26.9.09

லால்பேட்டையில் TNTJ பெருநாள் தொழுகை...!






லால்பேட்டை-யில் நோன்பு பெருநாள் தொழுகை கைகாட்டி TNTJ மர்கஸ் எதிர்புறம் அமைந்துள்ள திடலில் நடைபெற்றது,இதில் 300 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர்.அல்ஹம்துல்லிலஹ்....

Thanks: Raisudeen

25.9.09

லால்பேட்டை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் துவக்க விழா!!

லால்பேட்டை,செப்,25-

லால்பேட்டை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணிதிட்டம் துவக்க விழா நிகழ்ச்சி காட்டுமன்னார்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலமை ஆசிரியர் தலமையில் நடைபெற்றது.

லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ் துவக்கி வைத்தார்.

முஸ்லிம் லீக் மாநில செயளாலர் தளபதி.ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஹாஜா மைதீன்,இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

காட்டுமன்னர்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளையின் பெற்றோர் ஆச்சிரியர் கழக தலைவர் திரு கண்ணன் பிள்ளை சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் எஸ்.ஏ.அப்துல் அஹது,எம்.ஓ.அப்துல் அலி,மவ்லவி முஹம்மது தாஹா உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.முடிவில் லால்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலமை ஆசிரியர் நன்றி கூறினார் .

லால்பேட்டை தபால் நிலையத்தில் கணினிமூலம் விமான டிக்கெட் முன்பதிவு வசதி விரைவில் தொடக்கம் கடலூர் கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

காட்டுமன்னார்கோவில், செப்.25-

லால்பேட்டை தபால் நிலையத்தில் கணினி மூலம் விமான டிக்கெட் முன் பதிவு வசதி விரைவில் தொடங்கப் பட உள்ளதாக கட லூர் கோட்ட கண் காணிப் பாளர் கனகராஜன் கூறி னார்.

புதியகட்டிடம்
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை பஜார் தெருவில் தபால்நிலையம் இயங்கிவந்தது.தற்போது அதில் இருந்து இடமாற்றம் செய்து நவீன வசதிகளுடன் ஜாமியா லால்கான் கைக் காட்டிக்கு மாற்றப்பட்டு உள் ளது.

இதன் திறப்புவிழா நேற்று நடந்தது.விழாவுக்கு கடலூர் கோட்ட கண்காணிப்பாளர் கனகராஜன் தலைமை தாங்கி ,புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-
தங்க நாணயம் விற்பனை
அஞ்சலகங்களில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப் பட்டு உள்ளது.இதை பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சிதம்பரம், கடலூர் தலைமை தபால் நிலையங்களில் விரைவில் தங்க நாணயம் விற்பனை தொடங்கப்படுகிறது.மற்ற கிளை தபால் நிலை யங்களிலும் படிப்படியாக தங்க நாணய விற்பனை தொடங்கப் படும்.தற்போது அஞ்சலகங்களில் கணினி மூலம் முன்பதிவு தொலை தூர பேருந்து கள்,விமான டிக்கெட் வசதிகள் செய்து கொடுத்து வருகிறோம்.இந்த வசதி விரைவில் லால்பேட்டை, அஞ்சலகங்களில் தொடங்கப் படும்.மேலும் அஞ்சலக உதவி யாளர்கள் வேலைக்கான விண்ணப்பம் சிதம்பரம், கடலூர் அஞ்சலகங்களில் வழங்கப் பட்டு வருகிறது.

இதை பயன்படுத்தி அஞ்சலக உதவியாளர்வேலைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கடலூர் கோட்ட கண்காணிப்பாளர் கனகராஜ் கூறினார்.

விழாவில் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி முகமது எகையா, அப்துல்காதி, மதர்ஸா நிர்வாக குழு உறுப்பினர் அப்துல்அகது, துபாய் ஜமாத் முன்னாள் தலைவர்அனிசுர் ரகுமான், அன்சாரி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அனைவரையும் உட்கோட்ட ஆய்வாளர் கோதண்டபாணி வரவேற்றார்.முடிவில் லால்பேட்டை தபால் அதிகாரி தங்கராஜ்நன்றி கூறினார்.
Thanks http://www.dailythanthi.com

23.9.09

லால்பேட்டை பேரூராட்சி 3 வது வார்டு இடைத்தேர்தல் வேட்பாளர்கள் மனு தாக்கல்!!!

