கியங்களை வழங்க வேண்டும் எனவும் துஆ செய்கின்றேன். நன்றி. வஸ்ஸலாம்.



இப்படிக்கு,

தங்களின் உதவிகளை அன்புடன் எதிர்பார்க்கும் சகோதரன்...

எஸ். நூர் முஹம்மது (டைலர்)

என் வங்கி கணக்கு விபரங்கள் (Bank Account Details):

S. Noor Mohamed,

A/C # 6655, Indian Overseas Bank,

Naduveerapattu Branch (280),

Cuddalore District, Pin code – 607102.

Mobile: (+91) 9786453164
 
தகவல்:
அதிரை ஃபாருக்

0 comments:

.