31.7.08

லால்பேட்டையில் காவல்துறையினருடன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் பேச்சு! அமைதி, ஏற்படுத்த வேண்டுகோள்!!



லால்பேட்டையில் பைஜிஷா நூரி கந்தூரி விழா தொடர்பாக லால்பேட்டை
ஜமாஅத்தினருக்கும், முரீதுகளுக்குமிடையில் ஏற்பட்ட தாவா, மோதலாக மாறி போலீஸார் தடியடி நடத்தினர். பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக முஸ்லிம் ஜமாஅத்தினர் 1065பேர் மீது கடுமையான பிரிவுகளில் காட்டு மன்னார்குடி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்டடோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அணுசக்தி ஓப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக் கடுப்பு நடைபெற்றது. அதில் பங்கேற்கச் சென்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் டெல்லியிலிருந்து 23ஆம் தேதி மாலை சென்னை திரும்பியதும் லால்பேட்டை நிலவரங்களை கேட்டறிந்து மனம் வருந்தினார்.

24 வியாழனன்று லால்பேட்டை சென்ற தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் எம்.பி, பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் சையத்சத்தார், பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அகமது ஆகியோர் முழுமையான நடப்புக்களை விசாரித்தனர்.

பின்னர் கடலூர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் பிரதீப்குமார் சேத்தியாத்தோப்பு துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் நேற்றும் இன்றும் பேசிய தலைவர் பேராசிரியர், காவல்துறையினர் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும், நிரபராதிகள் எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது. முஸ்லிம்கள் சமாதானத்தையே விரும்புவர். அதற்கு காவல்துறையினர் துணை நிற்க வேண்டும்.
ஒரே ஊர் ஓரே சமுதாயம் நிரந்தர பகை உணர்வுக்கு ஆளாகக் கூடிய எதையும் செய்வதற்கு காவல்துறை இடமளித்து விடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.

மத்தியிலும் மாநிலத்திலும், முஸ்லிம்களின் நலன் காக்கும் அரசுகள் அமைந்துள்ள சூழ்நிலையில் அந்த நல்லரசுகளுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும் செயலை முஸ்லிம்கள் ஒரு போதும் செய்யக்கூடாது என கேட்டுக்கொண்ட பேராசிரியர், முழு அமைதியும் சமாதானமும் சகோதர நல்லுறவும் ஏற்பட முன்வர வேண்டும்.
இதற்கு முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முழு ஓத்துழைப்பும் தரவேண்டும் என லால்பேட்டை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

27.7.08

லால்பேட்டை கலவரம் பற்றி குமுதம் வார இதழ்


ருடா வருடம் சர்ச்சையைக் கிளப்பும் கடலூர் மாவட்டம் லால்பேட்டை சந்தனக்கூடு திருவிழா, இந்த வருடம் பெரும் கலவரத்தில் முடிந்திருக்கிறது. "

இந்தக் கலவரத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன் சிறு `ஃப்ளாஷ் பேக்' ஒன்றைத் தெரிந்து கொள்வது அவசியம். கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்பேட்டை கிராமத்தில் வாழ்ந்து இறந்த `பைஜிஷாஹ் நூரி' என்ற பெரியவரின் உடலை அவரது மகன்கள், அவர் வாழ்ந்த வீட்டிலேயே அடக்கம் செய்து சமாதியாக எழுப்பி னார்கள். அத்துடன் `இவர் ஒரு குரு மகான்' என்று பைஜிஷாஹ் நூரியின் மகன்களும், இவரை வணங்கிவரும் ஆயிரக்கணக்கான சீடர்களும் அவரது சமாதியில் சந்தனக்கூடு திருவிழாவை நடத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால் உள்ளூர் முஸ்லிம்கள், `இஸ்லாம் மதத்திற்கு எதிரான சந்தனக்கூடு திருவிழாவை நடத்தவிடமாட்டோம்' என்று அதை எதிர்த்து வந்தனர். முதல் வருடம் சமாதியில் பாத்தியா ஓதும் நிகழ்ச்சியைக்கூட ஒன்றுகூடி தடுத்து விட்டனர். ஆனால், கடந்த வருடம் இப்படியான எதிர்ப்பைச் சமாளிக்கும் வகையில் தர்கா நிர்வாகிகள் நீதிமன்றத்திற்குச் சென்று தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்று போலீஸ் பாதுகாப்புடன் சந்தனக்கூடு திருவிழாவை வெகு சிறப்பாக நடத்திமுடித்துவிட்டனர். இதனால் ஆத்திரமான உள்ளூர் முஸ்லிம்கள் அன்றைய தினம் ஒட்டுமொத்த கடைகளையும் மூடி பந்த் நடத்தி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இது குறித்து நாமும் குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்படி கடந்த இரண்டு வருடங்களாக சிறு பிரச்னையில் முடிந்த இந்த விவகாரம்தான் இந்த வருடம் பெரும் கலவரத்தில் முடிந்திருக்கிறது.கடந்த இருபத்திரண்டாம் தேதி `பைஜிஷாஹ் நூரி' தர்காவில் மூன்றாம் வருட சந்தனக்கூடு திருவிழாவிற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கிறது.

மதியம் மூன்றரை மணிவாக்கில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஒன்றுகூடி `பைஜிஷாஹ் நூரி' தர்காவை நோக்கிப் புறப்பட்டிருக் கின்றனர். இத்தனை பேர் ஒன்று கூடி புறப்படும் விஷயம் போலீஸாருக்குத் தெரியவே தெரியாதாம்.

அந்த தர்காவில் ஒரு எஸ்.ஐ. உள்ளிட்ட நான்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தர்காவை நோக்கி வந்த கூட்டத்தைப் பார்த்தவுடன் என்னவோ விபரீதம் நிகழப்போகிறது என்று நினைத்த போலீஸார், தங்கள் உயர் அதிகாரியான சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. ராமச்சந்திரனுக்குத் தகவல் கொடுத்திருக் கின்றனர். அவரும் சொற்ப போலீஸ் படையுடன் லால் பேட்டைக்கு விரைந்திருக்கிறார்.

ஆனால், சுனாமி போல் வந்த கூட்டத்தின் மத்தியில் இந்த போலீஸாரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. முதலில், வந்த கும்பல் தர்கா வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட கார்கள், மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியிருக்கிறது.

மேலும், கார்களைத் தூக்கிக் கவிழ்த்து உடைத்திருக்கிறது. இதனைப் பார்த்த மக்கள் அலறித் துடித்து ஓடியிருக்கின்றனர். அடுத்து தர்காவினுள் புகுந்த அக்கும்பல் எதிர்ப்பட்டவர்களை உருட்டுக்கட்டைகளாலும், ஆயுதங்களாலும் தாக்கியதில் அந்தப் பகுதியே கலவரத்தில் மிதந்திருக்கிறது.சுமார் முக்கால் மணிநேரம் தாக்குதலைத் தொடர்ந்தவர்கள், தர்காவினுள் இருந்த சமாதியையும் சேதப்படுத்திவிட்டுத்தான் திரும்பியிருக்கிறார்கள். தர்காவின் முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியே சென்றிருந்ததால் அவர்கள் உயிர் தப்பித்ததாகவும் சொல்கிறார்கள்.

இந்தத் தாக்குதலில் போலீஸார் சிலரும் பலத்த காயமடைந்திருக்கின்றனர். இவ்வளவும் நடந்து முடிந்த பிறகு வந்த போலீஸ் படையினர், லால்பேட்டைப் பகுதியில் கண்ணில் பட்ட முஸ்லிம் இளைஞர்களையெல்லாம் அடித்து, உதைத்தனர். பள்ளிவாசலுக்குள் ஓடி ஒளிந்த பலரையும் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். தற்போது ஊரே வெறிச்சோடிக் கிடக்கிறது.

கலவரம் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் போலீஸார், சுமார் நாற்பது நபர்களை மட்டும் கைது செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில், இருதரப்பிற்கும் பொதுவான ஒரு முஸ்லிம் இளைஞர் நம்மிடம் பேசினார். "இந்தக் கலவரத்திற்கு போலீஸார்தான் காரணம். இரண்டு வருடங்களாகப் பிரச்னையுடன் விழா நடைபெற்று வரும் இடத்தில் சொற்ப அளவில் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் நியமித்திருக்கின்றனர்.

ஓர் இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதை உளவுப்பிரிவு, தனிப்பிரிவு போலீஸார் ஏன் முன்கூட்டியே கவனிக்கத் தவறினர் என்று தெரியவில்லை.

இந்தக் கலவரத்திற்கு சம்பந்தமில்லாத முஸ்லிம் இளைஞர்களையெல்லாம் கைது செய்து, அவர்கள் வெளி நாடு செல்ல முடியாத சூழ்நிலையையும் ஏற்படுத்துகின் றனர். `வழக்கில் பெயரைச் சேர்த்துவிடுவோம்' என்று சொல்லியே மிரட்டி போலீஸார் சிலர் ஆதாயம் பார்த்து வருகின்றனர்'' என்றார் கொதிப்புடன்.

ஆனால் போலீஸ் தரப்போ, "ஒன்றுகூடியவர்கள் கலவரத்தில் ஈடுபடுவார்கள் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் தற்போது கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. இதில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அப்பாவிகள் ஒருவரைக் கூட போலீஸ் கைதுசெய்யவில்லை'' என்று உறுதி கூறுகின்றனர்.

இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய சில முஸ்லிம் அமைப்பினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, `நீதிமன்ற உத்தரவை மீறி கொடியேற்றம், சந்தனக்கூடு திருவிழா என அவர்கள் நடத்தினர். இதனைத் தட்டிக் கேட்கத்தான் சிலர் சென்றனர்.

அப்போது தர்காவினுள்ளே இருந்து கொண்டு சிலர் பாட்டில்களை வீசி எறிந்தனர். அதனால்தான் கலவரம் நிகழ்ந்துவிட்டது. தொடக்கத்திலேயே நீதிமன்ற உத்தரவை மீறி நடந்த அவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படியொரு சம்பவமே நடந்திருக்காது'' என்று போலீஸைக் குற்றம் சாட்டினர். அதேபோல் எதிர்த்தரப்பும் பத்திரிகையாளர்களிடம், `நீதிமன்றம் எங்களுக்குச் சாதகமான தீர்ப்பைத்தான் கொடுத்திருக்கிறது.

ஆனால், விழா நடத்திய எங்களுக்கு போலீஸார் பாதுகாப்புத்தராத காரணத்தால்தான் கலவரம் நடந்திருக்கிறது' என்று அவர்களும் போலீஸாரையே குற்றம் சாட்டினர்.


23.7.08

லால்பேட்டை கலவரம்: பதட்டம் நீடிப்பு; கடைகள் அடைப்பு; கல்வீச்சு, தடியடி- 20 பேர் காயம்

சிதம்பரம், ஜுலை.23-
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் பைஜீஷானூரி தர்க்கா உள்ளது. இங்கு உருஸ் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இன்று உருஸ் விழா தொடங்குவதாக இருந்தது.இதற்கு முஸ்லிம் ஜமாத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இது சம்பந்தமான அமைதி பேச்சுவார்த்தை தாசில்தார் ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிலையில் ஜமாத்தார்கள் மற்றும் தர்கா நிர்வாகத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜமாத்தார்கள் லால் பேட்டை மெயின் ரோட்டில் பட்டாசு வெடித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. ஒருவரையொருவர் உருட்டுக்கட்டை, இரும்பு கம்பி, சோடாபாட்டிலால் தாக்கி கொண்டனர். லால்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள கடைகள், அங்கு நின்ற கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மினி டெம்போ வேன்கள், சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் 5 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள், 2 மினி டெம்போ வேன், 25 சைக்கிள்கள் சேதம் அடைந்தன. தர்கா உரிமையாளர் ரகமத்துல்லாவின் வீடு, கடைளும் அடித்து நொறுக்கப்பட்டது.
கலவரக் கும்பல் போலீசார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், காந்தி, சோழதரம் ஏட்டு ஞானசேகரன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமார் மற்றும் அதிவிரைவு படை போலீசார் விரைந்து வந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த 20 பேர் காயம் அடைந்தனர். இந்த கலவரத்தால் அங்கு நேற்று 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கலவரம் தொடர்பாக 934 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 30 பேர் கைது செய்யப்பட்டனர். கலவ ரத்தை தொடர்ந்து இன்றும் லால்பேட்டையில் பதட்டம் நீடிக்கிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 750 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாலை மலர், கடலூர் மாவட்ட செய்திகள் 23.07.08

லால்பேட்டையில் பயங்கர கலவரம் போலிசார் குவிப்பு..

லால்பேட்யைடயில் பசீர் மெளலானாவை அவுலியாகவொ அல்லது அவதாரமாகவோ சித்தறித்து சந்தனக்கூடு எடுக்க கூடாது என்று தடை உத்தரவு கோறி லால்பேட்டை ஜமாத் சாற்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.

