23.10.10

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் பொதுக்குழு..! புதிய நிர்வாகிகள் தேர்வு!

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் பதினெட்டாவது பொதுக்குழுக் கூட்டம் காலிதியா கார்டன் பின்புரம் உள்ள மலையாளி சமாஜத்தில் 22.10.2010 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் நடைபெற்றது.




நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ் தலமை வகித்தார்.

ஹாபிழ்.ஆர்.இசட்.எம்.இர்ஷாத் அஹமத் கிராஅத் ஓதினார்.

கவுரவத் தலைவர் ஹாஜி.டி.ஏ.முஹம்மது ஹஸன் முன்னிலை வகித்தார்.

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தி,ஆண்டரிக்கை தாக்கல் செய்தார்.

பொருளாளர் ஹெச்.எம்.ஃபலுலூர் ரஹ்மான் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

தணிக்கையாளர் என்.ஆஷிகுல் அமீன் தணிக்கை அறிக்கையை சமர்ப்பித்தார்.

ஜமாஅத் உறுப்பினர் எம்.ஐ. நஜிபுல்லாஹ் கருத்துரை வழங்கினார்.



தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.இதில் அடுத்த இரண்டு வருடங்களுக்குரிய புதிய நிர்வாகிகள் அனைவரின் ஏகோபித்த ஆதரவின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் விபரம்...

தலைவர்.மெளலவி எம்.ஏ.அமீனுல் ஹுஸைன்

துணைத் தலைவர்:பி.ஒய்.ஜாஃபர் அலி

பொதுச் செயலாளர்:ஜெ.யாசிர் அரஃபாத் அலி

பொருளாளர்:எஸ்.கே.முஹம்மது இலியாஸ்

துணைப் பொருளாளர்:எஸ்.ஹெச்.ஜாக்கிர் ஹுஸைன்



செயலாளர்கள்:மெளலவி எம்.ஐ.முஹம்மது அய்யூப்(ஐகாடு)

எம்.ஹெச்.சல்மான் ஃபாரிஸ் (முஸஃப்பாஹ்)

என்.ஹெச்.முஹம்மது ரியாத் (ஹலீஃபா சிட்டி)

பி.ஹெச்.முஹம்மது ஆதம்

ஏ.கமாலுத்தீன்

கே.எஸ்.ஆஷிக் அஹமத்



அல் அய்ன் மண்டல செயலாளர்கள்: ஜெ. நூருல் அமீன்

ஏ.ஜெ.ஃபய்யாஜ் அஹமத்

தணிக்கையாளர்:சி.எம்.அப்துல் மாலிக்.





பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:


1, ஜமாஅத் மூலம் வழங்கப்பட்டு வரும் உதவிகளை தொடர்ந்து வழங்குவது,அதில் கல்வி உதவிகள்,மருத்துவ உதவிகள் விண்ணப்பங்களை கூடுதல் கவனம் செலுத்தி பரிசீலிப்பது.

2.ஏனைய பகுதிகளுக்குரிய செயலாளர்களை புதிய நிர்வாகிகள் கூடி தெர்ந்தெடுப்பது.

3,லால்பேட்டை நகரில் அப்புறப்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தை உடனடியாக மீண்டும் ஏற்பபடுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி,ஏற்க்கனவே ஜமாஅத் சார்பில் பேரூராட்சி மன்றத்திற்க்கு அனுப்பட்ட மனுவையும் நி்னைவூட்டி,அனைத்து சமுதாய அமைப்புகள்,பேருராட்சி மன்ற தலைவர் உறுப்பினர்கள் ஆகியோருக்கு வேண்டுகோளாக இத்தீர்மானத்தை முன் வைப்பது.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



புதிய நிர்வாகிகளின் சார்பில் தலைவர் ஏ.எம்.அமீனுல் ஹுஸைன்,பொதுச் செயலாளர் ஜெ.யாசிர் அரஃபாத் அலி ஆகியோர் ஏற்ப்புரை நிகழ்த்தினர்.செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் நன்றி கூற ஹாபிழ்.இர்ஷாத் அஹமத் துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.

3 comments:

syeed. said...

congratulation 4new team,best of luck

Unknown said...

Congratulation for the fresh enthusiastic team and keep continue your memorable things to our community. I pray allah will give a big reward in Ahirah..

Unknown said...

Best wishes for newly elected Abu Dhabi Lalpet Jamaath office bearers
wishing to make favour of Lalpet Muslim Comunity
V.J.Jafar
President
Lalpet Muslim Jamaath. Dubai

.