29.8.10

அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தினம்!


அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு தின சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்ச்சி வியாழக்கிழமை தராவீஹ் தொழுகைக்குப் பின் அபுதாபி நஜ்தா சாலையில் உள்ள ஈ.டி.ஏ ஹாலில் அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீத் தலமையில் நடைபெற்றது.



பொதுச் செயளாலர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது வரவேற்புரையாற்றினார்.மெளலவி ஹாபிழ் ஹபீபுர் ரஹ்மான் மஹ்லரி துவக்கவுறையாற்றினார்.



பத்ரு போரில் பங்கேற்ற தியாக மிகு ஸஹாபாக்களின் வரலாற்றையும்,பத்ரு போரின் மகத்தான வெற்றியையும் விளக்கி காயல்பட்டிணம் ஹாபிழ் ஹுஸைன் மக்கி மஹ்லரி,கொள்ளுமேடு மெளலவி ஏ.சிராஜுத்தீன் ஃபாஜில் மன்பஈ ஆகியோர் உரை நிகழ்த்தினர்.



நிகழ்ச்சியில் வாணியம்பாடி அரபிக் கல்லூரி முதல்வர் மொளலானா வலியுல்லாஹ் ரஷாதி ஹஜ்ரத்,பனியாஸ் நிறுவன அதிபர் ஹாஜி.ஹமீது மரைக்காயர்,அய்மான் மகளிர் கல்லூரியின் செயளாலர் ஹாஜி சையதுஜாஃபர்,உள்ளிட்ட பல்வேறு ஊர் ஜமாஅத் பிரதிநிதிகள்,மற்றும் உலமாக்கள்,உமராக்கள் திரளானோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டை அய்மான் சங்க பொருளாலர் கீழக்கரை எம்.ஜமாலுத்தீன்,செயளாலர்கள் களமருதூர் ஜெ.எஸ்.ஷர்புத்தீன்,லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,திருவாடுதுறை அன்சாரி பாஷா,மதுக்கூர் ஒய்.எம்.அப்துல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.



முடிவில் அய்மான் சங்க செயளாலர் எரவாஞ்சேரி ஹெச்.முஹம்மது இக்பால் நன்றி கூறினார்.இறுதியாக மெளலவி பாஷா ரஷாதி துஆ ஓதினார்.

26.8.10

திருமண கட்டாயப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்த தமிழக அரசுக்கு ; முஸ்லிம் லீக் நன்றி!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கை:


2009ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி முதல் அமுலுக்கு வந்த தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம், இஸ்லாமிய ஷரீஅத் மற்றும் முஸ்லிம்களின் திருமண நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடும் என்ற ஐயப்பாடு ஏற்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சமுதாய அமைப்புகள், தமிழக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஜமாஅத்துகள், காலம் காலமாக செய்யப்படும் முஸ்லிம் திருமண பதிவு முறையையே (தப்தர்) அரசு தனது பதிவு முறையாக ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

முஸ்லிம்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றி தமிழக அரசு திருமணப் பதிவுச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் வெளியிட்டு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது.

முஸ்லிம்களின் உணர்வுகளை கண்ணியப்படுத்திய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு தமிழக முஸ்லிம் சமுதாயம் தனது ஒட்டுமொத்த நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது. சிறுபான்மை முஸ்லிம்களின் மார்க்கம் சார்ந்த உணர்வுகளை தெளிவாகப் புரிந்து மதிப்பளித்து ஒவ்வொரு காரியத்தையும் தொடர்ந்து செய்து வரும் தமிழக அரசிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

TNTJ மாணவரணி நடத்தும் இந்த வார இப்தார் மற்றும் சொற்பொழிவு நிகழ்சிகள்

இந்த வாரம் 13 மாவட்டத்தில் 23 இடங்களில்




1. கோட்டார் (குமரி மாவட்டம்) -ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சகோ.ஹாஜா நூஹ்

2. பெரியமேட் (சென்னை) - சனி கிழைமை (28/08/2010) - S.சித்தீக்.M.Tech

3. பல்லாவரம் - ஞாயிற்று கிழைமை (29/08/2010) - S.சித்தீக்.M.Tech

4. ஆலந்தூர் - ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சர்வத் கான் MBBS

