30.6.10

லால்பேட்டை முஹம்மது அலி மறைவு

லால்பேட்டை தெற்க்கு தெரு கந்தாமரத்தார் முஹம்மது அலி அவர்கள் இன்று 30.06.2010 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

27.6.10

செம்மொழியான தமிழ்மொழியை உலகிற்கு உரைத்தார், அப்துல் கலாம்!

செம்மொழி மாட்டின் உச்ச நோக்கம் தவறிச் செல்கின்றது எனப் பலராலும் தெரிவிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளுக்குள் பொதிந்துள்ள உண்மை விளக்கி, தமிழ் மொழி ஒரு செம்மொழிதான் என்பதை அயல் நாட்டவரிடம் உரைத்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உரை ஒன்று முக்கியத்துவம் பெறுகிறது.




செம்மொழி மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்துள்ள நிலையில், பார்க்க வேண்டிய ஒரு ஒளிப்பதிவு இது. ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத் தொடர் ஒன்றில் ஆங்கிலத்தில் அயல்நாட்டவரிடம் செம்மொழியான தமிழ்மொழியின் தாத்பரியம் குறித்து அவர் சுருக்கமாகத் தெரிவித்த விளக்ககத்தின் ஒளிப்பதிவு இது.



தமிழறிஞரும், ஆர்வலரும், தமிழருமான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் செம்மொழிமாநாட்டில் சேர்த்துக்கொள்ளப்படாது ஓரங்கட்டப்பட்டுள்ளார், எனப் பல்வேறு தரப்புக்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



நன்றி:
தமிழ்மீடியா

25.6.10

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடிற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு இல்லை ``இந்திய தேசிய லீக் கண்டனம்...!

லால்பேட்டை ,ஜூன் 25,

கோவையில் நடைப்பெரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடிற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களைஅழைக்காததர்க்கு இந்திய தேசிய லீக் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்ள்ளது.

மரியாதக்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தன் வாழ்நாளை இந்திய நாட்டின் பெருமைக்கும் உயர்வுக்கும் அர்பணித்து மகச் சிறந்த விஞ்ஞானி என்பதும் அவர் தமிழர் என்பதும் சிறுபான்மைச் சமுதாயத்திற்க்கே பெருமை சேர்க்கும் வகையில் பாரதிய ஜனதாவே அவர்கள் ஆட்சி கால்த்தில் இந்திய நாட்டின் தலைமகனாக அவரை ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் அதற்கேற்ப அவர் மனித நேயத்திற்கும் மத நல்லிணக்கத்திற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்தார் என்பதும்
அகில உலகமும் அறிந்த உண்மையாகும்,

 இன்றைக்கும் மாணவ சமுதாயத்தின் வழிகாட்ட்ம் கலங்கரை விளக்காக விளங்கி வரும் மாசற்ற மாணிக்கத்தை எளிமையின் வடிவத்தை நடமாடும் அந்தப் பேரறிவாளனை ஏன் தான் கருணாநிதிக்கு ஆரம்ப காலம் முதற்கொண்டே கசக்கிறதோ?

நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை கோடிக்கணக்கான மக்கள் இதயாசனத்தில் கண்ணியமாய் வீற்றிருக்கும் தகுதி படைத்த தமிழ் மகனை தமிழ் மொழியின் பேரால் நடத்தப்படும் மாநாட்டிற்கு அழைக்கவில்லை என்றால் என்ன பொருள்?

 இந்திய நாட்டின் தலைமகன், தமிழ் குடி மகன் அப்துல்கலாம் அவர்களை மாநாட்டிற்கு அழைக்காததற்கு இந்திய தேசிய லீக் தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.  இந்திய தேசிய லீக் மாநில பொதுச் செயலாளர் ஜஹிருத்தீன் அஹமது தனது கண்டனத்தை தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - தமிழ் - அரபி இடையே ஒற்றுமை :

கோவை :24இறைத் தன்மை மற்றும் வழிபாடுகளில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன,'' என்று, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத்தலைவர் காதர்மொய்தீன் தெரிவித்தார்.




உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கத்தில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது: "தமிழ்ச் செம்மொழியும், அரபியும் ஓர் ஒப்பாய்வு' என்ற தலைப்பிலான ஆய்வரங்கத்தில் பங்கேற்கிறேன்.

இறைவன் தன்மையில் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. "அல் -இலாஹ்' என்பதே, "அல்லாஹ்' என மருவியது என்பவர். "அல்லாஹ்'வுக்குரிய மூலச் சொல் அல், இல், எல் என்பது, இஸ்லாமிய அறிஞர்களின் முடிவாகும். இச்சொற்கள், தமிழிலும் உள்ளன என்பதை, அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 "எல்லே இலக்கம்' என்பது தொல்காப்பிய சூத்திரம்; "எல்' என்றால், ஒளிக்கடவுள் என்ற பொருள் உண்டு. இதே போன்று, அரபி - தமிழ் இடையேயான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான 2,000 வார்த்தைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், திருமணம், வழிபாடு, சடங்கு போன்றவற்றிலும் இஸ்லாமிய நெறிக்கும், தமிழ் நெறிக்கும் ஒற்றுமைகள் உள்ளன. தமிழ்நெறியில், திருமணத்தின் போது பெண்கள் குலவையிடுவர்.

 இதே போன்ற வழக்கம், இஸ்லாமிய நெறியிலும் பின்பற்றப்படுகிறது. கோவிலில் வலம் வந்து வழிபடுவதை போன்று, மெக்காவிலும் வலம் வந்து வழிபடும் முறையை இஸ்லாமியர் பின்பற்றுகின்றனர். இதே போன்று எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. இவற்றை முன்வைத்தே தமிழுக்கும், அரபிக்கும் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு, காதர்மொய்தீன் தெரிவித்தார்.

நன்றி:http://tamil.dinamalar.com/wctc_detail.asp?id=25709

24.6.10

டாக்டர் ஸாகிர் நாயக் பிரிட்டன் நுழைவு தடைக்கு சவால் !


சர்வதேசரீதியாக ஜனரஞ்சகமாக மதங்களுகிடையிலான உறவு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் பிரபல்யமான பேச்சாளரான ஸாகிர் நாயக்கிற்கு பிரிட்டனுக்குள் நுழைவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதித்தது.

 இதை தொடர்ந்து அந்த தடையை சட்டரீதியாக எதிர்கொள்ள ஸாகிர் நாயக் பிரிட்டனில் மிக சிறந்த சட்ட ஆலோசகர்கள் , மற்றும் சட்டத்தரணிகள் மூலம் நுழைவு தடையை நீக்க தேவையான நடவடிகளைகளை மேற்கொண்டுவருகின்றார்.

 தான் என்ன காரனங்களுக்காக பிரிட்டனுக்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டேன் என்பதை இந்திய தொலைகாச்சி ஒன்றுக்கு கடந்த 19 ஆம் திகதி வழகிய பேட்டியில் இரண்டு காரணங்களை கூறியுள்ளார்.

 ஒன்று இஸ்லாம் பிரிட்டனிலும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளிலும் வேகமாக பரவிவருவதை சகிக்கமுடியாமை இரண்டாவது அரசியல் ரீதியாக பிரிட்டன் பயங்கரவாதத்துக்கு எதிரானது என்பதை காட்டுவதாகும் என்று தெரிவித்துள்ளார்.

பிறைமேடை மாதமிருமுறை இதழின் செம்மொழி மாநாடு சிறப்பிதழ் வெளியீட்டு விழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் வெளிவரும் பிறைமேடை மாதமிருமுறை இதழின் செம்மொழி மாநாடு சிறப்பிதழ் வெளியீட்டு விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் 22.6.2010 செவ்வாய் மாலை 5 மணிக்கு நடைபெற்றது.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தலைமை தாங்கினார், மாநில ஆலிம் அணி அமைப்பாளர் மௌலவி ஹாமித் பக்ரீ கிராஅத் ஓதினார், முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் வரவேற்புரையாற்றினார். முஸ்லிம் லீக் பொருளாளர் வடக்குகோட்டையார் வி.எம். செய்யது அகமது வாழ்த்துரை வழங்கினார்,


முதல் பிரதியை மெஜஸ்டிக் அறக்கட்டளை நிறுவனர் கே.வி.எம்.அப்துல் கரீம் வெளியிட எஸ்.டி. கூரியர் நிர்வாக இயக்குனர் கே. நவாஸ்கனி பெற்றுக் கொண்டார்.

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை மேலாளர் எஸ்.ஏ. இப்ராஹீம் மக்கீ நன்றியுரையாற்றினார். கூட்டத்தில் மாநில இளைஞரணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், காஞ்சி மாவட்ட செயலாளர் கே.எஸ்.தாவ+த், திருவள்ளுர் மாவட்ட செயலாளர் சிக்கந்தர் பாஷா, தேனி மாவட்ட செயலாளர் சாயபு, மற்றும் மாநில மாவட்ட, பகுதி பிரைமரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


பிறைமேடை மாதமிருறை இதழின் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. சிறப்பு மலருடன் முதல் பிரதியை வெளியிட்ட மெஜஸ்டிக் அப்துல் கரீம், அதை பெற்றுக் கொண்ட எஸ்.டி.கூரியர் நவாஸ்கனி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட நிர்வாகிகள்.

அபு சைக்கிள் ஸ்டோர் இல்ல திருமணம்

திருமண வாழ்த்து



இடம், மெயின்ரோடு பள்ளிவாசல் லால்பேட்டை,
 நாள்:. 24.06.2010


மணமகன்

S.A. சுபகத் அலி
S/o ஹாஜி S.E.அப்துல் ஸமது
மணமகள்

T.புரைதா பானு
D/o ஹாஜி O.M.முஹம்மது தாஹிர்

=======================================

மணமகன்

S.A. ஷபீக்குர் ரஹ்மான்
S/o ஹாஜி S.E.அப்துல் ஸமது

மணமகள்

A.H.ரஜபுன்னிசா
D/o ஹாஜி A.R.அப்துல் ஹமீது

=======================================

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்

{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}



அன்புடன்...M.J.பதஹுத்தீன்,M.J.முஹத்தஸீம், A.H.நிசார் அஹமது {இலண்டன்} S.உமாமா {இலண்டன்}
&
லால்பேட்டை இணைய தளம்

21.6.10

முஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்!

தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010-2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது .



இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது


1 - 10 வகுப்பு வரை


தகுதிகள் :

* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

* குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

* ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது



பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்

* சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு

* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்

* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி



சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

* சாதி சான்றிதல் நகல் (xerox)

* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )





சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:

புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10



புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26





கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்

* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்

* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்



விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :

புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்

புதுப்பிக்கும் மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்



11, 12 , ITI, டிப்ளமோ , ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D)





தகுதிகள் :

* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்

* குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது



பயன்கள் :

* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை

* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்

* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு


* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்

* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி


சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

* சாதி சான்றிதல்



* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )


* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:

புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10


புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26


கூடுதல் தகவல்கள் :



* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (prematric_fresh_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்

* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal form) (prematric_renewal_appl) மற்றும் (prematric_claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்



* பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்



விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :

புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்

ஏற்கனவே பயணித்த மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்







தொழிற்படிப்புகள் ( Engineering )





தகுதிகள் :

* கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்



* குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்



* வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது



பயன்கள் :



* கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது )

* IIT (சென்னை ), NIT(திருச்சி ) , Indian Institute of Tech and Design managment (காஞ்சிபுரம் ), national Institute of fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்



* 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்



* விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை



* கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்



* ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி





சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

* சாதி சான்றிதல்



* பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )

* வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )



* உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது



சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:

புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10

புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26



கூடுதல் தகவல்கள் :

* புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM_Appln_form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்

* ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை , புதுப்பித்தல் விண்ணப்பத்தை (mcm_renewal_claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்

* பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்





விண்ணப்பம் டவுன்லோட் செய்ய :

புதிதாக விண்ணப்பிப்பவர்கள் கிளிக் செய்யவும்

ஏற்கனவே பயணித்த மாணவர்கள் புதுப்பிக்க கிளிக் செய்யவும்



மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும் : http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm


தொகுப்பு :

சகோ. ஹஸன்.B.E

TNTJ மாணவர் அணி

இலண்டன் வருகை தந்துள்ள டாக்டர் அப்துல்லா அவர்களுக்கு இஸ்லாமிய நூள்கள் வழங்கப்பட்டது

இஸ்லாத்தை சமீபத்தில் ஏற்றுக்கொண்ட  பேராசியர் பெரியார் தாசன் என்று தமிழ் கூறும் நல்லுகம் அறிந்த அப்துல்லாஹ் அவர்கள் உலகம் முழுவதும் பயணம் மேற் கொண்டு தான் இஸ்லாம் ஏற்றவிதத்தையும் உளவியல் சந்தேகங்களையும் பேசிவருகிறார்.




