இது இறுதித் தீர்ப்பு அல்ல... தமுமுக...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
1949 முதல் எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளிவாசல் தொடர்பான வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் முதல் நிலை தீர்ப்பை வழங்கியுள்ளது.
தீர்ப்பில் அந்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, அதில் ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மீதி இரண்டு பகுதிகளில் ஒன்றை கோயிலுக்கும், இன்னொன்றை நிர்மோஹி அகாரா அறக்கட்டளைக்கும் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
அயோத்தியில் இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர், பள்ளிவாசலைக் கட்டினார் என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பாபர் மஸ்ஜித் நிலம் எங்களுக்கு சொந்தமானது என்ற சுன்னத் ஜமாத் வக்ஃபு வாரியத்தின் மனு, மூன்று நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததன் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் சில மூத்த வழக்குரைஞர்கள் இந்த தீர்ப்பு பற்றி கருத்து கூறியது போல் சட்டரீதியாக இப்பிரச்சினையை அணுகாமல் பஞ்சாயத்து செய்யும் முறையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மூன்று நீதிபதிகளும் தீர்ப்பில் ஒருவருக்கொருவர் பல அம்சங்களில் மாறுபட்டிருக்கிறார்கள்.
1949க்குப் பிறகு முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்திற்கு அருகே நெருங்கவே முடியாது என்ற நிலை இருந்தது. இப்போது அதில் முஸ்லிம்களுக்கும் பங்கு இருக்கிறது என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளதி-ருந்து அந்த இடம் முஸ்-ம்களுக்கும் சொந்தமானது என்று தெளிவாகிறது.
இதுவே நீதியின் முதல் படிதான். எனவே நாங்கள் ஏற்கனவே கூறியபடி இப்போதைக்கு இத்தீர்ப்பை நாங்கள் ஏற்கிறோம்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்ற உ.பி. வக்ஃபு வாரியத்தின் முடிவை வரவேற்கிறோம். சட்டம் ஒழுங்கை பேணக்கூடிய மக்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து நாட்டில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைபெற அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நீதி செத்துப் போய்விட்டது! – பி.ஜே யின் கண்டனம்.!
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு இன்று வெளியானது. நீதி செத்து போய் விட்டது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. என்று பி.ஜே. தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அமைதிக் காக்கவேன்டும், இந்திய தேசிய லீக்.!
உத்திரபிரதேச சுன்னி மத்திய வக்ப் வாரியத்திற்கும் ,சங்க பரிவார்
அமைப்புகளுக்கும் இடையே 61 ஆண்டுகளாக தேவையற்று நீடித்த பாபரி
மசூதியின் வளாக நிலா உரிமை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது .எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் நன்றி கடன் பட்டவர்களாக இருக்கின்றோம்
இந்த தீர்ப்பு உத்திரபிரதேச சுன்னி மத்திய வகப் வாரியம் சாதகமாக இல்லாமல்
அமைந்ததால் இவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில்
மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது எனவே இந்திய தேசிய லீக் (indian nationl league ) தமிழ் நாடு கிளை இஸ்லாமிய சகோதர்களுக்கும் மற்றும் இந்து சமுதாயத்தை சார்ந்த அன்பு சகோதர்களுக்கும் அன்புடனும் பண்புடனும் அரவணைத்து வேண்டுவது யாதெனில் நமது இந்தியாவின் மேம்பாடு மற்றும் மத நல்லிணக்கத்தை எதிர்கொண்டு எவ்வித கசப்பு மனப்பான்மையும் கொள்ளாமல் , ஒருவருக்கொருவர் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடாமல்
சமுகத்திற்கு எவ்வித இடையூறும் விளைவிக்காமல் அமைதி காத்து சந்தியும் சமாதானமும் என்னென்றும் நிலைத்திட அன்புடனும் சகோதர பாசத்துடனும்
செயல்படவேண்டும்
எல்லாம் வல்ல இறைவன் நம் இரு சமுகதினர்க்கும் பொறுமை எனும்
சக்தியை மென்மேலும் வளம் பெற செய்வானாக.
நீதி செத்துப் போனது- பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை!
பாபர் மசூதி தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீதியை சாகடித்து ஆழ குழிதோண்டி புதைத்திருக்கிறது.
எந்த விதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பஞ்சாயத்து பாணியில் இத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. ஒரு இடம் யாருக்கு உரியது என்பதை முடிவு செய்ய அந்த இடத்திற்கான ஆவணத்தையும், அனுபோகத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள சிவில் சட்டமாகும்.
ஆவணத்தின்படியும், அனுபோக பாத்தியதையின் அடிப்படையில் அந்த இடம் முஸ்லிம்களுக்கு உரியது என்பது உலகம் அறிந்த உண்மை. பள்ளிவாசலில் 1949ல் சிலை வைத்ததும், 1992ல் பாபர் மசூதியை இடித்து தள்ளியதையும் உலகம் பார்த்துக் கொண்டிருந்ததால் இந்த தீர்ப்பை அறியும் உலக மக்கள் இந்தியாவில் அறவே நீதி இல்லை; சிறுபான்மை மக்களுக்கு உரிமை இல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.
