28.11.08
சங்பரிவார்க் கும்பலும் வெடிகுண்டுக் கலாசாரமும். கி.வீரமணி உரை {வீடியோ}
டிச,6- அநீதிக்கு எதிராக ஆர்த்தெழுவோம்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பு...
டிச,6- ரயில் மறியல் போராட்டம், த.மு.மு.க, அழைப்பு...
டிசம்பர் 6-அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் வேண்டாம்
அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் வேண்டாம். அரசியல்
வலிமைபெற உறுதிமொழி எடுப்போம் வாரீர்!
சுதந்திரத்தின் பெருமை அடிமைகளுக்கு தெரிவதில்லை. ஆகையால் தான் அவர்கள் அடிமைகளாக இருக்கின்றனர் என்றான் கலில் ஜிப்ரான். ஜனநாயகத்தில் அரசியல் வலிமை தெரியாத காரணத்தினால் நீங்கள் அரசியல் அடிமைகளாக வாழ்க, ஒழிக என கோஷமிட்டு மாறி மாறி ஓட்டளித்து உருமாறி நீற்கிறீர்கள். 3ல் 2பங்கு பாராளுமன்றத்தில் எப்பொழுது நுழைகிறமோ அப்பொழுது பாபர் பள்ளி இடத்தில் கோயில் கட்டுவேபம் என்கிறார்கள். பி.ஜே.பி சங்பரிவாரக்கூட்டம்.
நீயோ அரசியலை புறக்கணித்து விட்டு பாபர் பள்ளியை மீட்க ரயிலை மறிப்போம், வான் ஊர்தியை மறிப்போம் என வெற்று கோஷ\மிட்டு கூடிக், கூடிக் களைகிறாய். சோடாபாட்டிலை திறந்தவுடன் குப் என்று அடிக்கும் சப்தத்தைப் போன்று டிசம்பர் 6 வந்தால் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் என்று சடங்கைப்போன்று கோஷமிட்டு ஆடி அமர்ந்து விடுகிறாய்.
இதயம் வெடிக்கிறது. சமுதாய இளைஞனே இது அல்ல தீர்வு. இங்கும், அங்கும் மாறி மாறி எத்தனை நாள் இரவல் அரசியலில் சமூகத்தை அடகு வைக்கப்போகிறாய். மார்க்கத்தையும், அரசியலையும் குழப்பி விரக்தியின் விளிம்பிற்கு இளைஞனை அழைத்துச்சென்றது போதும். கொடுக்காத இடஒதுக்கீட்டிற்கு நன்றி பாராட்டி கூனிக்குறுகி நின்றது போதும். இளைஞனே சிந்தி.
எத்தனை கலவரங்கள், எத்தனை உயிர் உடமை இழப்புக்கள், எத்துனை மனித உரிமை இயக்க குற்றச்சாட்டுகளின் சான்றுகள், எத்தனை விசாரணைக் கமிஷன்களின் ரிப்போர்ட்டுகள், இளைஞனே அரசியலை புறக்கணித்து விட்டு நீதி கேட்கிறாயே? நீதி கிடைத்ததாக வரலாறு உண்டா? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு உண்டா? இந்திய தேசத்தில் நிமிர்ந்து நிற்கவேண்டிய நீதிமன்றம் குனிந்து நிற்கிறது. குனிந்து நிற்கவேண்டிய குற்றவாளி நிமிர்ந்து நிற்கிறான். ஆம் பாபர் பள்ளியை இடித்த குற்றவாளிகள் அரசியலில் அதிகாரம் பெற்றதால் சிவப்பு நிற கம்பளத்தில் உலா வருகிறார்கள். நாங்கள் தாம் இடித்தோம் பள்ளியை என்று மார்தட்டுகிறார்கள்.
