25.10.08

எடை குறைப்பு மாத்திரைகளால் உயிருக்கு ஆபத்து

நவீன வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் எடை அதிகரித்து உடல் குண்டாகிறது.

இங்கிலாந்து நாட்டில் மட்டும் 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குண்டு உடலை சுமக்க முடியாமல் நடக்கிறார்கள்.

குண்டு உடலை குறைக்க விரும்பும் இவர்கள் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு எடையை குறைக்கிறார்கள்.

இது போன்ற உடல் எடை குறைப்பு மாத்திரைகள் அபாயகரமானது என்று இங்கிலாந்து டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

ரிமோனாபென்ட் அல்லது அக்கம்பிளியா போன்ற மாத்திரைகளை பயன் படுத்துகிறவர்களுக்கு மன அழுத்தம், மனநல பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.


அது மட்டுமல்ல இது போன்ற மாத்திரைகளை பயன்படுத்துகிறவர்களை தற்கொலைக்கும் துண்டிவிட வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போது அந்த மாத்திரைகளுக்கு டாக்டர்கள் தடை விதித்துள்ளனர்.

0 comments:

.