நீதிமன்றத்தின் இச்செயலால் தேசத்தின் மானம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த முஸ்லிம்களும், நாட்டில் உள்ள நடுநிலைவாதிகள் அனைவரும் இத்தீர்ப்பை நிராகரிக்கிறார்கள் என்பதை அறிவிக்கிறோம்.
இது தொடர்பாக வரும் 17-10-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அவசர மாநில செயற்குழுவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.
இப்படிக்கு
ரஹ்மதுல்லாஹ்
மாநிலத் துணைத் தலைவர்
நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை : சுன்னி வக்ப் போர்டு...!
லக்னோ,செப்.30: அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக சுன்னி வக்ப் போர்டு வழக்கறிஞர் சபார்யாப் ஜிலானி தெரிவித்துள்ளார்
பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்று பிரிவினர்களுக்கு பிரித்து அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.
இன்று மதியம் 4.30 மணியளவில் நீதிபதிகளான எஸ்.யு.கான், சுதீர் அகர்வால், தரம்வீர் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தேசமே உற்றுநோக்கியிருந்த பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.
மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் ஹிந்து மகாசபைக்கும், அருகிலிலுள்ள இடம் முஸ்லிம்களுக்கும், மீதமுள்ள நிலத்தை நிம்ரோஹி அகாராவுக்கும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான சுன்னி வக்ப் போர்டு தீர்ப்பில் திருப்தியடையவில்லை என்றும் உச்சநீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளது .
தீர்ப்பில் சர்ச்சைக்குரிய பகுதி ராமர் பிறந்த இடம் என்றும் மஸ்ஜிதின் மையப்பகுதியில் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை இந்து அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .
மொகாலாய மன்னர் பாபரின் கவர்னர் ஜெனரலான மீர்பாஹிதான் 1528 இல் பாப்ரி மஸ்ஜிதை கட்டினார். ஆனால், 325 வருடங்களுக்கு பிறகு 1853 ஆம் ஆண்டில் ராமர்கோயிலை இடித்துவிட்டு பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதாக நிம்ரோஹி என்ற ஹிந்துப் பிரிவு பாப்ரி மஸ்ஜித் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி முதன் முதலாக களமிறங்கியது.
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை..!
புது டெல்லி செப்டம்பர் 30:பாபர் மஸ்ஜித் நில உரிமை கோரும் வழக்கு தொடர்பான அலகாபாத் உயர்நீதி மன்ற லக்னோ பெஞ்ச் கிளை அளித்த தீர்ப்பின் முழு விவரங்கள் இன்னும் கிடைக்க பெறவில்லை. எனினும் மூன்று நீதியரசர்களிடையே வழக்கு தொடர்பாக வெவ்வேறு விதமான பார்வைகள் உள்ளது என்பது மட்டும் தெரியவருகிறது.
நீதிமன்ற உத்தரவின் முக்கிய நோக்கம் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்று பகுதியாக பிரித்து இரண்டு பகுதியை இந்துக்களுக்கும் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும் பங்கிட்டுக்கொடுப்பது .
மேலும் சிலை வைக்கப்பட்ட பகுதியான மஸ்ஜிதின் மையப்பகுதி இந்துக்களுக்கு கொடுக்கவேண்டும் என்றும் தெரியவருகிறது .
இது ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாததால் இத்தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.
இந்த தீர்ப்பு முழுக்க முழுக்க மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பே யொழிய சாட்சியங்கள் அல்லது ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தெரியவில்லை .
எந்த ஒரு மனுதாரரும் நிலத்தை தங்களுக்கிடையே பங்கிட்டுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கவில்லை.
மேலும் அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு தேவைக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதனை முன்னுதாரணமாக ஏற்றுக்கொண்டால் பல வரலாற்று சிறப்பு மிக்க மற்றும் மத சின்னங்கள் கட்டிடங்கள் ஆகியவற்றின் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுவிடும் .
வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் கூறியது போல உயர்நீதி மன்ற தீர்ப்பு இறுதி தீர்வல்ல எனவே உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். உ பி சுன்னி வக்ப் போர்டு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தை அணுகப்போவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பாபர் மஸ்ஜித் நிலத்தை மீட்க இந்திய முஸ்லிம்கள் சட்டரீதியாகவும் ஜன நாயக வழிமுறைகளில் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வார்கள் .
அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவும் பல்வேறு சமூகத்திற்கிடையேயான நல்லுறவுகளை மேம்படுத்தவும் வேண்டும் என அனைத்து தரப்பு மக்களையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
30.9.10
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: நீதி செத்துப் போய்விட்டது!
Posted by
லால்பேட்டை . காம்
at
9/30/2010 06:38:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment