கடலூர் மாவட்டம் ஆயங்குடியில் 17 தேதியன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம் நகர தலைவர் ஏ.ஹச் .முஹமத் ஹனிப் தலைமையில் நடைப்பெற்றது.
நகர ஜமாதுல் உலமா சபை தலைவர் மௌலானா முஹமத் மன்சூர் கிராஅத் ஓதினார், ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி ஏ.எம்.இத்ரிஸ்.மற்றும் அனைத்து மஸ்ஜிதுகளின் முத்தவல்லிகள் முன்னிலை வகித்தனர் நகர முஸ்லிம் லீக் பொருளாளர் ஹெச்.முஹமத் இக்பால் வரவேற்றுப்பேசினார்.
இக்கூட்டதில் காயிதே மில்லத் பேரவை சர்வதேச அமைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.சிறப்புரையாற்றினர் மௌலானா பி.ஏ.ஜபார் அலி.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலானா தளபதி ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் இஸ்மாயில் ,பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷித் ஜான் ஆயங்குடி ஊராட்சி தலைவர் நாகராஜன் மாவட்ட தலைவர் தலைவர் கே.ஏ.அமனுல்லா , துணைத்தலைவர் எம்.ஐ.அப்துல் வதுத், செயலாளர் ஏ.சுக்கூர் தலைமை நிலைய பேச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நகர செயலாளர் சுல்தான் மொய்தின் நன்றி கூறினார்.
ஆயங்குடியில் எம் .அப்துல் ரஹ்மான் எம் பி. தமிழக அரசின் நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.
ஆயங்குடியில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்துக்கொண்ட வேலூர் நாடாளுமன்ற எம் .அப்துல் ரஹ்மான் அயங்குடி ஊராட்சி மன்றத்தின் வளாகத்தில் வீடு தோறும் மரம் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் இந்திரா நினைவு தொகுப்பு வீட்டின் கட்டிடப்பணிக்கு அடிக்கல் நாட்டினர் அத்தோடு ஆயங்குடியில் கட்டப்பட்டு வரும் தமிழக அரசின் நலத்திட்டங்களான தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தண்ணீர் டேங்குகளையும் கலைஞர் காப்பிட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய வீடுகளையும் பார்வையிட்டு நலத்திட்ட பணிகளை கேட்டறிந்தார்.
ஆயங்குடி ஊராட்சி மன்றத்தலைவர் டி.நாகராஜன் துணைத்தலைவர் ஏ.ஆர்.நிஜார் அஹமத் ஆகியோர் வரவேற்றனர் இந் நிகழ்வுகளில் முத்தவல்லி ஏ.எம்.இத்ரிஸ் ,ஏ.முஹமத் ஆசிப் ,மௌலானா பி.ஏ.ஜபார் அலி.மௌலானா தளபதி.ஏ.ஷபிகுர் ரஹ்மான் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் இஸ்மாயில் மாவட்ட தலைவர் அமனுல்லா ,செயலாளர் சுக்கூர்,துணைத்தலைவர் எம்.ஐ. அப்துல் வதுத் ,ஆயங்குடி முஸ்லிம் லீக் தலைவர் முஹமத் ஹனீப் ,செயலாளர் சுல்தான் மொய்தின் ,பொருளாளர் முஹமத் இக்பால்,எஸ்.ஜாலலூத்தின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
18.10.10
ஆயங்குடியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு விளக்க பொதுக் கூட்டம்
Posted by
லால்பேட்டை . காம்
at
10/18/2010 06:45:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment