30.3.09

வடக்கு தெரு முஹம்மது யூனுஸ் வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு பக்கிர்லப்பை


முஹம்மது யூனுஸ்அவர்கள் இன்று {30.03.2009} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



தகவல்

சஹாரா டிராவல்ஸ்

24.3.09

லால்பேட்டை அபுதாபி ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு...






லால்பேட்டை அபுதாபி ஜமாத்தின் 17 வது பொதுக்குழுக் கூட்டம் காலிதியாவில் உள்ள மளயாள சமாஜத்தில் 20.03.2009 வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்குப்பின் நடைப் பெற்றது.
கூட்டத்திற்க்கு ஜமாத் தலைவர் ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹசன் தலமை வகித்தார்.

ஹாபிழ் அனீசுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்,செயளாளர் எம்.பக்கீர் முஹம்மது ஆண்டரிக்கை வாசித்தார்,பொருளாளர் ரபீக் நாசர் இரண்டு ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார்,தணிக்கையாளர் சி,எம்.அப்துல் மாலிக் தணிக்கை அறிக்கை வாசித்தார்.தொடர்ந்து ஜமாஅத் செயல் பாடுகள் குரித்து நிர்வாகிகள்கருத்துரை வழங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வை ஹாஜி டி.எ.முஹம்மது ஹசன்.ஹாஜி டி.எம்.ஷேக்தாவூத்,ஏ.ஆர்.அஹமதுல்லாஹ் மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
புதிய தலைவராக ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ்,
துனைத் தலைவராக எஸ்.எம்.அப்துல் அஜீத்,
பொதுச் செயலாளராக ஏ.எஸ்.அப்துல் ரஹ்மன்,
பொருளாளராக எச்.எம்.பலுலுர் ரஹ்மன்,
துனை பொருலாளராக ஹாஜி எம்,எச்.ஹபீபுல்லாஹ்,
துனைச் செயளாளர்களாக,
ஹாபிள் எஸ்.எம்.அனீஸ் அஹ்மத்
ஏ.அப்துல் சலாம்,
எப்.ஹபீபுர் ரஹ்மன்,
எஸ்.ஏ.இக்ராமுல்லஹ்(அலய்ன்)
தணிக்கையாளராக என்.முஹம்மதுஆஷிக்,
கவுரவத் தலைவர்களாக,
டி.ஏ.முஹம்மது ஹசன்.
எம் சுஹைபுதீன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பேரூராட்சி மன்ற தலைவர் ஓ.பி.இம்தாதுல் ஹுசைன்,எஸ்.ஏ.முனவ்வர் ஹுசைன் ஆகியேருக்கு இரங்கல் தெரிவித்தும்,ஊரின் பூரண வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பது,உருப்பினர்களின் சந்தாவை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.புதிய நிர்வாகிகளின் ஏற்புறைக்குப்பின் துஆவுடன் கூட்டம் நிரைவு பெற்றது.
தகவல்:அப்துல் ரஹ்மான் அபுதாபி

8.3.09

லால்பேட்டை சுலைமான் சேட் வீதி அப்துல் ஜப்பார் வஃபாத்

லால்பேட்டை சுலைமான் சேட் வீதி கமால் பாஷா வின் தந்தை ஒல்லி அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று {08.03.2009} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




தகவல்



நஜீர் அஹமது

அபுதாபி

இம்தாதுல் ஹுசைன் அவர்களின் மறைவுக்கு பல்வேறு இடங்களில் இறங்கள் கூட்டம் மற்றும் துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது.

லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், சமுதாய பொதுநல ஊழியருமாகிய ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் அவர்களின் மறைவுக்கு பல்வேறு இடங்களில் இறங்கள் கூட்டம் மற்றும் துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது.

லால்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மன்றம் சார்பாக இறங்கள் கூட்டம் நடைப்பெற்றது.

சைஹுல் மில்லத் இளைஞர் மன்றம் சார்பாக இறங்கள் கூட்டம் நடைப்பெற்றது.

அபுதாபி லால்பேட்டை ஜமாத் சார்பாக அபுதபியில் துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது.

குவைத் லால்பேட்டை ஜமாத் சார்பாக துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது.
.

7.3.09

அபுதாபி லால்பேட்டை ஜமாத் புதிய நிர்வாகி தேர்வு


5.3.09

இம்தாதுல் ஹுசைன் மறைவுக்கு லன்டனில் காயிப் ஜனாஸா தொழுகை

லன்டன், மார்ச்.5-
லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், சமுதாய பொதுநல ஊழியருமாகிய ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் அவர்கள் 04.03.2009 மதியம் 2.45 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மஃபிரத் துக்கு துஆ செய்யும் வகையில் லால்பேட்டை ஜமாத்தினர் சார்பாக இங்கிலாந் தலைநகர் லன்டனில் காயிப் ஜனாஸா தொழுகை தாவா சென்டரில் நடைப்பெற்றது.

