நிகழ்ச்சிக்கு அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ் தலமை வகித்தார்.
செயற்க்குழு உறுப்பினர் மெளலவி ஏ.அமீனுல் ஹுஸைன் மன்பஈ கிராஅத் ஓதினார்.
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் செயளாலர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்றுப் பேசினார்.
குர்ஆனின் மகத்துவத்தைப் பற்றி மெளலவி .ஹபீபுல்லாஹ் மன்பஈ உரை நிகழ்த்தினார்.
ஹாபிழ் ஆர்.இஸட்.எம்.இர்ஷாத் அஹமத் தஸ்பீஹ் சிறப்பு தொழுகை நடத்தினார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட காயல்பட்டிணம் மெளலவி இஸ்ஹாக் லெப்பை நஹ்வி லைலத்துல் கத்ர் மகத்துவத்தைப் பற்றி விரிவாக உறையாற்றி ,இறுதியில் சிறப்பு துஆ ஓதினார்.
நிகழ்ச்சியில் லால்பேட்டை,கொள்ளுமேடு,மானியம் ஆடூர்,ஆயங்குடி,சிதம்பரம்,காரைக்கால்,பரங்கிப்பேட்டை,நெல்லிக்குப்பம் .
நிகழ்ச்சி முடிவில் ஜமாஅத் துணைத் தலைவர் எஸ்.அப்துல் அஜீது நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பெண்களும் திரளாக பங்கேற்றனர்.350க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் தாயகத்தில் இருந்தால் எந்த மகிழ்ச்சி இருக்குமோ அதே அளவில் மன நிறைவுடன் இருந்ததாக குறிப்பிட்டனர்.கலந்துக்கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.
செய்தித் தொகுப்பு:இப்னு ஷஃபீக்
படங்கள்:ஹெச். நஜீர் அஹமது.

.jpg)
.jpg)
.jpg)

0 comments:
Post a Comment