30.9.10

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நீதி செத்துப் போய்விட்டது!

இது இறுதித் தீர்ப்பு அல்ல... தமுமுக...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
1949 முதல் எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் தொடர்பான வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் முதல் நிலை தீர்ப்பை வழங்கியுள்ளது.


தீர்ப்பில் அந்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மீதி இரண்டு பகுதிகளில் ஒன்றை கோயிலுக்கும், இன்னொன்றை நிர்மோஹி அகாரா அறக்கட்டளைக்கும் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர், பள்ளிவாசலைக் கட்டினார் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாபர் மஸ்ஜித் நிலம் எங்களுக்கு சொந்தமானது என்ற சுன்னத் ஜமாத் வக்ஃபு வாரியத்தின் மனு, மூன்று நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததன் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் சில மூத்த வழக்குரைஞர்கள் இந்த தீர்ப்பு பற்றி கருத்து கூறியது போல் சட்டரீதியாக இப்பிரச்சினையை அணுகாமல் பஞ்சாயத்து செய்யும் முறையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகளும் தீர்ப்பில் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டிருக்கிறார்கள்.


1949க்குப் பிறகு முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்திற்கு அருகே நெருங்கவே முடியாது என்ற நிலை இருந்தது. இப்போது அதில் முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளதி-ருந்து அந்த இடம் முஸ்-ம்களுக்கும் சொந்தமானது என்று தெளிவாகிறது.

இதுவே நீதியின் முதல் படிதான். எனவே நாங்கள் ஏற்கனவே கூறியபடி இப்போதைக்கு இத்தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்ற உ.பி. வக்ஃபு வாரியத்தின் முடிவை வரவேற்கிறோம். சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய மக்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து நாட்டில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைபெற அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
 
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நீதி செத்துப் போய்விட்டது! – பி.ஜே யின் கண்டனம்.!
 
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு இன்று வெளியானது. நீதி செத்து போய் விட்டது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. என்று  பி.ஜே. தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.







 
அமைதிக் காக்கவேன்டும், இந்திய தேசிய லீக்.!
 
உத்திரபிரதேச சுன்னி மத்திய வக்ப் வாரியத்திற்கும் ,சங்க பரிவார்


அமைப்புகளுக்கும் இடையே 61 ஆண்டுகளாக தேவையற்று நீடித்த பாபரி

மசூதியின் வளாக நிலா உரிமை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது .எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் நன்றி கடன் பட்டவர்களாக இருக்கின்றோம்

இந்த தீர்ப்பு உத்திரபிரதேச சுன்னி மத்திய வகப் வாரியம் சாதகமாக இல்லாமல்

அமைந்ததால் இவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில்

மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது எனவே இந்திய தேசிய லீக் (indian nationl league ) தமிழ் நாடு கிளை இஸ்லாமிய சகோதர்களுக்கும் மற்றும் இந்து சமுதாயத்தை சார்ந்த அன்பு சகோதர்களுக்கும் அன்புடனும் பண்புடனும் அரவணைத்து வேண்டுவது யாதெனில் நமது இந்தியாவின் மேம்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை எதிர்கொண்டு எவ்வித கசப்பு மனப்பான்மையும் கொள்ளாமல் , ஒருவருக்கொருவர் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடாமல்

சமுகத்திற்கு எவ்வித இடையூறும் விளைவிக்காமல் அமைதி காத்து சந்தியும் சமாதானமும் என்னென்றும் நிலைத்திட அன்புடனும் சகோதர பாசத்துடனும்

செயல்படவேண்டும்

எல்லாம் வல்ல இறைவன் நம் இரு சமுகதினர்க்கும் பொறுமை எனும்

சக்தியை மென்மேலும் வளம் பெற செய்வானாக.

நீதி செத்துப் போனது- பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை!

பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.



எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.

ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.

நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.

இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.



இப்படிக்கு
ரஹ்மதுல்லாஹ்
மாநிலத் துணைத் தலைவர்


நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை : சுன்னி வக்ப் போர்டு...!

