நூற்றாண்டுகளையும் தாண்டிய வறலாறு ! தமிழகத்தின் தலை சிறந்த அரபுக்கல்லூரியையும் பெற்றிருக்கும் லால்பேட்டை நகரம் தமிழகம் தழுவிய அளவில் பிரபல்யமாக விளங்கும் பேரூர் என்பது வறலாற்று உண்மை.
இந்த ஊரின் மக்கள் தொகை 2001-ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இருபத்தைந்தாயிரம்,இன்றைய நிலவரப்படி முப்பத்தைந்தயும் தாண்டி நிற்க்கிறது.பதினைந்து வார்டுக்களையும் உள்ளடக்கிய இந்த லால்பேட்டை பேரூராட்சிக்கு அன்றைய காலத்தேவைக்கேற்ப்ப அளவில் ஒருபேருந்து நிலையம் சிதம்பரம்-திருச்சி சாலையில் கண்ணியத்திற்க்குரிய காயிதே மில்லத் அவர்களின் பெயரில் இருந்து வந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அந்த பேருந்து நிலையம் இடித்து தகற்க்கப்பட்டது,
(அந்த இடத்தில் சிறிய கூறையும் போடப்பட்டது அதைத்தான் படத்தில் காண்கிறீர்கள்)
இதைக்கண்ட ஊர் மக்களோ,அநேகமாக பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்க்காத்தான் இருக்கும் என்ற நினைப்பில் அமைதியாக இருந்து விட்டனர்.
நாட்கள் கடந்தன வாரங்களாக,மாதங்களாக,வருடங்களும் மூன்றை தாண்டி விட்டது.இதுவரை விடிவு ஏற்ப்படவில்லை லால்பேட்டை பயணிகளுக்கு!
இந்த ஊரிலிருந்து வெளிநாடுகளுக்கும்,வெளியூர்களுக்கும்
சென்றுவருபவர்கள் அதிகம்.அதிலும் குறிப்பாக வெளியூர் கல்லூரிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளும் அதிகம்.
லால்பேட்டை வழியாக செல்லும் பேருந்துக்கள்: சென்னை,திருச்சி,மதுரை,திருப்பூர்,சிதம்பரம்,கும்பகோணம்,மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் வீராணம் ஏரியும்,மாவட்டத்தில் இருக்கும் மிக முக்கிய அரசு விருந்தினர் மாளிகையும் பொதுப்பணித்துறை அலுவலகங்களும் இருக்கும் ஒரு ஊரில் பேருந்து நிலையம் இல்லாமல் போனதிலும் வியப்புத்தான்!
வெளியூர்களுக்கு சென்று திரும்பியதும் பேருந்து நிலையத்தில் இறங்கி பெண்கள் தங்களது உடைகளை சரி செய்துக்கொள்வது இயல்பு இந்த வசதியைக்கூட தற்ப்பொழுதைய இந்த பேருந்து நிலையத்தில் காண முடியவில்லை.இது வரை இதை ஒரு பிரச்சினையாகவும் ஆக்கவில்லை இவ்வூர் மக்கள்!
இதையே தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட அரசு மற்றும் துறை சார்ந்தவர்கள் மெத்தனப்போக்கை கடைபிடித்து வருவது எவ்விதத்தில் நியாயம் என பலரும் முனுமுனுக்கத்தொடங்கி விட்டனர்.
இனியும் காலம் தாழ்த்தாமல் ஆகவேண்டிய பணிகளை கவனிக்குமாறு அரசையும்,
இது விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும்,சமுதாய அமைப்புக்களும் அக்கறை காட்ட வேண்டும் எனவும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.
(கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இது சம்மந்தமாக லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவருக்கு அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது)
2 comments:
இவ்வளவு பொரிய ஊரில் இப்படி ஓர் நிலைமையா......? பாவம் பஸ்ஸை பயன் படுத்தும் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகள்.., ஊரில் தன்னை பொரிய மனிதன் என்றும் தாம் தான் ஊரை வழி நடத்து பவர் என்றும் தம்மை காட்டி கொண்டு அலையும் அந்த சின்ன வால்கலுக்கு தெரியாதா...? இந்த அவலநிலை....., பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் இன்றை ஊர் நிலை......!
Post a Comment