31.12.08

லால்பேட்டை ஹாஜி { மாமாங்கனி }முஹம்மது யூசுப் வஃபாத்

லால்பேட்டை ஜாமியா மன்பவுல் அன்வார் முதல்வர் மெளலவி ஹாஜி S.A. அப்துர்ரப் ஹஜ்ரத் மாமனாரும், இமாம் புஹாரி மெட்ரிக் ஸ்கூல் நிருவனர் மெளலவி ஹாஜி M.Y. முஹம்மது அன்சாரி அவர்களின் தந்தையுமான ஹாஜி { மாமாங்கனி } முஹம்மது யூசுப் அவர்கள் இன்று {31 .12.2008} காலை 4. மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவள்:

முபாரக் அலி .

அபுதாபி

எமது முதல் கிப்லாவின் வரலாறு காண இங்கே ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்கள்

/>

Thanks By
Slji Media Centre

WWW.LALPET.COM

12.12.08

BDV-762854-BDV

10.12.08

சுவனத்தை நோக்கி ஒரு நாள் மாபொரும் இஸ்லாமிய மாநாடு & கண்காட்சி


மனிதநேய மக்கள் கட்சி சுவர் எழுத்துக்களின் மாதிரி வடிவங்கள்.

9.12.08

லால்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் நிர்வாகிகள் தேர்வு

லால்பேட்டை டிச,7

லால்பேட்டை முஸ்லிம் ஐக்கிய ஜமா அத் செயர்க்குளு கூட்டம் 07.12.2008. ல்,நடைபெற்றது அதில் ஜாமா அத் நிர்வாகிகள் தேற்வு செய்யப்பனர்.

தலைவர்: ஹாஜி J.அப்துல் ஹமீது

கவுரவ தலைவர்: ஜனாப் O.P.இம்தாதுல் ஹுசேன்

துனை தலைவர்: ஹாஜி M.A.அப்துல் ரெஜாக்

செயலாளர்: ஹாஜி M.A.பத்ஹுத்தீன்

இணை செயலாளர்: ஹாஜி P.M.நஜீர் அஹமது

துணை செயலாளர்: ஹாஜி K.A.அமானுல்லா

பொருளாளர்:
ஜனாப் S.A. அஹது,
மெளலவி R.S.P. அபுல் பைசல்

ஆலோசகர்கள்:
ஹாஜி A.J. அகமதுல்லா B.E
ஹாஜி V.M. ஜியாவுத்தீன்
ஹாஜி A.R. சபியுல்லா

லால்பேட்டை ஹாலித் தந்தை அப்துல் ஹமிது வஃபாத்

லால்பேட்டை தெர்க்கு தெரு சிதம்பரத்தார் ஹாலித் அவர்களின் தந்தை அப்துல் ஹமிது அவர்கள் இன்று {09 .12.2008} மாலை 4.30 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்

சஹாரா டிராவல்ஸ்

6.12.08

ரியாத் நகரில் முஸ்லிம் கருத்தரங்கம்




5.12.08

கூத்தாநல்லூர் மக்களுக்கு மேலும் ஒரு் வலைப்பூ

கூத்தாநல்லூர் மக்களுக்கு ஊரிண் முக்கிய செய்திகளை இன்ஷா அல்லாஹ் அறிந்து கொள்ளும் வகையில் இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டுள்ளது மேலும் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளும் இங்கு அறிவிக்கப்படும் இந்த வலைப்பூ மேலும் பிரபலம் அடைய அனைத்து மக்களுக்கும் பயன் பெரும் விதத்தில் மருத்துவ குறிப்புகளும் முதலீடு பற்றிய செய்திகளும் இஸ்லாமிய கேள்விபதில்களும், ஹதிஸ்களும் இணைக்கப்படும்.

இந்த வலைப்பூ பற்றிய கருத்துக்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் பதிக்கலாம் உங்கள் கருத்து கேட்டு இன்னும் நம்மை மேம்படுத்தி கொள்வதற்கு உதவும்.எங்கள் மின்னஞ்சல் முகவரி keoorganisation@gmail.com
வலைப்பூ முகவரி http://keoonline.blogspot.com/

வெள்ளத்தில் தத்தளித்த கடலூர் மாவட்டம்! உதவி கரம் நீட்டியது தமுமுக!!

