29.5.09

TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 30 - 31) கல்வி சேவை நிகழ்சிகள்

இராமநாதபுரம்
.இராமநாதபுரத்தில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம் என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள் : மே 30 - சனி கிழமை- நேரம் : காலை 9: 30 மணி முதல் மதியம் 1 மணி
.
சிறப்புரை : S. சித்திக் M.Tech
( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
.
இடம் : TNTJ மர்கஸ், AKS காம்ப்லெக்ஸ், (அரவிந்த் மருத்துவமனை எதிரில்), இராம்நாட், இராமநாதபுரம் மாவட்டம்
தொடர்பிற்கு : 9894652633, 9994588737
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ. இராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணி.

முத்து பேட்டை


முத்து பேட்டையில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள்: மே 30 - சனி கிழமை- நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி
.
சிறப்புரை J.முஹமது தஸ்தகீர். B.E.
.
இடம் : TNTJ மர்கஸ், நூர் பள்ளிவாசல் தெரு, முத்து பேட்டை,
தொடர்பிற்கு : 9094283904
மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும்
கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது
TNTJ. திருவாரூர் மாவட்ட மாணவர் அணி.
.
கும்பகோணம்
.

கும்பகோணத்தில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள்: மே 31-ஞாயிற்று கிழமை-நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை
.
சிறப்புரை : S. சித்திக் M.Tech
( மாநில மாணவர் அணிச் செயலாளர்)
.
இடம் : TNTJ மர்கஸ், No: 193, ஜான் செல்வராஜ் நகர்
(கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில்) , கும்பகோணம்
தொடர்பிற்கு : 9944338847
மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ தஞ்சை (வடக்கு) மாவட்ட மாணவர் அணி.

திண்டிவனம்


திண்டிவனதில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்
என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?
நாள்: மே 31 - ஞாயிற்று கிழமை- நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி
.
வரைசிறப்புரை : J.முஹமது தஸ்தகீர். B.E.
.
இடம் : TNTJ மர்கஸ், அரவப்பாக்கம், திண்டிவனம்
தொடர்பிற்கு : 9865271550
மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ விழுப்புரம் மாவட்ட மாணவர் அணி.
.

23.5.09

தேனி மாவட்டம் கம்பம், மதுரையில் கல்வி கருத்தரங்கம் TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 23 - 24) கல்வி சேவை நிகழ்சிகள்

தேனி மாவட்டம் கம்பம், மதுரையில் கல்வி கருத்தரங்கம் TNTJ மாணவர் அணியின் இந்த வார (May 23 - 24) கல்வி சேவை நிகழ்சிகள்.

தேனி மாவட்டம் கம்பத்தில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம் என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : மே 23 - சனி கிழமை- நேரம் : காலை 9 மணி.

சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : வானியார் கல்யாண மண்டபம், கம்பம் மெட்டு ரோடு, கம்பம்,தேனி மாவட்டம்.

மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன்அழைக்கிறது TNTJ. தேனி மாவட்ட மாணவர் அணி.

மதுரையில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்.

மதுரையில் TNTJ மாணவர் அணியின் கல்வி கருத்தரங்கம்என்ன படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ?

நாள் : மே 24 - ஞாயிற்று கிழமை- நேரம் : காலை 10 மணி.

சிறப்புரை : S. சித்திக் M.Tech ( மாநில மாணவர் அணிச் செயலாளர்)

இடம் : TNTJ மர்கஸ், வில்லாபுரம், சந்திய மோட்டார்ஸ் அருகில், மதுரை.

மாணவ, மாணவிக,ள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன்அழைக்கிறது TNTJ மதுரை மாவட்ட மாணவர் அணி.

தொடர்பிற்கு :9976881407,9442578628,

21.5.09

சகோதரர்களே இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளவும்.