இன்றோ பள்ளி இடிப்பதற்கு துனை நின்ற காங்கிரஸிற்கு மத்தியில் ஆதரவு, பி.ஜே.பி யோடு கைகோர்த்து ஐந்து ஆண்டு பதவி சுகம் அனுபவித்த தி.மு.க விற்கு தமிழகத்தில் ஆதரவு உன் கோமாளி தனங்களை கணக்கிட்டால் இன்னொரு இமயமலையை உருவாக்கிவிடலாம். குதிரை போனபிறகு லாடத்தை தேடும். முட்டாள்களைப்போல் தேர்தல் முடிந்து விட்ட பிறகு நாங்களும் அரசியலுக்கு வருகிறோம் என்று குழப்பத்தை அறங்கேற்ற வருகிறாய். ரயிலில் ஏறுவதால் ரயில் நமக்கு சொந்தமாகி விடுவது இல்லை. ரயிலை மறிப்பதால் பாபர் பள்ளி மீண்டு விடுவது இல்லை. திட்டமிட்டு காலத்திற்கேற்ற செயலை செய்ய தவறுகிற சமுதாயம் அழிவை நோக்கி செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.
பாபர் பள்ளி குஜராத், கோயம்புத்தூர்,முத்துப்பேட்டை என அநீதி தொடர்கிறது. வல்லவன் வைத்ததே வாய்க்கால் என்ற கூற்றுக்கு ஏற்ப அரசியலில் சிலர் ஆதிக்கம் பெற்றதால் உன்னை அசைக்கிறார்கள். காரணம் நீ அரசியல் அதிகாரம் பெறாததுதான். போதும் இளைஞனே பூக்கடையில் போர்வாள் கேட்கும் இழிநிலையை இதோடு நிறுத்திக்கொள். குறத்தி கூட்டத்தை கூட்டி வித்தை காட்டி களையும் செயலை நிறுத்திக்கொள். நம் உணர்வுகளுக்கு எண்ணக் குமுறல்களுக்கு இதயப் பொறுமல்களுக்கு வடிவம் கொடுத்திட, சட்ட மன்றம், பாராளுமன்றத்தில் சொந்த சின்னத்தில் நின்று நிமிர்ந்திட துயரத்தில் இருந்து ஞானம் பெற்றிட டிசம்பர் 6ல் IDMKல் உறுதிமொழி ஏற்ப்போம். உடன்பிறப்பே, கழிக்க முடியாத கடன் பிறப்பாய் வீழ்ந்த சமுகத்தை அரசியலில் தூக்கி நிறுத்திட சமுகத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் குள்ளநரிகளை கூண்டோடு விரட்டிட, தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயலாற்றிட, காட்டாற்று வெள்ளமாய் கடமையாற்றிட புறப்படுவீர் IDMK யை நோக்கி. பிறக்கட்டும் உன் உழைப்பில் அரசியல் வெற்றி. துடிக்கட்டும் ஜால்ரா போடும் சமுதாய துரோகிகள். துலங்கட்டும் உன் வெற்றி. தொடர்பு கொள்வீர். உன் பங்களிப்பை சமுகத்திற்கு பறைசாற்ற. IDMKல்
இவண் :
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு தொடர்புக்கு : 9790318182, 9344510369
27.11.08
பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்டக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அயோத்தி சென்று ஆர்ப்பாட்டம்...
இதற்காக பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி, சென்னையில் இருந்து தனி சிறப்பு ரெயிலில் 1,000 பேர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் அயோத்தி செல்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள விடுதலைச் சிறுத்தை கட்சியினர் உள்பட, முஸ்லிம்களும் பலர் அயோத்தி செல்கின்றனர்.
26.11.08
லால்பேட்டை வடக்கு தெரு மெஹராஜ் பேகம் வஃபாத்
தகவல்:
சஹாரா டிராவலஸ்
லால்பேட்டை
24.11.08
தப்பித்தவறிக் கூட மவுசால் க்ளிக் பண்ணிடாதீங்க!
