5.12.08

வெள்ளத்தில் தத்தளித்த கடலூர் மாவட்டம்! உதவி கரம் நீட்டியது தமுமுக!!

கடலூர் மாவட்டம் முழுமையாக வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. சிதம்பரம், லால்பேட்டை, காட்டுமன்னார்குடி, கடலூர் ஓ.டி. ஆகிய பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. சிதம்பரம் நகரத்தில் பள்ளிப்படை, மணலூர், எம்.ஆர்.யு.நகர், நந்தவனம், ஓமக்குளம், கலைவாணர் நகர், உசுப்பூர், எம்.கே.தோட்டம், பூலாம்பேடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெய் புலவு சாப்பாடு, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், ரவா உப்புமா, பால் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட், குடிநீர் மற்றும் மருந்துப் பொருட்கள் என சுமார் 4000 நபர்களுக்கு நவம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி விநியோகம், மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளில் மாவட்ட தமுமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் துறைமுகம் ஓ.டி. பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளை மாவட்டச் செயலாளர் சேக் தாவூது, நகர பொருளாளர் அஷ்ரப் ஆகியோர் தலைமை யில் தமுமுகவினர் செய்து வருகின்றனர்.

லால்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் மழை யின் காரணமாக வீடுகளையும் உடைமை களையும் இழந்து வெள்ளத்தில் தத்த ளித்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உணவு, மருத்துவம், அத்தியாவசியத் தேவைகள் செய்து கொடுக்கப்பட்டது.

நிவாரணப் பணியில் தமுமுகவினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ் வழியே வந்த உள்ளாட்சித் துறை அமைச் சர் மு.க.ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி தமுமுக நிவாரண முகாமைப் பார்வையிட்டு, தமுமுகவினர் தயாரித்த உணவை ருசி பார்த்து “உணவு நன்றாக உள்ளது. சிறப்பாக செயல் படுங்கள்’’ என்று உற்சாகமூட்டிச் சென் றார்.

அவரிடம் தமுமுகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவில், “லால் பேட்டை மற்றும் கொல்லிமன கீழ்பாதி, கொல்லிமன மேல்பாதி, வ.குளக்குடி, ஜாகிர் உசேன் நகர், ரஹ்மத் நகர் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வீடு, உடமைகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்குமாறு லால்பேட்டை தமுமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது’’
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரணம் துரிதப் படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

எள்ளேரியில் சுமார் 1500 நபர்களுக் கும், ஆயங்குடியில் சுமார் 1000 நபர்களுக்கும் உணவு, பால், மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தமுமுக மாவட்டத் தலைவர் ஜின்னா தலைமையில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
Thanks TMMK

0 comments:

.