இந்நிலையில் இலண்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வருகைபுறிந்துள்ள‌ டாக்டர் அப்துல்லாஹ் அவர்களுக்கு லால்பேட்டை இணையதளம் சார்பாக இஸ்லாமிய மார்க்க நூல்களை {பிரிட்டன்} இந்திய தமிழ் முஸ்லிம் நலச் சங்கதின் ஸ்தாபகக்குழு உறுப்பினர் லால்பேட்டை அப்துல் இலியாஸ் வழங்கினார். லால்பேட்டை இணைய தள ஆசிரியர் , மற்றும் நன்பர்கள் உடன் இருந்தனர்.

தடா ரஹீம் இந்திய தேசிய லீக்கில் இனைந்தார்


16 ஆண்டு காலம் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்துள்ள தடா ரஹீம் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்பில் இருந்து விலகிய முஸ்லீம்கள் இந்திய தேசியலீக் கட்சியில் இனைந்தனர்

17.6.10

கல்வி கருத்தரங்கம்

போளுர்




நாள் : 20/06/10 - ஞாயிற்று கிழைமை

நேரம் : மாலை 5 மணி

சிறப்புரை : S.சித்தீக்.M.Tech-மாநில மாணவர் அணி செயலாளர்

இடம் : இஸ்மாயில் தெரு, போளூர், திருவண்ணாமலை மாவட்டம்

தொடர்பிற்க்கு : 9443306312

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ திருவண்ணாமலை மாவட்ட போளுர் கிளை மாணவர் அணி



ஆலந்தூர்



நாள் : 19/06/10 - சனி கிழைமை

நேரம் : மாலை 4:30 மணி

சிறப்புரை : N.அல் அமீன்B.E -மாநில மாணவர் அணி துணை செயலாளர்

இடம் : TNTJ மர்கஸ், ஆலந்தூர்

தொடர்பிற்க்கு : 9789855787



மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ ஆலந்தூர் கிளை மாணவர் அணி



பல்லாவரம்



நாள் : 20/06/10 - ஞாயிற்று கிழைமை

நேரம் : மாலை 4 மணி

சிறப்புரை : N.அல் அமீன்B.E -மாநில மாணவர் அணி துணை செயலாளர்

S.ஷமீம்.M.Sc - மண்டல மாணவர் அணி செயலாளர்

இடம் : இனாயத் மஹால், பல்லாவரம்

தொடர்பிற்க்கு : 9789855787



மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ பல்லாவரம் கிளை மாணவர் அணி





சீர்காழி



நாள் : 21/06/10 - திங்கள் கிழைமை

நேரம் : மாலை 4 மணி

சிறப்புரை : T.H. கலீல் ரஹ்மான்.MBA- மண்டல மாணவர் அணி செயலாளர்

இடம் : தாரலான் வடக்கு வீதி, சீர்காழி, நாகை மாவட்டம்

தொடர்பிற்க்கு : 9751485808



மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ சீர்காழி கிளை மாணவர் அணி

லால்பேட்டை ஹஜ்ஜாபீவி மறைவு

லால்பேட்டை மெயின் ரோடு வாலப்பை மர்ஹூம் ஷர்புத்தீன் அவர்களின் மனைவியும், மவுலவி ஷேக் அலாவுத்தீன் அவர்களின் தாயாருமான ஹஜ்ஜாபீவி அவர்கள் இன்று 17.06.2010 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

16.6.10

ரியாஜுல்லா - புஸ்ரா பானு திருமணம்

14.6.10

இலண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இஸ்லாமிய மாநாடு

இலண்டன் ஜூன் 14


இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக நீங்கள் எங்கு செல்கிறீர்கள் இந்த சத்திய செய்தி உங்களுக்கு உணர்வூட்டும் உபதேசமே.!

எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் 20.06.2010ல் நடப்பெறவுள்ளது.
 

லால்பேட்டையில் அரசினர் மகளிர் கல்லூரி முஸ்லிம் லீக் நன்றி

லால்பேட்டை நகர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பொதுக்குழுக் கூட்டம் 10-6-2010 அன்று லால்பேட்டை மெயின் ரோடு பள்ளிவாசல் பெண் கள் மதரஸாவில் நடை பெற்றது. நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.ஏ. முஹம்மது தலைமை வகித்தார். இளைஞர் அணி அமைப் பாளர் ஏ. நூருல் அமீன் திருக்குர்ஆன் வசனம் ஓதினார். நகரச் செயலாளர் எம்.ஓ. அப்துல் அலி வரவேற்றுப் பேசினார்.




மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார், நகர துணைத் தலைவர் எஸ்.ஏ. அப்துல் ஜமீல், மாவட்ட துணைச் செயலா ளர் கே.ஏ. அமானுல்லா, மெயின்ரோடு பள்ளிவாசல் முத்தவல்லி டி. முஹம்மது அய்யூப், முபாரக் மஸ்ஜித் முத்தவல்லி எஸ்.எச். அப் துஸ் ஸலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மாநிலச் செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான், நகர துணைச் செயலாளர் கள் ஏ. தாஹா முஹம்மது, ஏ. முஹம்து தய்யிப் முஹிப்பி, லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர். சபியுல்லா, ஏ. உபைதுர் ரஹ்மான் ஆகி யோர் கருத்துரை - வாழ்த் துரை வழங்கினர்.



கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள் -



கோவையில் நடை பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்- தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களின் கட்டளைப் படி அதிக அளவில் பங்கேற்பது எனவும், லால்பேட்டை நகரின் அரசினர் மகளிர் கல்லூரி அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதுடன், அமைத்து தரவேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றித் தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீ னுக்கு நன்றி தெரிவித்தும், லால்பேட்டை பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்பு விறுவிறுப்புடன் துரிதப் படுத்துவது என்றும், மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்போது, அதிகாரிகளுக்கு ஒத்து ழைப்பு வழங்கி பணியை சிறப்பிப்பது என்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கூட்ட துவக்கத்தில் சமீபத்தில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடலூர் மாவட்ட துணைத் தலைவர் ஏ.எம். முஹம்மது, ஃபாரூக் ஹாஜியாரின் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து அன்னாரின் மறுமை வாழ்வின் உயர் வுக்காக துஆ செய்யப்பட்டது.

11.6.10

தூத்துகுடி, கடையநல்லூர், அதிராம்பட்டிணத்தில் கல்வி கருத்தரங்கங்கள்

*10 ஆம் , 12-ஆம் வகுப்புக்கு பின் என்ன படிப்பு படிக்கலாம்?




*குறைந்த செலவில் உயர் கல்வி பெறுவது எப்படி?

*முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி திட்டங்களின் முழு விபரமும், அதை பெறும் வழிகளும்

*வேலை வாய்ப்பு பெறுவதற்க்கான தகுதிகள் என்ன?



*மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க செய்ய வேண்டியது என்ன?

*பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

*மேலும் கல்வி கல்வி உதவி, வேலை வாய்ப்பு சமமந்தமான அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கபடும்.

தூத்துகுடியில்



நாள் : 12/06/10 - சனி கிழைமை

நேரம் : காலை 9:30 மணி முதல் மாலை 1 மணி வரை

சிறப்புரை : S.சித்தீக்.M.Tech-மாநில மாணவர் அணி செயலாளர்

இடம் : TNTJ மர்கஸ், தெற்கு புது தெரு, தூத்துகுடி

தொடர்பிற்க்கு : 9443202982

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ தூத்துகுடி மாவட்ட இராமேஷ்வரம் கிளை மாணவர் அணி



கடையநல்லூரில்



நாள் : 12/06/10 - சனி கிழைமை

நேரம் : மாலை 4:30 மணி

சிறப்புரை : S.சித்தீக்.M.Tech-மாநில மாணவர் அணி செயலாளர்

இடம் : மஸ்ஜிதுல் அக்ஸா, தவ்ஹீத் நகர், பேட்டை, கடையநல்லூர் , நெல்லை மாவட்டம்

தொடர்பிற்க்கு : 9944295011



மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ நெல்லை மாவட்ட கடையநல்லூர் கிளை



அதிராம்பட்டிணத்தில்



நாள் : 13/06/10 - ஞாயிற்று கிழைமை

நேரம் : மாலை 4 மணி

சிறப்புரை : S.சித்தீக்.M.Tech-மாநில மாணவர் அணி செயலாளர்

இடம் : TNTJ மர்க்கஸ், அதிராம்பட்டிணம், தஞ்சை மாவட்டம்

தொடர்பிற்க்கு : 9629115317



மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ தஞ்சை மாவட்ட அதிராம்பட்டிணம் கிளை

10.6.10

ஏழை மாணவிகள் உயர் கல்வி கற்க உதவிடுவீர்!

அனுப்புநர்:


S. நூர் முஹம்மது (டைலர்),

197/4 மேலாண்ட வீதி, C.N. பாளையம் - 607102, கடலூர் மாவட்டம்.

அலைபேசி எண்: (+91) 9786453164



அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு...! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...



நம் அனைவரின் மீதும் அந்த ஓரிறைவனின் சாந்தியும், சமாதானமும் நிகழட்டுமாக! ஆமீன்!! நலம்! நலமறிய ஆவல்!! நிற்க...



S. நூர் முஹம்மது ஆகிய நான் கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு அருகிலுள்ள C.N. பாளையம் என்ற கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வருகின்றேன். அதே கிராமத்தில் பல்லாண்டுகளாக சொந்தமாக தையல் தொழிலையும் செய்து வருகின்றேன். நாளொன்றுக்கு வருமானம் ரூ. 75லிருந்து ரூ. 150 வரை மட்டுமே கிடைக்கும். விஷேச காலங்களில் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். அல்லாஹ்வின் அருளால் இந்த குறைந்த வருமானத்தில்தான் என் மனைவி மக்களை காப்பாற்றி வருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்...



என் பிள்ளைகளில் மூத்த மகள் யாஸ்மின் தற்போது திருச்சியிலுள்ள ஒரு மகளிர் கல்லூரியில் BCA படிப்பில் மூன்றாம் வருடமும், இளைய மகள் சுமைய்யா அதே கல்லூரியில் B.Sc., (Nutrition & Dietetics) படிப்பில் இரண்டாம் வருடமும் சேருவதற்கு தயாராக இருக்கின்றனர்.



மகனார் முஹம்மது அனஸ் பத்தாவது முடித்து விட்டு மார்க்கக் கல்வியுடன் இணைந்த படிப்பை கீழக்கரையில் உள்ள புகழ்ப் பெற்ற கல்லூரியில் படித்து வருகின்றார்.



இது வரையும் என் பிள்ளைகளை அல்லாஹ்வின் பேரருளால் மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தேன். ஆனால், தற்போது மேலும் படிக்க வேண்டும் என்று பிள்ளைகள் விரும்புகிறார்கள். என் சூழ்நிலையில் அவர்களின் கனவை நிறைவேத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.



காரணம், மூத்த மகள் யாஸ்மின் படிப்பு செலவுக்காக கடந்த இரண்டு வருடங்களாக கல்வி கட்டணம் சுமார் 22,000 - விடுதி கட்டணம் சுமார் 12,000 - உணவு கட்டணம் சுமார் 15,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 5,000 - பயணச் செலவு சுமார் 10,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 5,000 என ஏறக்குறைய 69,000 ரூபாய்களும்), என் இளைய மகள் சுமைய்யா படிப்பு செலவுக்காக கடந்த வருடம் கல்வி கட்டணம் சுமார் 11,000 - விடுதி கட்டணம் சுமார் 6,000 - உணவு கட்டணம் சுமார் 7,000 - கல்லூரியின் இதரச் செலவுகள் சுமார் 2,000 - பயணச் செலவு சுமார் 5,000 மற்றும் பிள்ளைக்குத் தேவையான செலவுகள் சுமார் 2,000 என ஏறக்குறைய 33,000 ரூபாய்களும் ஆக மொத்தம் 1,02,000 (ஒரு இலட்சத்து இரண்டாயிரம்) ரூபாய்கள் வரை செலவு செய்து படிக்க வைத்துள்ளேன்.



படிக்காத தலைமுறையில் பிறந்த என் பிள்ளைகள் படித்தவர்களாக, அடுத்தவருக்கு வழிகாட்டுபவராக திகழ வேண்டும் என்ற ஆசையிலும், என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும், நாம் சிரமபட்டாலும் பரவாயில்லை, என் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் தெரிந்த நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கியும், என் வேண்டுகோளை ஏற்று அவ்வப்போது உதவிகளை அனுப்பி வைத்த சகோதரர்கள் வாயிலாகவும் இந்த செலவுகளை செய்தேன்.



நான் கேட்ட உறவு முறைகளில் எனக்கு எந்தவொரு உதவியும் கிடைக்க வில்லை. என் குடும்ப உறவினர்களும் வசதியானவர்களாக இல்லை. கல்லூரி மூலமாக கல்வி உதவித்தொகையும் கிடைக்க வில்லை.



கடந்த வருடம் இதுபோன்று கோரிக்கை வைத்தவுடன் என் பிள்ளைகளின் படிப்புக்கு சிலர் உதவி செய்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த மடல் வாயிலாக நன்றிகளையும், துஆக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.



இந்த சூழ்நிலையில் மூத்த மகள் யாஸ்மின் மூன்றாம் ஆண்டு படிப்புக்கு செல்ல வேண்டும். இளைய மகள் சுமைய்யா இரண்டாம் ஆண்டு படிப்பிற்கு செல்ல வேண்டும். இதற்காக குறைந்த பட்சம் இவ் வருடத்திற்கு மட்டும் எல்லா செலவுகளையும் சேர்த்து சுமார் 70,000 ரூபாய் வரை தேவைப்படுகிறது.



கடந்த வருடங்களில் செய்த செலவின் கடனே இன்னும் முடிவடையாத சூழலில் இப்போது என் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மேலும் கடன் வாங்க முடியாத நிலை.



அதனால்தான்... அல்லாஹ்விற்காக... என் பெண் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை கவனத்தில் கொண்டு சகோதர சகோதரிகளான தாங்கள்...



1. தங்களால் முடிந்த உதவிகள் செய்திடுமாறு (அல்லது)

2. கல்வி உதவித் தொகை கிடைக்குமிடங்களில் என் பிள்ளைகளின் பெயர்களை சேர்த்து விடுமாறு (அல்லது)

3. தங்களுக்கு தெரிந்த அமைப்புகள், நண்பர்கள் ஆகியோரிடம் என் பிள்ளைகளின் நிலைகளை எடுத்துச் சொல்லி உதவி புரியுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.



என் பிள்ளைகளின் கல்விச் செலவுக்காக வரக்கூடிய உதவிகள் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் அதற்காக மட்டும்தான் பயன்படுத்துவேன் என்றும், அதன் சார்பாக வாங்கப்பட்ட கடன்களை மட்டும்தான் அடைப்பேன் என்றும், மேலதிக உதவிகள் வந்து விட்டால் அவற்றை என் பிள்ளைகள் போன்று கல்வி கற்க வசதியில்லாத பிள்ளைகளுக்கு அளித்து உதவி செய்வேன் என்றும் இந்த மடல் மூலம் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதியளிக்கின்றேன்.



இந்த கோரிக்கை அல்லாஹ், ரசூலுக்காக தாங்கள் ஏற்று, என் பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.



இத்துடன் ஊர் ஜமாஅத் கடிதத்தையும், கல்லூரியின் நற்சான்றிதழ்களையும் இணைத்துள்ளேன்.



எல்லா வல்ல அல்லாஹ் நற்காரியங்கள் பல செய்யும் தங்கள் அனைவருக்கும் இம்மை மறுமை இரண்டிலும் நற்பாக்கியங்களை வழங்க வேண்டும் எனவும் துஆ செய்கின்றேன். நன்றி. வஸ்ஸலாம்.



இப்படிக்கு,

தங்களின் உதவிகளை அன்புடன் எதிர்பார்க்கும் சகோதரன்...

எஸ். நூர் முஹம்மது (டைலர்)

என் வங்கி கணக்கு விபரங்கள் (Bank Account Details):

S. Noor Mohamed,

A/C # 6655, Indian Overseas Bank,

Naduveerapattu Branch (280),

Cuddalore District, Pin code – 607102.

Mobile: (+91) 9786453164
 
தகவல்:
அதிரை ஃபாருக்

9.6.10

லால்பேட்டையில் அரசினர் மகளிர் கலை கல்லூரி துவக்க வேண்டும்...

கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் 09-06-2010 இன்று நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.கதர்மொய்தீன் அவர்கள் தலமையில் நடைபெற்றது.

மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர் மத்திய இரயிவே இணையமைச்சர் மாண்புமிகு ஈ.அஹமது,தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு,முஸ்லிம் லீக் அகில இந்திய பொருளாலர் தஸ்தகீர் இப்ராஹிம் ஆகா,டெல்லி குர்ரம் அனீஸ் உமர்,நாடாளுமன்ற உருப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்,தமிழ் நாடு மாநில பொதுச் செயளாலர் கே.ஏ.எம்.அபூபக்கர்,சட்டமன்ற உறுப்பினர்கள் கலீலுர் ரஹ்மான்,அப்துல் பாஸித் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இம்மாநாட்டில்,

கல்வி மற்றும் பல்வேறு துறை சம்மந்தமாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் ஒரு முக்கிய தீர்மானமாக தமிழகத்தில் பெரும்பானமையான முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி உறுவாக்கித்தர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறித்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானம் நிறைவேற்ற முக்கிய காரணமாகத் திகழ்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் அவர்களுக்கும் மெளலானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களுக்கும் மாநில பொதுச் செயளாலர் கே.ஏ.எம்.அபூபக்கர் அவர்களுக்கும் லால்பேட்டை இணைய தளம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஹாஜா நஜ்முத்தீன் - ஆபிலா திருமணம்

8.6.10

லால்பேட்டை ஹாஜி முஹம்மது பாருக் மரைவு

லால்பேட்டை வடக்கு தெரு  அபாபில்லை ஹாஜி முஹம்மது பாருக்  அவர்கள் இன்று 08.06.2010 மாலை 5 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


ஜனாஸா நல்லடக்கம் 09.06.2010 காலை 9 மணிக்கு நடைபெறும்.
 
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இரங்கல்:
 
லால்பேட்டை வடக்கு தெரு ஏ.எம்.முஹமத் பாரூக் ஹாஜியார் இன்று 5 மணியளவில் காலமானார் ( இன்னா லில்லாஹி ........) மறைந்த இவர் தென்னாற்காடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவராகவும் ,லால்பேட்டை நகர பொருளாளராகவும் நிண்ட காலங்கள் பணியாற்றியுள்ளார் மற்றும் லால்பேட்டை ஜெ.எம்.ஏ.அரபிக் கல்லூரி பொருளாளராகவும் லால்கான் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி யாகவும் மகத்தான முறையில் பணியாற்றியுள்ளார் இவரின் மறைவு செய்தி அறிந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம் .காதர் மொகிதீன்,இரங்கல் தெரிவித்துள்ளார்.




இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சேவையிலும் லால்பேட்டை யிலுள்ள மஸ்ஜித்களின் பணிகளிலும் சிறப்பான சேவை யற்றியுள்ளார் இவரின் மறைவு சமுதாயத்திற்கும் லால்பேட்டைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்

7.6.10

க‌ரூர் மாவ‌ட்ட‌ம் ப‌ள்ள‌ப‌ட்டியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு

க‌ரூர் மாவ‌ட்ட‌ம் ப‌ள்ள‌ப‌ட்டியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு




ம‌த்திய‌ அமைச்ச‌ர் இ.அஹமது, பேராசிரியர் கே.எம். காத‌ர் மொகிதீன், த‌மிழ‌க‌ க‌ல்வி அமைச்ச‌ர் தங்கம் தென்னரசு ம‌ற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்க‌ள் பங்கேற்கின்றனர்


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதெ மில்லத் 115-வது பிறந்த நாளை முன் னிட்டு கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் ஜூன் 9 புதன்கிழமை கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெறுகிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அஹமது, தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.


ஜூன் 9-ம் தேதி புதன் கிழமை கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் நடை பெறும் இம் மாநாட்டிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை ஏற்கிறார். மாநிலத் துணைத் தலைவர்கள் எழுத்தரசு திருச்சி ஏ.எம். ஹனீப், வாணியம் பாடி அரூர் அப்துல் ஹாலிக், கோவை எல்.எம். அப்துல் ஜலீல், இனாம் குளத்தூர் மவ்லவி சாகுல் ஹமீது, சேலம் எம்.பி. காதர் உசைன், திருப்பூர் பி.எஸ். ஹம்சா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.


மவ்லானா காரி முஹம் மது சர்புதீன் பாகவி கிரா அத் ஓதுகிறார். மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் எம்.எல்.ஏ. வரவேற்றுப் பேசுகிறார். மாநிலப் பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபூபக்கர் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றுகிறார்.


கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

மாநாட்டில் நடை பெறும் கல்வி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத் தரங்கில் மாநில செயலா ளர்களான இஜட். ஜபருல்லாஹ், நெல்லை அப்துல் மஜீத், எம்.எஸ்.ஏ. ஷாஜ ஹான், காயல் மஹப+ப், கமுதி பஷீர் மற்றும் திருப் பூர் எம்.ஏ. சத்தார் ஆகி யோர் உரையாறுகின்ற னர்.


மாநாட்டுத் தீர்மானங் களை முன்மொழிந்து வழி மொழிந்து எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., எச். அப்துல் பாசித் எம்.எல்.ஏ. உரையாற்றுகின்றனர்.


தி.மு.க. சொத்துப் பாது காப்பு உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி, மாவட்ட தி.மு.க. செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பேங்க் சுப்ரமணியன் மற்றும் எம்.எஸ். மணியன், டி.எம். பஷீர் அஹமது, வாலி அக்பர் அலி, ஓ.எம். பீர் முஹம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்ற னர்.


காயிதெ மில்லத் விருது


நீண்ட காலம் சமுதாய சேவையாற்றிய தாய்ச்சபை ஊழியர் திலகங்களான கூடலூர் கே.பி. முஹம்மது ஹாஜி, களமருதூர் ஜே. அப்துல் ஹக்கீம் ஹாஜி யார் ஆகியோருக்கு காயிதெ மில்லத் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.



இதற்கான வாழ்த்துப் பத்திரங்களை தளபதி ஏ. ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ, கே.எம். நிஜாமுதீன், மில்லத் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் வாசித்தளிக்கின்றனர்.


கடந்த ஆண்டு முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்ட ளையின் சார்பில் வெளியி டப்பட்ட சிறந்த நூலாசிரி யருக்கான விருதும், ரூ.25 ஆயிரம் பொற்கிழியும் வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரனுக்கு வழங்கப்படு கிறது.