லால்பேட்டை,செப்,21
லால்பேட்டை பேரூராட்சி 3 வது வார்டு (வடக்குத் தெரு) இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்தங்களின் வேட்புமனுவை லால்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரும்,தேர்தல் அதிகாரியுமான கஸ்நபர் அலி கானிடம் தாக்கல் செய்தனர்.


மனித நேய மக்கள் கட்சி சார்பில் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் இவருடன் த.மு.முக வின் மாவட்ட துணைத் தலைவர் மெஹ்ராஜுத்தீன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைச் செயளாலர் ஹாஜி கே.ஏ.அமனுல்லாஹ், பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ்,துணைத் தலைவர் ஹாஜா மைதீன்,லால்பேட்டை நகர முஸ்லிம் ஜமாஅத் பொருளாலர் எஸ்.ஏ.அப்துல் அஹது, நகர காங்கிரஸ் தலைவர் ஹாஜி ஏ.எம்.அய்யுப்,த.மு.மு.க மாவட்ட வர்த்தக அணிச் செயளாலர் அப்துஸ் ஸமது,மருத்துவ சேவை அணி நூருல் அமீன்,செயளாலர் ஆஷிக்,எஸ்.எஸ்.இமாம் அலி,உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

தேசிய லீக் சார்பில் போட்டியிடும் ஏ.ஆர்.சிராஜுத்தீன் வேட்புமனு தாக்கலின் போது அவருடன் ஓ.பி.முஹம்மது அசன்,ஏ.ஆர்.நவ்வர் ஹுஸைன்.ஏ.ஆர்.சலஹுத்தீன்,டி.ஜெ.அஹமதுல்லாஹ்,டி,ஜெ.அமீனுல் ஹக்,முஹம்மது புஹாரி,சபீர் அஹமது,டி.ஜெ.அஹமது,மைதீன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

21.9.09

லால்பேட்டையில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை பல்லாயிரக்கணக்காணோர் பங்கேற்ப்பு!!






லால்பேட்டை,செப்,21

லால்பேட்டை ஈத்கா குத்பா பள்ளிவாசலில் காலை 8 மணியளவில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.அவ்வமயம் தமிழ் நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மொளலானா ஏ.இ.எம்.அப்துல் ரஹ்மான் ஹஜ்ரத் சிரப்புரையாற்றினார்.

ஜெ.எம்.ஏ.அரபிக்கால்லூரி முதல்வர் மொளலானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் பெருநாள் தொழுகை நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர்.

காலை 6 மணியிலிருந்தே லால்பேட்டையிலுள்ள அனைத்து மஸ்ஜிதுகளிலிருந்தும் அல்லாஹு அக்பர் தக்பீர் முழங்கி ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடையணிந்து அணி அணியாக பெரியவர்களும்,இளைஞர்களும்,சிறுவர்களும் ஆர்வபெருக்குடன் கலந்துக் கொண்டனர்.

தொழுகைக்குப் பின்னர் உலக அமைதிக்காகவும்,அனைவரின் நல்வாழ்வுக்காகவும்,நலனுக்காகவும்,சமுதாய ஒற்றுமைக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.

மேலும் ஊரின் செழிப்பான,சிறப்பான முனேற்றத்திற்க்காகவும் துஆச் செய்யப்பட்டது.

பிரார்த்தனைக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் சந்தித்து கரம் கொடுத்து ஆரத் தழுவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தகவல் மற்று படங்கள்: இப்னு ஷஃபீக்

ஈத் பெருநாளை முன்னிட்டு லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் சார்பில் கொடியேற்று விழா!!

லால்பேட்டை,செப்,21
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஈத் பெருநாளை முன்னிட்டுகாலை சுப்ஹு தொழுகைக்குப் பின் காயிதே மில்லத் சாலை,புது பஜார் சந்திப்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ.அப்துல் கப்பாஃர் தலமை வகித்தார்.மாவட்ட முஸ்லிம் லீக் துணைச் செயளாலர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ்,பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி ஏ.ஆர்.சபியுல்லாஹ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி கே.ஏ.முஹம்மது கொடியை ஏற்றி வைத்தார்.

