7.10.10

உயிர் காக்க உதவுங்கள்.!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...




விழுப்புரம் மாவட்டம், கண்டமங்களம், பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜனாப் R.


உசேன் கான், இவர் குவைத்தில் குறைந்த சம்பளத்தில் ஓர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றுகிறார்.



தன்னுடைய மூத்த மகன் H. யாசீன் கான் (வயது 17). இவருக்கு வயிற்றுப்

பகுதியில் Crohn's

Disease என்ற வைரஸ் புண் நோய் பரவியுள்ளதால் கடந்த 2006ம் ஆண்டிலிருந்து 1

வருடம் வரை இன்ன வியாதி என்று கடலூர், பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில்

கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் உயிருக்கு போராடிய நிலையில் சென்னை அப்பல்லோ

மருத்துவமனையில் சேர்த்த பிறகு எல்லா விதமான சோதனைகள் செய்து Crohn's Disease என்று கண்டுபிடித்து சொல்லி விட்டனர்.



உடனடியாக 70 ஆயிரத்துக்குண்டான ஊசியை 3 முறை போட வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறிவிட்டனர். கடன் வாங்கி இந்த ஊசிகளையும் போட்டு சிகிச்சை அளிக்கபட்டது.

இதுவல்லாமல் மாதந்தோறும் மாத்திரைகளுக்கு மட்டும் 6 ஆயிரம் ரூபாய் வரை

செலவாகிறது. இந்த மாத்திரைகளை இந்த பிள்ளை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.



இவ்வாறு சிகிச்கை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு வருடம் நன்றாக இருந்த இந்த பிள்ளைக்கு Infection ஆகிவயிற்றில் இருந்த புண் ஆசன வாய் பக்கத்தில் துவாரம் ஏற்படுத்தி விட்டதால் மறுபடியும் 70 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள ஊசியை10

முறை (2 மாதத்திற்கு 1 என்ற அளவில்) போட வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறி விட்டனர்.



இதுவரை 6 ஊசிகள் போடப்பட்டுள்ளன. அதற்கான பில்களும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.


சுமார் 10 இலட்ச ரூபாய் மருத்துவ செலவு ஆகியும் மேலும் அவருடைய உடல்நிலையை குணப்படுத்த பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.



மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்கு மருத்துவரின் ஆலோசனைப்படி பணம் தேவைப்படுகிறது. ஆனால், பணம் பற்றாக்குறையினால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 4 ஊசிகளையும் போட வேண்டும்.



இந்த பிள்ளையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சகோதர சகோதரிகள் உடனடியாக

மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு தங்கள் இயன்ற உதவிகளை வழங்கிடுமாறு சகோதரர் R. உசேன் கான் வேண்டுகோள் விடுக்கின்றார்.



மருத்துவ விபரங்களும், ஜமாஅத்தின் கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.



அதற்காக 10௦ ஊசிகள் போட வேண்டும் என்றும், ஒரு ஊசியின் விலை IRS 65 000,௦௦௦/-

என்றும் கூறி உதவி கேட்டு இருந்தார்கள். பல சஹோதரர்கள் உதவிகளை செய்து

இருந்தார்கள். அல்லாஹ்வின் உதவியால் இதுவரை 7 ஊசிகள் செலுத்தி விட்டனர்.

வரும் மாதம் 29 அன்று எட்டாவது ஊசி செலுத்த வேண்டும் என்பதால் உங்களின் உதவியை எதிர்பார்க்கிறார்.



ஊசிகள் அல்லாமல் மாதம்தோறும் IRS 7000,௦௦௦/- மும் மற்ற மருந்துகளுக்காக செலவழித்து வருகிறார் என்பதும், இதுவரை ஆறு லட்சங்கள் செலவழித்து விட்டார் என்பதும், சஹோதரர் ஹுசைன் குவைத்தில் ஒரு கம்பெனியில் ஆபீஸ் boyaga வேலை செய்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது. இன்னும் மீதமுள்ள ஊசிகளை செலுத்திம்விட்டால் நோய் குணமாகும் வாய்ப்பு இருப்பதால் சஹோதரர்கள் உதவுமாறு அன்புடன்
கேட்கிறோம்.


இது நாள் வரை ஊசி வாங்கிய செலவிற்கான பில் இத்துடன் இணைக்கபட்டுள்ளது.


தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:

ஜனாப் R. உசேன் கான் - (+965) 99 53 44 84

ஜனாபா H. குர்ஷித் பேகம் - (+91) 944 299 3 227 / 97 87 062 891

வங்கி கணக்கு விபரங்கள்:


H. KHURSITH BEGAM, A/c # 833637623, Indian Bank, Ariyoor Branch, Pondicherry

- 605102.
 
 
தகவல்:
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

0 comments:

.