லக்னோ,செப்.30: அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக சுன்னி வக்ப் போர்டு வழக்கறிஞர் சபார்யாப் ஜிலானி தெரிவித்துள்ளார்



பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்று பிரிவினர்களுக்கு பிரித்து அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.


இன்று மதியம் 4.30 மணியளவில் நீதிபதிகளான எஸ்.யு.கான், சுதீர் அகர்வால், தரம்வீர் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தேசமே உற்றுநோக்கியிருந்த பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.


மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் ஹிந்து மகாசபைக்கும், அருகிலிலுள்ள இடம் முஸ்லிம்களுக்கும், மீதமுள்ள நிலத்தை நிம்ரோஹி அகாராவுக்கும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான சுன்னி வக்ப் போர்டு தீர்ப்பில் திருப்தியடையவில்லை என்றும் உச்சநீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளது .



தீர்ப்பில் சர்ச்சைக்குரிய பகுதி ராமர் பிறந்த இடம் என்றும் மஸ்ஜிதின் மையப்பகுதியில் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை இந்து அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .


மொகாலாய மன்னர் பாபரின் கவர்னர் ஜெனரலான மீர்பாஹிதான் 1528 இல் பாப்ரி மஸ்ஜிதை கட்டினார். ஆனால், 325 வருடங்களுக்கு பிறகு 1853 ஆம் ஆண்டில் ராமர்கோயிலை இடித்துவிட்டு பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதாக நிம்ரோஹி என்ற ஹிந்துப் பிரிவு பாப்ரி மஸ்ஜித் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி முதன் முதலாக களமிறங்கியது.
 
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை..!
 
புது டெல்லி செப்டம்பர் 30:பாபர் மஸ்ஜித் நில உரிமை கோரும் வழக்கு தொடர்பான அலகாபாத் உயர்நீதி மன்ற லக்னோ பெஞ்ச் கிளை அளித்த தீர்ப்பின் முழு விவரங்கள் இன்னும் கிடைக்க பெறவில்லை. எனினும் மூன்று நீதியரசர்களிடையே வழக்கு தொடர்பாக வெவ்வேறு விதமான பார்வைகள் உள்ளது என்பது மட்டும் தெரியவருகிறது.



நீதிமன்ற உத்தரவின் முக்கிய நோக்கம் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பகுதியாக பிரித்து இரண்டு பகுதியை இந்துக்களுக்கும் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும் பங்கிட்டுக்கொடுப்பது .


மேலும் சிலை வைக்கப்பட்ட பகுதியான மஸ்ஜிதின் மையப்பகுதி இந்துக்களுக்கு கொடுக்கவேண்டும் என்றும் தெரியவருகிறது .



இது ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாததால் இத்தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.


இந்த தீர்ப்பு முழுக்க முழுக்க மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பே யொழிய சாட்சியங்கள் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தெரியவில்லை .


எந்த ஒரு மனுதாரரும் நிலத்தை தங்களுக்கிடையே பங்கிட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கவில்லை.


மேலும் அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதனை முன்னுதாரணமாக ஏற்றுக்கொண்டால் பல வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் மத சின்னங்கள் கட்டிடங்கள் ஆகியவற்றின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுவிடும் .


வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் கூறியது போல உயர்நீதி மன்ற தீர்ப்பு இறுதி தீர்வல்ல எனவே உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். உ பி சுன்னி வக்ப் போர்டு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.


பாபர் மஸ்ஜித் நிலத்தை மீட்க இந்திய முஸ்லிம்கள் சட்டரீதியாகவும் ஜன நாயக வழிமுறைகளில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வார்கள் .


அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவும் பல்வேறு சமூகத்திற்கிடையேயான நல்லுறவுகளை மேம்படுத்தவும் வேண்டும் என அனைத்து தரப்பு மக்களையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

29.9.10

மாணவர்களின் கவனத்திற்கு! இவ்வாண்டு கல்விக் கட்டணம் இலவசம்!

