30.4.10

லால்பேட்டை டாக்டர் நூர் முஹம்மது வஃபாத்

லால்பேட்டை நகர தி மு க அவைத் தலைவர் டாக்டர் ஹாஜி நூர்முஹம்மது அவர்கள் இன்று 30.04.2010 இன்று இரவு 10 மணி அளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் (01-05-2010) காலை 10:00 மணிக்கு நடைபெற்றும்,


{ இவர் லண்டனில் வசிக்கும் முஹம்மது அன்சாரி, பிரான்சில் வசிக்கும் அப்துல் மாலிக்,மெளலவி முஹம்மது இஸ்மாயில், அப்துல் ஸமது, ஜியாவுத்தீன், பஷீர் அஹமது ஆகியோரின் தந்தையாவார். }

.

27.4.10

வாணியம்படி தொகுதி M.L.A.ஆம்பூர் H.அப்துல் பாஸித் அவர்களின் தாயார் பஷீருன்னிஸா வஃபாத்

வாணியம்படி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்ட மன்ற உறுப்பினர் ஆம்பூர் H.அப்துல் பாஸித் அவர்களின் தாயார் பஷீருன்னிஸா அவர்கள் இன்று 27.04.2010 இரவு 8 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 28.04.2010 புதன் ளுஹர் தொழுகைக்குப்பின் ஆம்பூரில் நடை பெறுகிறது.

25.4.10

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு!

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் பாராளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு!


ஆயங்குடி நகருக்கு வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்  அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் அவர்களை லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் சந்தித்து மத்திய அரசின் சிற்பான்மையினர் கல்வி முன்னேற்றத்திட்டம் குறித்து கேட்டரிந்தனர்.
 
பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமது,பொருளாலர் எம்.ஜெகரிய்யா,நிர்வாகக் குழு உருப்பினர்கள் கவிஞர் ஏ.எம்.முஹிப்புல்லாஹ்,ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹஸன் உள்ளிட்ட நிர்வாகிகள் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.இச்சந்திப்பின் போது அபுதாபி அய்மான் சங்க செயளாலர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் உடனிருந்தார்.

20.4.10

வெளிநாடு வாழ் லால்பேட்டை நண்பர்கள் கவனத்திற்க்கு...!


லால்பேட்டை நகரில் இயங்கி வரும் பண்ணாட்டு பணம் மாற்றும் நிறுவனமான ஏ.ஆர்.ஃபாரின் எக்சேன்ஞ் நிறுவனத்தில் புதிய பிரிவாக UAE EXCHANGE  மையமும் இணைக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ்.ஏ.ஆர்.அப்துல் ரஷீத் அறிவித்துள்ளார்.

உலகெங்கும் பரவி வாழும் லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் அனுப்பும் தொகையினை பாதுகாப்பான முறையில் உடனடி பட்டுவாடா செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏஜென்ட் code: ARFRNINTN001
-

18.4.10

மீலாது விழா, முஸ்லிம் லீக் பொதுக்கூட்டம்

ஆயங்குடி முஸ்லிம் பட்டதாரி சங்கம் வெள்ளி விழா



15.4.10

லால்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் தேர்வு

G.K. வாசன் தலைமையில் இயங்கும் லால்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டியின், லால்பேட்டை இளைஞர் காங்கிரஸ், சிறுபான்மை காங்கிரஸ், G.K. மூப்பனார் பேரவை, G.K. வாசன் பேரவை, மாணவர் பேரவை, மற்றும் தொழிலாளர் பேரவை போன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வு லால்பேட்டை அரசு பயணியர் மாளிகையில் காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கேவி.எம்.எஸ். சரவணகுமார் மேற்பார்வையில் நடைப்பெற்றது.


பொருப்பாளர்கள்:
லால்பேட்டை நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்

எ.பி. ஜாக்கிர் உசேன்

துணை தலைவர் எ.எம். அய்யுப்

செயலாளர் எம்.லியாகத் அலி

து.செயலாளர் எம். ஹஜ்ஜி முஹம்மது



லால்பேட்டை இளைஞர் காங்கிரஸ். தேர்தலில் வெற்றிப்பெற்றவர்கள்



துணை தலைவராக . எஸ்.எம்.ஜெய்லானி

பொதுச் செயலாளராக. எம்.எ.முஹம்மது இப்ராஹீம்

பொதுச் செயலாளராக. எ. முஹம்மது ஆசிக்

பொதுச் செயலாளராக். எம.எ.நுஸ்ரத் (பெண்கள் பிரிவு)



ஆகியோர் நகரத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்



இளைஞர் காங்கிரசின் பாராளுமன்ற கமிட்டி மெம்பர்

எ.எம்.முஹம்மது அன்வர் அவர்களும்

இளைஞர் காங்கிரசின் சட்டமன்ற கமிட்டி பொதுச்செயலாளராக

எம். நாசர் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தகவல். எம், லியாகத் அலி (நகர செயலாளர்)

லால்பேட்டை உம்முல் ஹஸனாத் வஃபாத்

லால்பேட்டை ஏரிக்கரை மெயின் ரோடு {கைகாட்டி} முஹம்மது பைசல் தாயார் உம்முல் ஹஸனாத் அவர்கள் இன்று 15.04.2010 அதிகாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம் அஸருக்குப்பின் பனேஸா பள்ளிவாசலில் நடைப்பெரும்.

14.4.10

லால்பேட்டை வடக்கு தெரு முஹம்மது அலி வஃபாத்

லால்பேட்டை வடக்குத் தெரு புரோக்கர் அலி பாய் (எ) மணிகிராமத்தார் முஹம்மது அலி அவர்கள் 13.04.2010 இன்று தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் (14-04-2010) மாலை 5:00 மணிக்கு நடைபெற்றும்

7.4.10

சாலை அமைக்கும் பணி

லால்பேட்டையில் நகரில் பல இடங்களில் புதிய சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.அதில் ஒரு கட்டமாக லால்பேட்டை ரஹ்மானியா வீதியில் தார் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ் ஏழாவது வார்டு கவுன்சிலர் ஹிதாயத்துல்லாஹ் ஆகியோர் பார்வையிட்டனர்.



Thank:
Abdul Rahman

.