Showing posts with label இரங்கல். Show all posts
Showing posts with label இரங்கல். Show all posts

5.11.09

லால்பேட்டை ஜாமி ஆ பேராசிரியர் மறைவுக்கு இரங்கல்...

அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......

த‌மிழக‌த்தின் ப‌ழம்பெரும் அர‌புக்க‌ல்லூரிக‌ளில் ஒன்றான‌ லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் க‌ல்லூரியின் முதுபெரும் பேராசிரிய‌ரும், அக்க‌ல்லூரியில் பல்லாண்டுகளாக மார்க்க‌ச் சேவை ஆற்றியவ‌ருமான‌ மவ்லானா மெளலவி அல்ஹாஜ் வஜ்ஹுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் இன்று (புதன் கிழமை 04.11.2009) காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் அப்ப‌‍ழுக்க‌ற்ற‌ மார்க்க‌ச் சேவையை அ‍ங்கீக‌ரித்து, நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) & ரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவை பிரார்த்தனை செய்கிறது.

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி!
வஸ்ஸலாம்!!

26.10.09

லால்பேட்டை அப்துல்லாஹ் ஹஜ்ரத் மறைவுக்கு முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே இரங்கல்!

சென்னை,அக்,26
லால்பேட்டை நகர முஸ்லிம் லீகின் முதுபெரும் தலைவராகவும்,ஜெ.எம்.ஏ.அரபிக்கல்லூரியின் நீண்ட கால உருப்பினராகவும்,காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ள முபாரக் மஸ்ஜிதை நிர்மாணித்தவர்களில் ஒருவருமாக விளங்கிய மொளலவி அல்ஹாஜ் அப்துல்லாஹ் ஹஜ்ரத் அவர்களின் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் இரங்கல்.
.

முஸ்லிம் லீக் தலைவராக விளங்கிய ஜின்னா சாஹிப் பங்கேற்ற மாநாட்டில் கலந்துக் கொண்ட பெருமைக்குரிய ஆலிம் அவர்கள் தன் தள்ளாத வயதிலும் முஸ்லிம் லீக் பொன்விழா மாநாட்டிலும் பங்கேற்று ஊர்வலத்தில் கொடி பிடித்து வந்த நிகழ்ச்சி மறக்க முடியாதது,அதைப்போலவே அன்னாரின் மறைவுச் செய்தியும் அதிர்ச்சிக்குரியது.
.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொருத்து அவர்தம் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை வழங்க பிரார்த்திக்கிறேன்.

மேற்கண்டவாறு தலைவர் தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

.