அரிய வாய்ப்பு நோக்கி அழைக்கிறது நீடூர் தீன் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி





Thanks; niduronline

24.9.10

’விடியலை நோக்கி’ சிந்தனையாளர் பேரவையின் சார்பில் சென்னையில் கருத்தரங்கம்

சென்னை : சென்னையில் தேசிய சிந்தனையாளர் பேரவையின் சார்பில் 21.09.2010 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தேவ நேயப்பாவணர் நூலக அரங்கில் ’விடியலை நோக்கி’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.


கார்த்தி சிதம்பரம்,கே.எஸ். அழகிரி, டாக்டர்.அமீர் ஜஹான்,

கருத்தரங்கிற்கு தேசிய சிந்தனையாளர் பேரவை தலைவர் உ. நீலன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ. காந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

டாக்டர்.அமீர் ஜஹான்,கார்த்தி சிதம்பரம்,பேரவை தலைவர் உ. நீலன்

இக்கருத்தரங்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம்,

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான {லால்பேட்டை வம்சாவலியான} முதுகுளத்தூர் டாக்டர் அ. அமீர் ஜஹான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



நிகழ்வில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

21.9.10

லால்பேட்டையில் தமுமுக சார்பில் ஜகாத் பிஃத்ரா

லால்பேட்டையில் தமுமுக சார்பில் ஜகாத் பிஃத்ரா  வினியோகம்.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக லால்பேட்டையில் பிஃத்ரா வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட்டு நமது ஊரில் உள்ள ஏழைகளை தேர்ந்தெடுத்து நபிவழியின்படி கொடுக்கப்பட்டது.

இந்த வருடம் 322 பேருக்கு உணவு பொருட்கள் மற்றும் தலா ரு.50 விகிதம் கொடுக்கப்பட்டது.

2010ம் ஆண்டு பித்ரா வரவு செலவு கணக்கு தொகை பித்ரா வரவு:

உள்ளுர் மூலம் வரவு 49370.00




UAE.மூலம் வரவு:  9700.00



மொத்தம் 59007.00



பித்ரா செலவு: மளிகை பொருட்கள்



ஒரு நபருக்கு ரூ.50 விதம் 322 பேருக்கு



மீதமுள்ள தொகையில் 7 பேருக்கு



பணமாக கொடுத்த வகையில் – 42157



16100







750



மொத்தம்



கடந்த 2 வருடங்களாக ஜகாத் தொகையை வசூல் செய்து ஏழை



எளிய மக்களுக்கு கொடுத்து வருகிறது லால்பேட்டை தமுமுக.



இந்த வருடமும் உள்ளுர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நமது



சகோதரர்களிடம்



ஜகாத் வரவு:



உள்ளுர்வாசிகள்



க்அஉ சகோதரர்கள் மூலம் வரவு



59007



ஜகாத் தொகை வசூலிக்கப்பட்டது.



மூலம் வரவு



– 2,49,675







12,000



மொத்தம் – 2,61,675



இந்த ஜகாத் தொகையை பெறும் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து



கொடுத்து வருகிறது லால்பேட்டை தமுமுக. மேலும், ஜகாத்



தொகையை பெற தகுதியானவர்கள் லால்பேட்டை நகர தமுமுக



அலுவலகத்தை அணுகுமாறு கேட்டு கொள்கிறோம்.



நாம் செய்யும் இந்த சேவையை அல்லாஹ் பொருந்திக்



கொள்வானாக.எங்களுக்கு தொடர்ந்து உங்களுடைய ஆதரவை தரும்படி



அன்போடு கேட்டுகொள்கிறது தமுமுக.



அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறது. எல்லா புகழும்



இறைவனுக்கே.



“என்றென்றும் சமுதாய பணியில்”
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் லால்பேட்டை

20.9.10

லால்பேட்டையில் இருந்து 2010 ஆண்டு டிராவல்ஸ் மூலமாக புனித ஹஜ் பயணம் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்கள்.

லால்பேட்டையில் இருந்து 2010 ஆண்டு டிராவல்ஸ் மூலமாக புனித ஹஜ் பயணம் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்கள். மற்றும் ஆயங்குடி,பின்னத்தூர்,நீடூர்,புங்கனூர்,ஜெயங்கொன்டம், ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் லால்பேட்டை ஹாஜி எம்.எ.பத்ஹுத்தீன் அவர்களின் மூளமாக ஏர்பாடு செய்து இந்த ஆண்டு புனித ஹஜ் செல்ல தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளது. வள்ள இறைவன் அனைவருடைய ஹஜ் கடமைகலையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்.



