சென்னை, ஆக.4-
காவல் துறையின் நிரூபண சான்றிதழ் இல்லா மலேயே ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு 8 மாதம் செல்லத்தக்க பாஸ் போர்ட்டை வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள் ளது. அதன்படி 15 நாளில் முதல் பாஸ்போர்ட் சென் னையில் கடந்த திங்கட் கிழமை வழங்கப்பட்டது.
வழக்கமாக பாஸ் போர்ட் வாங்க ஒருவர் விண்ணப்பம் செய்தால் அவரை பற்றி காவல் துறையினர் விசாரித்து ஒரு நிரூபண சான்றிதழ் வழங்க வேண்டும் அதன் அடிப் படையிலேயே பாஸ் போர்ட் வழங்கும் அலுவ லகம் சம்பந்தப்பட்ட நபருக்கு பாஸ்போர்ட்டை வழங்கும். இந்த முறையில் கால தாமதம் ஏற்படுகிறது.
சமீபத்தில் சவூதி அரேபியா சர்வதேச பாஸ்போர்ட் வைத்தி ருப்பவர்கள்தான் தங்கள் நாட்டிற்கு ஹஜ்பயணம் மேற்கொள்ள முடியும் என்று அறிவித்தது
இந்த நிலையில், ஹஜ் பயணிகளுக்கு பாஸ் போர்ட் வழங்க மத்திய அரசு காவல் துறையின் நிரூ பண சான்றிதழ் இல்லாம லேயே 8 மாதம் செல்லத் தக்க தற்காலிக பாஸ் போர்ட்டுகளை வழங் கும்படி அனைத்து பிராந் திய பாஸ்போர்ட் அதி காரிகளுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு இது தொடர்பாக இரண்டு முறை கூடி ஆலோசித்த பின் இந்த முடிவுக்கு வந்து ஹஜ் பயணிகளுக்கு பாஸ் போர்ட் வழங்குவதை விரைவுபடுத்த காவல் துறை நிரூபண சான்றிதழ் இல்லா மலேயே 15 நாளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப் பதாக இந்திய ஹஜ் கமிட்டியைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
இந்த மாதிரி 8 மாதம் செல்லத்தக்க தற்காலிக பாஸ்போர்ட்டை பெறும் ஹஜ் பயணிகள் அந்த பாஸ்போர்ட்டை நிரந்தர பாஸ்போர்ட்டாக மாற்ற வேண்டும் என்று விண் ணப்பித்தால் காவல் நிரூபண சான்றிதழ் உள் பட அனைத்து விதி முறை களையும் பின்பற்றி நிரந்தர பாஸ்போர்ட் வழங்கப் படும் என்று அந்த அதி காரி கூறினார்
ஏற்கனவே, ஹஜ் பய ணத்திற்காக பாஸ் போர்ட் விண்ணப்பித்து காவல் துறை நிரூபண சான்றிதழ் போன்ற வற்றிற்காக ஜூன் 20-ம் தேதி வரை நிலுவை யில் உள்ள விண்ணப்பத் தாரர்களுக்கு உடனடியாக பாஸ்போர்ட் வழங்கப் படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மத்திய வெளியுறவுத் துறையிலிருந்து பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங் களுக்கு அனுப்பப்பட்டி ருக்கும்
சுற்றறிக்கையில் மேற்கொண்டு கூறப்பட் டிருப்பதாவது-
ஹஜ் கமிட்டியின் கவர் எண் உள்ள அனைத்து உண்மையான ஹஜ் பயண விண்ணப்பத்தாரர்களுக்கு புதிய திட்டப்படி உடன டியாக பாஸ்போர்ட் வழங்க வேண்டும்..
தனியார் ஹஜ் பயண முகவர்களுக்கு 45 ஆயிரம் பயண கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆகஸ்டு 13-ம் தேதிக்குள் தகுந்த நிரூபண ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட் டிருக்கிறது.
புதிய திட்டப்படி காவல் துறை நிரூபண சான்றிதழ் இல்லாமலேயே அதை விண்ணப்பித்த 15 நாளில் சென்னை பிராந் திய பாஸ்போர்ட் அலுவ லகம் 8 மாதங்கள் செல்லத் தக்க ஒரு பாஸ்போர்ட்டை சென்னையில் ஒரு ஹஜ் பயணிக்கு வழங்கியிருப் பதாக துணை பாஸ் போர்ட் அதிகாரி கே.எஸ். தவ்லத் தமீம் அறிவித்தார்.
நன்றி
முதுவை ஹிதாயத்
7.8.10
காவல் துறை நிரூபண - சான்றிதழ் இல்லாமலேயே ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது
Posted by
லால்பேட்டை . காம்
at
8/07/2010 09:09:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment