13.11.10

லால்பேட்டை P.K.B. பஷீர் அஹமது மறைவு

லால்பேட்டை சிங்கார வீதி P.K.B. பஷீர் அஹமது அவர்கள் இன்று  13.11.2010 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.

9.11.10

இராணுவத்தில் சேர்வதற்க்கான நுழைவு தேர்வு

இந்திய ராணுவத்தின் தரை படை (Army), கப்பல் படை (Navy), விமான படையில் (Air Force ) சேருவதற்க்கான நுழைவு தேர்வு "NDA & NA Exams" அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது இன்ஷா அல்லாஹ். அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டு வருகின்றது. விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். இந்த தேர்வு எழுத +2 வரை படித்திருந்தால் போதும்.




தேர்வை பற்றிய விபரம்:



கல்வி தகுதி : +2 அல்லது அதற்க்கு இனையான படிப்பு (10th + Diploma)

வயது வரம்பு : ஜனவரி 1993-லிருந்து ஜூலை 1995-க்குள் பிறந்திருக்க வேண்டும். (17 முதல் 19-க்குள் இருக்க வேண்டும்)

விண்ணப்பம் கிடைக்கும் இடம் : அனைத்து தபால் நிலையங்கள், தபால் நிலையத்தில் விண்ணப்பம் கிடைக்க வில்லை என்றால் 011-23389366 இந்த எண்ணிற்க்கு புகார் தெரிவிக்கலாம்.

விண்ணப்பத்தின் விலை: ரூ.20.

தேர்வு கட்டணம்: ரூ.50. தேர்வு கட்டணத்தை "Central Recruitment Stamp" ஸ்டாம்பாக செலுத்த வேண்டும். இது போஸ்ட் ஆபிஸில் கிடைக்கும். போஸ்டல் ஸ்டாம்ப் ஒட்ட கூடாது "Central Recruitment Stamp" தான் ஒட்ட வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி : Controller of Examinations, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi - 110069

விண்ணப்பத்தை அனுப்ப கடைசி நாள் : நவம்பர் 15 (15-ஆம் தேதி டெல்லி சென்றடைய, இரண்டு தினங்களுக்கு முன்னதாகவே விண்ணப்பத்தை அனுப்பவும்).



மேலும் விபரங்கள் http://www.upsc.gov.in/exams/notifications/nda1-2011/indx.htm இந்த இணையதளத்தில் உள்ளது.



இந்த தேர்வுக்கு தயாராவது எப்படி?



இது வருட வருடம் நடக்கும் தேர்வாகும். எனவே கடந்த 5 ஆண்டு கேள்விதாள்களை பார்த்தால் எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்டுகின்றது என அறிந்து கொள்ளலாம். அந்த பாட பகுதிகளை நன்றாக ஆராய்ந்து படித்தாலே போதும். மேலும் CBSC-யின் 10-ஆம் மற்றும் +2 ஆம் வகுப்பு புத்தகங்கள் வாங்கிபடித்தால் இது போன்ற தேசிய தேர்வுகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்த கேள்விதாள்கள், புத்தகங்கள் முக்கிய புத்தக கடைகளில் கிடைக்கும். குறிப்பாக சென்னை மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள புத்தக கடைகளில் கிடைக்கும். மேலும் பொதுவாக தேர்வுகளுக்கு எவ்வாறு படிக்க வேண்டும் என்ற கட்டுரை tntj.net (http://www.tntj.net/மாணவர்-பகுதி/கல்வி-வழிகாட்டி/தேர்வில்-அதிக-மதிப்பெண்/) இணையதளத்தில் உள்ளது. இதில் எவ்வாறு படிப்பது என குறிப்பிடபட்டு இருக்கும்.



மேலும் இது சம்மந்தமாக மேலதிக விளக்கம் தேவைபடும் மாணவர்கள் இந்த மெயில் ஐடியில் sithiqu.mtech@gmail.com தொடர்புகொள்ளவும்



தகவல்

S.சித்தீக்.M.Tech

6.11.10

அஸ்கர் அலி - நூருல் ஆபியா திருமணம்


பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்

{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}

அன்புடன்...M.J.பதஹுத்தீன்,M.J.முஹத்தஸீம், லால்பேட்டை,
T. சுஹைல் அஹமது.லண்டன்.
&

லால்பேட்டை இணைய தளம்


=====================================

5.11.10

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டம்(தெற்கு)பொதுகுழு கூட்டம்

24.10.10 அன்று மாலை 4.00 மணியளவில் A.R.S.திருமணம் மன்டபத்தில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனித நேய மக்கள் கட்சியின்கடலூர் மாவட்டம் (தெற்கு)பொதுகுழு கூட்டம் மற்றும் நிர்வாகி தேர்தல் நடைபெற்றது


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில பொருளாளர் O.U.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தலைமையில்.

