11.11.08

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத்திற்கு மரியாதை

புதுடில்லி : இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான
மவுலானா அபுல் கலாம் ஆசாத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான நேற்று முதல் தேசிய கல்வி தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரும், பாகிஸ்தான் பிரிவினையை ஆதரிக்காத தலைவருமான மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளையொட்டி, முதல் தேசிய கல்வி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள், பட்டிமன்றம், கருத்தரங்கம் போன்றவை நடைபெற்றன.

மேலும், மவுலானா அபுல் கலாம் ஆசாத்தை கவுரவப்படுத்தும் விதமாக, ஜனாதிபதி அஞ்சல் உறை ஒன்றை வெளியிட்டார்.

இவ்விழாவை துவக்கி வைத்து பேசிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பேசுகையில், " நமது கல்வி நிறுவனங்களை பலப்படுத்துவது மற்றும் கல்வியின் தரத்தை உயர்த்துவதே, தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம். நம் கல்வி பயிற்று முறையில் இன்னும் முன்னேற்றம் தேவை' என்றார்.

0 comments:

.