Tamil Nadu Government Conducting
FREE MEDICAL COURSE
For Muslims and Christians Only
Courses:
1.CT-Scan Technician
2.Endoscopy
3.ECG-Technician
4.Opthalmic Asst
5.ICU Asst
Duration: 6 Months and 1 year courses
Contact:
Sri Balaji Hospital,
68,13th merku st,
M.K.B.. Nagar,
Chennai
044-25521387, 9840097201
Qualification: S.S.L.C, +2 Pass
Course Fee completely free
.

20.5.09

TNTJ மாணவரணி கல்வி விழிப்புணர்வு பிரச்சார வீடியோ

TNTJ மாணவரணி கல்வி விழிப்புணர்வு பிரச்சார வீடியோ பாகம் 1

TNTJ மாணவரணி கல்வி விழிப்புணர்வு பிரச்சார வீடியோ பாகம் 2

TNTJ மாணவரணி கல்வி விழிப்புணர்வு பிரச்சார வீடியோ பாகம் 3

TNTJ மாணவரணி கல்வி விழிப்புணர்வு பிரச்சார வீடியோ பாகம் 4

.

10.5.09

பின்னத்தூர் அமீர்சாப் சம்சுதீன் ஹாஜியார் வஃபாத்

பின்னத்தூர் உஸ்மான் தெருவை சேர்ந்த சிதம்பரம் கலாம் கல்வி சங்க தலைவர், லால்பேட்டை சிங்கார வீதி எம். ஏ. அப்துல் ரஜாக் அவர்களின் சம்பந்தியுமாகிய அமீர்சாப் எஸ்.சம்சுதீன் ஹாஜியார் இன்று காலை (10/05/2009) 6 மணியளவில்


தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

26.4.09

லால்பேட்டையில் தொல்.திருமாவலனை ஆதரித்து நடைபெற்ற கூட்டனி கட்சிகளின் தேர்தல் பிரசாரம்

லால்பேட்டையில் ஜெ.எம்.ஏ.அரபுக்கல்லுரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.கூட்டனி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவலனை ஆதரித்து நடைபெற்ற கூட்டனி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டதில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம் உரையாற்றுகிறார்.

இந்நிகழ்ச்சிக்கு முஸ்லிம் லிக் மாவட்ட தலைவர் அப்துல் கபார் தலைமை வகித்தார் முஸ்லிம் லிக் மாநில செயலாளர் தளபதி ஏ.சபிகுர்ரஹ்மான் நகர தலைவர் கே.ஏ.முஹமது மாவட்ட துணைசெயலாளர் அமானுல்லா மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லிக்,தி.மு.க, தேசியலிக் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர்.

12.4.09

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட்டம்..!

லால்பேட்டை,ஏப் 12
லால்பேட்டையில் இன்று (12.04.2009)) நடைபெற்ற கடலூர் மவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

இந்த கூட்டத்தில் கடலூர்,விருதாச்சலம், சிதம்பரம்,நெல்லிக்குப்பம்,பரங்கிப்பேட்டை,மங்கலம்பேட்டை,ஆயங்குடி,புவனகிரி,முட்லூர்,கனகரப்பட்டு உள்ளிட்ட ஊர்களிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.


9.4.09

கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயல் வீரர்கள் கூட்டம்

கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் கூட்டம் வரும் 12.4.09 ஞாயிற் றுக்கிழமை மாலை 4 மணிக்கு லால்பேட்டை ஜே.எம்.ஏ. திருமண மண்ட பத்தில் மாவட்ட தலைவர் எஸ்.ஏ. அப்துல் கப்பார் தலைமையில், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஏ.ஷபீகுர்ரஹ்மான் முன்னிலையில் நடைபெறும்.

இந்நிகழ்ச்சியில் நடை பெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவது, இயக்க பணி, மற்றும் தலைவர் அனுமதியுடன் இதர முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் ஏ.சுக்கூர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நன்றி : முதுவை ஹிதாயத்

8.4.09

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்...

இன்ஷா அல்லா ஹ்....
வருகின்ற 12-04-2009 ஞாயிறு அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும்......
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்...
(மாற்று மத சகோதரர்களின் கேள்வி பதில் நிகழ்ச்சி)
பதில் அளிப்பவர்-சகோ: P.ஜைனுல் ஆபிதீன்.இடம்:M.Y.M. பைசல் மஹால், சிதம்பரம்.
நேரம்:காலை 9:30 மணி
அண்போடு அழைக்கிறது.......
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்
மாணவர் அனி கடலூர் மாவட்டம்.

1.4.09

லால்பேட்டை கமாலியா வீதி ஹலிமா பீவி வஃபாத்

லால்பேட்டை கமாலியா வீதி சட்டி ஜுனைது


அவர்களின் தாயார் ஹலிமா பீவி

அவர்கள் இன்று {31.03.2009} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

30.3.09

வடக்கு தெரு முஹம்மது யூனுஸ் வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு பக்கிர்லப்பை


முஹம்மது யூனுஸ்அவர்கள் இன்று {30.03.2009} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



தகவல்

சஹாரா டிராவல்ஸ்

24.3.09

லால்பேட்டை அபுதாபி ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு...






லால்பேட்டை அபுதாபி ஜமாத்தின் 17 வது பொதுக்குழுக் கூட்டம் காலிதியாவில் உள்ள மளயாள சமாஜத்தில் 20.03.2009 வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்குப்பின் நடைப் பெற்றது.
கூட்டத்திற்க்கு ஜமாத் தலைவர் ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹசன் தலமை வகித்தார்.

ஹாபிழ் அனீசுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்,செயளாளர் எம்.பக்கீர் முஹம்மது ஆண்டரிக்கை வாசித்தார்,பொருளாளர் ரபீக் நாசர் இரண்டு ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார்,தணிக்கையாளர் சி,எம்.அப்துல் மாலிக் தணிக்கை அறிக்கை வாசித்தார்.தொடர்ந்து ஜமாஅத் செயல் பாடுகள் குரித்து நிர்வாகிகள்கருத்துரை வழங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வை ஹாஜி டி.எ.முஹம்மது ஹசன்.ஹாஜி டி.எம்.ஷேக்தாவூத்,ஏ.ஆர்.அஹமதுல்லாஹ் மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
புதிய தலைவராக ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ்,
துனைத் தலைவராக எஸ்.எம்.அப்துல் அஜீத்,
பொதுச் செயலாளராக ஏ.எஸ்.அப்துல் ரஹ்மன்,
பொருளாளராக எச்.எம்.பலுலுர் ரஹ்மன்,
துனை பொருலாளராக ஹாஜி எம்,எச்.ஹபீபுல்லாஹ்,
துனைச் செயளாளர்களாக,
ஹாபிள் எஸ்.எம்.அனீஸ் அஹ்மத்
ஏ.அப்துல் சலாம்,
எப்.ஹபீபுர் ரஹ்மன்,
எஸ்.ஏ.இக்ராமுல்லஹ்(அலய்ன்)
தணிக்கையாளராக என்.முஹம்மதுஆஷிக்,
கவுரவத் தலைவர்களாக,
டி.ஏ.முஹம்மது ஹசன்.
எம் சுஹைபுதீன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பேரூராட்சி மன்ற தலைவர் ஓ.பி.இம்தாதுல் ஹுசைன்,எஸ்.ஏ.முனவ்வர் ஹுசைன் ஆகியேருக்கு இரங்கல் தெரிவித்தும்,ஊரின் பூரண வளர்ச்சிக்கு தொடர்ந்து ஒத்துழைப்பது,உருப்பினர்களின் சந்தாவை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.புதிய நிர்வாகிகளின் ஏற்புறைக்குப்பின் துஆவுடன் கூட்டம் நிரைவு பெற்றது.
தகவல்:அப்துல் ரஹ்மான் அபுதாபி

8.3.09

லால்பேட்டை சுலைமான் சேட் வீதி அப்துல் ஜப்பார் வஃபாத்

லால்பேட்டை சுலைமான் சேட் வீதி கமால் பாஷா வின் தந்தை ஒல்லி அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று {08.03.2009} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




தகவல்



நஜீர் அஹமது

அபுதாபி

இம்தாதுல் ஹுசைன் அவர்களின் மறைவுக்கு பல்வேறு இடங்களில் இறங்கள் கூட்டம் மற்றும் துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது.

லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், சமுதாய பொதுநல ஊழியருமாகிய ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் அவர்களின் மறைவுக்கு பல்வேறு இடங்களில் இறங்கள் கூட்டம் மற்றும் துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது.

லால்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் மன்றம் சார்பாக இறங்கள் கூட்டம் நடைப்பெற்றது.

சைஹுல் மில்லத் இளைஞர் மன்றம் சார்பாக இறங்கள் கூட்டம் நடைப்பெற்றது.

அபுதாபி லால்பேட்டை ஜமாத் சார்பாக அபுதபியில் துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது.

குவைத் லால்பேட்டை ஜமாத் சார்பாக துஆ மஜ்லிஸ் நடைப்பெற்றது.
.

7.3.09

அபுதாபி லால்பேட்டை ஜமாத் புதிய நிர்வாகி தேர்வு


5.3.09

இம்தாதுல் ஹுசைன் மறைவுக்கு லன்டனில் காயிப் ஜனாஸா தொழுகை

லன்டன், மார்ச்.5-
லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், சமுதாய பொதுநல ஊழியருமாகிய ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் அவர்கள் 04.03.2009 மதியம் 2.45 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் மஃபிரத் துக்கு துஆ செய்யும் வகையில் லால்பேட்டை ஜமாத்தினர் சார்பாக இங்கிலாந் தலைநகர் லன்டனில் காயிப் ஜனாஸா தொழுகை தாவா சென்டரில் நடைப்பெற்றது.

மவுலவி இப்றாஹிம் உலவி அன்னாரின் மஃபிரத்துக்கு துஆ செய்தார்கள். S.M. அப்துல் இலியாஸ் அவர்கள் இதர்கான ஏற்ப்பாட்டை செய்தார்கள்.

இம்தாதுல் ஹுசைன் காலமானார் தலைவர் பேராசிரியர் இரங்கல்

லால்பேட்டை, மார்ச்.5-

கடலூர் மாவட்டம் லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், சமுதாய பொதுநல ஊழியருமாகிய ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் சென்னையில் நேற்று கால மானார். அவருக்கு வயது 42.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் உருவாக் கப்பட்ட ஓ.பி. இம்தாதுல் ஹுசைன் சிறந்த சமுதாய ஆர்வலர். எம்.ஏ. லத்தீப் கல்வி மற்றும் சமூக அறக் கட்டளையின் அறங்காவ லர். இந்திய தேசிய லீகின் மாநில துணைப் பொதுச் செயலாளராக பொறுப் பில் இருந்தவர்.

உடல் நலம் பாதிக்கப் பட்ட அவர் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு காலமானார்.

அவரது ஜனாஸா நல்லடக்கம் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நல்லடக்க நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், லால் பேட்டை ஜமாஅத்தினர், சர்வகட்சியினர் ஏராள மானோர் பங்கேற்றனர்.

தலைவர் பேராசிரியர் இரங்கல்
இம்தாதுல் ஹுசைன் மறைவுக்கு இரங்கல் தெரி வித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-
லால்பேட்டை பேரூ ராட்சி தலைவர் ஜனாப் இம்தாதுல் ஹுசைன் திடீரென மரணமுற்ற செய்தி கேட்டு மிகவும் துக்கமும் - வருத்தமும் அடைந்தோம்.

சமூக சேவையில் லால் பேட்டை மக்களின் நன் மதிப்பை பெற்று விளங்கி னார். லால்பேட்டை பேரூ ராட்சி சிறந்த பேரூராட்சி என்று பெயர் பெற்று விருதும், பாராட்டும் பெறு வதற்கு இவரின் நிர்வாகத் திறமை அமைந்திருந்தது.

தேசிய லீகில் இவர் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார் என்றா லும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகால் வளர்க்கப் பட்டவர் என்பது குறிப் பிடத்தக்கது.

நல்ல சகோதரர் மறை வால் வாடும் அவரது குடும் பத்தாருக்கு நமது அனுதா பங்களையும், இரங்கலை யும் தெரிவிப்போம்.