மாநில துணை செயலாளர் எஸ் .எம் .ஜின்னா அவர்கள் முன்னிலைளும் நடைபெற்றது.

இப்பொதுகுழு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் &துணை நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இப்பொதுகுழு கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டம் (தெற்கு) செயலாளராக லால்பேட்டையை சார்ந்த

எ .யாசர் அரபாத், லால்பேட்டை கவன்சிலர் அவர்களையும்

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனித நேய மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டம் (தெற்கு)பொருளாளராக லால்பேட்டையை சார்ந்த

எம் .முஹம்மத் அய்யுப்,லால்பேட்டை கவன்சிலர் அவர்களையும் . தேர்வு செய்யப்பட்டார்கள்



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடலூர் மாவட்டம் (தெற்கு) நிர்வாகிகள்.



மாவட்டம் தலைவர் : எம் .எச் .மெஹராஜுதின்

மாவட்டம் செயலாளர் : என் .அமானுல்லாஹ்

மாவட்டம் பொருளாளர் : எம் .முஹம்மத் அய்யுப்

மாவட்டம் து.தலைவர் :எ.அன்வர் சதாத்

மாவட்டம் து.செயலாளர் : ஜுனைத்

மாவட்டம் து.செயலாளர் :முஹம்மத் ஆசிக்

மாவட்டம் து.செயலாளர் : நவ்மான்

மாவட்டம் து.செயலாளர் :ஜபார்



மனித நேய மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டம் (தெற்கு) நிர்வாகிகள்.



மாவட்டம் தலைவர் : எம் .எச் .மெஹராஜுதின்



மாவட்டம் செயலாளர் : எ .யாசர் அரபாத்

மாவட்டம் பொருளாளர் : எம் .முஹம்மத் அய்யுப்

மாவட்டம் து.தலைவர் :எ.அன்வர் சதாத்

மாவட்டம் து.செயலாளர் :அஸ்லம்

மாவட்டம் து.செயலாளர் :ராமகிருஸ்ணன்

மாவட்டம் து.செயலாளர் : அப்துல் சமது

இவர்களை தேர்வு செய்தனர் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு சைய்யபட்டர்கள்

இப்போதுகுழு கூட்டத்தில் கடலூர் மாவட்டம் (தெற்கு) த .மு .மு .க &ம .ம .க பொதுகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

3.11.10

மேல் சபை வாக்காளர் பட்டியலில் சேர்ந்து விட்டீர்களா? - கடைசி தேதி நவம்பர் 9

தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இது இரண்டு பிரிவில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியும். ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள். இதில் பட்டதாரிகள் தங்களை வாக்காளராக பதிவு செய்ய கடைசி தேதி நவம்பர் 9 ஆகும். முஸ்லீம் பட்டதாரிகளே! ஓட்டுக்காக அரசியல் நடத்தும் இந்த ஆட்சியாளர்களிடம் இருந்து நாம் உரிமைகளை பெற இந்த வாக்காளர் பட்டியலில் கட்டாயம் சேர வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் கணிசமான அளவு முஸ்லீம்கள் இருந்தால்தான் ஆட்சியாளர்கள் நம்முடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பார்கள். குறைந்த சதவீத்தில் இருந்தால் முஸ்லீம்கள் மீது ஆட்சியாளர்களின் அடக்குமுறை அதிகரித்துவிடும். வாக்காளர் பட்டியலில் சேர்பதை ஒரு வேலையாக நினைத்து விட்டுவிடவேண்டாம். நம் சமுதாயாத்தில் பட்டதாரிகளே குறைவு, அதிலும் சமூக அக்கரை உள்ள பட்டதாரிகள் மிக குறைவு, எனவே இந்த வாய்ப்பை விட்டுவிடாமல் சமுதாய நலன் கருதியாவது பட்டதாரி வாக்காளர் பட்டியலில் சேருங்கள். அன்பிற்கினிய சகோதர்களே! உங்களுக்கு தெரிந்த முஸ்லீம் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இதன் அவசியத்தை விளக்கி இந்த மேல்சபை வாக்காளர்பட்டியலில் சேர சொல்லுங்கள்.






யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்



எங்கு விண்ணப்பிப்பது?

மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்

பிற ப்குதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்



எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்யலாம் http://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.



உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்

கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.

1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )

2. மதிப்பெண் சான்றிதழ்,

3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்

3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.



மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம். சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.



மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.html தெரிந்துகொள்ளலாம்.



தகவல்::

S.சித்தீக்.M.Tech

TNTJ மாணவர் அணி

.