1 FATHHUDDEEN ABDUL AJEES 3/45,MOULANA STREET, LALPET.

2 JAHIR HUSSAIN PACKIR MOHAMED 4-A, KAMALIYA STREET LALPET.

3 RASIYA BEGUM JAHIR HUSSAIN ''
4 BASHEER AHMED PEER KUTUF TARA 16/17 ,SINGARA VEETHI

KOLLIMALAI KEELPATHI LALPET.

5 NASIMA BEGUM BASHEER AHAMED ''
6 RAVUTHUNNISA MOHAMED HALEEM SIDDIQ 1-C,THERKU THOPPU LALPET.

7 ASIA BEGUM FAZULUDEEN 21/156,JAFAR STREET LALPET

8 FATHIMA BEGAM MOHAMED ARIF 94,SULAIMAN SETTU ST LALPET

9 MOHAMED ANSARI PAKEER MOHAMED 404,NEW STREET,AYANGUDI

10 MINHAJI UBAITHULLA 18,SULAIMAN,STREET LALPET,

11 ABDUL AZEEZ ABDUL KARIM 265,MASAYEE ST,NIDUR

12 NARKIS BEGAM MOHAMED IBRAHIM 2/29A, MELAVEEDHI NIDUR,

13 JUNAITHA BEGUM HABIB RAHMAN 3/48,PALLIVASAL ST,PUNGANUR,

14 RABIYATHUL BAZIRIYA ABDUL KAREEM 3/158,MAINROAD PUNGANUR,

15 JUNAITHA BEGAM ABDUL KAREEM 31,PALLIVASAL STREET PINNATHUR,

16 SIRAJUL MUNIRA HABIBUR RAHMAN 223,UMARFAROOKRALI STREET PINNATHUR,

17 ABDULLA ABDUL KAREEM 54,JANNATH NAGAR LALPET,

18 NAZEERA BEGUM JAINULABUDEEN "

19 MOHAMED JUBAIR IBRAHIM 49A,THOPPU STREET LALPET,

20 MUMTHAJ BEGUM MOHAMED ANSARI 447/111,ARAFATH STREET AYANGUDI.

21 JUNATHA ABDUL AZEES 11/3,THOPPU STREET LALPET,

22 NANNA SAHIB AMIR JOHN NANNA SAHIB 63/1.METTU STREET

JEYANKONDAM

16.9.10

லால்பேட்டை TNTJ சதகத்துல் ஃபித்ர் விநியோகம்

பெருநாள் தொழுகை புகைப்படங்ள் 2010 



10.9.10

லால்பேட்டை ஈத்கா பள்ளியில் நடைபெற்ற சிறப்பு பயான்,குத்பா,துஆ, ஆடியோ...

சிறப்பு பயான் அப்துர் ரஹ்மான் ஹளரத்


குத்பா,சிறப்பு துஆ.
நூருல் அமீன் ஹளரத்

லால்பேட்டையில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்ப்பு!!

லால்பேட்டை,செப்,10



லால்பேட்டை ஈத்கா குத்பா பள்ளிவாசலில் காலை 8 மணியளவில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.அவ்வமயம் தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மொளலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் சிரப்புரையாற்றினார்.


ஜெ.எம்.ஏ.அரபிக்கால்லூரி முதல்வர் மொளலானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் பெருநாள் தொழுகை நடத்தினார்.


இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர்.


காலை 6 மணியிலிருந்தே லால்பேட்டையிலுள்ள அனைத்து மஸ்ஜிதுகளிலிருந்தும் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடையணிந்து அணி அணியாக பெரியவர்களும்,இளைஞர்களும்,சிறுவர்களும் ஆர்வபெருக்குடன் கலந்துக் கொண்டனர்.


தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும்,அனைவரின் நல்வாழ்வுக்காகவும்,நலனுக்காகவும்,சமுதாய ஒற்றுமைக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.


மேலும் ஊரின் செழிப்பான,சிறப்பான முனேற்றத்திற்க்காகவும் துஆச் செய்யப்பட்டது.


