4.3.09

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் மறைவு

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஓ
.பி. இம்தாதுல் ஹீசைன் மறைவு
லால்பேட்டை பேரூராட்சி மன்றத்தின் துனைத்தலைவராக
5 வருடங்கள், பேரூராட்சி மன்றத்தி்ன் தலைவராக 3 வருடங்கள் சறிப்பாக பணியாற்றிய இயக்க இளவல் ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் அவர்கள் 04.03.2009 புதன் கிழமை 2.45 மனியளவில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை சென்றடைந்தார் என்பதை கேட்டு பெரும் கவலையடைந்தோம்.

மறைந்த சகோதரர்
ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் சின்னஞ்சிறு வயதில் இருந்து சமுதாயப்பணியிலும், தாய்ச்சபை இந்திய யூனியன் முல்லிம் லீக் பணியிலும் சிறப்பாக செயல்பட்டார். லால்பேட்டை வடக்குத் தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றத்தில் செயலாளராக இருந்து சிறப்பாக பணிபுறிந்தார்.

60 ஆன்டுகாலமாக லால்பேட்டை நகரில் ரபிவுல் அவ்வல் மாதத்தில் நடைபெற்று வரும் நபிகள் பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் சீரத்துன் நபவி வரலாற்று சொற்பொழிவு நிகழ்ச்சி சங்கை மிகு உலமாக்களை வைத்து நடத்தப்படுகிறது. 60 ஆன்டுகலாக சிறப்பாக நடைபெற்று வரும் இந்த நிகழச்சியில் 20 ஆன்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றியவர் சகோதரர் ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் அவர்கள்.

லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் இளைஞர் அணியின் செயலாளர்
, நகர முஸ்லிம் லீக்கின் துனை செயலாளர், மாவட்ட முஸ்லிம் லீக்கின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். தேசிய லீக்கின் லால்பேட்டை நகர தலைவராகவும், மாநில பொருளாலராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஈடு செய்ய முடியாத இழப்பாக இவரது மறைவுச் செய்தி கேட்டதும் லால்பேட்டை வட்டாரமே கவலையில் ஆழ்ந்தது.

லால்பேட்டையில் இன்று வியாழன் அனைத்து பாடசாலைக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இவருடைய கப்ரை அல்லாஹீத்தாலா பிரகாசமாக்கி வைப்பானாக.

இவருடைய மறைவால் கவலையில் ஆழந்திருக்கும் இவருடைய குடும்பத்தார், நன்பர்கள், இயக்கத்தினர் அனைவருக்கும் ஸப்ரே ஜமீலை அல்லாஹ் வழங்குவானாக.

இவரின் மறைவுச் செய்தி கேட்டதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாலரும், தமிழகத் தலைவரும் ஆன பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன் அவர்கள் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
.

1 comments:

ஹம்துன் அப்பாஸ் said...

சகோதரர் ஓ.பி.இம்தாதுல் ஹூஸைன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

"அல்லாஹூம்மஃFபிர்லஹூ வர்ஹம்ஹூ"

இவண்
பின்னத்தூர் அப்துல் ஹக் ஜமாலி
பரங்கிப்பேட்டை ஹம்துன் அப்பாஸ்
அல் ஹஸா, சவூதி அரேபியா

.