20.10.09

லால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிகழ்வுகள்:

மாலை மூன்று மணி முதல் லால்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாவட்ட நிர்வாகிகளும்,தொண்டர்களும் குவியத்தொடங்கினர். ஆய்வு மாளிகை வளாகத்திலேயே மாவட்ட முஸ்லிம் லீகின் கலந்தாய்வுக் கூட்டம்,பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ்.எம்.அப்துல் ரஹ்மான் சாஹிப்,மாநில பொதுச் செயளாலர் ஹாஜி கே.ஏ.எம்.அபூபக்கர்,மார்க அணிச் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத் தலைவர் ஹாஜி.எஸ்.ஏ.அப்துல் கஃப்பார்,மாவட்டச் செயளாலர் ஏ.சுக்கூர்,ஆகியோரின் ஒருங்கிணைப்பில் கடலூர்,விருதாச்சலம்,சிதம்பரம், லால்பேட்டை,பரங்கிப்பேட்டை,மங்கலம்பேட்டை,நெல்லிக்குப்பம்,ஆயங்குடி,முட்லூர்.பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் நிர்வாகிகளும்,பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டு ஆலோசனைகளை பரிமாரிக் கொண்டனர்.மாலை ஐந்து மணிவரை இக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பிறைக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஊர்வலத்துடன் துவங்கியது இதில் இளைஞர்கள்,மாணவர்கள்,பெரியவர்கள் என்று பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். லால்பேட்டை நகரில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் தாய்ச்சபை முஸ்லிம் லீகின் நட்சத்திரம் பதித்த பச்சிளம் பிறைக் கொடியை,முஸ்லிம் லீகின் அரசியல் ஆலோசனைக்குழு உருப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்,பொதுச் செயளாலர் கே.ஏ.எம் அபூபக்கர் ஆகியோர் ஏற்றிவைத்தனர். நிறைவாக சிதம்பரம் மெயின் ரோட்டில் அமைந்திருந்த சிராஜுல் மில்லத் நினைவரங்கில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.நகரத் தலைவர் ஹாஜி.கே.ஏ.ஜி.முஹம்மது தலமை வகித்தார்.ஹாஃபிழ் முஜீபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்.மாவட்ட துணைச் செயளாலர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ் வரவேற்று பேசினார். கடலூர் மாவட்டத் தலைவர் அல்ஹாஜ்.எஸ்.ஏ.அப்துல் கஃப்பார் துவக்கவுரையாற்றினார்.கடலூர் மாவட்டச் செயளாலர் ஏ.சுக்கூர்,திருவாரூர் மாவட்டச்செயளாலர் ஹாஜி எம்.எம்.ஜலாலுத்தீன்,விழுப்புரம் மாவட்டச் செயளாலர் ஏ.அன்வர் பாஷா,மாவட்ட பட்டதாரிகள் அணி அமைப்பளர் ஏ.ஏ.ரஷீத் ஜான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில மார்க்க அணிச் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,மாநில பொதுச் செயளாலர் ஹாஜி கே.ஏ.எம் அபூபக்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியாக அனைத்துலக காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளரும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக்குழு உருப்பினர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி.நிறைவுப் பேருரையாற்றினார்.



கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஹாஜி கமாலுத்தீன்,மாவட்ட பொருளாலர் ஹாஜி ஏ.கே.ஹபீபுர் ரஹ்மான்,மாவட்ட துணைச் செயளாலர் வி.எம்.ராஜா ரஹீமுல்லாஹ்,சிதம்பரம் எம்.ஏ.ஜெகரிய்யா,நெல்லிக்குப்பம் ஹஜி அப்துல் ஹாதி,கடலூர் அக்பர் அலி,முட்லூர் அப்துல் கஃப்பார்,பரங்கிபேட்டை முஹம்மது பஷீர்,அயங்குடி அப்துல் வதூத்,முஹம்மது இக்பால்,ஹாஜி முஹம்மது இப்ராஹிம்,விருதாச்சலம் ஹாஜி அப்துல் மஜீத்,லியாகத் அலி, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளானோர் பங்கேற்ற்னர்.இறுதியில் நகர துணைச் செயளாலர் யூ.சல்மான் ஃபாரிஸ் நன்றி கூறினார்.





நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டை எம்.ஓ.அப்துல் அலி,பி.எம்.தய்யிப்,எம்.ஜெ.மஸூத் அஹமத்,பி.எம்.அப்துல் காதர்,சாதுல்லாஹ்,மொளலவி நூருல் அமீன்,ஜாகிர் ஹுஸைன்,மற்றும் மெயின் ரோடு கவ்சரியா பைத்துசபா அங்கத்தினர்கள்,முஹப்பத் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.







0 comments:

.