Showing posts with label இமாம் புஹாரி. Show all posts
Showing posts with label இமாம் புஹாரி. Show all posts

24.10.10

லால்பேட்டையில் இமாம் புஹாரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொடக்க ஆலோசனைக் கூட்டம்

என் அன்பின் சொந்தங்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரமதுல்லாஹி வபரகாதுஹு).


இறைவனின் அருளால் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் லால்பேட்டையில் இமாம் புஹாரி கல்விக் குழுமத்தின் முயற்சியால் வக்ப் வாரியத்திற்கு சொந்தமான முப்பத்தி இரண்டு ஏக்கர் நிலத்தில்
 
லால்பேட்டைக்கு அருகில் உள்ள எள்ளேரியில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உலகத்தரம் வாய்ந்த ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கூடம்,
 
மிக நவீன வசதிகளுடன் கூடிய இஸ்லாமியக் கல்லூரி ஆகியவைகள் இன்ஷா அல்லாஹ் உங்கள் எல்லோரின் உதவியுடனும் துஆ பாரக்கத்துடனும் கட்டிடவும் சிறப்பாக செயல்படுத்திடவும் , எதிர் வரும் 28 -10 -2010 அன்றுலால்பேட்டையில் தொடக்க ஆலோசனைக் கூட்டம் நடக்க இருக்கிறது.
 
அதற்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க அன்புடன் அழைக்கின்றோம்.
 

16.10.10

இமாம் புஹாரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க ஆலோசனைக் கூட்டம்...!

16.9.09

லால்பேட்டை இமாம் புஹாரி நர்சரி பள்ளியில் குர் ஆன் ஹத்தம் மற்றும் பரிசளிப்பு விழா!!

லால்பேட்டை,செப்.16

லால்பேட்டை மினா தெருவில் இயங்கி வரும் இமாம் புஹாரி நர்சரி பள்ளி மாணவ ,மாணவிகளால் ரமளான் மாதம் முழுவதும் ஓதப்பட்ட ஹத்தம் துஆ நிகழ்ச்சியும்,மாணாக்கர்களுக்கு பரிசளிப்பும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் தாளாலர் மவ்லவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி வரவேற்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ,

ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி ஹாஜி பி.முஹம்மது யஹ்யா,

பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஹாஜி எம்.அய்யூப்,

ஹாஜி அனீசுர் ரஹ்மான் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ்,செயளாலர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.பள்ளி முதல்வர் திருமதி சிவகாமி நன்றி கூறினார்.

.