5. தாம்பரம் - ஞாயிற்று கிழைமை (29/08/2010) - S.ஷமீம்.M.Sc

6. அன்னவாசல் (புதுகோட்டை)- சனி கிழைமை (28/08/2010) - சகோ. ஷேக் தாவூத்

7. முக்கன்னாமலைபட்டி (புது கோட்டை) - ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சகோ. ஷேக் தாவூத்

8. மங்களம் (திருப்பூர் )- ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சகோ.ஷாஹித் ஒலி

9. லெப்பைகுடி காடு (பெரம்பலூர்) - ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சகோ. அப்துல் மஜீத் உமரி

10. கடையநல்லூர் - ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சகோ.யூசுப் பைஜி

11. காரைக்குடி - ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சகோ.முஜாஹித்

12. TR பட்டிணம் - சனி கிழைமை (28/08/2010) - சகோ.அப்துல் லத்தீப் தவ்ஹீதி

13. காரைக்கால் - சனி கிழைமை (28/08/2010) - சகோ.இப்ராஹிம் உமரி

14. பொதகுடி - ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சகோ.அப்துல் ஹமீத் மஹ்லரி

15. பெரியபட்டணம் - வெள்ளி கிழைமை (27/08/2010) - சகோ.இம்ரான்

16. கீழக்கரை - வெள்ளி கிழைமை (27/08/2010) - சகோ. நிஸார்

17. தர்மபுரி - ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சகோ. இத்ரீஸ்

18. சங்கரன்பந்தல் - சனி கிழைமை (28/08/2010) - சகோ.ஜகுபர்

19. கொடிகால்பாளையம் (திருவாரூர்) -ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சகோ.அப்துல் ரஹ்மான்

20. திருவாரூர் - ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சகோ.பாருக்

21. நாச்சிகுளம் (திருவாரூர்) - ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சகோ.முஹம்து அலி

22. விட்டுகட்டி (திருவாரூர்)- ஞாயிற்று கிழைமை (29/08/2010) சகோ.ஹாஜா முஹைதீன்

23. கோம்பைதோட்டம் (திருப்பூர்) - ஞாயிற்று கிழைமை (29/08/2010) - சகோ.ஷேக் பரித்





முழு விபரம்



1. கோட்டார் (குமரி மாவட்டம்)

நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : TNTJ மாவட்ட தலைமையகம், கோட்டார், நாகர்கோவில்

சிறப்புரை : சகோ.ஹாஜா நூஹ் - மாநில செயலாளர்

தொடர்பிற்கு : 9994174540

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ குமரி மாவட்ட மாணவர் அணி.



2. பெரியமேட் (சென்னை)

நாள் : சனி கிழைமை (28/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்கு

இடம் : No : 52/40, ஊத்துகாட்டான் தெரு, பெரியமேட், சென்னை

சிறப்புரை : S.சித்தீக்.M.Tech- மாநில மாணவரணி செயலாளர்

தொடர்பிற்கு : 9500192727

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ பெரியமேட் கிளை மாணவர் அணி.



3. பல்லாவரம்



நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்கு

இடம் : மஸ்ஜிதுஸ் சலாம், #3 /1, 2nd குறுக்கு தெரு, நேரு நகர், பல்லாவரம் .

சிறப்புரை : S.சித்திக்.M.Tech - மாநில மாணவரணி செயலாளர்

தொடர்பிற்கு : 9840175955

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ பல்லாவரம் கிளை மாணவர் அணி

4. ஆலந்தூர்



நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்கு

இடம் : ஆலந்தூர் TNTJ மர்கஸ், லப்பை தெரு, ஆலந்தூர்.

சிறப்புரை : சர்வத் கான் MBBS - மாநில மாணவரணி துணைசெயலாளர்

தொடர்பிற்கு : 9940273532

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ ஆலந்தூர் கிளை மாணவர் அணி.



5. தாம்பரம்



நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்கு

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா ,# 45/46, 2nd தெரு, ரங்கநாதபுரம், தாம்பரம்

சிறப்புரை : S.ஷமீம்.M.Sc

தொடர்பிற்கு : 9941577134

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ தாம்பரம் கிளை மாணவர் அணி.



6. அன்னவாசல் (புதுகோட்டை மாவட்டம்)

நாள் : சனி கிழைமை (28/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்கு

இடம் : No:12, சிற்றன்ன வாசல் ரோடு, அன்னவாசல், புதுகோட்டை மாவட்டம்

சிறப்புரை : சகோ. ஷேக் தாவூத் - மாவட்ட மாணவர் அணி செயலாளர்

தொடர்பிற்கு : 9942188143

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ அன்னவாசல் கிளை மாணவர் அணி.

7. முக்கன்னாமலைபட்டி (புது கோட்டை மாவட்டம்)



நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்கு



சிறப்புரை : சகோ. ஷேக் தாவூத் - மாவட்ட மாணவர் அணி செயலாளர்

இடம் : பெண்கள் மதரஸா, நடு தெரு முக்கன்னாமலைபட்டி, புது கோட்டை மாவட்டம்

தொடர்பிற்கு : 9942188143

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ முக்கன்னாமலைபட்டி கிளை மாணவர் அணி

8. மங்களம் (திருப்பூர் மாவட்டம்)

நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : மஸ்ஜிதே மாலிக்குல்முல்க் பள்ளி , மங்களம், திருப்பூர் மாவட்டம்

சிறப்புரை : சகோ.ஷாஹித் ஒலி

தொடர்பிற்கு : 9150151339

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ மங்களம் கிளை மாணவர் அணி..

9. லெப்பைகுடி காடு (பெரம்பலூர் மாவட்டம்)

நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : தவ்ஹீத் பள்ளிவாசல், ஜமால் நகர், லெப்பைகுடி காடு, பெரம்பலூர் மாவட்டம்

சிறப்புரை : சகோ. அப்துல் மஜீத் உமரி

தொடர்பிற்கு : 9843398149

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ லெப்பைகுடி காடு கிளை மாணவர் அணி.

10. கடையநல்லூர்

நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : மஸ்ஜிதுல் அக்ஸா, தவ்ஹீத் நகர், பேட்டை, கடையநல்லூர் , நெல்லை மாவட்டம்

சிறப்புரை : சகோ.யூசுப் பைஜி

தொடர்பிற்கு : 9944295011

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கடையநல்லூர் கிளை மாணவர் அணி.

11. காரைக்குடி



நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : TNTJ மர்க்கஸ், சூர்யா லார்ஜ் பின்புரம், காரைக்குடி

சிறப்புரை :சகோ.முஜாஹித்

தொடர்பிற்கு : 9994007353

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ காரைக்குடி கிளை மாணவர் அணி.

12. காரைக்கால் (மேற்கு)

நாள் : சனி கிழைமை (28/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 6 :45 மணிக்கு

இடம் : No : 40, லயன்கரை மிராபள்ளி தோட்டம், காரைக்கால்

சிறப்புரை : சகோ.இப்ராஹிம் உமரி

தொடர்பிற்கு : 9976615655

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ காரைக்கால் (மேற்கு) கிளை மாணவர் அணி.





13. TR பட்டிணம்



நாள் : சனி கிழைமை (28/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 6 :45 மணிக்கு

இடம் : No : 7, காஜியார் தெரு, TR பட்டிணம், காரைக்கால்

சிறப்புரை : சகோ.அப்துல் லத்தீப் தவ்ஹீதி

தொடர்பிற்கு : 9976615655

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ TR பட்டிணம் கிளை மாணவர் அணி.



14. பொதகுடி



நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : TNTJ மர்க்கஸ், பொதகுடி, திருவாரூர் மாவட்டம்

சிறப்புரை :சகோ.அப்துல் ஹமீத் மஹ்லரி

தொடர்பிற்கு : 9750030736

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ பொதகுடி கிளை மாணவர் அணி.