மாநில மார்க்க அணிச் செயளாலர் மொளலவி தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நகர துணைச் செயளாலர் பி.எம்.தய்யிப்,எம்.ஓ.அப்துல் அலி,ஜெ.மஸ்ஊத் அஹமத்,ஜாஃபர் அலி,அபுதாபி காயிதே மில்லத் பேரவை உறுப்பினர் என்.ஹெச்.முஜீபுர் ரஹ்மான்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஹிதாயத்துல்லாஹ்,இளைஞரணி செயளாலர் சல்மான் ஃபாரீஸ், முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,சாதுல்லாஹ்,அப்துஸ் ஸலாம்,துணைச் செயளாலர் ஜெகரிய்யா,மொளலவி எஸ்.ஏ.நூருல் அமீன்,ஃபலுலுல்லாஹ்,அப்துல் காதர்,ஜாகிர் ஹுஸைன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

20.9.09

லால்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய இஃப்தார் ஏராளமானோர் பங்கேற்ப்பு !!

லால்பேட்டை,செப்,19
லால்பேட்டை ஜெ.எம்.ஏ.அரபிக் கல்லூரி திருமண மண்டபத்தில் இமாம் கஸ்ஸாலி பள்ளியின் முன்னாள் மாணவர்களான தற்போதய கல்லூரி மாணவர்கள் இணைந்து இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,ஜெ.எம்.ஏ கல்லூரி பேராசிரியர் மொளலவி வி.ஆர்.அப்துஸ் ஸமத் ,ஆகியோர் உரையற்றினார்கள்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ் , மொளலவி பி.எஸ்.அப்துல் அலி ,இமாம் கஸ்ஸாலி முன்னாள் தாளாலர் ஹஜி முஹம்மது இப்ராஹிம்,தற்பொழுதய தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமத், பொருளாலர் எம்.ஜகரிய்யா,மொளலவி ஜஹிர் ஹுஸைன், ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி ஹஜி முஹம்மது யஹ்யா,கவிஞர் பி.எம்.நஜீர் அஹ்மத்,மொளலவி முஹம்மது ஃபாரூக்,அபுதாபி அய்மான் சங்க செயளாலரும்,முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உருப்பினருமான ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,த.மு.மு.க.நகரத் தலைவர் எஸ்.ஏ.யாசிர் அரபாஃத், மற்றும்,கல்வியாளர்கள்,சமுதாய பிரமுகர்கள்,பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

17.9.09

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் நடைபெற்ற புனிதமிகு லைலத்துல் கத்ர் நிகழ்ச்சி

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் சார்பில் நடைபெற்ற புனிதமிகு லைலத்துல் கத்ர் நிகழ்ச்சி (நேன்பு பிறை-27) 16.09.2009 புதன் மாலை வியாழன் இரவு சரியாக இரவு 10.00 மணிக்கு அபுதாபி காலிதியா ஷெரட்டான் பின்புரம் உள்ள மஸ்ஜித் அபு உபைதா-வில் ஜமாஅத்தின் கௌரவ தலைவர் ஹாஜி T.A. முஹம்மது ஹஸன் அவர்கள் தலைமையில் துவங்கி, கிராஅத் ஹாபிழ் M. இர்ஷாத் ஓதி நிகழ்ச்சி துவக்கப்பட்டது.

வரவேற்புரை ஜமாஅத்தின் கௌரவ தலைவர் M. முஹம்மது சுஐபுதீன் நிகழ்த்த, சிறப்பு பேச்சாளர்கள் லால்பேட்டை மௌலவி ஹபீபுல்லாஹ் ஆலிம் மற்றும் காயல் பட்டினம் மௌலவி ஹாபிழ் ஹாஜி காஜா முஹையதீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

அதுசமயம் நமதூர் சகோதரர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த கோதரர்கள் மற்றும் ஏராளமானவர்கள் திரளாக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

பயானுக்கு பிறகு ஹத்தம்அல் குர்ஆன், யாசீன், தஸ்பீஹ் தொழுகை மற்றும் துஆ ஹாபிள் M. இர்ஷாத் அவர்கள் நிகழ்த்த இறுதியாக நன்றியுரை ஜமாஅத்தின் துணை தலைவர் S.M. அப்துல் அஜீது அவர்கள் வழங்கிய பின் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ,
தகவல்: A. இன்ஆமுல் ஹக் - அபுதாபி

லால்பேட்டையில் லைலத்துல் கத்ர் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு பயான்!

