31.1.10

பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் விருது


இரத்த தான முகாம்



லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரி கல்விசங்கம் ,அரசு தலைமை மருத்துவமனை ,த.மு .மு.க.ஆகியவை குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு த.மு .மு.க.மருத்துவ அணி செயலாளர் நூருல் அமின் தலைமை வகித்தார் ,மாவட்ட துணை செயலாளர் யாசர் அரபாத் அனைவரையும் வரவேற்றார் ,மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் .மாநில துணை செயலாளர் ஜின்னா
துவக்கி வைத்தார் .காவல் துறை கண்காணிப்பாளர் இராமச்சந்திரன் ,டாக்டர்கள் அப்துல் சமத் ,பெருமாள் சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .ஹலில் அஹமத் நன்றி கூறினர்.

26.1.10

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா

லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 61 வது குடியரசு தினவிழா 26.01.2010 அன்று சிறப்புடன் நடைபெற்றது லால்பேட்டை பேரூராட்சி தலைவரும் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான ஏ.ஆர்.சபியுல்லா தலைமை வகித்து தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

பள்ளியின் தலைமை ஆசிரியை மங்கையர் திலகம் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மௌலான தளபதி ஷபிகுர்ரஹ்மான் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.






18.1.10

லால்பேட்டை குடந்தை கமால் வஃபாத்

லால்பேட்டை மொளலானா வீதி குடந்தை கமால் அவர்கள் இன்று 17-01-2010 இரவு 8.30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று (17-1-2010) இரவு 10:30 மணிக்கு நடைபெற்றது.

11.1.10

லால்பேட்டை ஹஜ்ஜி முஹம்மது வஃபாத்

லால்பேட்டை சிங்கார வீதி, சீர்காழியார், ஹாஜி ஹஜ்ஜி முஹம்மது


(சிதம்பரம் மெயின் ரோட்டில் வசிக்கும் ஜாபர் அலி யின் தகப்பனார்) அவர்கள் 11-01-2010 காலை 12.30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று (11-1-2010) மாலை 4:00 மணிக்கு நடைபெற்றது.

9.1.10

லால்பேட்டை அப்துல் ரஷீது வஃபாத்

லால்பேட்டை வடக்குத் தெரு சேப்பிலை அப்துல் ரஷீது அவர்கள் இன்று 09.01.2010 தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

.