15. பெரியபட்டணம்

நாள் : வெள்ளி கிழைமை (27/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 6 :45 மணிக்கு

சிறப்புரை : சகோ.இம்ரான்

இடம் : TNTJ மர்கஸ், ஜலாலிய நகர் மெயின் ரோடு, பெரியபட்டணம், இராமநாதபுரம் மாவட்டம்

தொடர்பிற்க்கு : 9894652633

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ பெரியபட்டணம் கிளை மாணவர் அணி

16. கீழக்கரை

நாள் : வெள்ளி கிழைமை (27/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 6 :45 மணிக்கு

சிறப்புரை : சகோ. நிஸார்

இடம் : TNTJ மர்கஸ், இஸ்லாமியா மேல்நிலை பள்ளி பின்புறம், தெற்கு தெரு, கீழக்கரை, இராமநாதபுரம் மாவட்டம்

தொடர்பிற்க்கு : 9894652633

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கீழக்கரை தெற்கு தெரு கிளை மாணவர் அணி

17. தர்மபுரி

நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : TNTJ மர்க்கஸ், அண்ணா நகர், மேற்கு, தர்மபுரி

சிறப்புரை : சகோ. இத்ரீஸ்

தொடர்பிற்கு : 9443212388

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ தர்மபுரி கிளை மாணவர் அணி.

18. சங்கரன்பந்தல்

நாள் : சனி கிழைமை (28/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : No :7, சப்ரின் காம்லெஸ், ஹாஸ்பிடல் ரோடு, சங்கரம்பந்தல், நாகை மாவட்டம்

சிறப்புரை : சகோ.ஜகுபர்

தொடர்பிற்கு : 9940828257

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ சங்கரம்பந்தல் கிளை மாணவர் அணி.

19. கொடிகால்பாளையம்

நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : TNTJ மர்க்கஸ், கொடிகால்பாளையம், திருவாரூர் மாவட்டம்

சிறப்புரை : சகோ.அப்துல் ரஹ்மான்

தொடர்பிற்கு : 9976207590

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ கொடிகால்பாளையம் கிளை மாணவர் அணி.

20. திருவாரூர்

நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : TNTJ மர்க்கஸ், சிவன்கோவில் தெரு, திருவாரூர்

சிறப்புரை :சகோ.பாருக்

தொடர்பிற்கு : 9944820313

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ திருவாரூர் நகர மாணவர் அணி.

21. நாச்சிகுளம்

நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : TNTJ மர்க்கஸ், நாச்சிகுளம், திருவாரூர் மாவட்டம்

சிறப்புரை :சகோ.முஹம்து அலி

தொடர்பிற்கு : 9655521569

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ நாச்சிகுளம் கிளை மாணவர் அணி.

22. விட்டுகட்டி

நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : விட்டுகட்டி பள்ளி அருகில், விட்டுகட்டி, திருவாரூர் மாவட்டம்

சிறப்புரை :சகோ.ஹாஜா முஹைதீன்

தொடர்பிற்கு : 9715961786

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ விட்டுகட்டி கிளை மாணவர் அணி.

23. கோம்பைதோட்டம் (திருப்பூர்)

நாள் : ஞாயிற்று கிழைமை (29/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 5 மணிக்கு

இடம் : மஸ்ஜித் ரஹ்மான் பள்ளி , கோம்பைதோட்டம், திருப்பூர்

சிறப்புரை :சகோ.ஷேக் பரித்

தொடர்பிற்கு : 9150151339

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ திருப்பூர் 41-வது வார்டு கிளை மாணவர் அணி.

21.8.10

லால்பேட்டை அபுல் ஹசன் மறைவு

லால்பேட்டை வடக்கு தெரு அபாபில்லை முஹம்மது அலி அவர்களின் மகனும், நூருல்லாஹ், முஹம்மது சாதிக் ஆகியோரின் தம்பியுமான {டிரைவர்} அபுல் ஹசன் அவர்கள் இன்று அதிகாலை 22.08.2010 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.




எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

துபாய் வாழ் லால்பேட்டை தமுமுக சகோதர்களின் இப்தார் விருந்து நிகழ்வு

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வாழும் லால்பேட்டை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களின் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி மற்றும் இப்தார் நிகழ்வு துபாய் - தேரா முஸ்லிம் முன்னேற்றக் கழக மர்கஸில் நடைப்பெற்றது.



