1. யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
யா அல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக!
யா அல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தருவாயாக! யா அல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலதுபுறமிருந்தும் இடதுபுறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக!
எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
2. யா அல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யா அல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வாகிய உன்னைத் தவிர (வேறு) யாருமே இல்லை. இறைநிராகரிப்பை விட்டும் வறுமையை விட்டும் மண்ணறையின் வேதனையை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத்தவிர (வேறு) யாருமில்லை.
யா அல்லாஹ்! நீயே என் இரட்சகன்! உன்னைத்தவிர வணங்குவதற்குரியவன் வேறு யாருமில்லை.
நீயே என்னைப் படைத்தாய் நான் உன்னுடைய அடிமை நான் என்னால் முடிந்த அளவுக்கு உனது உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது நிலைத்திருக்கிறேன்.
நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
நான் செய்த சகல தீமையைவிட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
நீ எனக்களித்த அருட்கொடைகளைக் கொண்டு உன்பக்கமே நான் மீளுகிறேன். இன்னும் என்னுடைய பாவங்களை (மனமாற) ஒப்புக் கொள்கிறேன்.
எனவே என்னை நீ மன்னித்தருள்வாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது.
யா அல்லாஹ்! கவலையிலிருந்து (துயரத்திலிருந்து) நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
இன்னும் இயலாமை மற்றும் சோம்பேறித்தனத்திலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
இன்னும் கடன் அதிகரிப்பதிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
இன்னும் கடன் அதிகரிப்பதிலிருந்தும் மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
யா அல்லாஹ்! இந்த நாளின் ஆரம்பத்தைச் சீர்திருத்தம் உள்ளதாகவும் அதன் நடுவை வெற்றியுள்ளதாகவும் அதன் கடைசியை லாபம் உள்ளதாகவும் ஆக்கியருள்வாயாக!
அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! ஈருலக நலவையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
3. விதியை பொருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் மரணத்திற்குப் பின் குளிர்ந்த (சுவர்க்க) வாழ்வையும், வழிகேட்டின் குழப்பத்திலும் தீய விளைவைத்தரும் செயலிலும் ஈடுபட்டுவிடாது உன்னைச் சந்திப்பதின் ஆசையையும் உன் திருமுகத்தைப் பார்ப்பதில் அடையும் இன்பத்தையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.
நான் யாருக்கும் அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது யாராவது எனக்கு அநியாயம் செய்வதிலிருந்தும் அல்லது நான் அத்துமீறுவதிலிருந்தும் அல்லது யாராவது என்மீது அத்துமீறுவதிலிருந்தும் அல்லது நீ மன்னிக்காத தவறு மற்றும் பாவங்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
4. மிக நீளமான வயது வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.
நல்ல அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் எனக்கு நீ நேர்வழி காட்டுவாயாக!
அந்த நல் அமல்கள் மற்றும் நற்குணங்களின் பக்கம் உன்னைத் தவிர வேறு யாரும் நேர்வழி காட்டமுடியாது!
கெட்ட செயல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்தும் என்னைத் திருப்பிவிடுவாயாக! அப்படிப்பட்ட கெட்ட அமல்கள் மற்றும் கெட்ட குணங்களிலிருந்து உன்னைத்தவிர யாரும் என்னைத்திருப்ப முடியாது!
5. யா அல்லாஹ்! என் மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக!
என் வீட்டை எனக்கு நீ விஸ்தீரணப்படுத்துவாயாக!
என் உணவில் நீ அருள்புரிவாயாக! கல் நெஞ்சம், பொடுபோக்கு மற்றும் ஏழ்மையிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
இன்னும் இறைநிராகரிப்பு பாவச்செயல் பிரிவை ஏற்படுத்துதல் மற்றும் பிறர் பார்க்க வேண்டும் கேட்க வேண்டும் என்ற முகஸ்துதியிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
செவிடு, குருடு, உறுப்புக்கள் அழுகிவிடும் நோய் இன்னும் கெட்ட (எல்லா) நோய்களிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்.
தொடரும்...
0 comments:
Post a Comment