லைலத்துல் கத்ர் இரவை முன்னிட்டு லால்பேட்டையில் அமைந்துள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு பயான்கள் நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி அனைவரும் புத்தாடைகள் அணிந்தும்,சிறப்பு தொழுகை மற்றும் திக்ர் போன்ற அமல்களிலினால் அனைத்துப் பள்ளிகளும் நிறைந்து காணப்பட்டது.

ஒரு சில தினங்களில் பெருநாள் வருவதையொட்டி அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

அனைத்துப் பள்ளிகளும் விடுமுறை விடப்பட்டதால் ஊர் முழுவதும் சிறுவர்களும்,இளைஞர்களும் மகிழ்ச்சியோடு வலம் வருகின்றனர்.

அனைவரும் மகிழ்வாக பெருநாளை கொண்டாட அல்லாஹ் அருள்வானாக!

16.9.09

லால்பேட்டை இமாம் புஹாரி நர்சரி பள்ளியில் குர் ஆன் ஹத்தம் மற்றும் பரிசளிப்பு விழா!!

லால்பேட்டை,செப்.16

லால்பேட்டை மினா தெருவில் இயங்கி வரும் இமாம் புஹாரி நர்சரி பள்ளி மாணவ ,மாணவிகளால் ரமளான் மாதம் முழுவதும் ஓதப்பட்ட ஹத்தம் துஆ நிகழ்ச்சியும்,மாணாக்கர்களுக்கு பரிசளிப்பும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் தாளாலர் மவ்லவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி வரவேற்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில் செயளாலர் தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் ,

ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி ஹாஜி பி.முஹம்மது யஹ்யா,

பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஹாஜி எம்.அய்யூப்,

ஹாஜி அனீசுர் ரஹ்மான் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் ஏ.ஆர்.இஸ்மத்துல்லாஹ்,செயளாலர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.பள்ளி முதல்வர் திருமதி சிவகாமி நன்றி கூறினார்.

லால்பேட்டை இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இஃப்தார் திரளானோர் பங்கேற்ப்பு!!

இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.எஸ்.ஜாபர் அலி தலமை வகித்தார்.

பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமது வரவேற்றார்.ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஹஸன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஜெ.எம்.ஏ.அரபுக்கல்லூரி பேராசிரியர் மவ்லவி.வி.ஆர்.அப்துஸ் ஸமத் ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்.மவ்லானா தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பொருளாலர் எம்.ஜெகரிய்யா,முன்னாள் தாளாலர் ஹாஜி முஹம்மது இப்ராஹிம்,பேரூராட்சி மன்றத் தலைவர் ஹாஜி ஏ.ஆர்.சபியுல்லாஹ்,துணைத் தலைவர் ஹாஜ மைதீன்,முஸ்லிம் ஜமாத் செயளாலர் ஹஜி எம்.ஏ.ஃபத்ஹுத்தீன்,கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி எஸ்.ஏ,அப்துல் கஃப்பார்,நகர முஸ்லிம் லீக் தலைவர் ஹாஜி கே.ஏ.முஹம்மது,இமாம் புஹாரி நர்சரி பள்ளியின் தாளாலர் மவ்லவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி, அபுதாபி அய்மான் சங்க செயளாலரும் முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உறுப்பினருமான ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,த.மு.மு.க.நகரத் தலைவர்.எஸ்.ஏ.யாசிர் அரஃபாத்,கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் துணைச் செயளாலர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ்,பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஹஜி எம்.அய்யூப்,த.மு.மு.க.நகர செயளாலர்.முஹம்மது ஆஷிக்,தேசிய லீக் தலைவர் எஸ்.எம்.ரியாஜுல்லாஹ், மற்றும் அரபிக் கல்லூரியின் நிர்வாகிகள்,பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள்,பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள்,பள்ளியின் முன்னாள் மானவர்கள்,உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பள்ளியின் முதல்வர் திரு மாரியப்பன் தலமையிலான ஆசிரியர் குழுவினர்,மேல் வகுப்பு மாணவ,மாணவிகள் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்ப்பாடு செய்திருந்தனர்.



13.9.09

துபாய்- 11
துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் ரமலான் இப்தார் நிகழ்சிவெள்ளிகிழமை மாலை 6.30 மணி அளவில் தலைவர் ஜனாப் M.H.பஷிர் அகமது தலைமையில்துவங்கியது ஜனாப் நஜிபுல்லா அவர்கள் வறவேற்புரை நிகழ்த்த இப்தார் நிகழ்சி துவங்கியது.

இதில் மக்ரிபுக்கு பின் நடந்த பயான் நிகழ்சியில் மொவ்லவி ராஜ் முகமது அவர்கள் கிராத் ஓத சிறப்புரை மொவ்லவி முகமது ஹாரிஸ் ,அபுதாபி லால்பேட்டை ஜமாத் கவ்ரவ தலைவர் ஜனாப் சுஐபுதின்,ஜனாப்,பதுருதின் (இலங்கை),மொவ்லவி, கிழகரை மொவ்லவி,மாருப் காகா ஆகியொர் சிரப்புரை நிகழ்தினர்,இந்த நிகழ்சியில் அபுதாபி லால்பேட்டை ஜமாத் உதவி தலைவர் அபுதுல் அஜித், உதவி செயலாலர் அப்துல் ஸலாம்,மாருப்,பஷிரகமது,நஜிர் அஹமது,தய்யுப்,மொவ்லவி அமினுல் உசைன்,அபுல் உசைன்,துபை தமில் பன்ன்பட்டு கழக தலைவர் ஜனாப் அன்ன்வர்,மட்ரும் ஏராலமானோர்கலந்து கொன்டு விழாவை சிறப்பிதனர் மொவ்லவி ரியஜுல்லா அவர்கள் துஆ ஓதினார். நன்றி உரை செயலாளர் குதர்துல்லா அவர்கள் ஆற்றினார்தகவல்:நஜிர் அஹமதுஅபுதாபி

லால்பேட்டை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

லால்பேட்டை,செப்,12
லால்பேட்டை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஊரின் முக்கிய பிரமுகர்கள்,பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள்,அரபிக்கல்லூரி நிர்வாகிகள் ,அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மற்றும் வெளிநாடு வாழ் லால்பேட்டை நண்பர்கள் உட்பட ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் லால்பேட்டை கிளை மேளாலர் திரு பாஸ்கர் மற்றும் வங்கி ஊழியர்கள் சிறப்பான ஏற்பாடு செய்திருந்தனர்.



தகவல் : இப்னு ஷஃபீக்

12.9.09

நூருல் அமீன் ஹஜ்ரத் தாயார் வஃபாத்

லால்பேட்டை காயிதே மில்லத் வீதி மர்ஹும் மவ்லவி அல்ஹாஜ் அப்துல் ஜமீல் ஹஜ்ரத் அவர்களின் மனைவியும் மவ்லவி முனவ்வர் ஹஸன் ,லால்பேட்டை ஜாமி ஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி முதல்வர் நூருல் அமீன் ஹஜ்ரத் ஆகியோரின் தாயாருமான ஹாஜியா ஹலிமா பீவி அவர்கள் இன்று 12.09.2009 சனிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸ நல்லடக்கம் ஞாயிறு காலை 10.00 மணிக்கு நடைப்பெறும்.




நூருல் அமீன் ஹஜ்ரத்

9994799749

தகவல்:நூருல் அமீன்

11.9.09

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இஃப்தார் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ப்பு!!!

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைப் பெற்றது.

நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் கே.ஏ.முஹம்மது தலமை வகித்தார். அபுதாபி அய்மான் சங்க செயளாலரும்,முஸ்லிம் லீக் பதிப்பகக் குழு உருப்பினருமான ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்றார்.மாநில மார்க்க அணிச் செயளாலர் மவ்லவி தளபதி ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,கடலூர் மாவட்டத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ.அப்துல் கஃப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயளாலர் எ.சுக்கூர்,விழுப்புரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயளாலர் ஏ.அன்வர் பாஷா,மாநில பட்டதாரிகள் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ரஷீத் ஜான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில்,ஜெ.எம்.ஏ.கல்லூரியின் செயளாலர் அல்ஹாஜ் ஏ.எம்.ஜாஃபர்,பொருளாலர் ஹாஜி ஏ.ஜே.அஹமதுல்லாஹ்,பேரூராட்சி மன்றத் தலைவர் ஹாஜி ஏ.ஆர்.சபியுல்லாஹ்,கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் துணைத் தலைவர் ஹாஜி எம்.ஏ.ஜெகரிய்யா,கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் பி.முட்லூர் அப்துல் கஃப்பார்,நகை மாவட்ட் முஸ்லிம் லீக் துணைச் செயளாலர் ஹாஜி முஹம்மது பஷீர்,சிதம்பரம் நகர முஸ்லிம் லீக் தாஜுத்தீன் லால்பேட்டை ,முஸ்லிம் ஜமாஅத் செயளாலர் ஹாஜி எம்.ஏ.ஃபத்தஹுத்தீன்,மாவட்ட முஸ்லிம் லீக் துணைச் செயளாலர் ஹாஜி கே.ஏ.அமானுல்லாஹ்,நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகளான மஸூத் அஹ்மத்,பி.எம்.தய்யிப்,ஜாஃபர் அலி,அப்துல் காதர்,எம்.ஓ.அப்துல் அலி,மவ்லவி நூருல் அமீன்,சல்மான் ஃபாரீஸ், மற்றும் த.மு.மு.க, தேசிய லீக்,காங்கிரஸ்,தி.மு.க.மேலும் அனைத்துப் பள்ளிவாசல்களின் முத்தவல்லிகள், பேரூராட்சி மன்ற உருப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிவில் அபுதாபி காயிதே மில்லத் பேரவை உருப்பினர் என்.ஹெச்.முஜீபுர் ரஹ்மான் நன்றி கூறினார்.இறுதியாக கோட்டக் குப்பம் மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி அல்ஹாஜ் ஏ.ஃபைஜுர் ரஹ்மான் மதனி துஆ ஓதினார்.


8.9.09

லால்பேட்டை மும்தாஜ் பீவி வஃபாத்

ரெட்டியூர் நாட்டகார் மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் மகளும் லால்பேட்டை ஸ்கூல் தெரு லண்டன் மன்சூர் அவர்களின் தாயாருமான மும்தாஜ் பீவி இன்று 08.09.2009 காலை 10.30 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸ நல்லடக்கம் 7.30 மணிக்கு நடைப்பெற்றது.

7.9.09

அபுதாபி லால்பேட்டை ஜமா அத் புனிதமிகு லைலத்துல் கத்ர் சிறப்பு நிகழ்ச்சி


லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி...

அல்லாஹ்வின் திருநாமத்தால்...
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம...)
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 10.09.2009 வியாழன் மாலை லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது தங்கள் அவசியம் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் : மெயின் ரோடு பள்ளி வாசல் பெண்கள் மதரஸா.
நாள் 10.09.2009 வியாழக் கிழமை மாலை.

நிகழ்ச்சி ஏற்பாடு :
நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் .லால்பேட்டை.
.

4.9.09

ராயல் ஃபர்னிச்சர்ஸ் & ஹோம் அப்ளையன்ஸ் திறப்பு விழா ! தமிழக அமைச்சர் பங்கேற்ப்பு !

காட்டுமன்னார்குடி,செப்-02
காட்டுமன்னார்குடி கடை வீதியில் புதிதாக உதயமாகியிருக்கும் ராயல் ஃபர்னிச்சர்ஸ் & ஹோம் அப்ளையன்ஸ் என்ற புதிய நிறுவனத் திறப்பு விழா முஃப்தி அல்லாமா அல்ஹாஜ் எஸ்.ஏ.அப்துர் ரப் ஹஜ்ரத் தலமையில் நடைபெற்றது.

ஜெ.எம்.ஏ.அரபுக்கல்லூரி முதல்வர் ஷைகுல் ஜாமிஆ அல்ஹாஜ் ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் முன்னிலை வகிக்க,
ராயல் ஃபர்னிச்சர்ஸ் & ஹோம் அப்ளையன்ஸ்நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ் கே.ஏ.அமானுல்லாஹ் வரவேற்க்க,
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மாண்பு மிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார் .நிகழ்ச்சி முடிவில் நிறுவன மேளாலர் எஸ்.ஏ.இக்ராமுல்லாஹ் நன்றி கூறினார்.



3.9.09

லால்பேட்டை ஹாஜி முஹம்மது நூஹு வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு தானாச்சி ஹாஜி முஹம்மது நூஹு அவர்கள் இன்று 04.09.2009 காலை 3.30 மணியவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்.




தகவல்:

சஹாரா டிராவல்ஸ்

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ் சிறப்புப் பேட்டி...!


லால்பேட்டை,செப்,01

லால்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ் லால்பேட்டை இணையதளத்திற்க்காக சிறப்புப் பேட்டி அளித்தார்.




பதவியேற்று ஒரு சில மாதங்களே ஆனாலும் தான் செய்த, செய்யப் போகின்ற திட்டங்கள் குறித்து ஆர்வத்துடன் நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார். உலகெங்கும் பரவி வாழும் லால்பேட்டை மைந்தர்களின் பார்வைக்காகவும்,ஊரின் திட்டங்கள் என்ன என்பதை அனைவரும் அறிந்துக் கொள்வதர்க்காகவும் இதை வெளியிடுகிறோம்.



கேள்வி : நமது லால்பேட்டை பேரூராட்சிக்கு தற்போதைய புதிய திட்டங்கள் என்ன?



பதில் : ஒரு பேரூராட்சிக்கு நமக்கு நாமே திட்டத்தின் மூலம் அரசு ஒதுக்கும் நிதிகளை முறையாக ஊரின் வளர்ச்சிக்கு செலவிட முயற்ச்சி மேற் கொண்டுள்ளோம்,




இத்துடன் அல்ஜமா பைத்துல் மாலுடன் இணைந்து புதிய சாலை அமைக்கும் பணி நேற்றுடன் சிறப்பாக முடிவடைந்தது,




மழை நீர் சேகரிப்புத் திட்டத்தில் அல்ஹாஜ் அய்யுப் அவர்களுடன் இணைந்து பணிகள் துவங்க இருக்கின்றோம்.



கேள்வி : லால்பேட்டையில் உள்ள சாலை வசதிகள் எந்த நிலையில் உள்ளன?



பதில் : கடந்த இருபது ஆண்டுகள் செய்யாத பணிகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது,




அனைத்துத் தெருக்களுக்கும் தார் சாலை வசதி,குறிப்பிட்ட பகுதிகளில் சிமெண்ட் சாலை அமைக்கும் திட்டமும் இருக்கிறது.



கேள்வி : இன்று வரை நமது ஊரில் உள்ள பல தெருக்களை அரசுப் பதிவில் காணமுடிவதில்லையே?



பதில் : நாம் நமது குடும்ப அட்டையை கூட முறையாக பதிவதில்லை இதில் தெருக்களின் பெயர்களை பதியவைப்பது என்று வரும் போது அதில் யாரும் அக்கறை காட்டவில்லை,




பலர் ஒன்று கூடி தெருக்களின் பெயரை தேர்வு செய்து விட்டு அப்படியே விட்டு விடுகிறார்கள் அத்தோடு முந்தைய பேரூராட்சி நிர்வாகமும் இதை கண்டு கொள்ள வில்லை.




அந்த குறைகளை நீக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.




ஒருவர் தலைவர் பதவிக்கு வந்து விட்டால் அதில் தொடர்ந்து நீடிக்க என்ன வழி என்று பார்க்கிரார்களே தவிர ஊரின் வளர்ச்சியில் அக்கறையோ குறிக்கோளோ இல்லாமல் இருந்து விட்டார்கள்.




இனி இப்படி ஒரு தவறு நிகழாமல் ஊரின் வளர்ச்சியே என் குறிக்கோளாக கொண்டு செயலாற்றுவேன்.




இன்றும் நமது ஊரில் ஒரு வீட்டில் நான்கு,ஐந்து குடும்பங்கள் சேர்ந்து வசிப்பதை காண்கிறோம் அந்த அவலங்களை நீக்க பல புறம்போக்கு நிலங்கள் உள்ளன,அவைகளை முறையாக கண்டறிந்திருக்கிறேன்.