அன்னாரின் மஃபிரத் துக்கு எல்லோரும் துஆ இறைஞ்சுவோம்.
இவ்வாறு பேராசிரியர் இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றி மணிச்சுடர்.

லால்பேட்டை வடக்கு தெரு சரீபா பீவி வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு மதார்கனி அப்துல் ஜமீல்,அப்துல் மாலிம் ஆகியோரின் தாயாரும்


ஹாஜி M.A.பதஹுத்தீன் அவர்களின் மாமியாருமான

சரீபா பீவி அவர்கள் இன்று {05.03.2009} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.





தகவல்

சஹாரா டிராவல்ஸ்

4.3.09

லால்பேட்டை பேருராட்சி மன்ற தலைவர் இம்தாதுல் ஹுசைன் மறைவு

லால்பேட்டை பேருராட்சி மன்ற தலைவர் O.P. இம்தாதுல் ஹுசைன் அவர்கள் இன்று 04 .03.2009 மதியம் 2.45 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நள்ளடக்கம் 05.03.2009 காலை 10 மணிக்கு நடைப்பெரும்.

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் மறைவு

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஓ
.பி. இம்தாதுல் ஹீசைன் மறைவு
லால்பேட்டை பேரூராட்சி மன்றத்தின் துனைத்தலைவராக
5 வருடங்கள், பேரூராட்சி மன்றத்தி்ன் தலைவராக 3 வருடங்கள் சறிப்பாக பணியாற்றிய இயக்க இளவல் ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் அவர்கள் 04.03.2009 புதன் கிழமை 2.45 மனியளவில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை சென்றடைந்தார் என்பதை கேட்டு பெரும் கவலையடைந்தோம்.

மறைந்த சகோதரர்
ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் சின்னஞ்சிறு வயதில் இருந்து சமுதாயப்பணியிலும், தாய்ச்சபை இந்திய யூனியன் முல்லிம் லீக் பணியிலும் சிறப்பாக செயல்பட்டார். லால்பேட்டை வடக்குத் தெருவில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றத்தில் செயலாளராக இருந்து சிறப்பாக பணிபுறிந்தார்.

60 ஆன்டுகாலமாக லால்பேட்டை நகரில் ரபிவுல் அவ்வல் மாதத்தில் நடைபெற்று வரும் நபிகள் பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களின் சீரத்துன் நபவி வரலாற்று சொற்பொழிவு நிகழ்ச்சி சங்கை மிகு உலமாக்களை வைத்து நடத்தப்படுகிறது. 60 ஆன்டுகலாக சிறப்பாக நடைபெற்று வரும் இந்த நிகழச்சியில் 20 ஆன்டுகளுக்கும் மேலாக சிறப்பாக சேவையாற்றியவர் சகோதரர் ஓ.பி. இம்தாதுல் ஹீசைன் அவர்கள்.

லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் இளைஞர் அணியின் செயலாளர்
, நகர முஸ்லிம் லீக்கின் துனை செயலாளர், மாவட்ட முஸ்லிம் லீக்கின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். தேசிய லீக்கின் லால்பேட்டை நகர தலைவராகவும், மாநில பொருளாலராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஈடு செய்ய முடியாத இழப்பாக இவரது மறைவுச் செய்தி கேட்டதும் லால்பேட்டை வட்டாரமே கவலையில் ஆழ்ந்தது.

லால்பேட்டையில் இன்று வியாழன் அனைத்து பாடசாலைக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இவருடைய கப்ரை அல்லாஹீத்தாலா பிரகாசமாக்கி வைப்பானாக.

இவருடைய மறைவால் கவலையில் ஆழந்திருக்கும் இவருடைய குடும்பத்தார், நன்பர்கள், இயக்கத்தினர் அனைவருக்கும் ஸப்ரே ஜமீலை அல்லாஹ் வழங்குவானாக.

இவரின் மறைவுச் செய்தி கேட்டதும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாலரும், தமிழகத் தலைவரும் ஆன பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன் அவர்கள் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
.

.