10.10.09

ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்பம் - புதிய வசதி

ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்ப பதிவில் புதிய வசதி சென்னை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி கே.எஸ்.தவ்லத் தமீம் வெளியிட்டுள்ள குறிப்பு:

தட்கல் முறையிலும், சாதாரண முறையிலும் பாஸ்போர்ட் பெறுவதற்கான ஏராளமான விண்ணப்பங்கள் வந்த வண்ணம் இருப்பதால், சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில், பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான வசதிகளை சீரமைத்துள்ளது.

இதற்கான இணைய தள முகவரி: http://passport.tn.nic.in/

ஆன்லைனில் பதிவு செய்யும் போது கம்ப்யூட்டர் ஒதுக்கும் தேதியில் மட்டுமே விண்ணப்பங்களை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இத்தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், திரும்பவும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் புதிதாக ஒதுக்கும் தேதியில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்யும் முறையில் விண்ணப்பதாரர்களுக்கு புதுமையான வசதி ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர் கம்ப்யூட்டர் ஒதுக்கும் தேதி தனக்கு சரிப்படவில்லை என்றால், தனக்கு வசதியான ஒரு தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளமுடியும்.

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க, முதலில் வருபவர்களுக்கு முதலில் என்ற முறையில் தட்கல் மற்றும் சாதாரண விண்ணப்பங்களுக்கு டோக்கன்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த முறையில் கம்ப்யூட்டர் ஒதுக்கும் நேரம் பொருந்தாது.

பாஸ்போர்ட்டை விரைவாக பெற்றுத் தருவதாகச் சொல்லி தவறான வாக்குறுதிகளை அளிக்கும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்.இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 comments:

.