எந்த ஒரு வீடியோவையும் டிவிடிக்கு மாற்ற : DVD Flick
வக்ஃபு இடத்தில் அறிவாலயமா? வெட்ககேடு!! வெட்ககேடு!! - IDMK Interview in JUVEE
தமிழகத்தை கலக்கிய சுவரொட்டி
23.11.08
ஜிமெயில் பேக்-அப்
சி.எஸ்.எஸ். மென்னூல் இலவசம்
வேலைவாய்ப்புத் தகவல்கள் - அறிமுகம்
தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம். (அல் குர்ஆன் 4 : 114)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக வேலை வாய்ப்பு தகவல்களை வழங்குவதற்காக இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் வேலை வாய்ப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த தளத்தை உரிமையுடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பிறருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே இந்த முயற்சியை எடுத்துள்ளோம். எனவே நல்லெண்ணம் கொண்ட அனைவரும் இது சம்பந்தமாக உங்களால் முடிந்த அளவு எங்களோடு ஒத்துழைத்து பிறருக்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எந்த பகுதியில் வேலை வாய்ப்புகள் இருப்பினும் உரிய தொடர்பு மற்றும் விபரங்களை அளிப்பதாயின் உடனுக்குடன் அந்த தகவலை இதில் பதிவு செய்வோம்.
குறிப்பிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டால் அந்தந்த பதிவில் அதன் விபரங்களை வெளியிட்டு தெளிவுபடுத்துவோம் - இன்ஷா அல்லாஹ்.
19.11.08
பழ. நெடுமாறன் தலைமையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை கண்டித்து இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 18.11.2008 அன்று மாலை 3 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திரு. சி. பசுமலை, தமிழர் தேசிய இயக்கம் தலைமை வகித்தார்கள். இந்திய தேசிய லீக்கை சேர்ந்த திரு. சாகுல் ஹமீது , தமிழ்நாடு உடல் ஊணமுற்றோர் பேரவையை சேர்ந்த திரு. அப்துல் நஜிமுதீன், திரு. ம. காமராஜர், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் திரு. பீட்டர் வளவன், கவிஞர். திரு. முகவை அரசுமனி, நகர் மலர் செய்தியாளர் திரு. என். சொர்னவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய தேசிய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,இந்திய தேசிய லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் , அமைப்புகள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், தமிழர் தேசிய இயக்க பொதுச் செயளாலர் திரு. கா. பரந்தாமன், தியாகி இமானுவேல் பேரவை பொது செயளாலர் திரு. சந்திரபோஸ், விடுதலை சிறுத்தைகள் மு. குணவேந்தன், செ.அ.தொ.நல சங்கம் ம. நாகராஜன், ம.ச.இ.க செயளாலர் குணசேகரன், வே. முருகேசன், தமிழ் பாதுகாப்பு பேரவை தலைவர் திரு. நாகேஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயளாலர் திரு. தங்கராசு, மனித உரிகைமள் கழகம் செந்தில் விஸ்வனாத், வைகை பாசன விவசாய சங்கம் மாநில செயளாலர் திரு. மு. மதுரை வீரன், விடுதலை சிறுத்தைகள் சிவகங்கை மாவட்ட செயளாலர் திரு. ஆல்பர்ட் (எ) நந்தன், ஆதி தமிழர் பேரவை சுகுமாறன், சி.பி.ஐ ஒன்றிய செயளாலர் சுப்பிரமனியன், சமத்துவ மக்கள் கட்சி வேலுச்சாமி, கோ. இராமசாமி, தோலூர் பஞ்சாசரம், இந்திய தேசிய மக்கள் கட்சியின் திரு. ஜஹாங்கீர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் ஐயா. திரு. பழ. நெடுமாறன் அவர்கள் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து பேருரை நிகழ்த்தினார்கள். நிகழச்சியின் இறுதியில் செ.அ.தெ.ந.மு.ச. தலைவர் திரு. பா. ஞானமுத்து அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். பின்னர் இராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஐயா பழ. நெடுமாறன் அவர்களோடு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.
தமிழ் சிந்தனையாளர் திரு. சை. செளந்தரபாண்டியன், தமிழிய சட்ட நிறுவனம் திரு. ப.பா. தியாகராஜன் ஆகியோர் ஒருங்கினைத்திருந்தனர்.
16.11.08
The useful information for Haji’s
Telephone Numbers at Makah
Indian Haj Office,
IN FRONT OF AJYAD MAKKAH HOTEL, AJYAD
MAKKAH AL-MUKARRAMA (P.O. BOX NO. 5781].
