31.7.08

லால்பேட்டையில் காவல்துறையினருடன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் பேச்சு! அமைதி, ஏற்படுத்த வேண்டுகோள்!!



லால்பேட்டையில் பைஜிஷா நூரி கந்தூரி விழா தொடர்பாக லால்பேட்டை
ஜமாஅத்தினருக்கும், முரீதுகளுக்குமிடையில் ஏற்பட்ட தாவா, மோதலாக மாறி போலீஸார் தடியடி நடத்தினர். பலர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக முஸ்லிம் ஜமாஅத்தினர் 1065பேர் மீது கடுமையான பிரிவுகளில் காட்டு மன்னார்குடி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்டடோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அணுசக்தி ஓப்பந்தம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக் கடுப்பு நடைபெற்றது. அதில் பங்கேற்கச் சென்ற இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் டெல்லியிலிருந்து 23ஆம் தேதி மாலை சென்னை திரும்பியதும் லால்பேட்டை நிலவரங்களை கேட்டறிந்து மனம் வருந்தினார்.

24 வியாழனன்று லால்பேட்டை சென்ற தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் முகைதீன் எம்.பி, பொதுச்செயலாளர் டாக்டர் ஹக்கீம் சையத்சத்தார், பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அகமது ஆகியோர் முழுமையான நடப்புக்களை விசாரித்தனர்.

பின்னர் கடலூர் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளர் பிரதீப்குமார் சேத்தியாத்தோப்பு துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் நேற்றும் இன்றும் பேசிய தலைவர் பேராசிரியர், காவல்துறையினர் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும், நிரபராதிகள் எந்தச் சூழ்நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது. முஸ்லிம்கள் சமாதானத்தையே விரும்புவர். அதற்கு காவல்துறையினர் துணை நிற்க வேண்டும்.
ஒரே ஊர் ஓரே சமுதாயம் நிரந்தர பகை உணர்வுக்கு ஆளாகக் கூடிய எதையும் செய்வதற்கு காவல்துறை இடமளித்து விடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.

மத்தியிலும் மாநிலத்திலும், முஸ்லிம்களின் நலன் காக்கும் அரசுகள் அமைந்துள்ள சூழ்நிலையில் அந்த நல்லரசுகளுக்கு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும் செயலை முஸ்லிம்கள் ஒரு போதும் செய்யக்கூடாது என கேட்டுக்கொண்ட பேராசிரியர், முழு அமைதியும் சமாதானமும் சகோதர நல்லுறவும் ஏற்பட முன்வர வேண்டும்.
இதற்கு முஸ்லிம் லீக் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முழு ஓத்துழைப்பும் தரவேண்டும் என லால்பேட்டை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments:

.