பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பயிற்சி!
பொதுமக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
பொதுமக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
'
காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை கிராமத்தில் உள்ளது பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம். இந்தப் பள்ளியில் சுமார் 3500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
கடந்த நவம்பர் 8ம் தேதி இப்பள்ளிக்கு விடுமுறை நாள். ஆனால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு சிறப்பு வகுப்பு என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்.
சிறப்பு வகுப்பு நடத்துவதில் ஆர்வம் காட்டுவது போல தன்னை காட்டிக் கொண்ட பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் அன்றைய தினம் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கருத்தரங் கம் மற்றும் பயிற்சி முகாம் நடத்த அனுமதித்திருந்தனர்.
இந்த முகாமில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் சுமார் 400க்கும் மேற் பட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வந்திருந்தனர்.
பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ். கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமை நடத்த அப்பகுதியைச் சேர்ந்த தமுமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தை கள் கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.
காலை 10 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்த பள்ளி முன்பு எதிர்ப்பாளர்கள் திரண்டனர். பள்ளி நிர்வாகி அருண்குமாரிடம் சென்று மத துவேஷத்தை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்த அனுமதித்தது தவறு. நீங்கள் எப்படி அவர்கள் பயிற்சி முகாமுக்கு அனுமதிக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். முகாமில் பங்கெடுக்க வந்தவர்களில் ஒரு பிரிவினர், தமுமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை பயங்கர ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினார்கள்.
இதில் தமுமுகவைச் சார்ந்த பாஷா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக் குமார், கமலநாதன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியைச் சேர்ந்த டேவிட், நாராயணன், வெங்கடேசன் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். இதில் பாஷா பாய் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் நால்வர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு, தாக்குதலைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் கோபம் அடைந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிக்கூடத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் வெளியே வந்து கோஷங்களை எழுப்பியவர்கள் மீது கடுமையானத் தாக்குதலை நடத்தினார் கள். இதனால் பொதுமக்கள் அங்குமிங் கும் சிதறி ஓடினார்கள். இதன்காரண மாக அப்பகுதி கலவர பூமியானது.
கலவரத்தைப் பார்த்த பள்ளியில் இருந்த மாணவர் மாணவிகள் அதிர்ச்சி யடைந்தனர். பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கும் பொதுமக்களும் மத்தி யில் பெரும் மோதல் ஏற்பட்டது. அப் பகுதியே கலவரச் சூழலில் உள்ளது என அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் களும் பள்ளிக்கூடம் முன்பு திரள ஆரம்பித்தனர்.
தாக்குதல் சம்பவத்தை அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் பெற்றோரும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயிற்சி முகாமிற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்ததைக் கண்டித்தனர். காவல்துறை அதிகாரிக ளிடம் தமுமுகவினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், மாணவர்களின் பெற்றோர் என அனை வரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை பள்ளி யில் இருந்து உடனே வெளியேற்ற வேண்டும், இல்லையென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு பள்ளி நிர்வாக மும் காவல்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டிவரும் என எச்சரித்தனர்.
இதையடுத்து காவல்துறை அதிகாரி கள் சமுத்திரக்கனி மற்றும் முனியப்பன், வருவாய் கோட்டாட்சியர் முருகைய்யா, தாசில்தார் நடராஜன், ஆய்வாளர் பாலு ஆகியோர் பள்ளி நிர்வாகிகளிடம், ஆர்.எஸ்.எஸ்.காரர்களை உடனே வெளி யேற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்காக இடமளித்த பள்ளி நிர்வாகிகள் மீதும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கமல நாதன் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார். இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மாவட் டச் செயலாளர் விடுதலை செழியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் வழக்கறிஞர் பார்வேந்தன் உட்பட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.
காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் மீராசா தலைமையில் தமுமுகவினர் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியபடி பள்ளியை முற்றுகையிட்ட னர். நகரச் செயலாளர் தாஜுதீன், கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமார் உட்பட பலரும் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வுகளால் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பதற்றம் நிலவியது.
இதனிடையே பள்ளி நிர்வாகி அருண் குமார் உட்பட மூன்று பேர் கைது செய்யப் பட்டனர்.
பெரும் வன்முறையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்களில் 4 பேரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் அமைதியைக் குலைக்கும் சங் பரிவார் அமைப்புகளை ஊக்குவிக்கும் பள்ளிகளை காவல்துறை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும், சம்பந்தப் பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
பெற்றோர்களே உஷார்...
இளம் பருவத்திலேயே மாணவர்களுக்கு மதச்சார்பற்ற கொள்கையையும் மனிதநேய சிந்தனையையும் வளர்க்க வேண்டிய பள்ளி நிர்வாகங்கள் மதத் துவேஷ கருத்துக்களையும், வன்முறையையும் வளர்த்து இந்த தேசத்தின் விடுதலைக்குப் போராடிய தேசத் தலைவர் மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சே கூட்டம் இந்த நாட்டில் தனது செயல் பாடுகளால் மக்கள் விரோத, தேச நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மூன்று முறை தடை செய்யப் பட்ட இயக்கமான ஆர்.எஸ்.எஸ். ஸுக்கு ஆதரவாகவும், மாணவர்கள் மத்தியில் இவ்வியக்கத்தை அறிமுகப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர். பெற்றோர்கள் மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளியைக் கண்காணித்து கல்வித் துறைக் கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் புகார்களை அனுப்ப வேண்டும்.
Thanks TMMK website
0 comments:
Post a Comment