26.8.10

திருமண கட்டாயப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்த தமிழக அரசுக்கு ; முஸ்லிம் லீக் நன்றி!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கை:


2009ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி முதல் அமுலுக்கு வந்த தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம், இஸ்லாமிய ஷரீஅத் மற்றும் முஸ்லிம்களின் திருமண நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடும் என்ற ஐயப்பாடு ஏற்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சமுதாய அமைப்புகள், தமிழக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஜமாஅத்துகள், காலம் காலமாக செய்யப்படும் முஸ்லிம் திருமண பதிவு முறையையே (தப்தர்) அரசு தனது பதிவு முறையாக ஏற்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

முஸ்லிம்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றி தமிழக அரசு திருமணப் பதிவுச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் வெளியிட்டு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது.

முஸ்லிம்களின் உணர்வுகளை கண்ணியப்படுத்திய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு தமிழக முஸ்லிம் சமுதாயம் தனது ஒட்டுமொத்த நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது. சிறுபான்மை முஸ்லிம்களின் மார்க்கம் சார்ந்த உணர்வுகளை தெளிவாகப் புரிந்து மதிப்பளித்து ஒவ்வொரு காரியத்தையும் தொடர்ந்து செய்து வரும் தமிழக அரசிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

1 comments:

Mohamed G said...

நன்றி

.