Phone: 009662 5759034, 5758231, 5758209, 5758208.
IMAM M. HUSAIN,
In-charge, Indian Haj Mission, Makkah. Phone:
009662-5758216
NADEEM SIDDIQUI,
Assistant Welfare Indian Haj Mission, Makkah. Phone:
009662-5758209.
MEDICAL OFFICER,
In-charge, Indian Medical Mission, Makkah. Phone:
009662-5758209, 5758214
Haram Shareef Police Station 02- 575 0200
Police Station near Haram Shareef (Ajyad) 02- 534 1165
Misfalah Police Station 02- 574 1283
Qararah Police Station 02- 574 6808
Haram Sharief Madinah Al-Munawwrah 009664-823 0930
INDIAN HAJ OFFICE, Madinah Al-Munawwrah,
Behid National Company, Near Al-Quds-Hotel,
Sitteen Street, Madinah-AI-Munawwarah
Phone: 009664 8380025, 8344715 Fax: 8387549
PILGRIM RECEPTION CENTRE, Hijra Road
Phone: 009664 8261941, Fax: 8264096.
CONSULATE GENERAL OF INDIA
Building of Bugshan & Brothers, Next to Al-Mira Carpets,
Sharafia Dist, Madinah Road, PO Box 952, Jeddah- 21421
Phone: 0096626520104, 6520112, 6517581
Fax: 009662-6533964
DR. AUSAF SAYEED, Consul General 009662-6520072
DR.SUHELAJAZKHAN, Consul (Haj) 009662-6520084 (Direct)
MR. D. K. SRIVASTAVA, Vice Consul (Haj) 009662-6510514
HAJ SECTION 009662-6533032
NEAR HARAM SHAREEF, MAKKAH (ISD Code -009662)
· Ajyad Hospital, Ajyad Phone: 5730070
· King Abdul Aziz Hospital, Zahir Phone: 5442400
· Noor Hospital, Azizia Junubia Phone: 5665000
· Hera General Hospital, Taneim Phone: 5201604.
· King Faisal Hospital, Shisha Phone: 5566411
· Ministry of Health, Mohalla Zahir Opp. Jawazat,
· Makkah Phone: 5457774.
MADINAH AL-MUNAWWARAH (ISD Code-009664)
· Director of Health, Dr. Abdul Qader Ahmed
· Al-Tayyeb, Matar Road. Phone: 8370600.
· King Fahad Hospital, Tabuk Phone: 8460145 (Fax) 8460900.
· Ohud Hospital, University Road Phone: 8460016
· Meeqat Hospital, Meeqat Road Phone: 8237892.
· Chest Hospital, Qurban Road Phone: 8266639.
· Children & Maternity Hospital,
· Sitteen Road.Phone: 8361000.
· Al-Ansar Hospital, Behind Masjid Ijaba, Sitteen Road. Phone: 8361848.
Thanks
Meerasan Ahamed
15.11.08
லால்பேட்டை மர்ஹூம் ஹபீபுற்றஹ்மான் மனைவி வஃபாத்
14.11.08
சவூதி அரேபியா நாட்டில் எழுத படிக்கத் தெரியாத வெளிநாட்டவர்கள் வேலை செய்ய தடை
படிப்பறிவில்லாத வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என்றும் அங்குள்ள நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைக்கு உள்துறை மந்திரியும், இளவரசருமான பிக்அப்துல்லா ஒப்புதல் அளித்துள்ளார்.
சவூதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிக்கிக் கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத வெளிநாட்டவர்கள் என்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
படிப்பறிவில்லாத அப்பாவி வெளிநாட்டு தொழிலாளர்களை சில கும்பல் குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவதை தடுக்கவே இந்த நடவடிக்கை.
.
12.11.08
இந்திய மாணவர்களுக்காக மைக்ரோசாப்ட்டின் இலவச மென்பொருட்கள்
* Windows Standard Server, XNA Game Studio 2.0 (with 12-month trial academic subscription to the XNA Creators Club)
புதிய Video Chat ஜிமெயில் வழியாக
11.11.08
காய்கள், பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா?
பீட்ரூட்: ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா அபுல் கலாம் ஆசாத்திற்கு மரியாதை
மவுலானா அபுல் கலாம் ஆசாத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான நேற்று முதல் தேசிய கல்வி தினம் கொண்டாடப்பட்டது.
தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இலவச தையல் மெஷின்
ஷாகுல்அமீது, அப்துல்சலாம், உசேன், கருப்புசாமி, தங்கம்வேல்முருகன் முன்னிலை வகித்தனர். செயலாளர் அப்துல்லா வரவேற்றார்.
"ஏழைக்கு உதவுங்கள்' தலைப்பில் இமாம் முஹம்மத் தய்யூப் விளக்கி பேசினார். தொடர்ந்து இரண்டு ஏழை குடும்பங்களுக்கு தையல் மெஷின்களை சம்சுதீன் வழங்கினார்.
ராஜாமுகம்மது, சாதிக், இப்ராஹிம், தங்கதுரை, தீன், தாவூது உட்பட பலர் பங்கேற்றனர். பொருளாளர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.
பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத பயிற்சி!
பொதுமக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்
கடந்த நவம்பர் 8ம் தேதி இப்பள்ளிக்கு விடுமுறை நாள். ஆனால் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு சிறப்பு வகுப்பு என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்.
சிறப்பு வகுப்பு நடத்துவதில் ஆர்வம் காட்டுவது போல தன்னை காட்டிக் கொண்ட பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் அன்றைய தினம் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கருத்தரங் கம் மற்றும் பயிற்சி முகாம் நடத்த அனுமதித்திருந்தனர்.
இந்த முகாமில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்தும் சுமார் 400க்கும் மேற் பட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வந்திருந்தனர்.
பள்ளிக்கூடத்தில் ஆர்.எஸ்.எஸ். கருத்தரங்கம் மற்றும் பயிற்சி முகாமை நடத்த அப்பகுதியைச் சேர்ந்த தமுமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தை கள் கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.
காலை 10 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்த பள்ளி முன்பு எதிர்ப்பாளர்கள் திரண்டனர். பள்ளி நிர்வாகி அருண்குமாரிடம் சென்று மத துவேஷத்தை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்த அனுமதித்தது தவறு. நீங்கள் எப்படி அவர்கள் பயிற்சி முகாமுக்கு அனுமதிக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். முகாமில் பங்கெடுக்க வந்தவர்களில் ஒரு பிரிவினர், தமுமுக, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை பயங்கர ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கினார்கள்.
இதில் தமுமுகவைச் சார்ந்த பாஷா, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக் குமார், கமலநாதன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியைச் சேர்ந்த டேவிட், நாராயணன், வெங்கடேசன் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கண்மூடித்தனமான தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். இதில் பாஷா பாய் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் நால்வர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை யில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு, தாக்குதலைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் கோபம் அடைந்த ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிக்கூடத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் வெளியே வந்து கோஷங்களை எழுப்பியவர்கள் மீது கடுமையானத் தாக்குதலை நடத்தினார் கள். இதனால் பொதுமக்கள் அங்குமிங் கும் சிதறி ஓடினார்கள். இதன்காரண மாக அப்பகுதி கலவர பூமியானது.
கலவரத்தைப் பார்த்த பள்ளியில் இருந்த மாணவர் மாணவிகள் அதிர்ச்சி யடைந்தனர். பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கும் பொதுமக்களும் மத்தி யில் பெரும் மோதல் ஏற்பட்டது. அப் பகுதியே கலவரச் சூழலில் உள்ளது என அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் களும் பள்ளிக்கூடம் முன்பு திரள ஆரம்பித்தனர்.
தாக்குதல் சம்பவத்தை அறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
மாணவர்களின் பெற்றோரும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயிற்சி முகாமிற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்ததைக் கண்டித்தனர். காவல்துறை அதிகாரிக ளிடம் தமுமுகவினர், கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், மாணவர்களின் பெற்றோர் என அனை வரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை பள்ளி யில் இருந்து உடனே வெளியேற்ற வேண்டும், இல்லையென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு பள்ளி நிர்வாக மும் காவல்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டிவரும் என எச்சரித்தனர்.