அந்த வழக்கிர்க்கு நீதி மன்றம் லால்பேட்டை ஜமாத்திர்க்கு சாதகமாக இன்று 22.07.2008 தீர்ப்பு வழங்கியது.

இதை மகிழ்ச்சியுடன் வெடி வெடித்து ஆறவாரம் செய்த ஜமாத்தினர் மீது மெளலானா கோஸ்டியினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் இரண்டுதறப்புக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது இதில் 8 கார்கள் 5 கடைகள் 10 இரு சக்கர வாகனங்கள் நொருக்கப்பட்டன பலர் படுகாயம் அடைந்தனர் ஊர் முலுவதும் போலிஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஊர் ஜமாத்தினர் இருநூறுக்கும் மேற்பட்ட முதியோர்கள் சிறுவர்களை போலிசார் கைது செய்து உள்ளனர்.

18.7.08

பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை வீடியோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது.

லால்பேட்டை ஜூலை 18

பெருமைக்குரிய நமது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா வரும் 13.08.2008ல் நடைபெரும் நமது ஜாமியா பட்டமளிப்பு விழாவின் { தாருல் தப்ஸீர் கலை கூடத்தில் நடைபெரும் நிகழ்ச்சியை மட்டும் } நமது ஊர் கண்னியம் மற்றும் ஜாமியாவின் கண்னியம் கெடாதவகையில் வீடியோ படம் எடுக்க அனுமதி வழங்குமாரு லால்பேட்டை இனையதளம் சார்பாகவும் வெளிநாடுகளில் வாழும் நமது ஊர் ஜமாத்தினர் சார்பாகவும் அனுமதி கோறி ஜாமியா நிர்வாக சபைக்கு கடிதம் அனுப்பபட்டது.

16.07.2008ல் ஜாமியா நிர்வாக சபை கூட்டம் நடைபெற்றது அதில் பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை வீடியோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது.

.

17.7.08

லால்பேட்டை கொத்தவால் தெரு பவுஜியா பேகம் வஃபாத்

லால்பேட்டை கொத்தவால் தெரு {தெக்கித்தியார்} T.H. ஹபிபுற்றஹ்மான் மனைவி பவுஜியா பேகம் அவர்கள் இன்று 17.07.2008ல் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



தகவல்

சஹரா டிராவல்ஸ்

16.7.08

லால்பேட்டை நகரில் இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்: சிறப்புரை பாத்திமா முஸப்பர்

லால்பேட்டை ஜுலை 16

கடலூர் மாவட்டம் லால்பேட்டை நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம் 19.07.2008 ல் நடைபெற உல்லது இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மகளிரணி அமைப்பாளர் ஹாஜியா A.S. பாத்திமா முஸப்பர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மார்க்க அணி அமைப்பளர் மெளலவி N. ஹமித் பக்ரி மன்பஈ, மற்றும் மாவட்ட நகர முஸ்லிம் லீக் தலைவர்கள் சிறப்புரை நிகழ்த்துவார்கள்.

லால்பேட்டை ஜமியா பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை வீடியோ எடுக்க அனுமதி கோரி வின்ணப்பம்...

பெருதல்:
ஜாமியா முதல்வர்,செயளாலர்,
மற்றும் நிர்வாகசபையினர்.
ஜாமியா மன்பவுல் அன்வார்.
லால்பேட்டை

அஸ்ஸலாமு அலைக்கும்{வரஹ்}
பெருமைக்குரிய நமது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா வரும் 13.08.2008.ல் நடைபெற இருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

இன்றைய உலகில் அறிவியல் மிக வேகமாக வழர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் நமது நாட்டில் பல ஊர்களில் உல்ல மதரஸாக்கலில் நடைபெரும் பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை ஆன்லைன் மூலம் ஒளிபரப்பி தங்கள் ஊறார்கல் உலகில் எங்கெல்லாம் வாழ்கின்றார்கலோ அவர்கள் அனைவரும் பார்க்க வகைசெய்கின்றனர்.
இன் நிலையில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் நமது ஊர் சகோதரர்கள் பயன் பெரும் வகையில் நமது ஊரில் நடைபெரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் லால்பேட்டை இனையதளம் ஒளிபரப்பி வருகின்றது அல்ஹம்துலில்லஹ்.

