4.10.10

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய காவல்துரை சமரசம் தேவையா...! முஸ்லீம்களின் அவளநிலை

சிதம்பரம் : சிதம்பரத்தில் மதம் மாறிய பெண் உடலை பள்ளி வாசலில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் மேலவீதியைச் சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி ஆஷியா மரியம் (45).

 (கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் முஸ்லிமாக மதம் மாறியவர்). உடல் நலம் சரியில் லாமல் இருந்த ஆஷியா மரியம் இறந்தார். அவரின் உடலை லப்பை தெரு பள்ளி வாசலில் அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்துச் சென்றனர்.

இதையறிந்த பள்ளிவாசல் நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.



ஆஷியா மரியம் முஸ்லிமாக மாறியவர், அவர் பிறப்பால் முஸ்லிம் இல்லை எனக்கூறி லப்பை தெரு பள்ளிவாசலில் அடக்கம் செய்யக் கூடாது என தடுத்தனர்.

மேலும், அடக்கம் செய்ய வேண் டும் என்றால் லால்கான் தெரு பள்ளி வாசலில் தான் அடக்கம் செய்ய வேண் டும் என்றும் கூறினார்.இதனால் ஆஷியா மரியத்தின் உறவினர்களுக் கும், பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உடலை அடக் கம் செய்யாமல் அங்கேயே வைத்து விட்டனர்.

 இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் நகர இன்ஸ் பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின் ஆஷியா மரியத்தின் உடலை அடக்கம் செய்ய ஒப்புக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆஷியா மரியம் உடல் லப்பை தெரு பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=98184

1 comments:

Lalpet Shabeer said...

முட்டாள் தனமான செயல்

.