விருது பெற்றோரை பாராட்டி மாநிலப் பொரு ளாளர் வி.எம். செய்யது அஹமது, எஸ்.டி. நிஸார் அஹமது, நெல்லை எஸ். எஸ். துராப்ஷா, சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோர் உரையாற்றுகின் றனர்.
மத்திய - மாநில அமைச்சர்கள்
நடைபெற்ற மேல்நிலை மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்க ளைப் பெற்ற முஸ்லிம் மாணவர்களுக்கும், முஸ்லிம் மாணவிகளுக்கும் இம் மாநாட்டில் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளன.


இப் பரிசுகளை வழங்கி தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்று கிறார்.


மத்திய அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவருமான இ.அஹமது மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார்.


கரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் டி.எம்.ஏ. முபாரக் பாஷா நன்றி கூற மவ்லானா அப்துல் ரஹ்மான் சிராஜி துஆவுடன் மாநாடு நிறைவு பெறுகிறது.


சிறப்பான ஏற்பாடுகள்

இம் மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெறு கின்றன. அரவாக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் தலைமையிலான வரவேற் புக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வரு கின்றனர். தமிழக முழுவதி லுமிருந்து கல்வி நிறுவனங் கள், மதரஸாக்களின் நிர்வாகிகள், இந்திய ய+னி யன் முஸ்லிம் லீக் ஊழி யர்கள், இளைஞரணி செயல் வீரர்கள், மாணவர் அணி, தொழிலாளர், உள் ளிட்டோர் அணிகளின் ஊழியர்களும் பெரும் திரளாக பங்கேற்கின்றனர்.


கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் பரிசு பெறும் மாநில அளவிலான முஸ்லிம் மாணவ - மாணவியர்


மேல் நிலை-மாணவிகள்


1. ஷமீமா -1182 எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேனிலைப்பள்ளி சமயபுரம் திருச்சி - ரூ.10,000

2. (அ) ஏ.சி. ரஜப் பாத்திமா - 1179 பாரத் மாண்டிச்சேரி மெட்ரிக் மேனிலைப்பள்ளி இலஞ்சி, நெல்லை மாவட்டம் - ரூ. 7,000,

2. (ஆ) பெமினா ஷரின் ஷாஜஹான் - 1179 மகாத்மா மெட்ரிக் மேனிலைப்பள்ளி அழகர் கோவில் மதுரை - ரூ.7,000


மேல்நிலை மாணவர்கள்


1. மசூத் அஹமது உஸ்மான் -1184 டான்பாஸ்கோ மெட்ரிக் மேனிலைப்பள்ளி எழும்ப+ர்-சென்னை - ரூ.10,000

2. ஏ.ஹெச். குல்ஸார் -1181 டி.ஏ.வி. மேனிலைப்பள்ளி சென்னை ரூ.8,000

3. எஸ். பரக்கத் -1180 ஸ்ரீவிஜய் வி.பி. மெட்ரிக் மேனிலைப்பள்ளி தர்மபுரி - ரூ.6,000


எஸ்.எஸ்.எல்.சி., மாணவிகள்


1. எஸ். ஜாஸ்மின் -495 முனிஸிபல் பெண்கள் மேனிலைப் பள்ளி திருநெல்வேலி - ரூ.5,000

2. எம். நஸ்ரின் பாத்திமா - 493 சென்ஜோசப் பெண்கள் மேனிலைப்பள்ளி, ஆரணி ரூ.4,000

3. அ) எஸ். முகைதீன் பாத்திமா யாஸின் - 491 முனிஸிபல் பெண்கள் மேனிலைப்பள்ளி திருநெல்வேலி ரூ.3,000

3. ஆ) ஆர். ரஸீதா ரினோஸா - 491 சென்அந்தோனி பெண்கள் மேனிலைப்பள்ளி ஆர்.ஏ.புரம் சென்னை ரூ.3,000
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள்


1. எஸ். ஷாஜஹான் -489 செயின்ட் மேரிஸ் மேனிலைப்பள்ளி, மதுரை ரூ.5,000

2. அ) எம்.எல். அஹமது சாகிப் - 488 சென் ஜோன்ஸ் மேனிலைப்பள்ளி பாளையங்கோட்டை ரூ.3,000

2. ஆ) பி. ஹுசைன் அஹமது - 488 இஸ்லாமியா ஆண்கள் மேனிலைப்பள்ளி வாணியம்பாடி ரூ.3,000

2. இ) முஹம்மது அப்துல் காதர் - 488 அரசினர் மேனிலைப்பள்ளி கொல்லபுரம் (நாகை வடக்கு) ரூ.3,000


மேற்கண்ட மாணவர்களும், அவர்களுடன் உடன் வருவோரும் தங்குவதற்கு ஆசியா மஹால், திண்டுக்கல் ரோடு, பள்ளபட்டி என்ற முகவரியில் இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. அதற்கான போக்குவரத்து செலவும் அளிக்கப்படுகிறது.


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

9940426876, 9600311353, 9442661500

Thanks:
Muduvai Hidayath

காயிதே மில்லத் 115 வது பிறந்த நாள் முதல்வர் கலைஞர்,தலைவர் பேராசிரியர் பங்கேற்ப்பு!

கண்ணியத்திற்க்குரிய காயிதே மில்லத் அவர்களின் 115 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க்க வந்த தமிழக முதல்வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயளாலரும் தமிழக தலைவருமான பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் மொய்தீன்,மாநில பொதுச் செயளாலர் கே.ஏ.எம்.அபூபக்கர்,நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்,சட்ட மன்ற உறுப்பினர் ஹெச்.அப்துல் பாஸித்,உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் வரவேற்றனர்.


தமிழக முதல்வர் மலர் போர்வை போர்த்திய உடன் மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மார்க்க அணிச் செயளாலர் தளபதி மெளலவி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் துஆ ஓதினார்.

இநிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்,மத்திய அமைச்சர் திரு தயாநிதி மாறன்,தமிழக செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு பரிதி இளம் வழுதி,விளையாட்டு மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான்,சட்டமன்ற நாடாளு மன்ற உறுப்பினர்கள்,மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் இல்லத் திருமண விழா பேராசிரியர் K.M.K,-அமைச்சர் M.R.K.P.பங்கேற்ப்பு!

