1.11.08

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள்


6. யா அல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக! என் உணவில் நீ அருள்புரிவாயாக! கல் நெஞ்சம், பொடுபோக்கு மற்றும் ஏழ்மையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் இறைநிராகரிப்பு பாவச்செயல் பிரிவை ஏற்படுத்துதல் மற்றும் பிறர் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்ற முகஸ்துதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். செவிடு, குருடு, உறுப்புக்கள் அழுகிவிடும் நோய் இன்னும் கெட்ட (எல்லா) நோய்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.


7. யா அல்லாஹ்! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவாயாக! அதனைத் தூய்மைப் படுத்துவாயாக! நீயே அதைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன்! அதனுடைய பொறுப்பாளனும், தலைவனும் நீயே! பிரயோஜனம் இல்லாத அறிவு, பயப்படாத உள்ளம், திருப்தியடையாத மனம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.


8. யா அல்லாஹ்! நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும், நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியத்தன்மை (என்னை விட்டு) மாறுவதை விட்டும், உனது திடீர் தண்டனையை விட்டும், உன்னுடைய சகல கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.


9. யா அல்லாஹ்! இடிந்து விழுந்தோ, உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (விஷ ஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளத்தில் முத்திரையிடப்படும் அளவுக்கு பேராசை ஏற்படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.


10. யா அல்லாஹ்! கெட்ட நோய்கள், கெட்ட ஆசைகள், கெட்ட செயல்கள் இன்னும் வெறுக்கத்தக்க குணங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். இன்னும் கடன்கள் அதிகரிப்பதிலிருந்தும், மனிதர்களின் ஆதிக்கத்திலிருந்தும், விரோதிகளின் கேலி கிண்டல்களிலிருந்தும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.

தொடரும்...


0 comments:

.