நிகழ்விற்கு துபை மண்டல தலைவர் சகோ. அப்துல் காதர் மற்றும் துனைத் தலைவர் சகோ. மொய்தின் அவர்கள் தலைமைத் தாங்கினர். சரியாக மாலை 5.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. தாயகத்திலிருந்து வருகைத் தந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் சகோ. சிவகாசி முஸ்தபா அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் இளைஞர் எழுச்சியின் அவசியம் பற்றியும் மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் நகர்வுகளையும், தற்கால தமிழக முஸ்லிம் அரசியல் நிலவரம் குறித்தும் ஆராய்ச்சி பூர்வமான அனுகுமுறையோடு தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.

இறுதியில் கழக அடலேறுகள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமளித்தார். வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் துபை வாழ் லால்பேட்டை சகோதர்களால் இப்தார் விருந்து மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

15.8.10

லால்பேட்டை இக்பால் வீதி முஹம்மது ஃபாருக் மறைவு

லால்பேட்டை இக்பால் வீதி {நச்சிக்கான்} முஹம்மது ஃபாருக் அவர்கள் இன்று இரவு 14.08.2010 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா நல்லடக்கம் ஞாயிறு 15.08.2010 காலை நடைப்பெற்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

13.8.10

TNTJ மாணவரணி நடத்தும் இந்த வார இப்தார் நிகழ்ச்சிகள்,

1. ஐய்யம்பேட்டை (தஞ்சை மாவட்டம்)


நாள் : வெள்ளி கிழைமை (13/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்கு

இடம் : TNTJ மர்க்கஸ், சாதிக் நகர், ஐயம்ப்பேட்டை சக்கராபள்ளி, தஞ்சை மாவட்டம்

சிறப்புரை : சகோ.ஹாரிஷ்.M.Tech - மாவட்ட மாணவரணி செயலாளர்

தொடர்பிற்கு : 9940961087

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ சக்கரபள்ளி கிளை மாணவர் அணி.
 
2. வடபழனி


நாள் : ஞாயிற்று கிழைமை (15/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்கு

இடம் : No : 78, 5 வது தெரு, விஜயராகவபுரம், வடபழனி, சென்னை

சிறப்புரை : S.சித்தீக்.M.Tech- மாநில மாணவரணி செயலாளர்

தொடர்பிற்கு : சிராஜ் - 9941144876

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ KK நகர் பகுதி மாணவர் அணி.
 
3. காரையூர் (புதுகோட்டை மாவட்டம்)


நாள் : ஞாயிற்று கிழைமை (15/08/2010)

சொற்பொழிவு துவங்கும் நேரம் : மாலை 4 :30 மணிக்கு

இடம் : No: 70, காரையூர் மெயின் ரோடு, காரையூர், புதுகோட்டை மாவட்டம்

சிறப்புரை : சகோ. A.முஹமது அலி

தொடர்பிற்கு : ஷேக் - 9942188143 (மாவட்ட மாணவரணி செயலாளர்)

அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது TNTJ புதுகோட்டை மாவட்ட மாணவர் அணி.

8.8.10

லால்பேட்டை மவுலவி முஜிபுர்ரஹ்மான் மறைவு

லால்பேட்டை தெர்க்கு தெரு மவுத்துன்சா முஹம்மது அவர்களின் மகன் மவுலவி முஜிபுர்ரஹ்மான்   அவர்கள் இன்று மதியம் 08.08.2010 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை 09.08.2010 காலை  9.00. மணிக்கு நடைப்பெரும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

மக்காவில் வேலை ஏமாறவேண்டாம்..!

அஸ்ஸலாமுஅலைக்கும். சவுதிஅரபியா தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா கிளை அன்புடன் எழுதிக்கொண்டது.


தற்போது அல்வான்(Alluwan) என்ற நிறுவனம் மக்கா ஹரம் தவிர மக்காவின் நகரம் முழுவதும் சுத்தம் செய்யும் பளிதியா வேலையை செய்துவருகிறது இந்த நிறுவனத்திற்காக தற்போது தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும்
ஏஜென்டுகள் ஆள்களை எடுத்து அனுப்பிவருகிறார்கள் இந்த நிறுவனத்தில் சம்பளம் நானூறு ரியால் தருகிறார்கள் இது மிக குறைவான சம்பளமாகும்.

 வேலையும் மிகக்கடினம் கம்பெனியில் சாப்பாடும் மிகவும் மோசம் தங்கும் கேம்பில் ஒரு ரூமில் ஐம்பது பேர்.

 இந்த வேலைக்கு ஏஜெண்டுகள் வாங்கும் பணமோ ஐம்பதாயிரம் மேலும்ஏஜெண்டுகள் அல்லாஹ் மீதும் கபத்துல்லாஹ் படத்தின்மீதும் சத்தியம்செய்து கபத்துல்லாவை சுத்தம்செய்யத்தான் உங்களை அனுப்புகிறோம் என்று பொய் சொல்லி மக்களை இங்கு

அனுப்பிவிடுகிறார்கள் இதை நம்பி இதுவரை சுமார் ஐம்பது பேர் மக்கா வந்துள்ளார்கள். வந்த அனைவரும் மிகுந்த சிரமத்திலும் துயரத்திலும் உள்ளார்கள் எனவே இந்த நிறுவனத்திற்கு எந்த ஏஜெண்டு ஆள் எடுத்தாலும் யாரும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என்று மிக அன்போடு கேட்டுக்கொள்கிறோம் மேலதிக விபரங்களுக்கு மக்கா கிளை நிர்வாகிகளை தொடர்புகொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறோம்

குறிப்பு; கபத்துல்லாஹ்வை சுத்தம்செய்யும் வேலைக்கு சவூதி

பின்லேடன்(Saudhi Bin ladhin Group Of company) நிறுவனம்தான் ஆள் எடுக்கும் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம் தொடர்புக்கு;

சகோதரர் அப்துர்ரஹ்மான்(00966509740408)

சகோதரர் அபுதாகிர் (009666556375350)

லால்பேட்டை முபாரக்வீதீ அன்சாரி மனைவி வஃபாத்

லால்பேட்டை மெயின் ரோடு மர்ஹும் லப்பை லண்டன் ஜியாவுதீன்   அவர்களின் மகளும் முபாரக் வீதி  கும்முலியா அன்சாரி அவர்களின் மனைவியுமான  லுத்துபுன்னிசா அவர்கள்  இன்று 08.08.2010  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 6.30. மணிக்கு நடைப்பெரும்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது

7.8.10

காவல் துறை நிரூபண - சான்றிதழ் இல்லாமலேயே ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது

சென்னை, ஆக.4-


காவல் துறையின் நிரூபண சான்றிதழ் இல்லா மலேயே ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு 8 மாதம் செல்லத்தக்க பாஸ் போர்ட்டை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள் ளது. அதன்படி 15 நாளில் முதல் பாஸ்போர்ட் சென் னையில் கடந்த திங்கட் கிழமை வழங்கப்பட்டது.



வழக்கமாக பாஸ் போர்ட் வாங்க ஒருவர் விண்ணப்பம் செய்தால் அவரை பற்றி காவல் துறையினர் விசாரித்து ஒரு நிரூபண சான்றிதழ் வழங்க வேண்டும் அதன் அடிப் படையிலேயே பாஸ் போர்ட் வழங்கும் அலுவ லகம் சம்பந்தப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட்டை வழங்கும். இந்த முறையில் கால தாமதம் ஏற்படுகிறது.



