25.9.09

லால்பேட்டை தபால் நிலையத்தில் கணினிமூலம் விமான டிக்கெட் முன்பதிவு வசதி விரைவில் தொடக்கம் கடலூர் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

காட்டுமன்னார்கோவில், செப்.25-

லால்பேட்டை தபால் நிலையத்தில் கணினி மூலம் விமான டிக்கெட் முன் பதிவு வசதி விரைவில் தொடங்கப் பட உள்ளதாக கட லூர் கோட்ட கண் காணிப் பாளர் கனகராஜன் கூறி னார்.

புதியகட்டிடம்
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை பஜார் தெருவில் தபால்நிலையம் இயங்கிவந்தது.தற்போது அதில் இருந்து இடமாற்றம் செய்து நவீன வசதிகளுடன் ஜாமியா லால்கான் கைக் காட்டிக்கு மாற்றப்பட்டு உள் ளது.

இதன் திறப்புவிழா நேற்று நடந்தது.விழாவுக்கு கடலூர் கோட்ட கண்காணிப்பாளர் கனகராஜன் தலைமை தாங்கி ,புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-
தங்க நாணயம் விற்பனை
அஞ்சலகங்களில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப் பட்டு உள்ளது.இதை பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சிதம்பரம், கடலூர் தலைமை தபால் நிலையங்களில் விரைவில் தங்க நாணயம் விற்பனை தொடங்கப்படுகிறது.மற்ற கிளை தபால் நிலை யங்களிலும் படிப்படியாக தங்க நாணய விற்பனை தொடங்கப் படும்.தற்போது அஞ்சலகங்களில் கணினி மூலம் முன்பதிவு தொலை தூர பேருந்து கள்,விமான டிக்கெட் வசதிகள் செய்து கொடுத்து வருகிறோம்.இந்த வசதி விரைவில் லால்பேட்டை, அஞ்சலகங்களில் தொடங்கப் படும்.மேலும் அஞ்சலக உதவி யாளர்கள் வேலைக்கான விண்ணப்பம் சிதம்பரம், கடலூர் அஞ்சலகங்களில் வழங்கப் பட்டு வருகிறது.

இதை பயன்படுத்தி அஞ்சலக உதவியாளர்வேலைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கடலூர் கோட்ட கண்காணிப்பாளர் கனகராஜ் கூறினார்.

விழாவில் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி முகமது எகையா, அப்துல்காதி, மதர்ஸா நிர்வாக குழு உறுப்பினர் அப்துல்அகது, துபாய் ஜமாத் முன்னாள் தலைவர்அனிசுர் ரகுமான், அன்சாரி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அனைவரையும் உட்கோட்ட ஆய்வாளர் கோதண்டபாணி வரவேற்றார்.முடிவில் லால்பேட்டை தபால் அதிகாரி தங்கராஜ்நன்றி கூறினார்.
Thanks http://www.dailythanthi.com

0 comments:

.