ஊரில் நாற்பதாயிரத்திற்க்கு விற்க்க வேண்டிய நிலத்தின் மதிப்பு இன்று லட்சங்களை தாண்டி விற்க்கிறது,இதையும் முறை படுத்தி ஏழைகளுக்கு இலவச பட்டாக்களை பெற்று தருவதுதான் என் குறிக்கோள்.



கேள்வி : அரசின் இலவசத் திட்டங்கள் நம் ஊரை அடைந்திருக்கிறதா?



பதில் : இலவசத் தொலைக்காட்சி வழங்கும் விஷயத்தில் தகுதியுடையவர்களின் பட்டியலை நாம் தயார் செய்து அனுப்பி இருக்கின்றோம்




ஆனால் இலவச சமையல் எறிவாயு வழங்கும் விஷயத்தில் ஈ. ஓ. என்று சொல்லக்கூடிய மணியார் அறுநூற்றி ஐம்பது நபர் பயன் பெற வேண்டிய இடத்தில் வெறும் நூற்றி ஐம்பது நபருக்கு மட்டும் கணக்கு எடுத்து வழங்க முயற்சி மேற்கொண்டுள்ளார் இந்த விஷயத்தில் நான் தலையிட்டு நடந்த தவறை கண்டறிந்து அனைவருக்கும் கிடைக்க முழு மூச்சாக பாடுபடுவேன்.



கேள்வி : பேரூராட்சி நிர்வாகத்தில் மற்ற உருப்பினர்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?



பதில் : எனக்கு அனைத்து உருப்பினர்களும் மிகுந்த ஒத்துழைப்பும்,அரிய ஆலோசனைகளையும் தருகிறார்கள்.



கேள்வி : தங்களிடம் வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுகிறீர்கள்?



பதில் :
யாரையும் அதிக நேரங்கள் காக்க வைப்பதில்லை,அரசு பணிசார்ந்த அனைத்து தேவைகளுக்கும் எனது கையொப்பம் தேவை படும் பட்சத்தில் உடனடியாக அவர்களுக்கு செய்து தருகிறேன்,




நான் இல்லாத அசமயத்தில் அலுவலக அதிகாரிகள் தேவையறிந்து பணியாற்றவும் பணித்திருக்கிறேன்.




( பேட்டியின் போதே வரக்கூடிய சிலரின் பணிகளை அங்கேயே நிவற்த்தி செய்து அனுப்புகிறார் )



கேள்வி : லால்பேட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராகவும் பணியாற்றும் தாங்கள் அதைப் பற்றியும் சிலசெய்திகள்...?



பதில் : மிக நீண்ட காலமாக இந்த பொறுப்பில் நான் இருந்து வருகிறேன்,




இங்கு வசதியுள்ளவர்களும் ,வசதியற்றவர்களும் கல்வி பயின்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று.நீண்ட காலமாக பெண்களுக்கென்று தனிப் பிரிவு துவங்க வேண்டும் என்கிற ஆர்வமும் ஆசையும் இருக்கிறது இதற்க்கு அரசும் ஒரு கோடிக்கு மேல் பணம் தற தயாராக உள்ளது,




ஆனால் மூன்று ஏக்கர் நிலம் தேவை படுகிறது.-இந்த மூன்று ஏக்கர் நிலத்தையும் நமது மதரஸா காட்டும் பட்சத்தில் இதையும் நிறைவேற்ற முடியும்.




இப்பள்ளியில் கல்வி பயிலும் மாணாக்கர்களில் நூற்றில் என்பது சதவிகிதம் நமது பிள்ளைகள் படித்து பயன் பெறுகிறார்கள்.




இங்கு எந்த பிரச்சினை ஏற்ப்பட்டாலும் அடுத்த சில நிமிடங்களில் அங்கு சென்று நிலமையை கட்டுப்படுத்தி வருகிறேன்.




பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அலைப் பேசி அழைப்பு வருகிறது பள்ளிக் கூடம் நோக்கி விரைகிறார் கூடவே நம்மையும் அழைத்துச் செல்கிறார்,அங்கு நிகழ்ந்த நிகழ இருந்த பெரிய பிரச்சினையை சுலபமாக தீர்த்து வைத்து புன்னகையோடு விடை கொடுத்தனுப்பினார்.



பேட்டி : இப்னு ஷஃபீக்.
படங்கள் : அபூ ஆதில்

.