25.1.09

லால்பேட்டையில் 40 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டுமானப்பணி

அயல்நாட்டு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம்

கடலூர், ஜன. 23: அயல்நாட்டு வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து, புதுப்பிக்க முடியாமல் போனவர்கள் புதுப்பித்துக் கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வெளிநாட்டு நிறுவனங்களில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகள், பொறியாளர்கள் மற்றும் பொறியியல் தொழில் நுட்பம் சார்ந்த பணிகளில், தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தமிழகத்தினரை பணி அமர்த்தி வருகிறது.
பதிவு மூப்பு அடிப்படையில், அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கான தேர்வுக்கும் பரிந்துரைக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கெனவே பதிவு செய்தவர்களில் பலர் தவிர்க்க முடியாத காரணத்தால் புதுப்பிக்கத் தவறியிருப்பார்கள்.

அவர்கள் தங்கள் பதிவை புதுப்பிக்க 1-1-2009 முதல் 31-3-2009 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

புதுப்பிக்கத் தவறியவர்கள் பதிவு எண், பணி தொடர்பான விவரங்கள், சான்றிதழ்களின் 2 நகல்கள், புதுப்பித்தல் கட்டணம் ரூ.112-க்கான ஓவர்ஸீஸ் மேன்பவர் கார்பரேஷன் லிமிடெட் என்ற பெயரில் எடுக்கப்பட்ட வரைவோலை ஆகியவற்றுடன் சென்னை அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள, அயல்நாட்டு வேலைவாய்பு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 24464286 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நன்றி: தினமணி

16.1.09

லால்பேட்டை ஹாஜி முஹம்மது பஷீர் அவர்கள் வஃபாத்

லால்பேட்டை (ஹாஜி S.M. முஹம்மது அமீன் & பிரதர்ஸ் அவர்களின் மச்சான்) அண்ணா வீதி ஹாஜி முஹம்மது பஷீர் (கும்பகோணத்தார்) அவர்கள் இன்று காலை நான்கு மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


News from:Meerasan Ahamed

லால்பேட்டை அல்ஜமா இஸ்லாமிய பைத்துல்மால் சார்பாக ஜகாத் நிதியுதவி வழங்கும் விழா

லால்பேட்டை அல்ஜமா இஸ்லாமிய பைத்துல்மால் சார்பாக ஜகாத் நிதியுதவி வழங்கும் விழா இன்று 16.01.2009 வெள்ளிக்கிழமை மாலை புதுபஜாரில் நடைப்பெரும்.

கடந்த ரமலானில் அல்ஜமா சார்பில் சேகரிக்கப்பட்ட ஜகாத் தொகையை ஏழை எளியவர்களுக்கு தையல் மெஷின்
மற்றும் சிறு தொழில் உதவி வழங்கும் விழா நடைப்பெற உள்ளது.

தலைமை:
K.M. முஹம்மது சித்தீக்.

முன்னிலை:
அல்ஜமா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்.

வரவேற்புரை :

O.P. இம்தாதுல் ஹுசைன்.

அறிமுகவுரை:
மவுலவி M.Y. முஹம்மது அன்சாரி.

வாழ்த்துரை:

மெளலானா மவுலவி S.A. அப்துர் ரப் ஹஜ்ரத்,
மவுலவி A.E.M.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத்,
மெளலானா மவுலவி A. நூருல் அமீன் ஹஜ்ரத்,
மவுலவி V.R. அப்துஸ்ஸமது ஹஜ்ரத்,

சிறப்புரை:

அல்ஹாஜ் S.M. ஹிதாயதுல்லா,

{பொதுச்செயலாளர் இஸ்லாமிய இலக்கிய கழகம் சென்னை }

மற்றும் அனத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள் ஜமாத்தார்கள் களந்துக்கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

தகவல்:
ஜித்தா டிராவல்ஸ்

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி புதிய நிர்வாகிகள் தேர்வு

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி புதிய நிர்வாகிகள் தேர்வு 15.01.2009 இன்று ஜாமிஆ நிர்வாகசபை அலுவலகத்தில் நடைப்பெற்றது.

மவுலவி ஹாபிஜ் ஹாஜி A.நூருல் அமீன் ஹஜ்ரத்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர்.

அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் நிர்வாகசபை தலைவர்.

அல்ஹாஜ் A.M. ஜாஃபர்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் நிர்வாகசபை செயலாளர்.

ஹாஜி J. அஹமதுல்லாஹ்
ஜாமிஆ மன்பவுல் அன்வார் நிர்வாகசபை பொருலாளர்.

ஆகியோர் புதிய நிர்வாககுளு உறுப்பினர்கலாள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகசபைக்கு லால்பேட்டை அயல்வாழ் ஜமாத் சார்பாகவும் லால்பேட்டை இணையதளம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.

தகவல்:
சஹாரா டிராவல்ஸ்

10.1.09

Dr. Zakir Naik in Chennai - 17th Jan 2009


9.1.09

பாலஸ்த்தீனத்தில் நடைப்பெரும் இனப்படுகொலையை கன்டித்து லால்பேட்டை ஜாமிஆ மஸ்ஜிதில் தளபதி உரை...


6.1.09

லால்பேட்டை அசாப்பில்லை மெளலவி ஹாமிது ஹஜ்ரத் வஃபாத்

லால்பேட்டை மேலத் தெரு { ஜன்னத்துல் நயீம் மஸ்ஜித் முன்னால் இமாம் } அசாப்பில்லை மெளலவி ஹாமிது ஹஜ்ரத் அவர்கள் இன்று { 06.01.2009 } மாலை 5.30 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்:

சஹாரா டிராவல்ஸ்

5.1.09

லால்பேட்டைஹாஜியா லத்தீபா பீவி வஃபாத்

லால்பேட்டை மதினா தெரு அனைக்கார் மர்ஹும் ஹலீலுர் ரஹ்மான் மனைவியும் ஹாஜி ஹிஜ்புல்லா, முஹிபுல்லா தாயாருமான ஹாஜியா லத்தீபா பீவி அவர்கள் இன்று {05.01.2009} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


தகவல்

சஹாரா டிராவல்ஸ்

.