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரின் பேத்தியும்,ஹாஜி எம்.இ.ஹாஜா மைதீன் அவர்களின் மகள் செல்லக்கனி மணமகளுக்கும்,அல்ஹாஜ்.ஏ.ஆர்.ஜாஃபர் அலி அவர்களின் மகன் ஜெ.ஆரிஃபுல்லா மணமகனுக்கும் 13.06.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு ஏ.ஆர்.எஸ்.திருமண மண்டபத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில் திருமணம் நடைபெறுகிறது.




லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஹாஜி ஏ.ஆர்.சபியுல்லாஹ் முன்னிலை வகிக்கிறார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயளாலர் தளபதி மெளலவி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் வரவேற்புரையாற்றுகிறார்.



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயளாலரும்,தமிழக தலைவருமான முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் அவர்கள் வாழ்த்துறை வழங்குகிறார்.அதே தினத்தில் நடைபெறும் லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் பிரமுகர் தெற்க்குத் தெரு எம்.ஏ.ஹஜ்ஜி முஹம்மது மகள் ஹசூரா பானு,மெளலானா அப்துல் அஜீஸ் ரஃபீகி மகனார் ஹாபிழ் ஸதகத்துல்லாஹ் ஆகியோரின் திருமணத்திலும் பேராசிரியர் முனீருல் மில்லத் பங்கேற்க்கிறார்.



லால்பேட்டை நகருக்கு வருகை தரும் தலைவரை வரவேற்க்க நகர முஸ்லிம் லீக்கினர் சிறப்பான ஏற்ப்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஜூலை 4-ந்தேதி நடைப்பெரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டிர்க்கு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு..,

சென்னை, ஜூன். 6-




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. நிறுவன தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் தலைமை தாங்கினார்.



கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜெய்னுல் ஆபிதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் இஸ்லா மியர்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள். இந்த மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும். இதன் மூலம் அனைத்து துறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.



இதை வலியுறுத்தி ஒடுக்கப்பட்டோரின் உரிமைப்பேரணி மற்றும் மாநாடு சென்னை தீவுத்திடலில் அடுத்த மாதம் (ஜூலை) 4-ந்தேதி நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 15 லட்சம் பேர் குடும் பத்துடன் பங்கேற்கிறார்கள். இந்த மாநாட்டின் செயல் திட்டங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது



மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு வாகன நிறுத்துமிடங்கள் , தேவையான வசதிகள் செய்து கொடுப்பது பற்றி முடிவு செய்யப்பட்டுள் ளது. எங்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.



இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து கட்சியினரையும் அழைப்போம்.



இவ்வாறு அவர் கூறினார்.



கூட்டத்தில், மாநில தலைவர் பக்கீர் முகமது அல்தாபி, துணை தலைவர் ரகமத்துல்லா, பொதுச் செயலாளர் அப்துல் அமீது , பொருளாளர் சாதிக், செய லாளர் தவ்பீக், மாநாட்டு குழு தலைவர் சைபுல்லா ஹாஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

3.6.10

சங்கராபுரத்தில் கல்வி கருத்தங்கம்

*10 ஆம் , 12-ஆம் வகுப்புக்கு பின் என்ன படிப்பு படிக்கலாம்?



*குறைந்த செலவில் உயர் கல்வி பெறுவது எப்படி?

*முஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி திட்டங்களின் முழு விபரமும், அதை பெறும் வழிகளும்

*வேலை வாய்ப்பு பெறுவதற்க்கான தகுதிகள் என்ன?


*மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க செய்ய வேண்டியது என்ன?

*பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

*மேலும் கல்வி கல்வி உதவி, வேலை வாய்ப்பு சமமந்தமான அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்கபடும்.


சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம்)


நாள் : 5/06/10 - சனிக்கிழமை

நேரம் : காலை 10:00 மணி

சிறப்புரை : S.சித்தீக்.M.Tech-மாநில மாணவர் அணி செயலாளர்

இடம் : அன்னை ஆயிஷா மகளிர் கல்லூரி, குலத்து பாதை தெரு, சங்கராபுரம் , விழுப்புரம் மாவட்டம்.


தொடர்பிற்க்கு : 9750022419


மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறும்படி அன்புடன் அழைகின்றது TNTJ விழுப்புரம் மாவட்ட மாணவர் அணி

லால்பேட்டை முஹம்மது அய்யூப் வஃபாத்

லால்பேட்டை மெயின் ரோடு, சாத்தனூரார் ஹாஜி அய்யூப் அவர்கள் இன்று 03.06.2010 மதியம் 2 மணியளவில்  தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறும்



{இவர் மெயின்ரோடு சாத்தனூரார் முஹம்மது நாஸர்,ஹலிபுல்லா,அஸ்கர்,ஆகியோரின் சகோத்தரும், மர்ஹும் O.P.இம்தாதுல் ஹுசைன் மைத்துனரும், மர்ஹும் மெளலவி {நியூ ஜவுளிஹால்} தமீஜுத்தீன் அவர்களின் மருமனும் ஆவார்}

1.6.10

எம்.பி.பி.எஸ்., பி.இ. விண்ணப்பம் சேர்ந்துவிட்டதா? இணையதளத்தில் உறுதி செய்துகொள்ளலாம்


எம்.பி.பி.எஸ்., -பி.டி.எஸ்., பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பம் சேர்ந்துவிட்டதா என்பதை இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்:
எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு கிடைத்து விட்டதா என்பதை www.tnhealth.org என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பிளஸ் 2 பதிவு எண், பிளஸ் 2 தேர்வு எழுதிய ஆண்டை இணையதளத்தில் பூர்த்தி செய்யும் நிலையில், விண்ணப்பம் கிடைத்து விட்டதைத் தெரிந்து கொள்ள முடியும். விண்ணப்பம் கிடைத்ததற்கான ஏ.ஆர். பதிவு எண்ணையும் விண்ணப்பதாரர் உடனடியாக குறித்து வைத்துக் கொள்ள முடியும்.


பி.இ. விண்ணப்பம்:

பி.இ. படிப்பில் சேருவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடைத்து விட்டதா என்பதை www.annauniv.edu இணையதளம் மூலம் மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

.