பிரார்த்தனைக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்து கரம் கொடுத்து ஆரத் தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

லால்பேட்டை நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடிஏற்று விழா

லால்பேட்டை பேருந்து நிலையம் காயிதே மில்லத் சாலையில் இன்று நோன்பு பெருநாள் காலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடி ஏற்று விழா நடைப்பெற்றது.

 இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி கே.ஏ.அமானுல்லா தலைமை வகித்தார் மாநில செயலாளர் மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் மாவட்ட ஆலோசகர் எஸ்.ஏ.அப்துல் கப்பார் முபாரக் மஸ்ஜித் முத்தவல்லி எம்.ஹச் .அப்துஸ்ஸலாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 லால்பேட்டை நகர தலைவர் ஹாஜி.கே.ஏ.முஹமத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியினை தக்பீர் முழக்கத்துடன் ஏற்றி வைத்தார் நகர செயலாளர் எம்.ஒ. அப்துல் அலி வரவேற்றார் நகர பிரமுகர் பி.எம்.முஹமத் தைய்யுப் நன்றி தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் சவுதி காயிதே மில்லத் பேரவை செயலாளர் எஸ்.எம்.முஹமத் நாசர் ,சிங்கை எம்.ஏ ஹஜ்ஜி முஹமத்,பி.எம்.மஸ்வூத் ,பேரூராட்சி உறுப்பினர் எஸ்.ஏ.ஹிதயதுல்ல,துணைச்செயலாளர்களான ஏ.தாஹா முஹமத் ஏ.முஹமத் தையுப் நகர மாணவர் அணி அமைப்பாளர் யு.சல்மான் பாரிஸ் ,எம்.ஏ.அப்துல் ஹமித் , எஸ்.ஏ.முஹிபூர் ரஹ்மான் ஏ.எஸ்.அஹமத் உள்ளிட்ட முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் பங்கேற்றனர்.

ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்

எல்லோருக்கும் உடலை வருத்தி, உள்ளத்தைத் திருத்தி, தன்னிலை உணர்ந்து, பிறர்நிலை அறிந்து, தாழ்ந்து கிடப்போரின் உயர்வுக்கு உதவிபுரிந்து வாழும் சிறந்த வாழ்வு முறையைக் கற்பிக் கிறது. ஒரு மாதம் முழு வதும் பெற்ற பயிற்சி யையும் கற்ற பாடத் தையும் ஆண்டு முழுவதும் நடைமுறைப் படுத்துவதில்தான் சிறப்பு அமைந்திருக் கிறது. இன்றையத் தேவை, எல்லாரும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வே ஆகும். மனித சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் வேறுபாடுகளை நீக்கவும், வன்முறை எண்ணம் மறையவும், எங்கும் எதிலும் நன்முறையும் மென் முறையும் நிறையவும், அமைதி வழியில் அறநெறியில் ஆக்கப்பூர்வ மாகப் பாடுபடுவோம். என்றும் அன்புடன் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு.



லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் முஃப்தி காரி அல்ஹாபிஜ் நூருல் அமீன் ஹஜ்ரத்'

இன்பம் பொங்கும் இந்த இனிய நன்னாளில் எல்லா வளமும்


பெற்று வாழ வாழ்த்துகிறேன் ....."ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்" ....
 

இந்திய தேசிய லீக்



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலச் செயலாளர்


மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் அவர்களின்

பெருநாள் வாழ்த்து செய்தி
 
 
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) அன்பார்ந்த சகோதரர்கள் சகோதரிகள் உங்கள் அனைவர்களுக்கும் எங்களின் ஈதுல் பித்ர் இனிய` ஈத் முபாரக் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் புனித ரமளானில் நோன்பின் மாண்பை பேணி,கண் சிவக்க திருக்குர்ஆன் ஓதி,கை சிவக்க வாரி வழங்கி ,கால் கடுக்க தொழுது வணங்கி புனித ரமளானை கண்ணியப்படுத்திய கண்ணியச்சீலர்களான உங்கள் அனைவர்களுக்கும் இனிய ஈத் முபாரக்