அதன் வாயிலாக நமது ஜாமியாவின் பட்டமளிப்பு விழாவையும் லால்பேட்டை ஆன்லைன் மூலமாக ஒளிபரப்பு செய்து நமது ஊர் சகோதரர்கள் மற்றும் இன்றி உலகில் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் முஸ்லிம் சமுதாய மக்கள் அனைவர்களும் பார்த்து நமது ஜாமியாவின் பட்டமளிப்பு விழா சிறப்பை அறிந்திட வேண்டும் என்று வெளிநாடுகளில் வாழும் நமது ஊர் ஜமாத்தார்கள் அனைவரும் விறும்புகின்றனர்.

எனவே 13.08.2008ல் நடைபெரும் நமது ஜாமியா பட்டமளிப்பு விழாவின் { தாருல் தப்ஸீர் கலை கூடத்தில் நடைபெரும் நிகழ்ச்சியை மட்டும் } நமது ஊர் கண்னியம் மற்றும் ஜாமியாவின் கண்னியம் கெடாதவகையில் வீடியோ படம் எடுக்க அனுமதி வழங்குமாரு லால்பேட்டை இனையதளம் சார்பாகவும் வெளிநாடுகளில் வாழும் நமது ஊர் ஜமாத்தினர் சார்பாக பனிவன்போடு கேட்டுகொள்கின்றோம். வஸ்ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் {வரஹ்}

திருடர்கள் ஜாக்கிரதை....!

அஸ்ஸலாமுஅலைக்கும்
கடந்தவாரம் புதன்கிழமை மாலை என் குடும்ம்பத்தினர் சிதம்பரத்தில் இருந்து பேருந்து மூலம் லால்பேட்டைக்கு வந்தனர். மாலை நேரம் பேருந்தில் கூட்டம் அதிகம். கை பையில் வைத்திருந்த செல் போனை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கானவில்லை (Value SR.500-Nokia). கூட்டனெரிசலில் எவனோ தன் கைவரிசையை கட்டிவிட்டான். பொது மக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Meerasan Ahamed
ahamed_lpt@hotmail.com
அஹமது, ஜுபைல், சௌதி அரேபியா.

ஜாமிஆ ம்ஸ்ஜிதில் துஆ செய்யப்பட்டது....

லால்பேட்டை ஜூன் 27:
இன்று லால்பேட்டை ஜாமிஆ மஸ்ஜிதில் ஜும்ஆ பயானுக்கு பின் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு துஆ செய்யப்பட்டது. ஜாமிஆ மன்பவுல் அன்வார் துணை முதல்வர் மொளலவி ஹபிழ் A. அல்ஹாஜ் நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் மறைந்த தலைவரின் சேவையை நினவு கூர்ந்து துஆ செய்தார்கள் இதில் ஆயிரக்கணக்கனோர் பங்கேற்று அண்னாரின் மஃபித்திற்க்காக துஆ செய்தார்கள்.


மெயின்ரோடு பள்ளிவாசலில் துஆ செய்யப்பட்டது....


லால்பேட்டை ஜூன் 27:
இன்று லால்பேட்டை மெயின்ரோடு பள்ளிவாசலில் அஸர் தொழுகைக்கு பின் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் மர்ஹும் G.M. பனாத்வாலா ஸாகிப் அவர்களுக்கு குர்ஆன் ஓதி ஹத்தம் செய்யப்பட்டது. ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் மொளலவி முப்தி, S.A. அப்துர் ரப் ஹஜ்ரத். ஜாமிஆ ம்ன்பவுல் அன்வார் துணை முதல்வர் மொளலவி ஹபிழ் அல்ஹாஜ், A. நூருல் அமீன் ஹஜ்ரத். பேராசிரியர் அப்துல் அலி ஹஜ்ரத். மவட்ட முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் S.A.அப்துல் கப்பார். நகர தலைவர் அல்ஹாஜ், K.A.முஹம்மது. செயலாளர் M.H.முஹம்மது ஆசிப். பொருலாளர்,A.M. ஜாபர். மாநில மாணவர் அணி அமைப்பாளர் A.S. அப்துல் ரஹ்மான். நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அப்துல் காதர். முஹம்மது பாருக். மஸ்ஊத் அஹ்மத். முஹம்மது தையூப். மர்ஜுக் அஹ்மத். மற்றும் ஜமத்தர்கள் கலந்துக்கொன்டு மறைந்த தலைவரின் சேவையை நினவு கூர்ந்து அண்னாரின் மஃபித்திற்க்காக துஆ செய்தார்கள்.