இதையடுத்து காவல்துறை அதிகாரி கள் சமுத்திரக்கனி மற்றும் முனியப்பன், வருவாய் கோட்டாட்சியர் முருகைய்யா, தாசில்தார் நடராஜன், ஆய்வாளர் பாலு ஆகியோர் பள்ளி நிர்வாகிகளிடம், ஆர்.எஸ்.எஸ்.காரர்களை உடனே வெளி யேற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்காக இடமளித்த பள்ளி நிர்வாகிகள் மீதும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த கமல நாதன் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்தார். இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மாவட் டச் செயலாளர் விடுதலை செழியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் வழக்கறிஞர் பார்வேந்தன் உட்பட ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.
காஞ்சி மாவட்ட துணைச் செயலாளர் மீராசா தலைமையில் தமுமுகவினர் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியபடி பள்ளியை முற்றுகையிட்ட னர். நகரச் செயலாளர் தாஜுதீன், கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமார் உட்பட பலரும் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வுகளால் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு பதற்றம் நிலவியது.
இதனிடையே பள்ளி நிர்வாகி அருண் குமார் உட்பட மூன்று பேர் கைது செய்யப் பட்டனர்.
பெரும் வன்முறையில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்களில் 4 பேரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் அமைதியைக் குலைக்கும் சங் பரிவார் அமைப்புகளை ஊக்குவிக்கும் பள்ளிகளை காவல்துறை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும், சம்பந்தப் பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
பெற்றோர்களே உஷார்...
இளம் பருவத்திலேயே மாணவர்களுக்கு மதச்சார்பற்ற கொள்கையையும் மனிதநேய சிந்தனையையும் வளர்க்க வேண்டிய பள்ளி நிர்வாகங்கள் மதத் துவேஷ கருத்துக்களையும், வன்முறையையும் வளர்த்து இந்த தேசத்தின் விடுதலைக்குப் போராடிய தேசத் தலைவர் மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சே கூட்டம் இந்த நாட்டில் தனது செயல் பாடுகளால் மக்கள் விரோத, தேச நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு மூன்று முறை தடை செய்யப் பட்ட இயக்கமான ஆர்.எஸ்.எஸ். ஸுக்கு ஆதரவாகவும், மாணவர்கள் மத்தியில் இவ்வியக்கத்தை அறிமுகப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டும் வருகின்றனர். பெற்றோர்கள் மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபடும் பள்ளியைக் கண்காணித்து கல்வித் துறைக் கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் புகார்களை அனுப்ப வேண்டும்.
Thanks TMMK website
10.11.08
9.11.08
உற்சாகம் தரும் நட்பு
8.11.08
சிறுபான்மை இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி!
அக் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்!!
வேலையில்லாத சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மாவட்ட தலைநகரங்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி நிலையங்கள் மூலமாக தொழிற்பயிற்சி வழங்க உள்ளது.
இப்பயிற்சியில் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அண்ட் நெட் ஒர்க்கிங், சி.சி. பிளஸ், பிளஸ், டி.டி.பி. டேலி வித் எம்.எஸ். ஆபீஸ் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும்.
10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள் தங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருந்தால் இப்பயிற்சியில் சேர தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
எனவே, விருப்பம் உள்ள சிறுபான்மையின இஸ்லாமிய இளைஞர்கள் தங்கள் விண்ணப்பத்தை வெள்ளைத்தாளில் எழுதி அதனுடன் சாதிச் சான்றிதழ் நகல், 10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் அல்லது கூடுதல் கல்வித் தகுதி இருந்தால் அதற்குரிய சான்றிதழ்கள், வருமான சான்றிதழ் நகல், பள்ளி அல்லது கல்லூரி மாற்று சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து தபாலில்
தமிழ்நாடு சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
5வது தளம்,
807, அண்ணாசாலை,
சென்னை.