மவுலவி இப்றாஹிம் உலவி அன்னாரின் மஃபிரத்துக்கு துஆ செய்தார்கள். S.M. அப்துல் இலியாஸ் அவர்கள் இதர்கான ஏற்ப்பாட்டை செய்தார்கள்.

இம்தாதுல் ஹுசைன் காலமானார் தலைவர் பேராசிரியர் இரங்கல்

லால்பேட்டை, மார்ச்.5-

கடலூர் மாவட்டம் லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், சமுதாய பொதுநல ஊழியருமாகிய ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் சென்னையில் நேற்று கால மானார். அவருக்கு வயது 42.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் உருவாக் கப்பட்ட ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் சிறந்த சமுதாய ஆர்வலர். எம்.ஏ. லத்தீப் கல்வி மற்றும் சமூக அறக் கட்டளையின் அறங்காவ லர். இந்திய தேசிய லீகின் மாநில துணைப் பொதுச் செயலாளராக பொறுப் பில் இருந்தவர்.

உடல் நலம் பாதிக்கப் பட்ட அவர் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு காலமானார்.

அவரது ஜனாஸா நல்லடக்கம் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்க நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், லால் பேட்டை ஜமாஅத்தினர், சர்வகட்சியினர் ஏராள மானோர் பங்கேற்றனர்.

தலைவர் பேராசிரியர் இரங்கல்
இம்தாதுல் ஹுசைன் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
லால்பேட்டை பேரூ ராட்சி தலைவர் ஜனாப் இம்தாதுல் ஹுசைன் திடீரென மரணமுற்ற செய்தி கேட்டு மிகவும் துக்கமும் - வருத்தமும் அடைந்தோம்.

சமூக சேவையில் லால் பேட்டை மக்களின் நன் மதிப்பை பெற்று விளங்கி னார். லால்பேட்டை பேரூ ராட்சி சிறந்த பேரூராட்சி என்று பெயர் பெற்று விருதும், பாராட்டும் பெறு வதற்கு இவரின் நிர்வாகத் திறமை அமைந்திருந்தது.

தேசிய லீகில் இவர் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார் என்றா லும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் வளர்க்கப் பட்டவர் என்பது குறிப் பிடத்தக்கது.

நல்ல சகோதரர் மறை வால் வாடும் அவரது குடும் பத்தாருக்கு நமது அனுதா பங்களையும், இரங்கலை யும் தெரிவிப்போம்.

அன்னாரின் மஃபிரத் துக்கு எல்லோரும் துஆ இறைஞ்சுவோம்.
இவ்வாறு பேராசிரியர் இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி மணிச்சுடர்.

லால்பேட்டை வடக்கு தெரு சரீபா பீவி வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு மதார்கனி அப்துல் ஜமீல்,அப்துல் மாலிம் ஆகியோரின் தாயாரும்


ஹாஜி M.A.பதஹுத்தீன் அவர்களின் மாமியாருமான

சரீபா பீவி அவர்கள் இன்று {05.03.2009} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.





தகவல்

சஹாரா டிராவல்ஸ்

4.3.09

லால்பேட்டை பேருராட்சி மன்ற தலைவர் இம்தாதுல் ஹுசைன் மறைவு

லால்பேட்டை பேருராட்சி மன்ற தலைவர் O.P. இம்தாதுல் ஹுசைன் அவர்கள் இன்று 04 .03.2009 மதியம் 2.45 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நள்ளடக்கம் 05.03.2009 காலை 10 மணிக்கு நடைப்பெரும்.

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் மறைவு

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஓ
.பி. இம்தாதுல் ஹீசைன் மறைவு
லால்பேட்டை பேரூராட்சி மன்றத்தின் துனைத்தலைவராக
5 வருடங்கள், பேரூராட்சி மன்றத்தி்ன் தலைவராக 3 வருடங்கள் சறிப்பாக பணியாற்றிய இயக்க இளவல் ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் அவர்கள் 04.03.2009 புதன் கிழமை 2.45 மனியளவில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை சென்றடைந்தார் என்பதை கேட்டு பெரும் கவலையடைந்தோம்.

மறைந்த சகோதரர்
ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் சின்னஞ்சிறு வயதில் இருந்து சமுதாயப்பணியிலும், தாய்ச்சபை இந்திய யூனியன் முல்லிம் லீக் பணியிலும் சிறப்பாக செயல்பட்டார். லால்பேட்டை வடக்குத் தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றத்தில் செயலாளராக இருந்து சிறப்பாக பணிபுறிந்தார்.

60 ஆன்டுகாலமாக லால்பேட்டை நகரில் ரபிவுல் அவ்வல் மாதத்தில் நடைபெற்று வரும் நபிகள் பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் சீரத்துன் நபவி வரலாற்று சொற்பொழிவு நிகழ்ச்சி சங்கை மிகு உலமாக்களை வைத்து நடத்தப்படுகிறது. 60 ஆன்டுகலாக சிறப்பாக நடைபெற்று வரும் இந்த நிகழச்சியில் 20 ஆன்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றியவர் சகோதரர் ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் அவர்கள்.

லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் இளைஞர் அணியின் செயலாளர்
, நகர முஸ்லிம் லீக்கின் துனை செயலாளர், மாவட்ட முஸ்லிம் லீக்கின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். தேசிய லீக்கின் லால்பேட்டை நகர தலைவராகவும், மாநில பொருளாலராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஈடு செய்ய முடியாத இழப்பாக இவரது மறைவுச் செய்தி கேட்டதும் லால்பேட்டை வட்டாரமே கவலையில் ஆழ்ந்தது.

லால்பேட்டையில் இன்று வியாழன் அனைத்து பாடசாலைக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இவருடைய கப்ரை அல்லாஹீத்தாலா பிரகாசமாக்கி வைப்பானாக.

இவருடைய மறைவால் கவலையில் ஆழந்திருக்கும் இவருடைய குடும்பத்தார், நன்பர்கள், இயக்கத்தினர் அனைவருக்கும் ஸப்ரே ஜமீலை அல்லாஹ் வழங்குவானாக.

இவரின் மறைவுச் செய்தி கேட்டதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாலரும், தமிழகத் தலைவரும் ஆன பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன் அவர்கள் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
.

ஹஜ் பயணம் விண்ணப்பிக்க அரசு அழைப்பு

சென்னை:ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள், வரும் 5ம் தேதி முதல் தமிழக ஹஜ்குழு அலுவலகத்தில் விண்ணப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:

இந்த ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுமாறு மும்பையில் உள்ள இந்திய ஹஜ்குழு தமிழக ஹஜ்குழுவிற்கு தெரிவித்துள்ளது. இப்பயணத்திற்கான விண்ணப்பங்கள் மூன்றாம் தளம், ரோஸிடவர், எண் 13, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை என்ற முகவரியில் உள்ள ஹஜ்குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து வரும் 5ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பயணி ஒருவருக்கு 200 ரூபாய் பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழுவிற்கான நடப்புக் கணக்கு எண் 30683623887ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலுடன் தமிழக ஹஜ்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும். பரிசீலனைக் கட்டணமாக நபர் ஒருவருக்கு செலுத்தப்படும் 200 ரூபாய் திருப்பி தரப்படாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.3.09. குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட புனிதப் பயணிகள், பின் அன்னியச் செலவாணி, விமானக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களுக்கான 30 சதவீதம் தொகையுடன் முழுமையாக விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். மீதமுள்ள 70 சதவீதம் தொகையை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.இவ்வறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2.3.09

2007-2008-ம் ஆண்டில் சிறந்த பேரூராட்சியாக லால்பேட்டை பேரூராச்சி தேற்வு ஆட்சியர் பாராட்டு

கடலூர், பிப். 28: கடலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய பேரூராட்சிகளை, ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.
ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுவதில் 2007-08-ம் ஆண்டில் சிறந்த பேரூராட்சிகளாக லால்பேட்டை, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சிகள், சென்னை போரூராட்சிகளின் ஆணையரால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அவற்றுக்கான பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர், லால்பேட்டை பேரூராட்சித் தலைவர் பி.இம்தாதுல்உசேன், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவர் வி.ஜெயமூர்த்தி மற்றும் பேரூராட்சிகளின் அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார்.

திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திய தொரப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் ராம்குமாருக்கு, பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
.

1.3.09

லால்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்தில் அரசு மகளிர் கலை கல்லூரிகள் நிறுவ வேண்டுதல்

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மத்திய மண்டல மாநாடு தஞ்சையில் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாநாட்டில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்குடி தாலுக்காவில் அமைந்துள்ளது லால்பேட்டை. இவ் ஊரில் 1500 இஸ்லாமிய குடும்பங்கள் உள்ளன. சுமார் 300 இஸ்லாமிய பெண்கள் கல்லூரி படிப்பு வெளியூர் சென்று படித்து வருகின்றனர்.

லால்பேட்டையை சுற்றி 35 கிராமங்களில் இஸ்லாமியர் வாழ்ந்து வருகின்றனர். இவ் ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் வெளியூர் சென்று கல்லூரி படிப்பு படித்து வருகின்றனர்.

எனவே லால்பேட்டையில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி அமைத்தால் பாதுகாப்பான முறையில் பெண் பிள்ளைகள் கல்வி கற்க உதவியாக இருக்கும்.

இதேபோல் விருத்தாசலத்திலிருந்து தினம் 500 பெண்கள் வெளியில் சென்று படித்து வருகின்றனர். எனவே, லால்பேட்டை, விருத்தாச்சலம் ஆகிய ஊர்களில் அரசு பெண்கள் கலைக் கல்லூரி அமைத்து கொடுக்க தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

.