29.7.09

லால்பேட்டை சின்னையா ஹஸன் வஃபாத்

லால்பேட்டை அமானி வீதி சின்னையா ஹஸன் அவர்கள் 29.7.2009 இன்று தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்:

நூருல் அமீன்

26.7.09

லால்பேட்டை கோசி அப்துல் ஹமிது வஃபாத்

லால்பேட்டை தெர்கு தோப்பு சுலைமான் சேட்வீதி கோசி ஹாஜி முஹம்மது யூசுப் அவர்களின் மகனும் இலண்டனில் வசிக்கும் சாதுல்லா ,இலியாஸ் ஆகியோரின் மச்சனுமாகிய அப்துல் ஹமீது அவர்கள் இன்று 26.07.2009 மதியம் 1.30 மணியவில் மஸ்கட்டில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்

லால்பேட்டை சிராஜுத்தின் மற்றும் அவர் மனைவி சாஜாத் விபத்தில் மரணம்

லால்பேட்டை ஜுலை 26,




லால்பேட்டை வண்ணான் தெரு சிரஜுத்தின் மற்றும் அவர் மனைவி சாஜாத் ஆகியோர் விருத்தாசலம் அருகில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளாகி தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இனலில்லாஹி வா இன்ன இலைஹி ராஜிஊன், இவர்கள் ஸ்கூல் தெரு முத்துறார் ஜாபர் அலி , முஹம்மது ஹனீப் ஆகியோரின் மச்சானும் சகோதரியுமாவார்கள், இவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 27.07.2009.திங்கள் மாலை நடைபெறும்,

12.7.09

லால்பேட்டையில் நினைவு நாள் கொண்டாடுவது குறித்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்

லால்பேட்டை ஜுலை.12- கடலூர்மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் மறைந்த பைஜி ஷா நூரி என்பவரின் நினைவு நாளையொட்டி உரூஸ் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக கடந்த ஆண்டு இருதரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

அதைதொடர்ந்து இந்த ஆண்டு விழாவை அமைதி யான முறையில் நடத்துவது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் ஜமாத் சார்பில் பத்தாவுதீன், அகமதுல்லா, அப்துல் ஹமீது,அகது, ஜியாவுதீன் மற்றும் பலரும், விழா குழு சார்பில் அப்துல்லா பைஜி, ரகமத்துல்லா பைஜி, நூருல்லா பைஜி,கைïப், முஸ்தபா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சிதம்பரம் ஆர்.டி.ஓ.ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் படி விழாவை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும் விழாவிக்குழுவினர் வீட்டுக்கு வெளியேபோட்டுள்ள கொட்டகையை பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.அதனை ஏற்ற விழாக்குழுவினர் கொட்டகையை பிரித்து கொள்ள சம்மதம் தெரிவித்து சென்றனர்.
Thanks

.