1.3.09

லால்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்தில் அரசு மகளிர் கலை கல்லூரிகள் நிறுவ வேண்டுதல்

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மத்திய மண்டல மாநாடு தஞ்சையில் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்குடி தாலுக்காவில் அமைந்துள்ளது லால்பேட்டை. இவ் ஊரில் 1500 இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன. சுமார் 300 இஸ்லாமிய பெண்கள் கல்லூரி படிப்பு வெளியூர் சென்று படித்து வருகின்றனர்.

லால்பேட்டையை சுற்றி 35 கிராமங்களில் இஸ்லாமியர் வாழ்ந்து வருகின்றனர். இவ் ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் வெளியூர் சென்று கல்லூரி படிப்பு படித்து வருகின்றனர்.

எனவே லால்பேட்டையில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அமைத்தால் பாதுகாப்பான முறையில் பெண் பிள்ளைகள் கல்வி கற்க உதவியாக இருக்கும்.

இதேபோல் விருத்தாசலத்திலிருந்து தினம் 500 பெண்கள் வெளியில் சென்று படித்து வருகின்றனர். எனவே, லால்பேட்டை, விருத்தாச்சலம் ஆகிய ஊர்களில் அரசு பெண்கள் கலைக் கல்லூரி அமைத்து கொடுக்க தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

0 comments:

.