கடலூர் மாவட்டம் முழுமையாக வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. சிதம்பரம், லால்பேட்டை, காட்டுமன்னார்குடி, கடலூர் ஓ.டி. ஆகிய பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. சிதம்பரம் நகரத்தில் பள்ளிப்படை, மணலூர், எம்.ஆர்.யு.நகர், நந்தவனம், ஓமக்குளம், கலைவாணர் நகர், உசுப்பூர், எம்.கே.தோட்டம், பூலாம்பேடு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெய் புலவு சாப்பாடு, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், ரவா உப்புமா, பால் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட், குடிநீர் மற்றும் மருந்துப் பொருட்கள் என சுமார் 4000 நபர்களுக்கு நவம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரிசி விநியோகம், மருத்துவ முகாமுக்கான ஏற்பாடுகளில் மாவட்ட தமுமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் துறைமுகம் ஓ.டி. பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளை மாவட்டச் செயலாளர் சேக் தாவூது, நகர பொருளாளர் அஷ்ரப் ஆகியோர் தலைமை யில் தமுமுகவினர் செய்து வருகின்றனர்.

லால்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் தொடர் மழை யின் காரணமாக வீடுகளையும் உடைமை களையும் இழந்து வெள்ளத்தில் தத்த ளித்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து உணவு, மருத்துவம், அத்தியாவசியத் தேவைகள் செய்து கொடுக்கப்பட்டது.

நிவாரணப் பணியில் தமுமுகவினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ் வழியே வந்த உள்ளாட்சித் துறை அமைச் சர் மு.க.ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி தமுமுக நிவாரண முகாமைப் பார்வையிட்டு, தமுமுகவினர் தயாரித்த உணவை ருசி பார்த்து “உணவு நன்றாக உள்ளது. சிறப்பாக செயல் படுங்கள்’’ என்று உற்சாகமூட்டிச் சென் றார்.

அவரிடம் தமுமுகவினர் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவில், “லால் பேட்டை மற்றும் கொல்லிமன கீழ்பாதி, கொல்லிமன மேல்பாதி, வ.குளக்குடி, ஜாகிர் உசேன் நகர், ரஹ்மத் நகர் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வீடு, உடமைகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்குமாறு லால்பேட்டை தமுமுக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது’’
மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிவாரணம் துரிதப் படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

எள்ளேரியில் சுமார் 1500 நபர்களுக் கும், ஆயங்குடியில் சுமார் 1000 நபர்களுக்கும் உணவு, பால், மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தமுமுக மாவட்டத் தலைவர் ஜின்னா தலைமையில் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
Thanks TMMK

டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் லால்பேட்டை....!

லால்பேட்டை,டிச-5
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தின‌மான டிசம்பர் 6ஆ‌ம் தேதி லால்பேட்டையில் அனைத்து வர்த்தக நிருவனங்களும் மூடப்பட்டு இருக்கும் என லால்பேட்டை வர்த்தகசங்கம் அறிவித்துள்ளது.

1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று முதல் இன்று வரை டிசம்மர் 6 ஆம் தேதி லால்பேட்டையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் அதுபோல் இந்த வருடமும் டிசம்பர் 6 ஆம் தேதி அனைத்து வர்த்தக நிருவனங்களும் மூடப்பட்டு இருக்கும் என்று வர்தகசங்கம் அறிவித்துள்ளது.

த.மு.மு.

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் த.மு.மு.க. மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி தலைமயில் நடைபெரும் ரயில்மறியல் போராட்டத்தில் லால்பேட்டையில் உள்ள த.மு.மு.க. தொண்டர்கள் பொரும்பாலானவர்கள் கலந்துக்கொள்வார்கள் என தமுமுக லால்பேட்டை கிளை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

மாவட்ட தலைநகர் கடலூரில் நடைப்பெரும் ஆர்ப்பட்டத்தில் லால்பேட்டையில் உள்ள த.த.ஜ. தொண்டர்கள் அனைவரும் கலந்துக்கொள்வார்கள் என்ரு லால்பேட்டை த.த.ஜ. கிளை அறிவித்துள்ளது.

2.12.08

டிசம்பர் - 6: பாபர் மஸ்ஜித் ஷஹீதாக்கப்பபட்ட நாள்! முஸ்லிம் லீக்

பாபர் மஸ்ஜித் விவகாரத்தை நீதி மன்றத்தின் முடிவுக்கு விட்டு அந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்வதன் மூலமே தீர்க்க முடியும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்து கின்ற வகையில் டிசம்பர்-6 அன்று சமய நல்லிணக்க கூட்டங்கள் நடத்தவும், பள்ளிவாசல்களில் துஆ மஜ்லிஸ் ஏற்பாடு செய்யவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புகளை கேட்டுக்கொள்கிறோம்.

.