புனிதமிகு புகாரி ஷரீப் 32 ஆம் ஆண்டு நிறைவு துஆ மஜ்லீஸ்

லால்பேட்டை ஜூன் 27:
புனிதமிகு புகாரி ஷரீப் 32 ஆம் ஆண்டு நிறைவு விழா 05.07.2008 சனி மாலை ஞாயிறு இரவு 9 மணி அளவில் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெறும் தலைமை ஜாமியா முதல்வர் மொளலானா மொளலவி அல்ஹாஜ் S.A. அப்துர் ரப் ஹஜ்ரத் அவர்கள், சிறப்பு சொற்பொழிவு: ஈரோடு தாவூதிய்யா அரபிக்கல்லூரி துணை முதல்வர் மொளலானா மொளலவி ஹபிள், M.S. உமர் பாரூக் ஹஜ்ரத்,அவர்கள் மற்றும் ஜாமிஆவின் பேராசிரியப் பெருந்தகைளும் உலமா பெருமக்களும் கலந்துக்கொன்டு உரையாற்றுவார்கள்.

லயன்ஸ் கிளப் துவக்கம்

லால்பேட்டை மார்ச்29, லால்பேட்டை நகரில் லயன்ஸ் கிளப் துவக்கம் நூரு ஆண்டுகளாக சுமார் 202 நாடுகளில் 751 மாவட்டங்களில் 44467 கிளைகளில் 13.00.000 உறுப்பினர்களை கொண்டு நாடு, இனம், சாதி, நிறம் என்ற எவ்வித பாகுபாடுமின்றி இயங்கி வரும் உலகின் தலைசிறந்த சேவை இயக்கம் என்று கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்து வரும் லயன்ஸ் இயக்கம் பாரம்பரிய மிக்க ஆன்றோர்களும், சான்றோர்களும் மிகுந்த லால்பேட்டை நகரில் தனது கிளையை ஏற்படுத்தி தங்களின் மூலமாக சேவைசெய்திட உள்ளது இதன் பொருட்டு மேற்படி ஆலோசனை கூட்டம் வரும்ன் 01.04.2008 அன்று மாலை 6.30 மணி முதல் 8.30 வரை லால்பேட்டை மினாதெரு இமாம் புகாரி ஸ்கூலில் நடைபெற உள்ளது. அதுசமயம் தங்கள் தவறாது கலந்துக் கொண்டு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றோம்.

Ln . இ. முஹம்மது கமலுதீன்
விரிவாக்க தலைவர்
கடலூர் துறைமுக லயன்ஸ் சங்கம்

தகவல் தொடர்புக்கு

மெளலவி. M.Y. முஹம்மது அன்சாரி
0091 9360354429

மெளலவி. அல்ஹாஜ்.A.S. அப்துல் ரஹ்மான் BA
0091 9894952806

14.7.08

வஃபாத் செய்தி...

வஃபாத் செய்தி...


லால்பேட்டை தெற்கு தோப்பு கங்கனத்தார் அப்துல் மாலிக் அவர்கள் இன்று 13.06.2008 தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



வஃபாத் செய்தி...

லால்பேட்டை வடக்கு தெரு S.A. முனவ்வர் ஹுசைன் அவர்கள் இன்று 07.06.2008 ( 9.15PM ) மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



வஃபாத் செய்தி...

லால்பேட்டை வடக்கு தெரு அவுலாப்பு ஜெய்னுல்லாபுதீன் அவர்கள் இன்று 07.06.2008 ( 8.00 PM ) மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



வஃபாத் செய்தி...

லால்பேட்டை வடக்கு தெரு மொளலவி அல்ஹாஜ் S.A. தமீஜுத்தீன் அவர்கள் இன்று 19.05.2008 காலை 9.30 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



வஃபாத் செய்தி...

லால்பேட்டை ஸ்கூல் தெரு நத்தர் முஹம்மது லுக்மான் அவர்கள் இன்று 07.05.2008 தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



வஃபாத் செய்தி...

லால்பேட்டை ஜாபர் வீதி குத்புதீன் அவர்கள் இன்று 12.04.2008 தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.



வஃபாத் செய்தி...

லால்பேட்டை சிங்கார வீதி வானகார் MLA அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று 07.04.2008 தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.





வஃபாத் செய்தி...

லால்பேட்டை சுலைமான் சேட் வீதி அஸாபிள்ளை முஹம்மது அலி அவர்கள் இன்று 07.04.2008 தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

.