என்ற முகவரிக்கு வருகிற 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தபால் உறையின் மேல் பகுதியில் பயிற்சியின் பெயர், பயிற்சி பெற விரும்பும் ஏதேனும் ஒரு பாடத்தினை மட்டும் குறிப்பிட வேண்டும். இந்த வாய்ப்பை முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் சுக்கூர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Thanks: IUML website
7.11.08
லால்பேட்டை வடக்கு தெரு ஹாஜி முஹம்மது பாருக் தாயார் வஃபாத்
ஒரு இணையத்தளத்தையே உள்ளங்கையில் எடுத்துச் செல்வது எப்படி?
இந்த மென்பொருளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த இணையத்தளத்தை அப்படியே இறக்கி, யு.எஸ்.பியில் பதிந்து உள்ளங்கையில் எடுத்துச்செல்லலாம். சாத்தியமே.
எல்லாத்துக்குமே மென்பொருட்களா?
What is WebZIP?
Using WebZIP you can:
Download and save an entire Web site.
Download and save particular sections of a Web site you require.View saved web content offline.
Easily compile downloaded content into compressed HTML-Help (.chm) files which automatically incorporate a Table of Contents and Full Text Search capabilities.Compress saved web content into a single zip file.Conveniently move a saved website to another computer.
Email a saved Web to a colleague.
Create your own "Personal Intranet" where web information is quickly and readily available from your local hard disk.
WebZIP can save you a lot of time and money, since viewing a website offline is much faster than clicking from link to link whilst online. In addition, WebZIP can download up to 16 pages or images simultaneously, thus large amounts of information can be retrieved in very little time.
Browse offline anywhere, anytime at breakneck speeds
Save your sites to HTML-Help (CHM)Zip up the WebSave valuable time and money
Capture only the information you want
http://www.spidersoft.com/webzip/downloads.asp
Thanks: Tamil 2000
6.11.08
லால்பேட்டை தொடர் பயான் ஆடியோ
லால்பேட்டை நகர ஜமாத்துல் உலமா, புதுபள்ளி ஜமாத்,மற்றும் தீனுல் இர்சாத் நற்பனி மன்றம் சார்பாக 19.10.2008 ல், நடைப்பெற்ற தொடர் பயான்.
மவ்லவி ஹாஃபிழ் அல்ஹாஜ் A. நூருல் அமீன் மன்பஈ
துணை முதல்வர். J.M.A. அரபுக் கல்லூரி லால்பேட்டை
PLAY - பாகம்,1
மவ்லானா மவ்லவி அபுதாஹிர் பாகவிபேராசிரியர் நூருல் இஸ்லாம் அரபி கல்லூரி சேலம்.
5.11.08
லால்பேட்டை ஹாஜி அப்துல் வஹாப் வஃபாத்
தகவல்:
அப்துல் ரஹ்மான்
அபுதாபி
1.11.08
தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரார்த்தனைகள்
7. யா அல்லாஹ்! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்துவாயாக! அதனைத் தூய்மைப் படுத்துவாயாக! நீயே அதைத் தூய்மைப் படுத்துபவர்களில் மிகச் சிறந்தவன்! அதனுடைய பொறுப்பாளனும், தலைவனும் நீயே! பிரயோஜனம் இல்லாத அறிவு, பயப்படாத உள்ளம், திருப்தியடையாத மனம் மற்றும் ஏற்றுக் கொள்ளப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
8. யா அல்லாஹ்! நான் செய்த மற்றும் செய்யாத கெட்ட செயல்களிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். யா அல்லாஹ்! உன் அருட்கொடைகள் (என்னைவிட்டு) நீங்குவதை விட்டும், நீ (எனக்கு) அளித்த ஆரோக்கியத்தன்மை (என்னை விட்டு) மாறுவதை விட்டும், உனது திடீர் தண்டனையை விட்டும், உன்னுடைய சகல கோபங்களை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
9. யா அல்லாஹ்! இடிந்து விழுந்தோ, உயரத்திலிருந்து கீழே விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். மரண நேரத்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன். (விஷ ஜந்துக்களால்) கொட்டப்பட்டு இறப்பதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். உள்ளத்தில் முத்திரையிடப்படும் அளவுக்கு பேராசை ஏற்படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.