இன்பம் பொங்கும் இந்த இனிய நன்னாளில் எல்லா வளமும்

பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

8.9.10

ISP networking - வேலை வாய்ப்பு


சவுதி, கத்தார் , குவைத்தில் ISP networking வேலைக்கு ஆள் எடுக்கின்றனர். டிப்ளோமா, B.E படித்தவர்கள் விணப்பிக்கலாம். இன்டெர்வியு இந்தியாவில் இருக்கும் இன்ஷா அல்லாஹ். ஒருவருடம் அனுபவம் இருந்தாலும் பரவா இல்லை, சம்பளம் இந்திய ரூபாய்க்கு ரூ.70,000 வரை இருக்கும்.



தகுதி உள்ளவர்கள் tntjmet@gmail.com இந்த இமெயில் முகவரிக்கு Resume அனுப்பவும்

Qualification : Dipolmo,Degree, B.E

Experience : Mininmun 2 years Exp on Field.

Contact : Abdul Ajees - 00966503661452 - tntjmet@gmail.com

Work Location : Qatar, KSA, Kuwait

Qualified candidates send resume to tntjmet@gmail.com



இப்படிக்கு

அப்துல் அஜீஸ்

ஜித்தா

00966503661452

7.9.10

லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்யின் 2007 ஆண்டு மாணவர்கள் நடத்திய இப்தார் நிகழ்ச்சி

லால்பேட்டை வணிக வளாகத்தில்  இன்று 07 .09 .2010 .  லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்யின் 2007 ஆண்டு மாணவர்கள் நடத்திய இப்தார் நிகழ்ச்சில்
நூற்றுக்கனக்கோர் பங்குபெற்று சிறப்பித்தனர்.

லால்பேட்டையில் லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி பயான் ஆடியோ

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு பயான் {06.09.2010} லால்பேட்டை  ஜாமிஆ மன்பவுல் அன்வார் முஃப்தி காரி அல்ஹாபிஜ் நூருல் அமீன் ஹஜ்ரத் ஆற்றிய உரை

சிறப்பு பயான்


சிறப்பு துஆ


6.9.10

லால்பேடை அபுதாபி ஜமாஅத் சார்பில் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி!

லால்பேட்டை அபுதாபி ஜமாஅத் சார்பில் புனித மிக்க லைலத்துல் கத்ர் இரவு சிறப்பு நிகழ்ச்சி காலிதியா செரட்டான் ஹோட்டல் பின்புறம் உள்ள மஸ்ஜிதே அபு உபைதாவில் எழுச்சியுடன் நடைபெற்றது.



லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இப்தார் நிகழ்ச்சி

04.9.2010 அன்று லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புனித ரமளானின் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.



 நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் எஸ்.எஸ்.ஜபார் அலி தலைமை வகித்தார் தாளாளர் கே.எஸ்.ஹாரிஸ் அஹமத் வரவேற்றார் மௌலானா ஜாக்கிர் ஹுசைன் திருக்குர்ஆன் சிறப்புப்பற்றி உரையாற்றினர் மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் சகோதர சமுதாயத்தை சார்ந்த அறிஞர்களுக்கு திருக்குர்ஆன் பரிசுகள் வழங்கி துஆச்செய்தார் .





இஜட்.முஹமத் யஹ்யா ,எம்.ஏ.முஹம்மத் ஹசன் ,எஸ்.முஹமத் இப்ராகிம் ,சபீர் அஹமத் ,மௌலவி எம்.ஒய்.முஹமத் அன்சாரி மற்றும் பள்ளியின் முதல்வர் மாரியப்பன் ,ஆசிரியர்கள் ,முத்தவல்லிகள் ,உலமாக்கள் ஜமாஅத்தார்கள் சகோதர சமுதாயத்தைச் சார்ந்த அறிஞர்கள் ஆசிரியர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
 

 2000 க்கும் மேற்ப்பட்டோர் கல்விப்பயிலும் இப்பள்ளியின் இப்தார் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது

5.9.10

ஜகாத் கடமை பற்றிய குத்பா பயான் பாகம் 2

ஜகாத் பற்றிய விளக்கம் லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஜாமிஆ மன்பவுல் அன்வார் முஃப்தி காரி அல்ஹாபிஜ் நூருல் அமீன் ஹஜ்ரத் ஆற்றிய உரை ஆடியோ பாகம் 2

தமுமுக-வின் அமீரக பொதுக்குழு

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், அல்அய்ன், ராசல் கைமா, உம்மல்குவைன், புஜைரா என அனைத்து மண்டலங்களிலும் செயல்பட்டுவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அமீரக பொதுக்குழுக் கூட்டம் துபாய் ஈவான் ஹோட்டலில் 03.09.2010, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.



தாயகத்திலிருந்து வருகைப் புரிந்துள்ள மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்களும், தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் பொதுக் குழுவில் கலந்துக் கொண்ட அனைத்து மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி மற்றும் இயக்கம் வளர்க்கும் கலை குறித்த பயிற்சியளித்தனர்.




அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. துபை மண்டல தமுமுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டம் இஃப்தார் நிகழ்ச்சியோடு சிறப்புடன் நிறைவடைந்தது.

4.9.10

அபுதாபி வாழ் லால்பேட்டை சகோதரர்களின் கவனத்திற்க்கு

அபுதாபி வாழ் லால்பேட்டை சகோதரர்களின் கவனத்திற்க்கு...லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க்க வருவோரின் வசதிக்காக கீழ் காணும் எண் பஸ்களில் வரலாம்.32,7,8,5. பஸ் ரூட்: காலிதியா ஷெரட்டான் ஹோட்டல் ஸ்டாப்.

இப்படிக்கு

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்

1.9.10

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் புனித மிகு லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வை வணங்கி வாழ்வோம்! இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம்! எல்லோருடனும்


இணங்கி வாழ்வோம்!!



அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் புனித மிகு லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி


அன்புடையீர்!அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கிருபையால் இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1431-ரமளான் பிறை 27- 05.09.2010.ஞாயிறு மாலை திங்கள் இரவு தராவீஹ் தொழுகைக்குப் பிறகு (சரியாக 9.30 மணிக்கு) அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பாக புனித மிகு லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி அபுதாபி காலிதியா செரட்டான் ஹோட்டல் பின்புறம் உள்ள மஸ்ஜிதே ”அபு உபைதா” வில் நடைபெற உள்ளது.

அது சமயம் சிறப்பு பயான்,தஸ்பீஹ் தொழுகை,ஹத்தமுல் குர்ஆன் மற்றும் சிறப்பு துஆ ஆகியவைகள் நடைபெற உள்ளதால்,தாங்கள் மற்றும் தங்களின் சுற்றத்தார்கள் நண்பர்கள் அனைவரும் இந்நிகச்சியில் கலந்து சிறப்பித்து பயன் பெற வேண்டுமென அனைவர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.



சிறப்பு பயான்: மெளலவி ஹாபிழ் ஹுஸைன் மக்கி மஹ்லரி {காயல்பட்டினம்}



தஸ்பீஹ் சிறப்பு தொழுகை: ஹாபிழ் .இர்ஷாத் அஹமத்  {லால்பேட்டை}





இப்படிக்கு

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்



குறிப்பு:

தாங்கள் அனைவர்களும் ஸதகத்துல் ஃபித்ர்-ஐ நமது ஜமாஅத்தில் செலுத்தி நமதூர் சகோதர சகோதரிகள் பயன் பெற உதவிடுமாறு அன்போடு கேட்டிக் கொள்ளப்படுகிறது

*பெண்களுக்கு தனி இட வசதி உள்ளது

துஆவிற்க்கு பிறகு ( நிகழ்ச்சி முடிவில்) சீரணி உணவு வழங்கப்படும்.

ஜகாத் கடமை பற்றிய குத்பா பயான்

ஜகாத் பற்றிய விளக்கம் லால்பேட்டை லால்கான் ஜாமியா மஸ்ஜிதில் ஜாமிஆ மன்பவுல் அன்வார் முஃப்தி காரி அல்ஹாபிஜ் நூருல் அமீன் ஹஜ்ரத் ஆற்றிய உரை ஆடியோ


.