சமீபத்தில் சவூதி அரேபியா சர்வதேச பாஸ்போர்ட் வைத்தி ருப்பவர்கள்தான் தங்கள் நாட்டிற்கு ஹஜ்பயணம் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்தது



இந்த நிலையில், ஹஜ் பயணிகளுக்கு பாஸ் போர்ட் வழங்க மத்திய அரசு காவல் துறையின் நிரூ பண சான்றிதழ் இல்லாம லேயே 8 மாதம் செல்லத் தக்க தற்காலிக பாஸ் போர்ட்டுகளை வழங் கும்படி அனைத்து பிராந் திய பாஸ்போர்ட் அதி காரிகளுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



மத்திய அரசு இது தொடர்பாக இரண்டு முறை கூடி ஆலோசித்த பின் இந்த முடிவுக்கு வந்து ஹஜ் பயணிகளுக்கு பாஸ் போர்ட் வழங்குவதை விரைவுபடுத்த காவல் துறை நிரூபண சான்றிதழ் இல்லா மலேயே 15 நாளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப் பதாக இந்திய ஹஜ் கமிட்டியைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி கூறினார்.



இந்த மாதிரி 8 மாதம் செல்லத்தக்க தற்காலிக பாஸ்போர்ட்டை பெறும் ஹஜ் பயணிகள் அந்த பாஸ்போர்ட்டை நிரந்தர பாஸ்போர்ட்டாக மாற்ற வேண்டும் என்று விண் ணப்பித்தால் காவல் நிரூபண சான்றிதழ் உள் பட அனைத்து விதி முறை களையும் பின்பற்றி நிரந்தர பாஸ்போர்ட் வழங்கப் படும் என்று அந்த அதி காரி கூறினார்



ஏற்கனவே, ஹஜ் பய ணத்திற்காக பாஸ் போர்ட் விண்ணப்பித்து காவல் துறை நிரூபண சான்றிதழ் போன்ற வற்றிற்காக ஜூன் 20-ம் தேதி வரை நிலுவை யில் உள்ள விண்ணப்பத் தாரர்களுக்கு உடனடியாக பாஸ்போர்ட் வழங்கப் படும் என்றும் அவர் மேலும் கூறினார்.



மத்திய வெளியுறவுத் துறையிலிருந்து பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங் களுக்கு அனுப்பப்பட்டி ருக்கும்

சுற்றறிக்கையில் மேற்கொண்டு கூறப்பட் டிருப்பதாவது-



ஹஜ் கமிட்டியின் கவர் எண் உள்ள அனைத்து உண்மையான ஹஜ் பயண விண்ணப்பத்தாரர்களுக்கு புதிய திட்டப்படி உடன டியாக பாஸ்போர்ட் வழங்க வேண்டும்..



தனியார் ஹஜ் பயண முகவர்களுக்கு 45 ஆயிரம் பயண கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆகஸ்டு 13-ம் தேதிக்குள் தகுந்த நிரூபண ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட் டிருக்கிறது.



புதிய திட்டப்படி காவல் துறை நிரூபண சான்றிதழ் இல்லாமலேயே அதை விண்ணப்பித்த 15 நாளில் சென்னை பிராந் திய பாஸ்போர்ட் அலுவ லகம் 8 மாதங்கள் செல்லத் தக்க ஒரு பாஸ்போர்ட்டை சென்னையில் ஒரு ஹஜ் பயணிக்கு வழங்கியிருப் பதாக துணை பாஸ் போர்ட் அதிகாரி கே.எஸ். தவ்லத் தமீம் அறிவித்தார்.
 
நன்றி
 
முதுவை ஹிதாயத்

முஸ்லிம் மாணவர்கள் வங்கிக் கணக்குதொடங்க மறுக்கக் கூடாது

குறைந்தபட்சத் தொகை இருப்பில் இல்லாமல் முஸ்லிம் மாணவர்கள் வங்கி கணக்கை தொடங்க மறுக்கக் கூடாது என நாடாளுமன்றத்தில் எம். அப்துர்ரஹ்மான் கோரிக்கை வைத்தார்.

நாடாளுமன்ற மக்கள வையில் 377-வது விதியின் கீழ் அவசர மற்றும் அவ சிய பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் மீது வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் பேசியபோது குறிப்பிட்ட தாவது-

சிறுபான்மை மாண வர்களுக்கு வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் பல்வேறு சிரமங்கள் இருப் பதாக ஆங்கிலப் நாளிதழ் களில் இன்று விரிவான செய்திகள் வெளி வந்துள் ளன.

.